"இதழில் கதை எழுதும் நேரமிது" - ஜேசுதாஸ் to எஸ்.பி.பாலா
ருத்ரவீணா என்ற படம் கே.பாலசந்தர் தெலுங்கில் இயக்கி சிரஞ்சீவி, ஜெமினி கணேசன், ஷோபனா நடித்தது. இப்படம் இளையராஜாவுக்கு 1988 இற்கான சிறந்த இசையமைப்பாளர் விருதையும் கொடுத்த படமது. இப்படத்திற்குப் புகழ் கிடைத்த அளவுக்கு கல்லாப்பெட்டியை நிறைக்கவில்லை.
நடிகர் கமலஹாசன் தன் வாழ்க்கைத் தொடரை ஜெமினி சினிமாவில் எழுதியபோது தெலுங்கில் தோல்வியைக் கண்ட ருத்ரவீணாவை தன் குருநாதர் கே.பாலசந்தர் வீம்பாகத் தமிழில் எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது. தமிழில் உன்னால் முடியும் தம்பி என்ற பெயரில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் தன்னம்பிக்கை கருத்து நூலின் தலைப்பையே வைத்து, நாயகனுக்கும் உதயமூர்த்தி என்ற பெயரிட்டு கமலஹாசன், ஜெமினி கணேசன், சீதா நடிப்பில் கே.பாலசந்தர் இயக்கி வந்திருந்தது அப்படம். மென்மையான கதாபாத்திரங்களில் ஒரு காலத்தில் நடித்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெமினி கணேசனுக்கு மீள் வரவாக அமைந்த இப்படத்தில் பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளையாக அவர் கர்ஜித்ததத மறக்க முடியுமா?
இப்பதிவில் தெலுங்கில் ருத்ர வீணாவிலும், தமிழில் உன்னால் முடியும் தம்பியிலும் வந்த ஒரே மெட்டு பாட்டு இரண்டாக காட்சிகளைத் தருகின்றேன். லலிதா ராகத்தில் தெலுங்கில் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடிய அதே மெட்டில் தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள். எது நல்ல ஜோடி என்று நினைக்கின்றீர்கள்?
லலித ப்ரிய கமலம் விரிச்சினதி...ஆகா...அருமையா இருக்கு. இப்பத்தான் கேக்குறேன். ஏசுதாசும் சூப்பரா பாடியிருக்காரு. ரொம்பவே நல்லாப் பாடியிருக்காரு. தமிழில் பாலுவும் நல்லாப் பாடியிருக்காரு. தமிழை விட சித்ரா தெலுங்குல நல்லாப் பாடியிருக்குறாப்புல இருக்கு. தமிழ்ல ஏற்கனவே சிலச்சில இடங்கள்ள கஷ்டப்பட்ட மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சு. ஆனா தெலுங்குல அந்தக் கஷ்டம் தெரியலை. நல்ல ஒழுங்கு இருக்கு. கூட்டிக்கழிச்சிப் பாத்தா தெலுங்குல பாட்டு நல்லாருக்கு. பாடல்கள் வரிகளை வெச்சுப் பார்க்கும் போது தராசு நடுவுலதான் நிக்குது. நல்லா பாட்டு அறிமுகப் படுத்தியிருக்கீங்க.
ஜேசுதாஸை மிகவும் பிடிக்கும் என்றாலும், இந்த பாடலை பொறுத்தவரையில், தெரிந்த மொழி, பாடல் படமாக்கப்பட்ட விதம், நடித்தவர்களின் spontaneity போன்றவைகளினால் தமிழ்தான் எனக்குப் பிடித்தது.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மற்றும் படம். மிக்க நன்றி!
