வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Monday, December 31, 2007
Happy New Year வந்ததே....!
அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் பிறந்திருக்கும் 2008 ஆங்கிலப் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலர வாழ்த்துகின்றேன். தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகள் இன்னல் களைந்து நிரந்தரமான சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவும் இந்த ஆண்டு வழி சமைக்கவேண்டும் என்று ஆண்டவனை இறைஞ்சுகின்றேன்.

Youtube உதவி: Sunanthan27, mkumarpalani



posted by கானா பிரபா 6:40 AM   17 comments
 
17 Comments:
  • At December 31, 2007 at 7:19 AM, Blogger தமிழ்பித்தன் said…

    புதுவருட நல்வாழ்த்துக்கள் நண்பா!

    இது வரை அண்ணாக பதவி வகித்த நீங்கள் இவ்வருடம் முதல் நண்பனாக பதவி உயர்த்தப்படுகிறீர்

     

  • At December 31, 2007 at 8:49 AM, Blogger குட்டிபிசாசு said…

    நண்பா!

    இவ்வாண்டில் உங்களுடைய வேண்டுதல்கள் யாவும் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள்!!

     

  • At December 31, 2007 at 2:33 PM, Blogger கானா பிரபா said…

    //தமிழ்பித்தன் said...
    புதுவருட நல்வாழ்த்துக்கள் நண்பா!

    இது வரை அண்ணாக பதவி வகித்த நீங்கள் இவ்வருடம் முதல் நண்பனாக பதவி உயர்த்தப்படுகிறீர்//

    உங்களுக்கும் உரித்தாகுக. தம்பியாக இருந்த நீங்கள் இந்த ஆண்டிலிருந்து நண்பனாகப் பதவி இறக்கம் செய்யப்படுகின்றீர்கள்.

     

  • At December 31, 2007 at 3:09 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரபா அண்ணா!
    கமலின் பொருத்தமான பாடல்களை எடுத்துப் போட்டமைக்கு நன்றி!

    //தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகள் இன்னல் களைந்து நிரந்தரமான சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவும் இந்த ஆண்டு வழி சமைக்கவேண்டும் என்று ஆண்டவனை இறைஞ்சுகின்றேன்//

    அடியேனும் அவ்வண்ணமே எம்பெருமானை இறைஞ்சுகிறேன்! இந்த ஆண்டிலாவது ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றட்டும்!

     

  • At December 31, 2007 at 3:34 PM, Blogger அரை பிளேடு said…

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

     

  • At December 31, 2007 at 4:12 PM, Blogger மலைநாடான் said…

    வாழ்த்துக்கள் பிரபா!

     

  • At December 31, 2007 at 5:21 PM, Blogger பனிமலர் said…

    நன்றி கானா, அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

     

  • At December 31, 2007 at 7:35 PM, Blogger கானா பிரபா said…

    அருண், ரவிஷங்கர், அரைலபிளேடு, மலைநாடான், பனி மலர்.

    தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி.
    உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

     

  • At December 31, 2007 at 9:05 PM, Blogger து.மது said…

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

     

  • At January 1, 2008 at 12:33 AM, Blogger cheena (சீனா) said…

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

     

  • At January 1, 2008 at 1:02 AM, Blogger கானா பிரபா said…

    மதுலா மற்றும் சீனா
    உங்களுக்கும் இனியதொரு ஆண்டாக இருக்க வாழ்த்துகின்றேன்.

     

  • At January 1, 2008 at 1:09 AM, Blogger G.Ragavan said…

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய வளமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். உலகம் அமைதியுற்று அனைவரும் நீடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

     

  • At January 1, 2008 at 1:28 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ராகவன்

    உங்களுக்கும் இனியதொரு ஆண்டாக இருக்க வாழ்த்துகின்றேன்.

     

  • At January 1, 2008 at 1:59 AM, Blogger மாயா said…

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா!

     

  • At January 1, 2008 at 2:06 AM, Anonymous Anonymous said…

    மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபு!!!!!!!!!

     

  • At January 1, 2008 at 2:17 AM, Blogger கானா பிரபா said…

    மாயா, வெயிலான்

    பிறக்கும் ஆண்டு உங்களுக்கு இனிதாய் அமையட்டும்.

     

  • At January 1, 2008 at 3:30 PM, Blogger கோபிநாத் said…

    தல

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினார் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ;))

     

Post a Comment
<< HOME
 
Thursday, December 27, 2007
அண்ணன் மேர்வின் சில்வாவை ஆறுதல் படுத்த
வணக்கம் மேர்வின் அண்ணா

நேற்று ரூபவாஹினி என்னும் பாசிச மீடியா உங்களின் அறப்போராட்டத்தை நசுக்கியதைக் கண்டு சற்றும் கலங்காமல் நீங்கள் கொண்ட கொள்கையோடு தொடர்ந்து செல்ல வேண்டும் என்று உங்கள் குண்டர்களில் மன்னிக்கவும் தொண்டர்களில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கின்றேன். நீங்கள் சற்றும் சலியாமல் சிறுபான்மை தமிழர்களை எள்ளி நகையாட வேண்டும் என்றும், உங்கள் மகனுக்கு நாளொன்றுக்கு ஒரு இரவு விடுதியினையாவது அடித்து உடைக்கவும் குழப்பம் விளைவிக்கவும் இருக்கக்கூடிய ஆகக்கூடிய ஜனநாயக உரிகை கிடைக்கவும் தொடர்ந்து போராடவும் கேட்டுக் கொள்கின்றேன்.

You tube இல் அண்ணன் மேர்வினின் வீடியோ கிளிப்புக்களைத் தேடிய போது அவற்றை Comedy என்ற வகைப்பிரிவில் இட்டிருப்பதை வன்மையாக்க் கண்டிக்கின்றோம்.

உங்களைப் போலவே திரையுலகில் இப்படியான லட்சிப்பாத்திரங்களால் கலக்கும் வடிவேலு அண்ணனுக்கும் இப்படி அடிக்கடி நிகழும் அனுபவங்களை ஓய்வாக இருக்கும் போது பார்த்து ஆறுதலடைய வேண்டுகிறேன்.



நன்றி: புகைப்படம் மற்றும் மேலதிக செய்தியை அறிய : புதினம் இணையத்தளம்

சிரச தொலைக்காட்சியின் பாசிசப் போக்கைக் கண்டித்து அண்ணன் மேர்வின் வழங்கிய ஜனநாயகக் குரல்



நேற்று ரூபவாகினி பாசிச மீடியாவில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அண்ணன் மேர்வின் மேற்கொண்ட களப் போராட்டம்.






posted by கானா பிரபா 10:54 PM   19 comments
 
19 Comments:
  • At December 28, 2007 at 12:00 AM, Blogger து.மது said…

    நக்கல்..... நானே எவ்வளவு மனம் நொந்து போய் இருக்கிறேன்...Hehehe

     

  • At December 28, 2007 at 12:02 AM, Blogger கானா பிரபா said…

    வாங்கோ தங்கச்சி

    யார் சொன்னது நக்கல் எண்டு ;-)

     

  • At December 28, 2007 at 12:15 AM, Blogger வந்தியத்தேவன் said…

    டொக்டர் மேர்வின் சில்வாவுடன் வம்பு வைக்காதீர்கள். பிறகு உங்களுக்கும் ஆப்படிப்பார். ஆனாலும் வடிவேலுடன் இந்த ராஸ்கலை ஒப்பிட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். என்ன தலையில் அடித்தவர்கள் வாயிலும் இரண்டு சாத்து சாத்தி வாயைக் கிழித்திருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும்.

     

  • At December 28, 2007 at 12:18 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் வந்தியத்தேவன்

    இதுவே சிரசவில் நடந்திருந்தால் கொழும்புத் தமிழர் கூண்டோட பூஸாவுக்குப் போயிருப்பினம்.

     

  • At December 28, 2007 at 12:26 AM, Anonymous Anonymous said…

    Mervin thuge is right hand for main thuge in Sri Lanka. So noone can do anything for him.

     

  • At December 28, 2007 at 12:30 AM, Blogger கானா பிரபா said…

    // Anonymous said...
    Mervin thuge is right hand for main thuge in Sri Lanka. So noone can do anything for him.//

    அதெண்டா உண்மை தான்,
    அடிச்சவை பாடு தான் திண்டாட்டம்

     

  • At December 28, 2007 at 12:35 AM, Blogger வந்தியத்தேவன் said…

    //இதுவே சிரசவில் நடந்திருந்தால் கொழும்புத் தமிழர் கூண்டோட பூஸாவுக்குப் போயிருப்பினம்.//

    உண்மை தான். ஆனால் இதனை இப்பொழுது சிரச நன்றாக பயன்படுத்துகின்றது, ரூபவாஹினிக்காரர்கள் இவனின் முன்னைய அடாவ்டிகளை ரூபவாஹினிகாரர்கள் பெரிதுபடுத்தவில்லை.

     

  • At December 28, 2007 at 1:36 AM, Blogger குட்டிபிசாசு said…

    பிரபா,

    இவருதான் இலங்கை கைப்புள்ளயா? ரணகளமா ஆக்கிட்டாங்க போல!! நேத்து மயூரன் பதிவில் படிச்சேன்.

    சிங்களவங்களுக்கு இப்பத்தான் உரைக்க ஆரம்பிச்சிட்டுதாக்கும்.

     

  • At December 28, 2007 at 1:44 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க அருண்

    இவர் இலங்கை இம்சை அரசனின் அமைச்சர்களில் ஒருவர். கைப்பு, தீப்பொறி ஆறுமுகம், என்கவுண்டர் ஏகாம்பரம் என்று பல அவதாரங்கள் இவருக்கு.