இப்படியான பாட்டுக்கு தெலுங்கில் பாலுவையும், தமிழில் ஜேசுதாசையும் விடுவது தான் வழக்கமான சமாச்சாரம்,. ஆனால் வித்தியாசமாக இடமாற்றிய "ராஜ" தந்திரத்தை என்னவென்று சொல்ல ;)
அட அட அட!! பாட்டு நிச்சயமா யேசுதாசின் குரலுக்கு ஏற்ற பாட்டு!! அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.நான் வழக்கமாகவே யேசுதாசின் குரலுக்கு பரம இரசிகன்.இந்த பாட்டை கேட்டு கிறங்கி விட்டேன். மெல்லிய மாலை சூரியனுடன் பாடலை படமாக்கிய விதமும் அருமை!! அலைபாயுதே படத்தில் வரும் "நகிட நகிட நகிடா" பாட்டில் வரும் reverse playback technique (dunno whats the techinical jargon for that,its the funda wherein video is played back reverse) தமிழ் பாட்டிலும் உபயோகப்படுத்தியிருக்காங்க!!இப்போதான் பாக்கறேன். தமிழ் பாட்டின் படமாக்கமும் அருமை.ஆனால் ஷோபனாவின் கண்களின் அழகும் நடனமும் சீதாவின் நளினத்தினை தூக்கி சாப்பிட்டுவிடுகிறது. மொத்தத்துல கூட்டி கழிச்சு பாத்தா தெலுங்கு பாட்டுக்கே என்னோட வோட்டு (close)
பி.கு:ஒரு பதிவு போட்டா என்னமா மொக்க போடுறான்டா இந்த சீவீயாரு :-P !!
//Sridhar Venkat said... ஜேசுதாஸை மிகவும் பிடிக்கும் என்றாலும், இந்த பாடலை பொறுத்தவரையில், தெரிந்த மொழி, பாடல் படமாக்கப்பட்ட விதம், நடித்தவர்களின் spontaneity போன்றவைகளினால் தமிழ்தான் எனக்குப் பிடித்தது. //
தமிழ்ப்பாட்டு இன்னொரு வகையில் காட்சிப்படுத்தப்பட்டும் இருக்கிறது இல்லையா
//கோபிநாத் said... அப்படியே ஷோபனா டான்ஸ் சூப்பரு ;)//
தல
ரொம்ப ஜொள்ளிடாதீங்க, கீபோர்ட் மழையில் நனைஞ்ச காக்கை போல வந்திடும் ;-)
தெரிந்த மொழியென்பதாலும் அழகான வெளிப்புறக் காட்சிப்படுத்தலாலும்,அருமையான கவி வரிகளாலும் (நாளும் நிலவது தேயுது மறையுது...மங்கை முகமென யாரதைச் சொன்னது?) தமிழ்ப் பாடல்தான் நன்றாக இருப்பதாகத் தோணுகிறது. சித்ரா இரண்டிலும் நன்றாகப் பாடியிருக்கிறார்.அது சரி,குயில் எந்த மொழியில் கூவினாலும் நன்றாகத் தானே இருக்கும்...? கே.யேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இரு மொழிகளுக்கும் சிறப்புச் சேர்த்திருக்கிறார்கள். தமிழில் அப்பாடலைத் தந்த பாடலாசிரியரையும் குறிப்பிட்டிருக்கலாமே?
//புதுகைத் தென்றல் said... சந்தேகமே இல்லாமல் யேசுதாஸ் + சித்ரா ஜோடிதான்.//
வாங்க புதுகைத் தென்றல்
மாறி மாறி தெரிவுகள் வருது ;-)
//எம்.ரிஷான் ஷெரீப் said... தமிழில் அப்பாடலைத் தந்த பாடலாசிரியரையும் குறிப்பிட்டிருக்கலாமே?//
ரிஷான்,
அந்தப் படத்தில் புலமைப் பித்தனும், முத்துலிங்கமும் பாடல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்தப் பாடலை எழுதியவர் புலமைப்பித்தன் என்று நினைக்கின்றேன்.
//வந்தியத்தேவன் said... பத்மஸ்ரீ ஜேசுதாஸ் சித்ரா காம்பினேசனுடன் நம்ம கமலும் சோபனாவும் தமிழில் ஆடியிருந்தால் சூப்பராக இருக்கும். இருவரும் முறைப்படி பரத நாட்டியம் படித்தவர்கள்.//
வந்தியத் தேவன் சரியாச் சொன்னியள் மூன்று பேர் கூட்டணி கூட இனிமையாக இருக்கும்.