    இவரின் அட்டகாசங்கள் இவர் மருத்துவமனையில் இருந்து வந்ததும் தொடரும்,,,

     

  • At December 28, 2007 at 6:58 AM, Blogger தமிழ்பித்தன் said…

    என்னதான் இருந்தாலும் இப்படியெல்லாம் சொல்லப்படாது அண்ணன் மனம் எவ்வளவு புண்படும்
    கொசுறு ;- குண்டர் சீ..சீ..தொண்டர் அமைப்பில் எனக்கு ஓர் வேலை வேண்டித்தர முடியுமா நானும் ரவுடி ஆக வேணும் என்று கனகால கனவு

     

  • At December 28, 2007 at 8:57 AM, Blogger Yogi said…

    சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிருச்சி உங்க ஒப்பீடைப் பார்த்து... :))))

    நானும் பார்த்தேன் சன் செய்திகளில்.. அவர் அடிவாங்கியது ரூபவாகினியில் நேரடி ஒளிபரப்பு செய்தார்களாமே? செம காமெடி.... ;))))))))

    கடைசியில் காரில் ஏறப்போகும்போது தலையில் நொங்குன்னு ஒரு அடிவிழகுமே சரியான காமெடி போங்கள் ;)))))))))))))

     

  • At December 28, 2007 at 9:18 AM, Blogger முகமூடி said…

    நானும் பார்க்கிறேன், டாக்டர்.மேர்வின் என்று யாருமே குறிப்பிடுவதில்லை? ஏன் இந்த கொலைவெறி.

    ரூபவாஹினியில் தலைவர் மன்னிப்பு(?!) கேட்பதாக ஒரு வீடியோ பார்த்தேன். சிங்களத்தில் பேசியதால் மன்னிப்புதான் கேட்கிறாரா இல்லை மிரட்டல் எதுவும் விடுக்கிறாரா என்று தெரியாத அளவு அதிகார தோரணை ? ஆராவது சிங்கள நண்பர்கள் இருந்தால் மொழிபெயர்த்து போடக்கூடாதா?

    மேலும் இந்தாளை வடிவேலுவுடன் ஒப்பிட்டு வடிவேலுவை கேவலப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

     

  • At December 28, 2007 at 2:52 PM, Blogger கானா பிரபா said…

    // தமிழ்பித்தன் said...
    குண்டர் சீ..சீ..தொண்டர் அமைப்பில் எனக்கு ஓர் வேலை வேண்டித்தர முடியுமா நானும் ரவுடி ஆக வேணும் என்று கனகால கனவு//

    தம்பி தமிழ்பித்தா

    குண்டர் சீ சீ தொண்டர் அமைப்பில் சேர முன் அனுபவம் இருக்கா?
    சைக்கிள் செயின் சுத்தணும்,
    குடு அடிக்கணும்,
    இருந்தால் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

     

  • At December 28, 2007 at 3:01 PM, Blogger தமிழ்பித்தன் said…

    இப்படி அனுபவம் எல்லாம் எனக்கு இல்லையே ஆனால் நான் அறிய பல பல பெரியவங்கள் இதை எல்லாம் தெரிஞ்சு வைச்சிருந்தவை நான் சின்னப்பெடியன் தானே பழக்கினால் பழகீடுவன் பழகலாம் வாங்க!

     

  • At December 28, 2007 at 3:57 PM, Blogger கானா பிரபா said…

    //பொன்வண்டு said...
    சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிருச்சி உங்க ஒப்பீடைப் பார்த்து... :))))

    நானும் பார்த்தேன் சன் செய்திகளில்.. அவர் அடிவாங்கியது ரூபவாகினியில் நேரடி ஒளிபரப்பு செய்தார்களாமே? செம காமெடி.... ;))))))))//


    வாங்க பொன்வண்டு

    இப்படியான காமடியன்கள் நிறையப்பேர் இலங்கை அமைச்சரவையில் இருக்கின்றார்கள் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ;-))








    //முகமூடி said...
    நானும் பார்க்கிறேன், டாக்டர்.மேர்வின் என்று யாருமே குறிப்பிடுவதில்லை? ஏன் இந்த கொலைவெறி//

    வாங்க முகமூடி

    இவருக்கு டாக்டர் பட்டம் போட்டு மேர்வினை சிறுமைப்படுத்தக் கூடாது. அதை விட பெரிய பட்டங்களை இவர் வைத்திருக்கின்றார்.

    மன்னிப்பெல்லாம் இவர் அகராதியில் கிடையாது.

    //மேலும் இந்தாளை வடிவேலுவுடன் ஒப்பிட்டு வடிவேலுவை கேவலப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.//

    இப்போதைக்கு வடிவேலு தான் கிடைச்சார் ;-))

     

  • At December 29, 2007 at 3:30 AM, Anonymous Anonymous said…

    தம்பி பிரபா!
    ஏவின், மன்னிக்கவும் மேர்வின் அண்ணனின் அன்புச் சகோதரா!!
    எம்மைப்போலவே துன்பத்தில் துடித்தமைந்த உங்கள் வலைப்பக்கம் பார்த்து ரத்தக் கண்ணீர் விட்டவர்களில் நானும் ஒருவன்.
    அண்ணன் மேர்வின் போன்றோரின், அறச்செயல் ஆற்றாத மானிடப் பதர்களை என்ன சொல்ல.

    எப்போதும் தருமத்திற்காய்க் குரல் கொடுக்கும் அண்ணைனை ஒத்த (முதல் எழுத்து குற்றெழுத்தே என்பதை கவனித்துக் கொள்ளவும்) பலரை சமூகம் ஏற்றுக் கொண்டதில்லை. வெண்ணை எடுக்கப் போன கண்ணனையே உரலில் கட்டிய சமூகம் இது. 'எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்த' எங்கள் அண்ணனைத் தொட்ட சமூகத்தை தர்ம உலகு தண்டிக்கும் என்பதில் நம்பிக்கை கொள்க!!

    இவ்விடத்தில் அண்ணனின் அற்புதங்கள் குறித்து எங்கள் பா(ர)தியார் எழுதிய பாவை இணைக்கிறேன்.
    படித்து ஆறுதல் கொள்க!!
    (அண்ணனின்) தருமம் மறுபடியும் (பொலீஸை) வெல்லும் என்ற மர்மத்தை காணும்வரை காத்திருப்போம்!!!!!!!!!!!!



    தீராத விளையாட்டுப் பிள்ளை


    ராகம்: ராகமாலிகா
    தாளம்: ஆதி
    தீராத விளையாட்டுப் பிள்ளை - அண்ணன்
    ஊரிலே எங்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத)

    சின்னத் தனங்கொண்டு வருவான் - சேதி
    சொல்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
    என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
    வெட்டிக் கிழித்துப் படிக்கக் கொடுப்பான். (தீராத)

    நாயொத்த எண்ணங்கள் கொண்டு - என்ன
    செய்தாலும் எட்டாத உயரத்தில் நிற்பான்;
    ஆருக்கும் போட்டடி என்பான்-அங்கு
    சனமெழும் நேரத்திலே சல்லி விடுவான் (தீராத)

    பலமுள்ள பலர்கொண்டு வந்தே - எம்மை
    அழஅழச் செய்துபின், 'கண்ணை மூடிக்கொள்;
    சிறையிலே பூட்டுவேன்' என்பான் - எம்மைச்
    செகிடாக்கிப் புழுகினை அரசுக்கு ரைப்பான் (தீராத)

    இன்னலை முன் நின்று எடுப்பான் -அரசு
    மங்கிச் சரியநற் கீதம் படிப்பான்;
    பொல்லால் இளக்குவத னாலே -அதை
    கண்மூடி வாய்திறந்தே சும்மா இருப்போம். (தீராத)

    அங்காங் கிருக்கும் நம் மேலே - அண்ணன்
    தீயோட றுப்பைப் போட்டு விடுவான்;
    எங்காகிலும் பார்த்த துண்டோ? - அண்ணன்
    எங்களுக் கிளைக்கின்ற வேடிக்கை யொன்றோ (தீராத)

     

  • At December 29, 2007 at 3:58 AM, Blogger கானா பிரபா said…

    அநானியாக வந்த அன்பரே

    அருமையான பாட்டையும் கொடுத்து அண்ணனைப் பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் ;-)

     

  • At December 29, 2007 at 4:42 AM, Blogger M.Rishan Shareef said…

    அடாடா....
    அண்ணனின் சூப்பர் காமெடிய வீடியோ ஆதாரங்களுடன் இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கீங்களே..!
    ஆனாலும் இதனை தமிழ்மணத்தின் 'சினிமா,பொழுதுபோக்கு' பிரிவில் சேர்த்ததில்தான் அண்ணனுக்கு வருத்தமாம்.ஆகவே அடுத்த படையெடுப்பு உங்களை நோக்கி வரலாம் ;).
    சகல ஊடகங்களையும்,நல்ல கலர் சாயத்தையும் பக்கத்திலேயே வைத்திருக்கவும்.

    (வடிவேலுவின் பொருத்தமான காமெடி சீனைச் சேர்த்து மேர்வின் சில்வாவின் அடாவடியை நல்லதொரு பொழுது போக்கு சினிமா ஆக்கிவிட்டீர்கள்) ;)

     

  • At December 29, 2007 at 4:48 AM, Blogger கானா பிரபா said…

    வாங்கோ ரிஷான்

    விளையாட்டு/புதிர் என்ற வகைக்குள் தான் இது வந்திருக்கோணும்.

    வடிவேலுவை விட பொருத்தம் தேவையா?

     

Post a Comment
<< HOME
 
Wednesday, December 26, 2007
என் பார்வையில் ==> *** Taare Zameen Par***
நேற்று இஷான் அஸ்வதியின் கதையை நானும் Taare Zameen Par இல் கேட்டேன்/பார்த்தேன். என் பார்வையில் இதைச் சொல்ல.........


Taare Zameen Par உத்தியோகபூர்வ இணையத் தளம்:
http://www.taarezameenpar.com/

அமீர் கானின் வலைப்பூ:
http://www.aamirkhan.com/blog.htm

Aamir Khan Speaks




The Making Of Taare Zameen Par




Taare Zameen Par promo



IBN Live Review


Music Release


Shooting of Taare Zameen Par


Taare Zameen Par - Musical Preview
posted by கானா பிரபா 11:48 PM   16 comments
 
16 Comments:
  • At December 27, 2007 at 12:22 AM, Blogger குட்டிபிசாசு said…

    தல,

    உங்கள் பார்வை என்று சொல்லிவிட்டு அடுத்தவங்க பார்வையை போட்டு இருக்கிங்க! இது எந்த ஊரு நியாயம்.

    என்னுடைய பழைய நினைவுகளைக் கிளறி அழ வைத்த படம். எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

    அன்புள்ள ரஜினிகாந்த், அஞ்சலிக்கு பிறகு இப்படி ஏன் ஒரு குழந்தையை மய்யமாகக் கொண்ட படம் தமிழில் வரவேயில்லை.

     

  • At December 27, 2007 at 12:44 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க அருண்

    என் பார்வையை ஒற்றை வரியில் சொல்லிவிட்டேனே " எழுத்தில் வடிக்க வார்த்தை இல்லை" அப்படி என்று.

    கீழே கொடுக்கப்பட்ட வீடியோ மற்றும் செய்திகள், பார்க்காத மக்களைத் தியேட்டருக்கு நகர்த்த வைக்கவே.

    பொறுத்திருப்போம், தமிழில் இப்படியான முயற்சிகள் வருமென்று காத்திருப்போம்.

     

  • At December 27, 2007 at 12:51 AM, Blogger குசும்பன் said…

    என்ன பிரபா உங்க பார்வையில் என்றவுடன் நீங்கள் எப்படி சொல்லி இருக்கிறீர்கள் என்ற படிக்க வந்தா ஒரே வீடியோவா இருக்கு:(((

    இரண்டு முறைபார்த்தாலும் இன்னும் பல முறை பார்கனும் என்று தோன்றுகிறது, யாராவது ஏழுதி இருந்தாலும் ஓடி போய் படிக்கனும் என்று தோன்றுகிறது.

    ///பொறுத்திருப்போம், தமிழில் இப்படியான முயற்சிகள் வருமென்று காத்திருப்போம்.///

    நம்பிக்கைதான் வாழ்கை:))

     

  • At December 27, 2007 at 12:55 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க குசும்பரே

    நீங்கள், பெனாத்தலார், ஆசிப் அண்ணாச்சி, அவர் மகன் என்று எத்தனையோ கோணங்களில் அழகாகப் பிரித்து மேய்ந்தாயிற்று.

    என் பங்கிற்கு இஷானின் கையெழுத்தில் மட்டும் தான் சொல்ல முடியும். எதை எழுதலாம், எதை விடலாம் என்று இன்னும் தீர்க்கமாகச் சொல்ல முடியா அளவுக்குக் கனக்கவைத்து விட்டது இப்படம் .

     

  • At December 27, 2007 at 12:59 AM, Anonymous Anonymous said…

    நன்றி தல

    செம கலெக்சன்

     

  • At December 27, 2007 at 2:34 AM, Blogger பினாத்தல் சுரேஷ் said…

    thanks for the videos kana prabha.. made me re live the movie :-))

     

  • At December 27, 2007 at 3:16 AM, Blogger கோபிநாத் said…

    தல

    வீடியோவுக்கு நன்றி...நாளைக்கு பார்க்க போகிறேன்..;))

    அப்புறம் ஒன்னு அந்த படங்கள் எனக்கு தெரியவில்லை..;(

     

  • At December 27, 2007 at 3:22 AM, Blogger கோபிநாத் said…

    தல இந்த படத்தை எல்லோரும் பேசும் போது ஒரு ஆங்கில படம் நினைவுக்கு வருது.

    Robin Williams நடித்த - Dead Poets Society - எனக்கு பிடித்த படம் . இந்த படத்தை மலையாளத்தில் பாசில் லாலை வச்சி எடுத்திருப்பார். life is beautifulன்னு நினைக்கிறேன்.

     

  • At December 27, 2007 at 4:24 AM, Blogger வவ்வால் said…

    கானா,

    படத்தின் விமர்சனங்களை மட்டும் படித்து வந்தேன், மேலும் விபரங்களை பல இணையத்தளங்களில் பார்த்தேன். ஆனால் நீங்களோ சுலபமாக மேலதிக தகவல்களை ஒரே இடத்தில் அள்ளிதந்து விட்டீர்கள். இனிமேல் மற்றவர்களுக்கு வேலை மிச்சம்! நன்றி!

    //அன்புள்ள ரஜினிகாந்த், அஞ்சலிக்கு பிறகு இப்படி ஏன் ஒரு குழந்தையை மய்யமாகக் கொண்ட படம் தமிழில் வரவேயில்லை.//

    பெரிய இயக்குனர், நட்சத்திரம் இருப்பதால் அவை மட்டுமே கண்ணுக்கு தெரிந்து இருக்கு,

    மல்லி- சந்தோஷ் சிவன்,
    குட்டி - ஜானகி விஸ்வநாதன்
    இரண்டிலும் சுவேதா என்ற சிறுமியே நடித்தாள்.
    ஆகியோரும் சிறுவர்களை மையமாகக்கொண்டு படம் எடுத்தார்கள். விருது விழாக்களில் அதிகம் கவனிக்கப்பட்டது மக்கள் தான் கவனிக்கவில்லை.

    மக்கள் கவனிப்பு இல்லாமல் எந்த முயற்சியும் வெற்றி அடைவதில்லை.

    இக்பால் என்ற ஒரு படம்.... ந்ஸ்ருதீன் ஷா நடித்தது, இயக்கம் நாகேஷ் குக்கனூர் என நினைக்கிறேன், அதுவும் நன்றாக இருக்கும். ஆனால் பெரும் கவனிப்பு பெறவில்லை என நினைக்கிறேன்.

    இப்படமே ஆமிர் கான் இல்லை எனில் கவனத்தை ஈர்த்து இருக்காது என தோன்றுகிறது.

     

  • At December 27, 2007 at 4:46 AM, Blogger கானா பிரபா said…

    //அய்யனார் said...
    நன்றி தல

    செம கலெக்சன்//

    வணக்கம் தல,

    இப்படம் குறித்த உங்கள் ஆழமான பார்வையும் வரிவிடாமல் படித்தேன்.
    மிக்க நன்றி தந்தமைக்கு.

    //பினாத்தல் சுரேஷ் said...
    thanks for the videos kana prabha.. made me re live the movie :-))//

    மிக்க நன்றி சுரேஷ்

     

  • At December 27, 2007 at 5:35 AM, Blogger இராம்/Raam said…

    கானா சேட்டா வளரே நன்னி... :)

     

  • At December 27, 2007 at 2:10 PM, Blogger கானா பிரபா said…

    // கோபிநாத் said...
    தல இந்த படத்தை எல்லோரும் பேசும் போது ஒரு ஆங்கில படம் நினைவுக்கு வருது.

    Robin Williams நடித்த - Dead Poets Society - எனக்கு பிடித்த படம் . இந்த படத்தை மலையாளத்தில் பாசில் லாலை வச்சி எடுத்திருப்பார். life is beautifulன்னு நினைக்கிறேன்.//

    தல

    life is beautiful நானும் பார்த்திருந்தேன், ரொம்ப நாளைக்கு முன்னாடி. அதையும் பதிவாப் போட்டாப் போச்சு.

    Robin Williams இன் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. Patch Adams பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். முன்னாபாயின் மூலம் அது. அழகான உணர்வு பூர்வமான படங்களில் அதுவும் ஒன்று

     

  • At December 27, 2007 at 2:57 PM, Blogger CVR said…

    யப்பா!!
    செம கலெக்ஷன்!!

    இருங்க!!
    ஒவ்வொன்னா பார்க்க ஆரம்பிக்கறேன்!!! :-)

     

  • At December 27, 2007 at 3:15 PM, Blogger கானா பிரபா said…

    // வவ்வால் said...
    கானா,
    இப்படமே ஆமிர் கான் இல்லை எனில் கவனத்தை ஈர்த்து இருக்காது என தோன்றுகிறது.//

    வாங்க நண்பா

    இந்தப் படத்தை அமீர்கான் தவிர வேறு யாராவது செய்தால் இவ்வளவு பேசப்பட்டிருக்குமா என்பதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், இந்தப் படத்தைப் பார்த்தால் கொஞ்சம் மாற வேண்டியிருக்கும். காரணம் இப்படத்தில் அமீரின் ஹீரோயிசம் முன்னிறுத்தப்படவில்லை. இடைவேளைக்குப் பின் தான் கிட்ட தட்ட கெஸ்ட் ரோலில் தான் அமீரின் பாத்திரம் இருக்கு. இப்படத்தின் விளம்பரத்துக்கும் ஆரம்ப கட்ட ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வரவும் மட்டுமே அமீரின் பங்களிப்பு இருந்திருக்கு.

    தமிழில் நீங்கள் குறிப்பிட்ட நல்ல படங்களோடு இன்னும் பல இருக்கின்றன, எல்லாமே பேசப்படாமைக்கு இன்னொரு காரணம், நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே அந்தப் படைப்பாளிகளுக்கு இந்திருக்கின்றது. ஆனால் விஷுவலாக எப்படிக் கொடுக்க வேன்டும் என்பதில் தவறிழைத்து விடுகின்றார்கள். அதனால் பிரச்சார நெடி தான் அதிகம் இப்படைப்புக்களுக்கு வந்து விடுகின்றது.

    தல , இளைய தளபதி, சின்ன தளபதி, பெரிய தளபதி, புரட்சி தளபதி போன்ற பட்டங்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் மாஸ் ஹீரோக்களை தகுந்த ஒரு கெஸ்ட் ரோலில் வைத்தாவது ரசிகர்களை இப்படியான நல்ல சினிமாவுக்குள் இழுக்க வேண்டும்.