உங்களிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு பாடல் கேட்கப் போகிறேன் கானா பிரபா. எனக்கு எஸ்.பி.பி,மற்றும் ஜானகியம்மா பாடிய "பார்த்த பார்வையில் என் உள்ளம் என்ன பள்ளமானது?" பாடல் வேண்டும். படம் "பார்த்த பார்வையில்". இந்தப் படம் பற்றிய தகவல்களோடு பாட்டும் வேண்டும்..தரமுடியுமா நண்பரே?
நீங்கள் கேட்ட பாட்டு வீடியோவாக இல்லை, ஓடியோவில் சில நாட்களில் றேடியோஸ்பதி பதிவில் தருகின்றேன். பார்த்த பார்வையில் பாட்டு, "கெளரி மனோகரி" படத்தில் வந்தது. இசை: இனியவன், படத்தில் நடித்தவர்கள் நாயகன் நாயகி உட்பட புதுமுகங்கள்.
கூடல் உவகையில்... துவங்கும் போது இருக்கும் மென்மை, நடுவில் வேகம் கூடுது...பின்பு மீண்டும் மென்மை ஆவதை இசையிலேயே எப்படிக் கொண்டு வராரு பாருங்க ராஜா! :-)
தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி...இந்த ஸ்டைல் அப்படியே இருக்கு! இசை சில சமயங்களில் மொழியையும் கடக்கிறது!
தொட்டுத் தொட்டுச் செல்வதை/சொல்வதை விடத் தொட்டும் தொடாமலும் செல்வதில்/சொல்வதில் தான் சுவை கூடவே வரும்! :-)
நேத்து ராத்திரியம்மா ன்னு புயல் பாடல்கள் வரும் அதே திரை இசையில், இது போல் தென்றல் பாடல்கள் அவ்வப்போது வருவது நெஞ்சத்தைக் கிள்ளும்! :-)
நன்றிகள் கானா பிரபா. இன்னும் நிறையப் பாடல்கள் உங்களிடம் கேட்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன.இனி வரும் காலங்களில் ஒவ்வொன்றாகக் கேட்கிறேன்.தொந்தரவுக்கு மன்னிக்கவும் நண்பா.
அதுசரி, இதழில் கதையெழுத எது நல்லநேரமெண்டு இன்னும் நீங்கள் சொல்லேலயே? நானும் நம்பி வந்து ஏமாந்துபோனன். ஏற்கனவே கனக்க இதழ்களுக்குக் கதையெழுதி அனுப்பியும் ஒருத்தனும் பிரசுரிக்கிறானில்லை. நீங்கள் 'இதழில் கதையெழுதும் நேரமெது' எண்டு சொன்னால் முயற்சித்துப் பார்க்கலாம்.
லலித ப்ரிய கமலம் விரிச்சினதி...ஆகா...அருமையா இருக்கு. இப்பத்தான் கேக்குறேன். ஏசுதாசும் சூப்பரா பாடியிருக்காரு. ரொம்பவே நல்லாப் பாடியிருக்காரு. தமிழில் பாலுவும் நல்லாப் பாடியிருக்காரு. தமிழை விட சித்ரா தெலுங்குல நல்லாப் பாடியிருக்குறாப்புல இருக்கு. தமிழ்ல ஏற்கனவே சிலச்சில இடங்கள்ள கஷ்டப்பட்ட மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சு. ஆனா தெலுங்குல அந்தக் கஷ்டம் தெரியலை. நல்ல ஒழுங்கு இருக்கு. கூட்டிக்கழிச்சிப் பாத்தா தெலுங்குல பாட்டு நல்லாருக்கு. பாடல்கள் வரிகளை வெச்சுப் பார்க்கும் போது தராசு நடுவுலதான் நிக்குது. நல்லா பாட்டு அறிமுகப் படுத்தியிருக்கீங்க.