     

  • At December 28, 2007 at 12:27 AM, Blogger கானா பிரபா said…

    //இராம்/Raam said...
    கானா சேட்டா வளரே நன்னி... //

    ஸ்வாகதம் சேட்டா ;-)


    // CVR said...
    யப்பா!!
    செம கலெக்ஷன்!!

    இருங்க!!
    ஒவ்வொன்னா பார்க்க ஆரம்பிக்கறேன்!!! :-)//

    சரி ஓவ்வொண்ணா பாருங்க தல

     

  • At December 28, 2007 at 2:19 AM, Blogger வவ்வால் said…

    எல்லாமே பேசப்படாமைக்கு //இன்னொரு காரணம், நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே அந்தப் படைப்பாளிகளுக்கு இந்திருக்கின்றது. ஆனால் விஷுவலாக எப்படிக் கொடுக்க வேன்டும் என்பதில் தவறிழைத்து விடுகின்றார்கள். அதனால் பிரச்சார நெடி தான் அதிகம் இப்படைப்புக்களுக்கு வந்து விடுகின்றது.//

    தல,

    இதான் முக்கியமான காரணம் , பொறுமையை சோதிக்கும் வண்ணம் படம் எடுப்பது. அதான் வெகு ஜனங்கள் அவ்வளவாகப்பார்ப்பதில்லை.

    அஞ்சலிக்கு அப்புறம் ஏன் சிறுவர்களை வைத்து படமே வரவில்லை என்று கேட்கும் அளவுக்கு இப்படங்கள் மக்களை போய் சென்றடையாமல் இருந்து இருக்கிறது.

    நம்ம ஊர் நட்சத்திரங்கள் எல்லாம், காசு போடும் தயாரிப்பாளர் நஷ்டம் அடையக்கூடாது என்ற பெரிய லட்சியத்தோடு இருக்கவங்க ஆச்சே!

    அவங்களே சொந்தமா தயாரிச்சா அவங்க அதை விட உஷாரா எடுப்பாங்களே.

    ஆமீர் கான் செய்தது சிறப்பான வேலை. நல்லா புரோமோட்டும் செய்துள்ளார்.

     

Post a Comment
<< HOME
 
Monday, December 24, 2007
2007 இல் நான் ரசித்த ஹிந்திப்படம் =>Heyy Babyy
தமிழ், மலையாளம், தெலுங்கு, உலக சினிமா என்று மானாவாரியாக ரவுண்டு கட்டிப் படம் பார்க்கும் நான் ஹிந்திப்படங்களையும் விட்டு வைப்பதில்லை. ஓம் சாந்தி ஓம் ஹிந்திப் பட டிவிடி ஐ வாங்கும் போது போனஸாக கிடைத்த படம் ".Heyy Babyy". அக்க்ஷய்குமார், வித்யா பாலன், பர்தீன் கான், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் நடித்த இப்படத்தின் இயக்கம் சஜீத் கான்.


அவுஸ்திரேலியாவில் வாழும் மூன்று மன்மதக் குஞ்சுகள் காலை, மதியம், இரவு என்று ஆடை மாற்றுவது போல் பெண் ஜோடி மாற்றுவது இவர்களின் முழு நேரத்தொழில். நாளொரு காதலியும் பொழுதொரு களியாட்டமாக வாழும் இவர்கள் அப்பார்ட்மெண்டில் ஒரு குழந்தை அனாதரவாகக் கிடக்கின்றது. ஆரம்பத்தில் தங்கள் களியாட்ட வாழ்வைக் குலைக்கும் குட்டிச் சாத்தானாக இந்தக் குழந்தையை எடைபோடும் இவர்கள், எதிர்ப்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து தம் வாழ்வை முற்றிலும் மாற்றி இந்தக் குழந்தைக்கு ஏஞ்சல் என்று பெயரிட்டு இந்த மூவருமே அங்கீகரிக்கப்படாத சுவீகாரத்தந்தையாக மாறுகின்றார்கள்.



தமது கெட்டபழக்கங்களை நிறுத்தி இந்தக் குழந்தையே உலகமாகி விடுகின்றார்கள்.
ஆனால் திடீரென நிகழும் சம்பவமும் அதைத் தொடரும் நிகழ்வுகளும் இந்தக் குழந்தையை இவர்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரியும் சூழ்நிலை ஏற்படுகின்றது.
அப்போது தான் இன்னொரு அதிர்ச்சியும் இம்மூவரில் ஒருவருக்கு ஏற்படுகின்றது. எல்லாச் சிக்கலும் கழன்று, இக்குழந்தை இவர்கள் கையில் கிடைத்ததா என்பதே இக்கதைச் சுருக்கம்.

இதே போல் நூற்றுச் சொச்சம் கதைகள் வெவ்வேறு மொழியில் வந்திருந்தாலும், பொருத்தமான பாத்திரத் தேர்வு, இசை, நடிப்பு, படம் முழுக்க விரவியிருக்கும் நகைச்சுவை என்று முழுமையான பொழுதுபோக்குச் சித்திரமாகவே இருக்கின்றது.

குட்டிப் பெண் ஏஞ்சலாக வரும் ஜொஹைனாவின் மழலைத்தனத்தை ரீவைண்ட் பண்ணிப் பண்ணிப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

வித்யாபாலனை ஏழு நாட்களுக்குள் ஒரு உருப்படியான கணவன் கிடைக்காமல் செய்ய மூன்று நண்பர்கள் செய்யும் கோல்மால் வேலைகள் வயிறு குலுங்க வைப்பவை.


சங்கர் எசான் லாய் இன் கூட்டு இசையும், Meri Duniya மற்றும் Mast Kalandar போன்ற பாடல்களும் பரவசமூட்டுகின்றன. நாயகர்களுடன் போமன் இரானி, கெஸ்டாக ஒரு பாடலில் வரும் அனுபம் கெர், ஷாருக்கானும் கலக்கியிருக்கின்றார்கள்.

டிசம்பர் விடுமுறையில் நன்றாக மனம் விட்டுச் சிரித்துப் பார்த்து மகிழ வேண்டிய ஒரு பொழுதுபோக்குச் சித்திரம் இது. பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

நான் நூற்றுச் சொச்சம் முறை பார்த்து/கேட்டு விட்ட Meri Duniya பாட்டு


கலக்கல் பாட்டு Mast Kalandar


Heyy Babyy Trailer 1


Heyy Babyy Trailer 2
posted by கானா பிரபா 4:36 AM   8 comments
 
8 Comments:
  • At December 24, 2007 at 5:17 AM, Blogger CVR said…

    அண்ணாச்சி நீங்களே சொல்லிட்டீங்க!!
    பாத்துருவோம் படத்தை!! B-)

     

  • At December 24, 2007 at 5:30 AM, Blogger குட்டிபிசாசு said…

    பிரபா,

    எத்தனைப் படம் இதே கதையோட பார்க்கிறது! நீங்க சொன்னதுக்காக பார்க்க முயற்சி செய்யுறேன்!! :)

     

  • At December 24, 2007 at 5:31 AM, Blogger குட்டிபிசாசு said…

    நத்தார் வாழ்த்துக்கள்!!

     

  • At December 24, 2007 at 5:34 AM, Blogger கானா பிரபா said…

    //CVR said...
    அண்ணாச்சி நீங்களே சொல்லிட்டீங்க!!
    பாத்துருவோம் படத்தை!! B-)//


    பாருங்க காமிரா கவிஞரே

    //குட்டிபிசாசு said...
    பிரபா,

    எத்தனைப் படம் இதே கதையோட பார்க்கிறது! நீங்க சொன்னதுக்காக பார்க்க முயற்சி செய்யுறேன்!! :)//

    வாங்க அருண்

    தெரிந்த கதை, ஆனால் வேலைக் களைப்போ மன உழைச்சலுக்கோ வேலை கொடுக்காமல் நல்ல பொழுதுபோக்குச் சித்திரம் இது.

    உங்களுக்கும் நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

     

  • At December 24, 2007 at 6:29 AM, Blogger கோபிநாத் said…

    தலைவரின் பேச்சை எப்போதவாது இந்த தொண்டன் மீறியது உண்டா...!!!???

    கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்...

     

  • At December 24, 2007 at 12:53 PM, Blogger கானா பிரபா said…

    தொண்டரே

    உம் தல விசுவாசம் கண்டு நெகிழ்ந்தோம் ;)

     

  • At December 26, 2007 at 5:08 AM, Anonymous Anonymous said…

    இனிய நத்தார் வாழ்த்துகள் - சந்தர்ப்பம் கிடைத்தால் ஹே பேபி படம் பார்கிறேன்
    உரும்பை லெற்றி

     

  • At December 26, 2007 at 1:41 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் லெற்றி

    வாழ்த்துக்களுக்கு நன்றி, உங்களுக்கும் இனிய நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்.

     

Post a Comment
<< HOME
 
Saturday, December 22, 2007
Aap Jaisa Koi - ஆஹா எத்தனை வடிவமடா?
குர்பானி ஹிந்தித் திரைப்படம் 81 இல் வந்து இந்திய சினிமா உலகையே ஒரு கலக்குக் கலக்கியதை நான் சொல்லியா உங்களுக்குத் தெரிய வேண்டும்?

பெரோஸ் கான் இயக்கித் தயாரித்து அவருடன் வினோத் கன்னாவும் ஹிந்தித் திரையுலகின் அப்போதைய ரம்பா, ஊர்வசி, மேனகை ஆகியோரின் ரீமிக்ஸ் ஜீனத் அமனும் நடித்ததும், கூடவே கல்யாண்ஜி ஆனந்த்ஜியின் கலக்கலான இசையும் இப்படத்தின் அமோக வெற்றிக்கு ஒரு காரணம். இங்கே தரும் பாடலுக்கு இப்படத்தில் இசையமைத்தவர் Biddu.

இருபத்தேழு ஆண்டுகள் கழித்தும் இப்போதைய ரஹ்மான், ஹிம்மேஷ் வகையறாக்களுடன் போட்டி போட்டு முன்னுக்கு வரக்கூடிய பாடலான "ஆப் ஜைசா கோயி" என்ற பாடல் பாடிய பாடகி நாசியா ஹசனுக்கு பெரும் புகழையும் அள்ளிக் கொடுத்தது.

இந்தப் பாடல் எத்தனை வடிவங்களில் விதவிதமாக மாற்றப்பட்டு ரசிக்கப்படுகின்றது என்பதை ஒரு தொகுப்பாக இங்கே தருகின்றேன். இதில் வரும் "American Desi" திரைப்படம், நான் விரும்பிப் பார்த்த படங்களில் ஒன்று. இது குறித்து விரிவான விமர்சனம் ஒன்றைப் பின்னர் தருகின்றேன்.

மூலப்பாடல்


American Desi ஆங்கிலோ இந்தியத் திரைப்படத்தில்


பாடலும் காட்சியும் புது இசைவடிவில்





காட்சி மட்டும் மாற்றம், பாடல் பழசு


செல்போன் விளம்பரத்தில்
posted by கானா பிரபா 4:46 AM   11 comments
 
11 Comments:
  • At December 22, 2007 at 6:52 AM, Blogger குட்டிபிசாசு said…

    பிரபா,

    தமிழில் யாராவது இதை காபி அடித்து இருக்கிறார்களா?

     

  • At December 22, 2007 at 7:04 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க அருண்

    தமிழில் குர்பானி விடுதலை படமான போதும் இப்பாடல் மெட்டு எடுக்கப்படவில்லை. வேறு ஏதாவது படத்திலோ அல்லது தனி இசையிலோ வந்ததாக எனக்குத் தெரியவில்லை.

     

  • At December 22, 2007 at 3:28 PM, Blogger CVR said…

    அடப்பாவமே!!
    ஒரு பாட்டை எத்தனை தடவை தான் காபி அடிக்கறது??
    ஆனா!! சும்மா சொல்லக்கூடாது !! எத்தனை பதிப்பு பாத்தாலும் அலுக்கவே இல்லை!!
    பொறுமையா தொகுத்து ஒரே இடத்துல போட்டிருக்கீங்க!!
    நன்றி அண்ணாச்சி!! :-)

     

  • At December 22, 2007 at 5:56 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க காமிரா கவிஞரே

    ஒரு பாட்டை வித்தியாசமான இசைக்கலவை கொண்டு பல்வேறு பாடல்களாகத் தந்தமைக்காக இவர்களை மன்னிக்கலாம் ;-)

     

  • At December 22, 2007 at 6:01 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    அண்ணாச்சி

    ஒரு பாடல் தான் - ஆனா ஒன்பது அவதாரம்! :-)
    - இதைக் காமிரா கவிஞருக்குச் சொல்லுங்க! :-)

    அப்படியே American Desi பட விமர்சனத்துக்கு waitings of america :-))

     

  • At December 22, 2007 at 6:14 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

  • At December 23, 2007 at 3:50 AM, Blogger கானா பிரபா said…

    கண்ணபிரானே வருக

    ஒன்றுக்கு ரண்டாய் மஞ்சள் சிவப்பிலும் ஜீனத்தின் தரிசனத்தைத் தந்தமைக்கு நன்றி. அதெப்படி ஒரே படத்தில் இந்த இரு காட்சியும் வந்திருக்கும்? குழப்பமாயிருக்கு.

    American Desi விமர்சனம் வந்து கொண்டே இருக்கு.

     

  • At December 23, 2007 at 9:12 PM, Blogger கோபிநாத் said…

    காபி இன்னா இது தான் காபி...பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு...;))

     

  • At December 24, 2007 at 4:01 AM, Blogger கானா பிரபா said…

    காபின்னா நரஸுஸ் காபி தான் தல ;-)

     

  • At January 23, 2008 at 1:21 PM, Blogger வெண்காட்டான் said…

    உங்களின் தொகுப்பு மிக அருமை. உண்மையில் மனதை விட்டகலா பாடல்கள். இந்த பாட்டின் இசையமையபாளர் பிட்ட்டு. கல்யான்ஜி இல்லை என்று நினைக்கிறேன். இவரை நீங்க்ள யார் என்று நினைத்தால் மிக மிக தெரிந்தவராகவே இருக்கிறார். இவர்தான் மேட் இன் இந்தியா என்ற புகழ் பெற்ற பாடலின் இசையமைபாளருமாவார். லைலா ஓ லைலா பாடலும் இவர்தான் இசையமைத்திருக்கிறார் என நினைக்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

     

  • At January 23, 2008 at 2:29 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் நண்பரே

    இன்று தான் இந்தச் செய்தி எனக்குத் தெரிந்தது, இப்படத்தின் மற்றைய பாடல்களை கல்யாண்ஜி ஆனந்த்ஜி வழங்கியதால் குழம்பிவிட்டேன். தகவலுக்கு நன்றி

     

Post a Comment
<< HOME
 
Thursday, December 13, 2007
பார்த்தேன் சிரித்தேன் - தமிழும் தெலுங்கும்
வீர அபிமன்யூ என்ற திரைப்படம் தமிழில் ஏ.வி.எம்.ராஜான், காஞ்சனா நடிப்பில் வந்திருந்தது. அதே திரைப்படம் காஞ்சனாவோடு சோபன் பாபு ஜோடி போட்டு வந்தது. இரண்டுக்கும் இசை கே.வி.மகாதேவன்.

தமிழில் வந்த படத்தில் வரும் "பார்த்தேன் சிரித்தேன்" என்ற பாடல் P.B.சிறீனிவாஸ், மற்றும் P.சுசீலா பாடி ஏக பிரபலம். இந்தப் பாட்டின் மெட்டும் இசையும் தெலுங்கில் கண்டசாலாவும் சுசிலாவும் பாடுவதைக் கண்டு ரசியுங்கள். இவற்றைப் பரிந்துரைத்த நண்பர் ஜி.ராகவனுக்கு மிக்க நன்றி ;-)

Tamil You Tube: prakashviswanathan

Telugu You Tube: MadhuraGeetalu
posted by கானா பிரபா 2:30 AM   17 comments
 
17 Comments:
  • At December 13, 2007 at 3:04 PM, Blogger கோபிநாத் said…

    தெலுங்கும் நல்லா தான் இருக்கு...;))

     

  • At December 13, 2007 at 3:52 PM, Blogger CVR said…

    குரல் வரிகள் இரண்டிலும் தமிழ் பாட்டு எனக்கு பிடித்தமையால் தெலுங்கு பதிப்பு அவ்வளவாக என்னிடத்தில் சோபிக்கவில்லை :-)

     

  • At December 13, 2007 at 6:23 PM, Blogger கானா பிரபா said…

    //கோபிநாத் said...
    தெலுங்கும் நல்லா தான் இருக்கு...;))//



    தல

    பாட்டைத் தானே சொல்றீங்க ;)

     

  • At December 13, 2007 at 7:22 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    PB ஸ்ரீநிவாஸ் குரலில் தவழும் மென்மை கண்டசாலாவில் கொஞ்சம் மிஸ்ஸிங்!
    மத்தபடி சுசீலாம்மா ரெண்டிலுமே கலக்கி இருக்காங்க!

    தமிழ்ல தேன் தேன்-ன்னு முடிஞ்சா
    தெலுங்குல சி, சி-ன்னு முடியுது!
    நல்லாத் தேன் இருக்கு!

     

  • At December 13, 2007 at 8:18 PM, Blogger Sridhar V said…

    அருமையான பாடல். கண்ணதாசனின் (அவர்தானே) வரிகள் மறக்க முடியாதவை.

    ஏவிஎம் ராஜன் பல படங்களில் செகண்ட் பிடில் வாசித்துவிட்டு பின்னர் சினிமாவே ஒரு பாவப்பட்ட தொழில் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகை கலக்கிய காஞ்சனா பின்னர் தனது 60 வயதில் ஆந்திராவில் ஒரு கோவிலில் தங்கி அங்கேயே சேவகம் செய்து கொண்டிருந்த்தாக ஆனந்த விகடனில் படித்த ஞாபகம். ஹ்ம்ம்ம்...

     

  • At December 13, 2007 at 8:54 PM, Blogger pudugaithendral said…

    பழைய மிஸ்ஸம்மாவிலும் அருமையான பாடல்கள் தமிழ் & தெலுங்கில் இருக்கு. அதையும் பாருங்க.

    மாயா பஜார், இப்படி எத்தனையோ,

    மாமா, மாமா எனும் பாடல் கூட நல்லா இருக்கும். (தமிழில் M.ஆர். ராதா ஆடுவார்)

     

  • At December 14, 2007 at 1:42 AM, Blogger கானா பிரபா said…

    // CVR said...
    குரல் வரிகள் இரண்டிலும் தமிழ் பாட்டு எனக்கு பிடித்தமையால் தெலுங்கு பதிப்பு அவ்வளவாக என்னிடத்தில் சோபிக்கவில்லை :-)//

    வாங்க சிவிஆர்

    நமக்குத் தான் சிறீநிவாஸ் உயிர், தெலுங்கர்களுக்கு கண்டசாலா தான் எல்லாமே ;-)

    //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    PB ஸ்ரீநிவாஸ் குரலில் தவழும் மென்மை கண்டசாலாவில் கொஞ்சம் மிஸ்ஸிங்!
    மத்தபடி சுசீலாம்மா ரெண்டிலுமே கலக்கி இருக்காங்க!//

    கண்ணபிரான்

    உங்க ஒப்பீடு கலக்கல்

     

  • At December 14, 2007 at 1:58 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

    பிரபா!
    இந்தத் "தேனை" பிடிக்காதவர்; இருக்கார்.
    இதன் இனிமைக்கு கண்டசாலாவின் குரலைவிட சிறிநிவாஸ் குரலே பொருத்தமென்பது என் அபிப்பிராயமும் கூட.
    அன்றைய புகழ் பெற்ற பாடல்கள் யாவும் மறுபிறவி எடுத்துள்ளன.
    மேலும் "சமரசம் உலாவுமிடமே"...என்ற தமிழ்ப்பாடல் ,சிங்கள உருவில் உண்டு. கிடைத்தால் இடவும்.

     

  • At December 14, 2007 at 4:10 AM, Blogger செல்லி said…

    தேனைப் போல " அத்திக்காய் காய் காய்
    ஆலங்காய் வெண்ணிலவே"யும் கவிஞரின் கவித்திறனை எடுத்துக்காட்டும் பாடல்களல்லவா!

     

  • At December 14, 2007 at 4:24 PM, Blogger கானா பிரபா said…

    //Sridhar Venkat said...

    ஏவிஎம் ராஜன் பல படங்களில் செகண்ட் பிடில் வாசித்துவிட்டு பின்னர் சினிமாவே ஒரு பாவப்பட்ட தொழில் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டார்.//

    வணக்கம் Sridhar

    ஏவிஅம் ராஜனும் மனைவி புஷ்பலதாவும் இப்போ கிறீஸ்தவ போதனை நிகழ்ச்சிகளைச் செய்து வருகின்றார்கள். பாடல் வ்ரிகள் உண்மையிலேயே இனிமை தான்.

    //புதுகைத் தென்றல் said...
    பழைய மிஸ்ஸம்மாவிலும் அருமையான பாடல்கள் தமிழ் & தெலுங்கில் இருக்கு. அதையும் பாருங்க.//


    வாங்க புதுகைத் தென்றல்

    மிஸ்ஸியம்மா பாட்டுக்கள் எல்லாமே இனிமை. அதே போல் மனிதன் மாறி விட்டான் என்று ஒரு படம் தமிழிலும் தெலுங்கிலும் வந்தது. ஜெமினி, நாகேஸ்வரராவ் நடித்தது. அதுவும் அருமை.

     

  • At December 15, 2007 at 5:51 AM, Blogger கானா பிரபா said…

    // யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    பிரபா!
    இந்தத் "தேனை" பிடிக்காதவர்; இருக்கார்.
    இதன் இனிமைக்கு கண்டசாலாவின் குரலைவிட சிறிநிவாஸ் குரலே பொருத்தமென்பது என் அபிப்பிராயமும் கூட.//

    யோகன் அண்ணா

    எனக்குப் பிடித்த பழைய பாடகர்களில் முதல் வரிசையில் இருப்பவர் சிறீனிவாஸ். இந்தப் பாட்டு அவருக்கு ஒரு தனிமுத்திரை கொடுத்த பாட்டும் அல்லவா.

    //செல்லி said...
    தேனைப் போல " அத்திக்காய் காய் காய்
    ஆலங்காய் வெண்ணிலவே"யும் கவிஞரின் கவித்திறனை எடுத்துக்காட்டும் பாடல்களல்லவா!//

    செல்லியக்கா

    கவிஞர் இது போல் ஏகப்பட்ட புதுமையகள் செய்திருக்கின்றார். இதே போல் இன்னொன்று வான் நிலா அல்ல பாட்டு.

     

  • At December 15, 2007 at 7:03 AM, Blogger தமிழ்பித்தன் said…

    சீ...சீ.. என்று நம்மட ஆக்களுட்ட பாடினால் அன்றே கதை கந்தள்தான்

     

  • At December 15, 2007 at 11:41 AM, Blogger G.Ragavan said…

    தமிழில் கவிதை அருமை. பாடிய குரல்கள் அருமை. பீ.பி.சீனிவாசும் பி.சுசீலாவும். இசையமைப்பும் அருமைதான்.

    தெலுங்கில் இசையும் பெண்குரலும் தமிழில் இருந்ததுதான். ஆனால் கவிதை மாறியிருக்கிறது. சூச்சி வலச்சி செந்தக்கு பிலச்சி...பார்த்தேன் சிரித்தேன் மாதிரித்தான் முயன்றிருக்கின்றார்கள். சொல் விளையாட்டு இருக்கிறது. மொழி புரிவதால் தமிழ் வரிகளில் உள்ள ஆழம் தெலுங்கு வரிகளில் இல்லை என்பதும் புரிகிறது. தெலுங்கிலேயே ஆழம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பாடல் வரிகளில் இல்லை.

    அடுத்த குறை கண்டசாலா. இவர் நல்ல பாடகர்தான். ஆனால் ஏற்ற இறக்கங்கள் இறங்கியே இருக்கும். பீ.பி.ஸ்ரீநிவாஸ் தெலுங்கும் பேசத் தெரிந்தவர். அவரே பாடியிருக்கலாம். இசையரசியைச் சொல்ல வேண்டியதில்லை. தமிழில் அவர் செய்த சிறப்பைத் தெலுங்கிலும் செய்திருக்கிறார்.

    அது சோபன் பாபுவா? யார் இந்த நெளிந்த இடுப்பர்னு நெனச்சேன். :)

     

  • At December 15, 2007 at 1:50 PM, Blogger L N Srinivasakrishnan said…

    தெலுங்கிலெ பொதுவாக டானஸ் எல்லாம் தமிழை காட்டிலும் இன்னும் கொஞ்சம் 'கும்'ன்னு இருக்கும் - இது என்னடா இப்படி இருக்கே-ன்னு யோசிக்க வைத்து விட்டது.

     

  • At December 16, 2007 at 4:18 AM, Blogger கானா பிரபா said…

    //தமிழ்பித்தன் said...
    சீ...சீ.. என்று நம்மட ஆக்களுட்ட பாடினால் அன்றே கதை கந்தள்தான்//

    தம்பி, நீர் உந்த விசப்பரீட்சையில் இறங்கட்டால் அதுவே போதும் ;-)

    //G.Ragavan said...
    தமிழில் கவிதை அருமை. பாடிய குரல்கள் அருமை. பீ.பி.சீனிவாசும் பி.சுசீலாவும். இசையமைப்பும் அருமைதான்.//

    ராகவன்

    உங்கள் ஆய்வு அருமை, பாடலைப் பரிந்துரைந்தமைக்கு மீண்டும்
    நன்றி ;-)

    //L N Srinivasakrishnan said...
    தெலுங்கிலெ பொதுவாக டானஸ் எல்லாம் தமிழை காட்டிலும் இன்னும் கொஞ்சம் 'கும்'ன்னு இருக்கும் - இது என்னடா இப்படி இருக்கே-ன்னு யோசிக்க வைத்து விட்டது.//

    வாங்க சிறீனிவாசகிருஷணன்

    இது பழைய தெலுங்கு என்பதால் கும் குறைச்சலா இருக்கும்.

     

  • At December 27, 2007 at 5:23 AM, Blogger Kanags said…

    பிபி ஸ்ரீ்நிவாஸ் பாடல்கள் இன்றும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பாடல் காடசி்யைத் தந்தமைக்கு நன்றி.

    இவர் ஏ.வி.எம்.ராஜன் சில ஆண்டுகளுக்கு முதல் சிட்னிக்கு வந்து கிறிஸ்தவ சமயப் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்ததார். பலர் மதம் மாறினார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

     

  • At December 27, 2007 at 2:34 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் சிறீ அண்ணா

    ஏ.வி.எம். ராஜன் கிறீஸ்தவத்துக்கு மாறி இப்போது மதப் பிரச்சாரங்கள் செய்கின்றார்.

     

Post a Comment
<< HOME
 
Sunday, December 2, 2007
"இதழில் கதை எழுதும் நேரமிது" - ஜேசுதாஸ் to எஸ்.பி.பாலா
ருத்ரவீணா என்ற படம் கே.பாலசந்தர் தெலுங்கில் இயக்கி சிரஞ்சீவி, ஜெமினி கணேசன், ஷோபனா நடித்தது. இப்படம் இளையராஜாவுக்கு 1988 இற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதையும் கொடுத்த படமது. இப்படத்திற்குப் புகழ் கிடைத்த அளவுக்கு கல்லாப்பெட்டியை நிறைக்கவில்லை.

நடிகர் கமலஹாசன் தன் வாழ்க்கைத் தொடரை ஜெமினி சினிமாவில் எழுதியபோது தெலுங்கில் தோல்வியைக் கண்ட ருத்ரவீணாவை தன் குருநாதர் கே.பாலசந்தர் வீம்பாகத் தமிழில் எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது. தமிழில் உன்னால் முடியும் தம்பி என்ற பெயரில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் தன்னம்பிக்கை கருத்து நூலின் தலைப்பையே வைத்து, நாயகனுக்கும் உதயமூர்த்தி என்ற பெயரிட்டு கமலஹாசன், ஜெமினி கணேசன், சீதா நடிப்பில் கே.பாலசந்தர் இயக்கி வந்திருந்தது அப்படம். மென்மையான கதாபாத்திரங்களில் ஒரு காலத்தில் நடித்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெமினி கணேசனுக்கு மீள் வரவாக அமைந்த இப்படத்தில் பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளையாக அவர் கர்ஜித்ததத மறக்க முடியுமா?

இப்பதிவில் தெலுங்கில் ருத்ர வீணாவிலும், தமிழில் உன்னால் முடியும் தம்பியிலும் வந்த ஒரே மெட்டு பாட்டு இரண்டாக காட்சிகளைத் தருகின்றேன். லலிதா ராகத்தில் தெலுங்கில் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடிய அதே மெட்டில் தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள். எது நல்ல ஜோடி என்று நினைக்கின்றீர்கள்?

தெலுங்கில் "லலித ப்ரிய கமலம்" (you tube: vasilihari)


தமிழில் "இதழில் கதை எழுதும் நேரமிது ( your tube : bbsarav )
posted by கானா பிரபா 2:45 AM   31 comments
 
31 Comments:
  • At December 2, 2007 at 3:24 AM, Blogger G.Ragavan said…

    லலித ப்ரிய கமலம் விரிச்சினதி...ஆகா...அருமையா இருக்கு. இப்பத்தான் கேக்குறேன். ஏசுதாசும் சூப்பரா பாடியிருக்காரு. ரொம்பவே நல்லாப் பாடியிருக்காரு. தமிழில் பாலுவும் நல்லாப் பாடியிருக்காரு. தமிழை விட சித்ரா தெலுங்குல நல்லாப் பாடியிருக்குறாப்புல இருக்கு. தமிழ்ல ஏற்கனவே சிலச்சில இடங்கள்ள கஷ்டப்பட்ட மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சு. ஆனா தெலுங்குல அந்தக் கஷ்டம் தெரியலை. நல்ல ஒழுங்கு இருக்கு. கூட்டிக்கழிச்சிப் பாத்தா தெலுங்குல பாட்டு நல்லாருக்கு. பாடல்கள் வரிகளை வெச்சுப் பார்க்கும் போது தராசு நடுவுலதான் நிக்குது. நல்லா பாட்டு அறிமுகப் படுத்தியிருக்கீங்க.

     

  • At December 2, 2007 at 10:18 AM, Blogger Sridhar V said…

    ஜேசுதாஸை மிகவும் பிடிக்கும் என்றாலும், இந்த பாடலை பொறுத்தவரையில், தெரிந்த மொழி, பாடல் படமாக்கப்பட்ட விதம், நடித்தவர்களின் spontaneity போன்றவைகளினால் தமிழ்தான் எனக்குப் பிடித்தது.

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மற்றும் படம். மிக்க நன்றி!

     

  • At December 2, 2007 at 12:24 PM, Blogger கோபிநாத் said…

    தல அட்டகாசமான பாட்டு..தெலுங்கில் இப்ப தான் கேட்கிறேன்.

    ஜேசுதாஸ்+சித்ரா - சூப்பர்

    அப்படியே ஷோபனா டான்ஸ் சூப்பரு ;)

     

  • At December 2, 2007 at 3:24 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ராகவன்

    இப்படியான பாட்டுக்கு தெலுங்கில் பாலுவையும், தமிழில் ஜேசுதாசையும் விடுவது தான் வழக்கமான சமாச்சாரம்,. ஆனால் வித்தியாசமாக இடமாற்றிய "ராஜ" தந்திரத்தை என்னவென்று சொல்ல ;)

     

  • At December 2, 2007 at 3:37 PM, Blogger CVR said…

    அட அட அட!!
    பாட்டு நிச்சயமா யேசுதாசின் குரலுக்கு ஏற்ற பாட்டு!!
    அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.நான் வழக்கமாகவே யேசுதாசின் குரலுக்கு பரம இரசிகன்.இந்த பாட்டை கேட்டு கிறங்கி விட்டேன்.
    மெல்லிய மாலை சூரியனுடன் பாடலை படமாக்கிய விதமும் அருமை!!
    அலைபாயுதே படத்தில் வரும் "நகிட நகிட நகிடா" பாட்டில் வரும் reverse playback technique (dunno whats the techinical jargon for that,its the funda wherein video is played back reverse) தமிழ் பாட்டிலும் உபயோகப்படுத்தியிருக்காங்க!!இப்போதான் பாக்கறேன்.
    தமிழ் பாட்டின் படமாக்கமும் அருமை.ஆனால் ஷோபனாவின் கண்களின் அழகும் நடனமும் சீதாவின் நளினத்தினை தூக்கி சாப்பிட்டுவிடுகிறது.
    மொத்தத்துல கூட்டி கழிச்சு பாத்தா தெலுங்கு பாட்டுக்கே என்னோட வோட்டு (close)

    பி.கு:ஒரு பதிவு போட்டா என்னமா மொக்க போடுறான்டா இந்த சீவீயாரு :-P !!

     

  • At December 2, 2007 at 6:05 PM, Blogger கானா பிரபா said…

    //Sridhar Venkat said...
    ஜேசுதாஸை மிகவும் பிடிக்கும் என்றாலும், இந்த பாடலை பொறுத்தவரையில், தெரிந்த மொழி, பாடல் படமாக்கப்பட்ட விதம், நடித்தவர்களின் spontaneity போன்றவைகளினால் தமிழ்தான் எனக்குப் பிடித்தது. //

    தமிழ்ப்பாட்டு இன்னொரு வகையில் காட்சிப்படுத்தப்பட்டும் இருக்கிறது இல்லையா

    //கோபிநாத் said...
    அப்படியே ஷோபனா டான்ஸ் சூப்பரு ;)//

    தல

    ரொம்ப ஜொள்ளிடாதீங்க, கீபோர்ட் மழையில் நனைஞ்ச காக்கை போல வந்திடும் ;-)

     

  • At December 2, 2007 at 8:27 PM, Blogger SurveySan said…

    யேசுதாஸ் ரொம்பவே பிடிக்கும், ஆனாலும், இந்த பாட்டுக்கு,

    SPB & Chitra தான் என் favourite!

     

  • At December 2, 2007 at 10:47 PM, Blogger pudugaithendral said…

    சந்தேகமே இல்லாமல் யேசுதாஸ் + சித்ரா ஜோடிதான்.

     

  • At December 2, 2007 at 11:16 PM, Blogger M.Rishan Shareef said…

    தெரிந்த மொழியென்பதாலும் அழகான வெளிப்புறக் காட்சிப்படுத்தலாலும்,அருமையான கவி வரிகளாலும் (நாளும் நிலவது தேயுது மறையுது...மங்கை முகமென யாரதைச் சொன்னது?) தமிழ்ப் பாடல்தான் நன்றாக இருப்பதாகத் தோணுகிறது.
    சித்ரா இரண்டிலும் நன்றாகப் பாடியிருக்கிறார்.அது சரி,குயில் எந்த மொழியில் கூவினாலும் நன்றாகத் தானே இருக்கும்...?
    கே.யேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இரு மொழிகளுக்கும் சிறப்புச் சேர்த்திருக்கிறார்கள்.
    தமிழில் அப்பாடலைத் தந்த பாடலாசிரியரையும் குறிப்பிட்டிருக்கலாமே?

     

  • At December 2, 2007 at 11:37 PM, Blogger வந்தியத்தேவன் said…

    பத்மஸ்ரீ ஜேசுதாஸ் சித்ரா காம்பினேசனுடன் நம்ம கமலும் சோபனாவும் தமிழில் ஆடியிருந்தால் சூப்பராக இருக்கும். இருவரும் முறைப்படி பரத நாட்டியம் படித்தவர்கள்.

    ம்ம்ம் அந்தக் காலத்தில் ராஜா ராஜாங்கம் நடத்திய காலம். எத்தனையோ முறை இந்தப் படம் பார்த்தேன் இன்னமும் அலுக்கவில்லை.

     

  • At December 3, 2007 at 12:42 AM, Blogger கானா பிரபா said…

    //CVR said...
    அட அட அட!!
    பாட்டு நிச்சயமா யேசுதாசின் குரலுக்கு ஏற்ற பாட்டு!!
    அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.//

    காமிரா கவிஞரே

    கவித்துவமான பின்னூட்டம் போட்டு விட்டு மொக்கை என்று சொல்றீங்களே? ரெம்பத் தான் தன்னடக்கம் உங்களுக்கு.

    //SurveySan said...
    யேசுதாஸ் ரொம்பவே பிடிக்கும், ஆனாலும், இந்த பாட்டுக்கு,

    SPB & Chitra தான் என் favourite!//

    சர்வேசரே

    சபாஷ் சரியான போட்டி ;-)

     

  • At December 3, 2007 at 3:32 AM, Blogger கானா பிரபா said…

    //புதுகைத் தென்றல் said...
    சந்தேகமே இல்லாமல் யேசுதாஸ் + சித்ரா ஜோடிதான்.//

    வாங்க புதுகைத் தென்றல்

    மாறி மாறி தெரிவுகள் வருது ;-)

    //எம்.ரிஷான் ஷெரீப் said...
    தமிழில் அப்பாடலைத் தந்த பாடலாசிரியரையும் குறிப்பிட்டிருக்கலாமே?//

    ரிஷான்,

    அந்தப் படத்தில் புலமைப் பித்தனும், முத்துலிங்கமும் பாடல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்தப் பாடலை எழுதியவர் புலமைப்பித்தன் என்று நினைக்கின்றேன்.

    //வந்தியத்தேவன் said...
    பத்மஸ்ரீ ஜேசுதாஸ் சித்ரா காம்பினேசனுடன் நம்ம கமலும் சோபனாவும் தமிழில் ஆடியிருந்தால் சூப்பராக இருக்கும். இருவரும் முறைப்படி பரத நாட்டியம் படித்தவர்கள்.//

    வந்தியத் தேவன் சரியாச் சொன்னியள் மூன்று பேர் கூட்டணி கூட இனிமையாக இருக்கும்.

     

  • At December 3, 2007 at 6:04 AM, Blogger cheena (சீனா) said…

    பாடும் நிலா பாலுவின் பாடல் தமிழ்ப் பாடல் - எனக்குப் பிடித்தது. ஜேசுதாசின் இனிய குரலும் என்னை மயக்கியது. இரண்டுமே காதில் பாய்ந்த தேன்

     

  • At December 3, 2007 at 12:53 PM, Blogger M.Rishan Shareef said…

    உங்களிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு பாடல் கேட்கப் போகிறேன் கானா பிரபா.
    எனக்கு எஸ்.பி.பி,மற்றும் ஜானகியம்மா பாடிய
    "பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது?"
    பாடல் வேண்டும். படம் "பார்த்த பார்வையில்".
    இந்தப் படம் பற்றிய தகவல்களோடு பாட்டும் வேண்டும்..தரமுடியுமா நண்பரே?

     

  • At December 3, 2007 at 6:55 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க சீனா

    நடுநிலையா தீர்ப்புக் கொடுத்திருக்கீங்க ;-)



    ரிஷான்

    நீங்கள் கேட்ட பாட்டு வீடியோவாக இல்லை, ஓடியோவில் சில நாட்களில் றேடியோஸ்பதி பதிவில் தருகின்றேன். பார்த்த பார்வையில் பாட்டு, "கெளரி மனோகரி" படத்தில் வந்தது. இசை: இனியவன், படத்தில் நடித்தவர்கள் நாயகன் நாயகி உட்பட புதுமுகங்கள்.

     

  • At December 3, 2007 at 7:18 PM, Blogger CVR said…

    /// At December 3, 2007 12:53 PM, எம்.ரிஷான் ஷெரீப் said…

    உங்களிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில////

    கேட்டதும் கொடுப்பவனே கானா கானா
    நீங்க கானா பிரபாவா?? இல்ல கர்ணா பிரபாவா??
    :-P

     

  • At December 3, 2007 at 7:44 PM, Blogger கானா பிரபா said…

    கேட்டதும் கொடுப்பவனே கானா கானா
    நீங்க கானா பிரபாவா?? இல்ல கர்ணா பிரபாவா??
    :-P//

    ஸ்ஸ் யப்பா, அனல் வெயிலடிக்கிற சிட்னியில் இப்பிடி குளிருதே ;-))

     

  • At December 3, 2007 at 8:36 PM, Blogger pudugaithendral said…

    எனக்கு ஒரு பாடல் தேடி தருவீர்களா?

    பாடல் வரிகள் மட்டுமே தெரியும்

    கூவின பூங்குயில்,குருவிகள் இயம்பின
    இயம்பின சங்கம், எம்பெருமான் பள்ளி
    எழுந்தருளாயே.

    செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
    மென்பஞ்சு மேகமே கோலம் போடு.

    தோள்கள் இரண்டில் கையோடு மாலை இட்டு
    ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி

    இப்படி போகும் பாடலில்....

    ஒரு கிளி உறங்குது தோளோடு,
    ஒரு கிளி உறங்குது மார்போடு,
    குடும்பமே ஆனந்த கிளிக்கூடு

    தேடிக் கொடுத்தால் ஆனந்த மடைவேன்

    அத்தோடு

    தேடுகின்ற கண்களுக்குள் குடியிருக்கும் சாமி எனும் ஐயப்பன் பாடல். திரைப்படப்பாடல் தான்

     

  • At December 3, 2007 at 9:41 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க புதுகைத் தென்றல்

    நீங்கள் கேட்ட அதிகப்படியான பாடல்கள் கைவசமே இருக்கு, றேடியோஸ்பதி மூலம் தந்துதவுகின்றேன். வரும் போது மடலில் தெரியப்படுத்துகின்றேன்.

     

  • At December 4, 2007 at 4:47 AM, Anonymous Anonymous said…

    /கேட்டதும் கொடுப்பவனே கானா கானா
    நீங்க கானா பிரபாவா?? இல்ல கர்ணா பிரபாவா??
    :-P
    //

    நம்ப கானா பிரபா அண்ணா ஒரு மனுசனே இல்லை.அவரு தெய்வம்ன்னு சொல்ல வந்தேன்.பாட்டு அருமை அண்ணா ;)

     

  • At December 4, 2007 at 1:47 PM, Blogger கானா பிரபா said…

    தங்கச்சி

    பாட்டு அருமை இருக்கட்டும், சைக்கிள் கேப்பில இந்த அண்ணனை இப்படி வாரிட்டியேம்மா?

     

  • At December 4, 2007 at 8:23 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    அருமையான பாடல்.
    பிரபாவின் பதிவையும் பார்த்தேன்!
    CVR பதிவையும் பார்த்தேன்!

    பின்-னால் வந்த பதிவென்பதால், பின்-ஊட்டம் அந்தப் பதிவுக்கு முதலில் இட்டு விட்டேன்! பிரபா அண்ணே கோச்சிக்காதீங்க! :-)

    பாடல் வரிகள் மட்டும் இல்லை!
    இசையும் அப்படியே! இரண்டு பத்திகளையும் பாருங்கள்!

    //இனிய பருவமுள்ள இளங்குயிலே//
    ன்னு இழைவாகத் துவங்கும் பாடல்...

    //நானும் எழுதிட இளமையும் துடிக்குது
    நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது//
    என்று டமடம என்று வேகமாக முடியும்!

    பின்னர்...
    //தோகை போலேமின்னும்
    பூவை உந்தன்கூந்தல்//
    ன்னு மீண்டும்...அடங்கி இழைவாகத் தொடங்கும்!

    கூடல் உவகையில்...
    துவங்கும் போது இருக்கும் மென்மை,
    நடுவில் வேகம் கூடுது...பின்பு மீண்டும் மென்மை ஆவதை இசையிலேயே எப்படிக் கொண்டு வராரு பாருங்க ராஜா! :-)

    தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி...இந்த ஸ்டைல் அப்படியே இருக்கு! இசை சில சமயங்களில் மொழியையும் கடக்கிறது!

    தொட்டுத் தொட்டுச் செல்வதை/சொல்வதை விடத் தொட்டும் தொடாமலும் செல்வதில்/சொல்வதில் தான் சுவை கூடவே வரும்! :-)

    நேத்து ராத்திரியம்மா ன்னு புயல் பாடல்கள் வரும் அதே திரை இசையில்,
    இது போல் தென்றல் பாடல்கள் அவ்வப்போது வருவது நெஞ்சத்தைக் கிள்ளும்! :-)

     

  • At December 4, 2007 at 9:02 PM, Blogger M.Rishan Shareef said…

    நன்றிகள் கானா பிரபா.
    இன்னும் நிறையப் பாடல்கள் உங்களிடம் கேட்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன.இனி வரும் காலங்களில் ஒவ்வொன்றாகக் கேட்கிறேன்.தொந்தரவுக்கு மன்னிக்கவும் நண்பா.

     

  • At December 5, 2007 at 6:41 PM, Blogger கானா பிரபா said…

    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    அருமையான பாடல்.
    பிரபாவின் பதிவையும் பார்த்தேன்!
    CVR பதிவையும் பார்த்தேன்!

    பின்-னால் வந்த பதிவென்பதால், பின்-ஊட்டம் அந்தப் பதிவுக்கு முதலில் இட்டு விட்டேன்! பிரபா அண்ணே கோச்சிக்காதீங்க! :-)

    கண்ணபிரான்

    சிவிஆர் நம்ம பங்காளி தான், அவருக்கு மொய் வச்சாலே போதும் ;-)
    -இந்தப்பாடுக்கு இவ்வளவு ரொமான்டிக் சமாச்சாரங்களா ஆகா

     

  • At December 5, 2007 at 7:49 PM, Anonymous Anonymous said…

    அதுசரி, இதழில் கதையெழுத எது நல்லநேரமெண்டு இன்னும் நீங்கள் சொல்லேலயே?
    நானும் நம்பி வந்து ஏமாந்துபோனன்.
    ஏற்கனவே கனக்க இதழ்களுக்குக் கதையெழுதி அனுப்பியும் ஒருத்தனும் பிரசுரிக்கிறானில்லை.
    நீங்கள் 'இதழில் கதையெழுதும் நேரமெது' எண்டு சொன்னால் முயற்சித்துப் பார்க்கலாம்.

     

  • At December 5, 2007 at 11:46 PM, Anonymous Anonymous said…

    அண்ணா

    செம்மீன் பற்றிய பதிவு எங்கே?? இந்தப் பாடல் நினைவிருக்கிறதா என்று பாருங்களேன்.

    "வெண்ணிலா முற்றத்திலே வேணுகானம், மேல்மாடி கரயில நீயும் நானும்."

    மூன்று தினங்களாக குழம்பிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து கண்டுபிடித்து சொல்லவும்

    ஸ்ரீ

     

  • At December 6, 2007 at 2:06 PM, Blogger கானா பிரபா said…

    அநானி அண்ணை

    இதழில் கதையெழுத நேரம் முக்கியமா? 24 மணி நேர சேவையெல்லோ?

    வணக்கம் ஸ்ரீ

    செம்மீன் லிங் இதோ
    http://kanapraba.blogspot.com/2006/03/blog-post_31.html

    "வெண்ணிலா முற்றத்திலே வேணுகானம், மேல்மாடி கரயில நீயும் நானும்."

    கேட்டமாதிரி இருக்கு, கண்டுபிடிக்க முயல்கின்றேன்.

     

  • At December 6, 2007 at 2:20 PM, Blogger G.Ragavan said…

    வெண்ணிலா நேரத்திலே வேணுகாணம்
    மேல்மாடி முத்தத்திலே நானும் நீயும்...

    படம் : நேயர் விருப்பம்
    இசை : விஜயபாஸ்கர்

    இந்தப் படத்துலயே மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமான்னு கூட பாட்டு ஒன்னு இருக்கு. அதுவும் நல்லாருக்கும்.

     

  • At December 6, 2007 at 2:32 PM, Blogger கானா பிரபா said…

    ஆபத்பாந்தவரே மிக்க நன்றிகள் ;-)

    என்னிடம் அந்தப்பாட்டு இல்லை, இணையத்தில் தேடிப் பார்க்கின்றேன்.

     

  • At December 6, 2007 at 2:54 PM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

    பிரபா!
    தெலுங்கிலுமுண்டென்பது இப்போதே தெரியும், ஜேசுதாஸ் பிரியமானாலும்
    இங்கே பாலா தான் முன்னிற்கிறார்.
    சோபனா,சீதா நளினங்கள் குறைவில்லை,கமல் ரசிக்கும்படியுள்ளார்.
    சிரஞ்சீவி ஐயோ பாவமாக இருக்கிறார்.
    மெட்டு மறக்கமுடியாதது...ராஜாவின் வைரத்திலொன்று...

     

  • At December 8, 2007 at 3:35 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் யோகன் அண்ணா

    தெலுங்கில் சிரஞ்சிவிக்கு இப்படியான வேடங்கள் பொருந்தாது, அங்கேயும் கமல-ஹாசனே நடித்திருக்கலாம்.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது