வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Thursday, July 31, 2008
பிடித்த ரஜினி பத்து...!
மனசை இலேசாக்கும் படைப்புக்கள் மட்டுமன்றி, பாரமாக இறங்கும் பாத்திரங்களாகவும் நடித்த ரஜினிகாந்த்தின் படங்களில் எனக்குப் பிடித்த பத்துப் படங்கள் இவை. மனம் சஞ்சலப்படும் வேளையில் ரஜினியின் நகைச்சுவை கலந்த படங்கள் அருமருந்து.

கடந்த மார்ச் மாதம் மலேசியாவின் மலாக்கா நகர் போன போது ஒரு வீடியோக்கடையின் கண்ணியில் தென்பட்ட ரஜினியின் அழகான வால்பேப்பரை அப்படியே என் கமராவில் சுட்டிருந்தேன். அந்தப் படத்தைப் போடவும் ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கு ;-)

கீழே நான் தரும் படங்களின் வரிசை அவை வந்த ஆண்டில் தான் இருக்கின்றன. என் ரசனைத் தர வரிசையில் அல்ல. இங்கே தேர்ந்தெடுத்த காட்சிகளின் யூடிப் உரிமைதாரார்களுக்கு நன்றி

முள்ளும் மலரும் (1978)



ஆறில் இருந்து அறுபது வரை (1979)



பில்லா (1980)



நெற்றிக்கண் (1981)



நான் சிவப்பு மனிதன் (1985)



ராஜாதி ராஜா (1989)



தளபதி (1991)



அண்ணாமலை (1992)



மன்னன் (1992)



பாட்ஷா (1995)

posted by கானா பிரபா 2:25 AM   22 comments
 
22 Comments:
  • At July 31, 2008 at 3:30 AM, Blogger rapp said…

    புவனா ஒரு கேள்விக்குறி விட்டுட்டீங்களே :(:(:(

     

  • At July 31, 2008 at 4:05 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    ஆஹா எல்லா படமும் எனக்கு பிடிச்சதா இருக்கு!

     

  • At July 31, 2008 at 4:38 AM, Blogger கானா பிரபா said…

    //rapp said...
    புவனா ஒரு கேள்விக்குறி விட்டுட்டீங்களே :(:(:(//

    புவனா ஒரு கேள்விக்குறி, அவள் அப்படித்தான் போன்ற படங்களும் விலக்க முடியாதவை, ஆனால் எனக்கு பிடித்த பட்டியலில் இந்தப் படங்கள் ஏனோ நீண்ட நாளாய் ஒட்டியிருக்கு.

     

  • At July 31, 2008 at 4:42 AM, Blogger வடுவூர் குமார் said…

    கைராசிக்காரன் இல்லையே!!

     

  • At July 31, 2008 at 4:45 AM, Blogger கானா பிரபா said…

    //நிஜமா நல்லவன் said...
    ஆஹா எல்லா படமும் எனக்கு பிடிச்சதா இருக்கு!//

    வாங்க தல

    //வடுவூர் குமார் said...
    கைராசிக்காரன் இல்லையே!!//

    கைராசிக்காரன் பிரபு படமாச்சே ;-)

     

  • At July 31, 2008 at 5:05 AM, Anonymous Anonymous said…

    nallavanukku nallavan illayae

     

  • At July 31, 2008 at 5:43 AM, Blogger கப்பி | Kappi said…

    குசேலன் ஸ்பெஷல் சூப்பர் அண்ணாச்சி! நன்றி நன்றி நன்றி!! :))

    முதலில் இருக்கும் தலைவர் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்டில்! :))

     

  • At July 31, 2008 at 6:14 AM, Blogger இராம்/Raam said…

    கானா,


    காயத்ரி படத்திலே மொட்டைமாடியிலே நின்னு ஒரு டயலாக் சொல்லுவாரு... அதுதான் இன்னவரைக்கும் வில்லன் ரோலிலே பெஸ்ட்... :)

    கிடைச்சா பாருங்க...

     

  • At July 31, 2008 at 8:48 AM, Blogger ஹேமா said…

    நான் ரஜனி ரசிகை இல்லை.
    என்றாலும் நீங்கள் வரிசைப் படுத்திய படங்கள் அத்தனையுமே அருமை.
    இவைகளோடு ரஜனி அவர்களின் எங்கேயோ கேட்ட குரல்,புவனா ஒரு கேள்விக்குறி,நான் அடிமை இல்லை,
    புதுக் கவிதை போன்ற படங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    அவரின் அசைவிலும் குரலிலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.என் சிநேகிதியின்
    3 வயது மகன் ரஜனியை ஐயா என்கிறான்.ஐயாவின் படம் போட்டால் மட்டுமே குழப்பம் இல்லாமல் சாப்பிட்டும் விடுகிறான்.அப்போ
    3 லிருந்து 90 வரை என்று சொல்லலாமா பிரபா!!!

     

  • At July 31, 2008 at 11:54 AM, Blogger enRenRum-anbudan.BALA said…

    பத்தும் சூப்பர்ணா :)

     

  • At July 31, 2008 at 8:38 PM, Anonymous Anonymous said…

    பத்தும் நல்ல படங்கள். 'எங்கேயோ கேட்ட குரல்', 'பைரவி' சேர்க்கப்படாதது ஏமாற்றமே.

     

  • At August 1, 2008 at 12:40 AM, Blogger கோபிநாத் said…

    பத்தும் சூப்பர்..;)

    ஜானியும் சேர்த்துக்கோங்க தல ;)

     

  • At August 1, 2008 at 2:17 AM, Blogger ஆயில்யன் said…

    கலக்கலான பத்துதான் :))

    புவனா ஒரு கேள்விக்குறி
    கை கொடுக்கும் கை (இதுதான் வடுவூர் குமார் சொல்ற படம்ன்னு நினைக்கிறேன்!)
    தில்லுமுல்லு
    அவள் அப்படித்தான்
    காயத்ரி
    பைரவி
    தம்பிக்கு எந்த ஊரு

    இதெல்லாம் கூட சூப்பராக இருக்கும் அடுத்த லிஸ்டு ரெடி பண்ணுங்க :)))

     

  • At August 1, 2008 at 2:19 AM, Blogger ஆயில்யன் said…

    //ஹேமா said...
    அவரின் அசைவிலும் குரலிலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.சொல்லலாமா பிரபா!!!
    //
    கிட்டதட்ட இந்த ஒரு விசயம்தான் 25 வருடங்களுக்கும் மேலாக இன்று இருந்துக்கொண்டே இருக்கும் அதிசயம்!!!!!!!

     

  • At August 1, 2008 at 2:35 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    பத்தும் நல்ல படங்கள்... பின்னூட்டங்களில் சொல்லப்பட்ட படங்களோடு எஜமானையும் சேத்துக்குங்க...

     

  • At August 1, 2008 at 2:38 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    பாஷா படத்தில நான் ரொம்ப ரசிச்சது வொய்ஸ் மோடுலேஷன்தான் ரஜனி கலக்கியிருப்பாரெண்டால், ரகுவரன் ரணகளமாக்கியிருப்பார்

    ரஜனி இப்படியொரு குரலில் இதுவரையும் எந்தப்படத்துக்கும் பேசியதில்லை....

    ஏன் ஜனகராஜ்கூட ஒரு இறுக்கத்தோட பேசியிருப்பார்...

     

  • At August 1, 2008 at 2:42 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    குசேலன் படம் ரஜனிக்கு செட்டாகாதுன்னு நான் நினைச்சது சரியாத்தான் இருக்கு...

     

  • At August 2, 2008 at 7:01 PM, Blogger கானா பிரபா said…

    //Anonymous said...
    nallavanukku nallavan illayae//

    அதுவும் நல்லது தான் ஆனா ஏனோ என் முதல் பத்துக்குள் வரல.


    //கப்பி | Kappi said...
    குசேலன் ஸ்பெஷல் சூப்பர் அண்ணாச்சி! நன்றி நன்றி நன்றி!! :))//

    நன்றி தல, உங்க பிறந்த நாளுக்கு ஸ்பெஷலா குசேலன் ரிலீஸ் ஆக்கிட்டாங்களே ;)


    //இராம்/Raam said...
    கானா,


    காயத்ரி படத்திலே மொட்டைமாடியிலே நின்னு ஒரு டயலாக் சொல்லுவாரு... அதுதான் இன்னவரைக்கும் வில்லன் ரோலிலே பெஸ்ட்... :)//

    வாங்க இராம்

    காயத்ரி ரொம்ப சின்ன வயசில் பயந்து கொண்டே மர்மமாகப் பார்த்தது, மீண்டும் எடுத்துப் பார்க்கணும்.

     

  • At August 2, 2008 at 7:04 PM, Blogger கானா பிரபா said…

    //ஹேமா said...
    நான் ரஜனி ரசிகை இல்லை.
    என்றாலும் நீங்கள் வரிசைப் படுத்திய படங்கள் அத்தனையுமே அருமை.//

    வணக்கம் ஹேமா

    எங்கும் சிறுசுகளுக்கு ரஜினி என்றால் உயிர் போல, எத்தனையோ மடங்கு வயதான அந்த மனிதரின் மேல் இவர்களுக்கு இப்படியான கவர்ச்சி இருப்பது அதிசயம் இல்லையா?

    //enRenRum-anbudan.BALA said...
    பத்தும் சூப்பர்ணா :)//

    நன்றி தல ;)


    //கங்கை கொண்டான் said...
    பத்தும் நல்ல படங்கள். 'எங்கேயோ கேட்ட குரல்', 'பைரவி' சேர்க்கப்படாதது ஏமாற்றமே.//


    வாங்க கங்கை கொண்டான்

    பைரவி நான் இன்னும் பார்க்க்வில்லை, எங்கேயோ கேட்ட குரலும் அருமையான படம் இல்லையா.

     

  • At August 2, 2008 at 7:08 PM, Blogger கானா பிரபா said…

    //கோபிநாத் said...
    பத்தும் சூப்பர்..;)

    ஜானியும் சேர்த்துக்கோங்க தல ;)//

    நன்றி தல

    ஜானியும் கலக்கல் தான்.

    //ஆயில்யன் said...
    கலக்கலான பத்துதான் :))//

    வாங்க ஆயில்யன்

    ரஜினியை வகையான பிரிவுக்குள் வச்சு நகைச்சுவை, ஆக்க்ஷன், நடிப்பு என்று நீங்க சொன்ன படங்களோடு இடலாம் இல்லையா.

    தமிழன்

    வாங்கோ, எஜமானில் ரஜினி ரொம்பவே அடக்கி வாசிச்சிருப்பார். குசேலன் பார்த்திட்டீங்கள் போல ;)

     

  • At August 8, 2008 at 9:38 AM, Anonymous Anonymous said…

    you missed "Thillu Mullu" ..one of the greatest comedy movies in Tamil

     

  • At December 9, 2008 at 12:23 PM, Blogger pushpa said…

    சூப்பர் அண்ணா.

     

Post a Comment
<< HOME
 
Monday, July 21, 2008
.:: மை ஃபிரண்ட் ::. இன் ஹாப்பி டே இன்று ;-)

நம்ம வலையுலக பாட்டுச் சுனாமி, சுஜாதா ரசிகர் மன்றத்தின் ஒரே ஒரு தலைவி, இளயதளபதி படம் பிடிச்சாலும் சித்துவின் தீவிர ஏஸி (விசிறியை விட பெட்டர்)

.:: மை ஃபிரண்ட் ::. இன் பிறந்த நாள் இன்று. அவருக்குப் ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ள பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துச் சொல்லி அமர்கின்றோம் அவரின் உலகெங்கும் சந்து, குறுக்கு ஓடை, மேல் மாடி, கீழ்மாடி, குடிசை, மேன்ஷனில் வாழும் ப்ரெண்ட்ஸ்.

தங்கைக்கோர் கீதமாக நாம் தருவது

அவருக்காக "ஓ மை ஃபிரண்ட்" (மை ஹாப்பி டேஸ் பாட்டு)


சுஜாவின் ரசிகையான .:: மை ஃபிரண்ட் ::.க்கு கொடுக்கும் ஸ்பெஷல் கிப்ட் இது
posted by கானா பிரபா 12:00 AM   22 comments
 
22 Comments:
  • At July 21, 2008 at 6:35 PM, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said…

    சந்து குறுக்கு சந்து .. டவுன் ன்னு எல்லா இடத்திலும் இருப்பவங்களுன்னு மட்டுமில்லாம எங்கவீட்டுக்குட்டீஸுக்கும் அவ மைப்ரண்ட்.. வாழ்கவளமுடன் மைப்ரண்ட்.. வாழ்த்துகள்

     

  • At July 21, 2008 at 6:59 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said…

    //அவருக்காக "ஓ மை ஃபிரண்ட்" (மை ஹாப்பி டேஸ் பாட்டு)//

    சூப்பர் பாட்டு!
    சூப்பர் பர்த்-டே!
    சூப்பர் ட்ரீட், இன்று மாலை!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைஃபிரெண்டு அக்கா! :)))

     

  • At July 21, 2008 at 7:09 PM, Blogger நவீன பாரதி said…

    //சந்து குறுக்கு சந்து .. டவுன் ன்னு எல்லா இடத்திலும் இருப்பவங்களுன்னு மட்டுமில்லாம எங்கவீட்டுக்குட்டீஸுக்கும் அவ மைப்ரண்ட்.. வாழ்கவளமுடன் மைப்ரண்ட்.. வாழ்த்துகள்//

    ரிப்பீட்டேய்!

     

  • At July 21, 2008 at 7:19 PM, Blogger pudugaithendral said…

    சந்து குறுக்கு சந்து .. டவுன் ன்னு எல்லா இடத்திலும் இருப்பவங்களுன்னு மட்டுமில்லாம எங்கவீட்டுக்குட்டீஸுக்கும் அவ மைப்ரண்ட்.. வாழ்கவளமுடன் மைப்ரண்ட்.. வாழ்த்துகள்//

    ரிப்பீட்டேய்!


    repetuku repetu poduvathu,

    PUDUGAI THENDRAL,

    ASHISH

    AMRUTHA

    SRIRAM

     

  • At July 21, 2008 at 7:42 PM, Blogger ஆயில்யன் said…

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    .::மைபிரண்டு::.

    அன்பு தம்பி,
    ஆயில்யன்

     

  • At July 21, 2008 at 7:42 PM, Blogger ஆயில்யன் said…

    //கயல்விழி முத்துலெட்சுமி said...
    சந்து குறுக்கு சந்து .. டவுன் ன்னு எல்லா இடத்திலும் இருப்பவங்களுன்னு மட்டுமில்லாம எங்கவீட்டுக்குட்டீஸுக்கும் அவ மைப்ரண்ட்.. வாழ்கவளமுடன் மைப்ரண்ட்.. வாழ்த்துகள்
    //

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

     

  • At July 21, 2008 at 9:25 PM, Blogger கோபிநாத் said…

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி ! :)))

     

  • At July 21, 2008 at 9:28 PM, Blogger Sanjai Gandhi said…

    அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.11

     

  • At July 21, 2008 at 9:38 PM, Blogger நிஜமா நல்லவன் said…

    /
    கயல்விழி முத்துலெட்சுமி said...
    சந்து குறுக்கு சந்து .. டவுன் ன்னு எல்லா இடத்திலும் இருப்பவங்களுன்னு மட்டுமில்லாம எங்கவீட்டுக்குட்டீஸுக்கும் அவ மைப்ரண்ட்.. வாழ்கவளமுடன் மைப்ரண்ட்.. வாழ்த்துகள்

    /


    ரிப்பீட்டேய்!

     

  • At July 21, 2008 at 9:47 PM, Blogger thamizhparavai said…

    happy birthday to my friend..our friend...

     

  • At July 23, 2008 at 1:40 AM, Blogger MyFriend said…

    அண்ணே போஸ்ட் கலக்கல்ஸ் (கரண்டி போட்டுத்தான் கலக்கி பார்த்தேன். :-P)

    அதுசரி.. "இளையதளபதி" படம் பிடிக்காது. ஆனால் இளையதளபதி படம் பிடிக்கும்.. (குழ்ழப்புறேனா? ஆனா, உங்களுக்கு ப்புரிஞ்சிருக்கும்..)

    பதிவு முழுக்க உள்குத்து நிறைய இருந்தாலும் நாங்க விழாம ஸ்ட்ராங்கா இருக்கோம்ல.. ஹீஹீஹீ..

    வாழ்க வளர்க சித்து. :-)

     

  • At July 23, 2008 at 1:42 AM, Blogger MyFriend said…

    @முத்துக்கா:

    ஆமாக்கா.. எங்கக்கா மாதினியும் அண்ணன் சபரியும் ஸ்க்கூலுக்கெல்ல்லாம் போறாங்களாமே.. எங்கவீட்டுல என்னை இன்னும் ஸ்கூலுக்கே அனுப்பல. ஏன்னு கேட்டா, இன்னும் சின்ன ப்பிள்ளை. 2 வயசுக்க்கெல்லாம் ஸ்கூலுக்கு போனா மத்தவங்கல டிஸ்டர்ப் பண்ணுவேன்னு ப்ளாக் திறந்து க்கொடுத்து விளையாட சொல்றாங்க.. என்ன கொடும பிரபா இது! :-P

     

  • At July 23, 2008 at 1:43 AM, Blogger MyFriend said…

    @கே.ஆர்.எஸ்:

    அண்ணே.. நீங்க சொன்னது போலவே மாலை சூப்பர் ட்ரீட்டுதான். ;-)

     

  • At July 23, 2008 at 1:45 AM, Blogger MyFriend said…

    @நவீன பாரதி:

    பாரதி கண்ணம்மா கண்ணம்மான்னு கவிதை எழுதுவார். நவினமான பாரதி "ரிப்பீட்டேய்" போடுறார். ஒரு வேளை ரிப்பீட்டேய் என்பது நவீன கவிதையோ. ;-)

    ரிப்பீட்டேய்...

    ஆஹா... நானும் அழகாய் நவீன கவிதை எழுதுறேனே.. :-P

     

  • At July 23, 2008 at 1:47 AM, Blogger MyFriend said…

    @புதுகைத்தென்றல்:

    குடும்பத்தோட வந்து வழ்த்தமைக்கு நன்றி. என் சார்பா இன்று கலா அக்கா வீட்டுல விருந்து. கலா அக்கா சமைத்து அனைவருக்கும் பறிமாருவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ;-)

     

  • At July 23, 2008 at 1:48 AM, Blogger MyFriend said…

    @ஆயில்யா:

    இங்கேயும் ரிப்பீட்டா? ஆஹா.. நீங்களும் நவீன கவிதை எழ்ழூதிட்டீங்க.. வாழ்த்துக்கள். ;-)

     

  • At July 23, 2008 at 1:49 AM, Blogger MyFriend said…

    @கோபிநாத்:

    நன்றி அண்ணா. :-)

     

  • At July 23, 2008 at 1:49 AM, Blogger MyFriend said…

    @சஞ்சய்::

    இன்னும் உங்க கணக்கு முடியல போலிருக்கு. ;-))

     

  • At July 23, 2008 at 1:51 AM, Blogger MyFriend said…

    @நிஜமா நல்லவன்:

    வாழ்த்துக்கள்.. நீங்களு கவிதை எழுத ஆர்ரம்பிச்சிட்டீங்க..நவீனா கவிதை. ;-)

     

  • At July 23, 2008 at 1:52 AM, Blogger MyFriend said…

    @தமிழ்ப்பறவை:

    நன்றி பறவையாரே... ;-)

     

  • At July 23, 2008 at 3:06 AM, Blogger pudugaithendral said…

    2 வயசுக்க்கெல்லாம் ஸ்கூலுக்கு போனா மத்தவங்கல டிஸ்டர்ப் பண்ணுவேன்னு ப்ளாக் திறந்து க்கொடுத்து விளையாட சொல்றாங்க..

    உங்களுக்கு பிளாக் திறந்து கொடுத்தாங்களா?

    இது கொஞ்சம் ஓவரா இல்ல.

    நீங்களே 1000 பேருக்கு பிளாக் திறந்து கொடுத்தவராச்சே. :)

     

  • At July 23, 2008 at 3:58 PM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    இங்கேயுமா இதை நான் பாக்கலையே பிறந்த நாள் வாழ்த்துக்கள் மைபிரண்ட்..

     

Post a Comment
<< HOME
 
Saturday, July 19, 2008
காலம் மறக்காத Bobby பாடல்
Bobby திரைப்படம் 1973 இல் ராஜ்கபூர் இயக்கத்தில் அவர் மகன் ரிஷிகபூர் நாயகனாக நடித்த படம். அவரோடு ஜோடி சேர்ந்தவர் டிம்பிள் கபாடியா. அந்தக் காலகட்டத்தில் வந்த சிறப்பான பாடல்கள் வரிசையில் Bobby திரைப்படப் பாடல்களும் இடம்பிடித்துக் கொண்டன. அதிலும் குறிப்பாக Main shayar to nahin என்ற பாடல் இத்தனை வருடங்கள் கழித்தும் மலைத்தேனாய் இனிக்கும் பாடல்.

லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையில் சைலேந்திர சிங் பாடும் அந்தப் பாடல் இதோ



இந்தப் பாடல் பின்னர் Hum Tum என்ற படத்தில் இருபது வருடங்கள் கழித்து அதே ரிஷிகபூருடன், படத்தின் நாயகன் சையிப் அலிகான் தோன்றிப் பாடும் காட்சி



தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் நடுவராக வந்த ரிஷிகபூர் தம்பதிகள் முன் பாடும் பாடகர், பின்னர் ரிஷிகபூரும் பாடுகின்றார்

posted by கானா பிரபா 6:52 AM   15 comments
 
15 Comments:
  • At July 19, 2008 at 7:22 AM, Blogger M.Rishan Shareef said…

    மிக அருமையான பாடல் பிரபா.. காலங்கள் கழிந்தாலும் மனது மறக்காத இனிமையான பாடல். புதுப்படத்தில் வருவதைக் காட்டிலும் அதன் பழைய படத்தில் பாடல் நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

    மிகச் சிரமப்பட்டுத் தேடிப் போட்டிருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள் நண்பரே !

     

  • At July 19, 2008 at 7:38 AM, Blogger CVR said…

    நான் பெரிதும் விரும்பி கேட்கும் பாடல்!!!
    இன்றைக்கு கேட்க வைத்ததற்ற்கு மிக்க நன்றி அண்ணாச்சி!!
    ஜப் சே தேகா என வரும்போது ஜெர்காகட்டும்,மகர் ஏக் ஹசீன் பின் வரும் wind instrument piece ஆகட்டும ரசித்து ரசித்து இழைத்திருப்பார்கள் இந்த பாடலை!!
    ரசித்து நாமும் கேட்டால் மிக இனிமையான ஒரு உணர்வை மனதில் ஏற்படுத்திவிடும் பாடல் இது!! :-)

     

  • At July 19, 2008 at 7:40 AM, Blogger Tech Shankar said…

  • At July 19, 2008 at 8:48 AM, Blogger ஹேமா said…

    கலக்கிறிங்க பிரபா.அருமையான தேடல்.எப்போதோ கேட்ட ஞாபகம்...அப்பிடித்தான் சொல்ல வேணும்.3-4 தரம் கேட்டாச்சு இப்போ.மொழி விளங்காட்டிலும் ஹம்மிங்ல பாடிட்டேன்.
    இதேபோல"ஆராதனா"
    என்று நினைக்கிறேன்.புகழ் பெற்ற பாடல்கள்.யாழ்ப்பாணத்தில் நாதஸ்வரத்தில் வாசித்துக் கூடக் கேட்டிருக்கிறேன்.முடிந்தால் தேடித் தாருங்கள் இனி.நன்றி பிரபா.

     

  • At July 19, 2008 at 8:55 AM, Blogger G.Ragavan said…

    இந்த லெச்சுமிக்காந்தனும் பியாரிலாலனும் (ரெண்டு பேரும் மன்னிக்க) எக்கச்சக்க இந்திப் படங்களுக்கு இசையமைச்சிப் புகழோட இருந்தவங்க. நெறைய ஹிட் பாட்டுகள் குடுத்திருக்காங்க.

    பாபி படம் ரிஷிகபூருக்கும் டிம்பிள் கபாடியாவுக்கும் வாழ்வளித்த படம். அந்தப் படத்திலிருந்து அருமையான பாடலைக் குடுத்தமைக்கு நன்றி.

     

  • At July 19, 2008 at 9:47 AM, Blogger MyFriend said…

    சூப்பரண்ணே. :-)

     

  • At July 19, 2008 at 1:45 PM, Anonymous Anonymous said…

    பாபி , சாகர் போன்ற படப்பாடல்கள் என்னைக்கும் கேட்க இனிதானவை, சாகர் பாட்டுக்களும் போடுங்க

     

  • At July 19, 2008 at 6:00 PM, Blogger Tamilcooking Admin said…

    நல்ல பாடல்..
    :)

     

  • At July 19, 2008 at 6:45 PM, Blogger நிஜமா நல்லவன் said…

    தல...சூப்பர்!

     

  • At July 19, 2008 at 8:23 PM, Blogger கானா பிரபா said…

    ரிஷான்

    ஓல்ட் இஸ் கோல்ட் என்று சும்மாவா சொன்னாங்க ;-)

    காமிரா கவிஞர் சீவிஆர்

    உங்கள் ரசனைக்கு இப்பாடல் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் ;-)


    தொடுப்புக்களுக்கு நன்றி தமிழ் நெஞ்சம்

    ஹேமா

    ஆராதனா பாடல்களும் கலக்கல்,அவை பின்னர் தமிழில் சிவகாமியின் செல்வன் என்று மீள எடுத்திருந்தார்கள்.

     

  • At July 19, 2008 at 8:38 PM, Blogger ஆயில்யன் said…

    உங்க காலத்தில 1973ல் வெளியான பாட்டு என்று கேள்விப்பட்டேன்

    சூப்பரா இருக்கு!


    அனேகமா பாட்டு ஏதோ ஒரு நினைப்புல மனசுல வந்து குதிச்சிருக்கும்போல அப்படித்தானே அண்ணா :))) (

     

  • At July 19, 2008 at 9:22 PM, Blogger Ramya Ramani said…

    நல்ல பாடல்கள்

     

  • At July 20, 2008 at 2:38 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க ராகவன்

    ஒரு காலத்தில் லஷ்மிகாந்தனும், பியாரியும் நிறையவே நம் காதுகளை குத்தகைக்கு எடுத்தாங்க.

    மைபிரண்ட்

    நன்னி ;-)

    சின்ன அம்மணி

    சாகர் பாடல்களையும் தொகுத்துக் கொடுக்கின்றேன்

    நிர்வாகி & நிஜமா நல்லவன்

    நன்றி ;-)

    ஆயில்ஸ்

    இது என் போன பிறப்பில் கேட்டது. புனர்ஜென்ம ஞாபகம் எல்லாம் வந்திடுச்சு ;-)

    ரம்யா ரமணி

    வருகைக்கு நன்றி

     

  • At July 20, 2008 at 2:42 AM, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said…

    இந்தப்பாடலை நான் இலங்கை வானொலியில் தான் முதலில் கேட்டேன் பின்னர் அதை அப்படியே ரேடியோ ஓடும்போது ரெக்கார்ட் செய்து வைத்திருந்தேன்..
    :)

     

  • At July 20, 2008 at 4:54 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க முத்துலெட்சுமி

    இலங்கை வானொலியில் ஹிந்திப் பாடல்கள், மலையாளப் பாடல்களைப் போடும் பணி இன்றும் தொடர்கின்றது.

     

Post a Comment
<< HOME
 
Friday, July 18, 2008
நெல்சன் மண்டேலா - 90
"இந்தப் போரில் ஒருவர் வெற்றி பெறுவார். மற்றவர் தோல்வி காண்பார். ஆனால், போரின் பின்னர் நாட்டின் சாம்பல் மேட்டில் நின்றாவது வெற்றி பெற்றவரும் தோல்வி கண்டவரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசத்தான் வேண்டும். உங்களுக்கே வெற்றி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாமே வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

ஆனால், பெறுமதியான பகையாளிகள் என்ற வகையில் ஒருவரை மற்றவர் மதிப்பதற்கான வாய்ப்பை எம்மிடம் இருந்து அபகரித்து தவறிழைத்து விடாதீர்கள். இணக்கமான கருத்தைக் கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் நீங்களும் நாங்களும் எதிரிகளாக இருந்தாலும் உங்களை மதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எங்களுக்குத், தாருங்கள்"

- நெல்சன் மண்டேலா ஐலண்ட் சிறையின் நிலைவரங்கள் குறித்து சிறைச்சாலை ஆணையாளரான வெள்ளையினத்தவர் ஜெனரல் ஜே.சி.ஸ்ரெயினுடன் பேசுகையில் சொன்னது.( தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியற் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒருமுறை ஜேவிபி இனவாதக் கட்சிக்கு இதை மேற்கோளிட்டிருந்தார், நன்றி தமிழ் நேசன் தளம்)

ஜீலை 18, 1918 இல் பிறந்த ஆபிரிக்கச் சிங்கம் நெல்சன் மண்டேலாவுக்கு இன்றோடு வயது 90 ஆகின்றது. நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 வருட சிறைவாசம் அனுபவித்து, பின்னர் 1990 இல் அவர் சுதந்திரக் காற்றைச் சுவாசித்த போது தன் உடன்பிறப்புக்களுக்கும் ஒரு விடியலை ஏற்படுத்தினார். தென் ஆபிரிக்காவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் ஆனார். நோபல் கமிட்டி அவருக்கு சமாதான விருதைக் கொடுத்தது. ஒருகாலத்தில் ஒதுக்கிய தேசங்கள் சிவப்புக் கம்பளம் இட்டு வரவேற்றன.இவரின் வாழ்வின் சரிதம் Long Walk to Freedom என்ற பெயரில் வடிக்கப்பட்டிருக்கின்றது. நெல்சன் மண்டேலா - சுதந்திரத்திற்கான விலையையும், உறுதியையும் கண் முன் காட்டி நிற்கும் சாட்சியம்.

நெல்சன் மண்டேலாவின் முதல் பேட்டி


நெல்சன் மண்டேலா விடுதலையான தினம், 1990


நெல்சன் மண்டேலாவுக்கான சிறப்புப் பாடல்


நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 1


நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 2


நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 3


நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 4


நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 5
posted by கானா பிரபா 2:09 AM   10 comments
 
10 Comments:
  • At July 18, 2008 at 4:45 AM, Blogger மாயா said…

    Thanks . . .

     

  • At July 18, 2008 at 5:52 AM, Blogger ஆயில்யன் said…

    அருமையானதொரு தொகுப்பு!
    நன்றி!

     

  • At July 19, 2008 at 1:51 AM, Blogger கானா பிரபா said…

    மாயா மற்றும் ஆயில்யன்

    தங்கள் வருகைக்கு நன்றி

     

  • At July 19, 2008 at 1:58 AM, Blogger Unknown said…

    இப்போதைக்கு பார்த்து முடியாது என்பதால், புக்மார்க் செய்து விட்டேன்! தொகுத்தமைக்கு, மிக்க நன்றி, கானா!

     

  • At July 19, 2008 at 4:38 AM, Blogger ஹேமா said…

    "நான் வெள்ளையர்களின் அதிகாரத்தை எதிர்க்கிறேன்.
    அதே போல் கறுப்பர்களின் அதிகாரத்தையும் மறுக்கிறேன்.
    தென் ஆப்பிரிக்கா,ஒரு சுதந்திர பூமி!
    இங்கு அனைத்து மக்களும் சமமான அதிகாரத்துடன்,சகோதரர்களாகக்
    கைகோத்து வாழ வேண்டும்.
    இதுவே என் கனவு. எனது இந்தக் கனவு முழுமையாக நிறைவேறும் வரை,எனது போராட்டம் தொடரும்.
    இதற்காக என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று உயரிய மனிதத் தத்துவத்தை வெளிப்படுத்திய அந்த உரைதான்,
    மண்டேலா எனும் சாதாரண தலைவனைப் பிற்பாடு வரலாற்று நாயகனாக மாற்றின.
    ஓர் அபூர்வ நாயகர்... நெல்சன் மண்டேலா!கறுப்பு காந்தி.

    90 ஆவது பிறந்தநாளில் உங்களோடு சேர்ந்து நாங்களும் நினைத்துக் கொண்டோம். தொகுத்துத் தந்தமைக்கு நன்றி பிரபா.

     

  • At July 19, 2008 at 8:30 AM, Blogger கானா பிரபா said…

    // தஞ்சாவூரான் said...
    இப்போதைக்கு பார்த்து முடியாது என்பதால், புக்மார்க் செய்து விட்டேன்! தொகுத்தமைக்கு, மிக்க நன்றி, கானா!//

    மிக்க நன்றி நண்பா

    வணக்கம் ஹேமா

    நெல்சன் மண்டேலாவின் சிந்தனைகளோடு அமைந்த உங்கள் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி

     

  • At July 19, 2008 at 8:50 AM, Blogger King... said…

    அருமையான விசயம்...
    தொகுப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பரே...

     

  • At July 19, 2008 at 8:54 AM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கு நன்றி நண்பா

     

  • At July 19, 2008 at 6:49 PM, Blogger நிஜமா நல்லவன் said…

    நல்ல தொகுப்பு. பொறுமையாக பார்க்க வேண்டும். நன்றி.

     

  • At July 19, 2008 at 8:18 PM, Blogger கானா பிரபா said…

    நன்றி தல

     

Post a Comment
<< HOME
 
Saturday, July 12, 2008
சுப்ரமணியபுரம் - விளம்பரப் பாடல்
சுப்ரமணியபுரம் திரைப்படம் வருவதற்கு முன்னரே அந்தப் படத்தின் ஸ்டில்ஸ், இயக்குனர் சசிகுமாரின் பேட்டி போன்றவற்றிலிருந்தே இப்படம் பெரியதொரு கவனத்தை ஈர்க்கும் என்று நினைத்திருந்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும் இதுவரை வந்த அப்படத்தின் திரை விமர்சனங்கள் நல்லதொரு விதையை சசிகுமார் விதைத்திருப்பதைக் காட்டியிருக்கின்றது. நீண்ட நாட்களாகத் தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர் என்ற வேலையைச் செய்து வந்த ஜேம்ஸ் வசந்தனிடம் இவ்வளவு திறமையான இசையமைப்பாளர் இருந்திருக்கிறார் என்பதைக் காலம் கடந்தது தான் தமிழ் சினிமா கண்டு கொண்டது.

விகடனில் வெளிவந்த பேட்டி ஒன்றில் சுப்ரமணியபுரம் படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பாடலை உருவாக்கியிருப்பதாகவும், அதைப் படத்தில் வைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லியிருந்தார். ஹிந்தித் திரைப்படங்களுக்கு இவ்வாறான விளம்பரப் பாடல்கள் வருவது வழமை. முன்னர் விக்ரம் நடித்த கிங் படத்திற்காகவும் மேலதிகமாகப் பாடல்கள் எடுத்து வீடியோ ஆல்பம் ஆக்க நினைப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். செய்தார்களோ தெரியவில்லை. இதோ சுப்ரமணியபுரத்துக்காக எடுக்கப்பட்ட அந்த விளம்பரப் பாடல். நன்றி: istreamindia



படத்தின் ட்ரெய்லர்
posted by கானா பிரபா 5:54 AM   19 comments
 
19 Comments:
  • At July 12, 2008 at 6:21 AM, Blogger pudugaithendral said…

    me the 1stu

     

  • At July 12, 2008 at 6:29 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    நான்தான் இரண்டாவது...:)

     

  • At July 12, 2008 at 6:30 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    நானும் படத்தின் ஒரு பாடல் பார்த்த உடனேயே படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்!

     

  • At July 12, 2008 at 6:30 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    எங்கடை ஊர் ஸ்ரூடியோக்களின்ர பழைய போட்டோக்களை பாத்த மாதிரி இருந்திச்சு...சில ஸ்டில்ஸ்

     

  • At July 12, 2008 at 5:23 PM, Blogger கானா பிரபா said…

    புதுகைத் தென்றல் மற்றும் தமிழன்

    வருகைக்கு நன்றீங்கோ

    பெல்பொட்டமும் சிகையலங்காரமும் பழைய ஸ்ரூடியோவில தான் இப்ப பார்க்கலாம் ;)

     

  • At July 12, 2008 at 7:35 PM, Blogger ஆயில்யன் said…

    //கானா பிரபா said...
    புதுகைத் தென்றல் மற்றும் தமிழன்

    வருகைக்கு நன்றீங்கோ

    பெல்பொட்டமும் சிகையலங்காரமும் பழைய ஸ்ரூடியோவில தான் இப்ப பார்க்கலாம் ;)
    //
    உங்களை மாதிரி அந்த காலத்து ஆளுங்க சொன்னாத்தான் எங்களுக்கும் கூட இந்த பெல்பாட்டமும் ஹேர் ஸ்டைலுமே தெரியவரும் :)

     

  • At July 12, 2008 at 10:52 PM, Blogger கானா பிரபா said…

    ஆயில்ஸ்

    நாங்க பெல்பொட்டத்துக்கு முந்திய வேஷ்டிக் காலம் போதுமா ;)

     

  • At July 14, 2008 at 3:25 AM, Blogger ஹேமா said…

    பிரபா எதுக்கும் படம் பாத்தாத்தான் எதையும் சொல்லலாம்.

     

  • At July 14, 2008 at 3:28 AM, Blogger கானா பிரபா said…

    வாங்கோ ஹேமா

    படம் பார்த்தவர்கள் நல்லதெண்டும் சொல்லுகிறார்கள், பார்ப்போம்

     

  • At July 14, 2008 at 6:20 PM, Blogger நிஜமா நல்லவன் said…

    படம் நல்லா இருக்கு என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அவசியம் பார்க்க நினைத்திருக்கிறேன்.

    ஆயில்ஸ் அண்ணே நீங்க என்ன தான் மாஞ்சு மாஞ்சு உங்களை சின்ன புள்ளை மாதிரி காட்டிக்க முயற்சி பண்ணினாலும் உங்க உண்மையான வயசு எனக்கு தெரியும்னு மட்டும் சொல்லிக்கிறேன்:)

     

  • At July 15, 2008 at 2:43 AM, Blogger கானா பிரபா said…

    நிஜமா நல்லவன்

    சிங்கப்பூருக்கும் இன்னும் வரலியா, சரி காத்திருப்போம்.

    ஆயில்யனுக்கு நாற்பது வயசு என்ற உண்மையை யாருக்கும் சொல்லிடாதீங்க பிளீஸ்

     

  • At July 15, 2008 at 2:57 AM, Blogger ஆயில்யன் said…

    /./July 15, 2008 2:43 AM, கானா பிரபா said…

    நிஜமா நல்லவன்

    சிங்கப்பூருக்கும் இன்னும் வரலியா, சரி காத்திருப்போம்.

    ஆயில்யனுக்கு நாற்பது வயசு என்ற உண்மையை யாருக்கும் சொல்லிடாதீங்க பிளீஸ்
    ///

    சற்றும் கூட எதிர்பாராத விஷயம் :(((

     

  • At July 15, 2008 at 3:00 AM, Blogger ஆயில்யன் said…

    டூ நி.நல்லவன்

    தம்பி உன்னைய நல்லவன்னு நம்பிதானே உன்கிட்ட அம்புட்ட தகவலையும் சொன்னேன்!(பொண்ணு பாக்கறேன்னு வேற நீங்க என்கிட்ட போட்டோ வாங்குனீங்க!)
    எல்லாத்தையும் இப்படி பப்ளிக்கா ஜொன்னா நான் இன்னா பண்றது! சரி விட்டுதள்ளுங்க! ஆனா அந்த போட்டோவை மட்டும் தனியா பதிவு மாதிரி போட்டுடாதீங்க ப்ளீஸ்! ப்ளீஸ்!!

     

  • At July 15, 2008 at 3:09 AM, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said…

    என்ன நடக்குது இங்க.. ஆயில் போட்டறாதீங்கன்னு சொல்றத பாத்தா போட்டு பொண்ணு தேடிக்கொடுங்கன்னு சொல்றாப்பல இருக்கு.. ஆனா போட்டா கஷ்டம் போலவும் இருக்கு.. ஒன்னும் புரியல.

     

  • At July 15, 2008 at 3:19 AM, Blogger ஆயில்யன் said…

    //கயல்விழி முத்துலெட்சுமி said...
    என்ன நடக்குது இங்க.. ஆயில் போட்டறாதீங்கன்னு சொல்றத பாத்தா போட்டு பொண்ணு தேடிக்கொடுங்கன்னு சொல்றாப்பல இருக்கு.. ஆனா போட்டா கஷ்டம் போலவும் இருக்கு.. ஒன்னும் புரியல.
    //

    ஐயகோஓஓஓஓஓஓஓஓ!

    அப்பன்னா நீங்க சொல்ற மாதிரி நான் வடக்கு நோக்கி நகரும் யந்திரமாகிவிடுவேனா????? (ஆயில்யா! வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் உன் பிளாக்கு எங்க போவும்?????)

     

  • At July 15, 2008 at 3:26 AM, Blogger ஆயில்யன் said…

    //நிஜமா நல்லவன் said...
    படம் நல்லா இருக்கு என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அவசியம் பார்க்க நினைத்திருக்கிறேன்.

    ஆயில்ஸ் அண்ணே நீங்க என்ன தான் மாஞ்சு மாஞ்சு உங்களை சின்ன புள்ளை மாதிரி காட்டிக்க முயற்சி பண்ணினாலும் உங்க உண்மையான வயசு எனக்கு தெரியும்னு மட்டும் சொல்லிக்கிறேன்:)
    //

    அடப்பாவி நல்லவா! இதுல வேற நீ அந்த ******* பேரையும் கூட சொல்லியிருக்க போல இது ஆண்டவனுக்கே அடுக்காது :(((

     

  • At July 15, 2008 at 3:27 AM, Blogger ஆயில்யன் said…

    //நிஜமா நல்லவன் said...
    படம் நல்லா இருக்கு என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அவசியம் பார்க்க நினைத்திருக்கிறேன்.
    //

    சிங்கப்பூர்ல் ஆபிஸ் வேலையை தவிர்த்து மத்ததெல்லாம் பார்க்க நினைச்சுக்கோப்பா :)))

     

  • At July 17, 2008 at 4:27 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    ///ஆயில்யன் said...
    //கயல்விழி முத்துலெட்சுமி said...
    என்ன நடக்குது இங்க.. ஆயில் போட்டறாதீங்கன்னு சொல்றத பாத்தா போட்டு பொண்ணு தேடிக்கொடுங்கன்னு சொல்றாப்பல இருக்கு.. ஆனா போட்டா கஷ்டம் போலவும் இருக்கு.. ஒன்னும் புரியல.
    //

    ஐயகோஓஓஓஓஓஓஓஓ!

    அப்பன்னா நீங்க சொல்ற மாதிரி நான் வடக்கு நோக்கி நகரும் யந்திரமாகிவிடுவேனா????? (ஆயில்யா! வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் உன் பிளாக்கு எங்க போவும்?????)///


    ஆயில்ஸ் அண்ணா ஒரு வாரமா புது பதிவுகள் ஏதும் இல்லையே? வடக்கு நோக்கி செல்ல ஆயத்தமாகிவிட்டீர்கள் என்றே நினைக்க தோன்றினாலும் அப்படி ஒன்று நடந்து விடக்கூடாது என்று மனம் பதறுகிறது:)

     

  • At July 17, 2008 at 4:30 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    ஆயில்யன் said...
    /./July 15, 2008 2:43 AM, கானா பிரபா said…

    ///நிஜமா நல்லவன்

    சிங்கப்பூருக்கும் இன்னும் வரலியா, சரி காத்திருப்போம்.

    ஆயில்யனுக்கு நாற்பது வயசு என்ற உண்மையை யாருக்கும் சொல்லிடாதீங்க பிளீஸ்
    ///

    சற்றும் கூட எதிர்பாராத விஷயம் :(((///


    புரியுது ஆயில்ஸ் அண்ணா. கானா உங்கள் வயதை பாதியாக குறைத்து சொல்லி இருப்பது சற்றும் கூட எதிர்பாராத விஷயம் தான்:)

     

Post a Comment
<< HOME
 
Saturday, July 5, 2008
இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஐம்பது வரையான படங்களுக்கு இசையமைத்தும் இருக்கின்றார். அதில் தெலுங்கில் தான் அதிகம் வந்திருக்கின்றன. இவரின் இசையமைப்புத் திறனுக்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் சிகரம் திரைப்படம். கே.பாலசந்தரின் உதவியாளராக அனந்து பலகாலம் இருந்து பின் கவிதாலா சார்பிலேயே எடுத்த படம் அது.

பார்த்திபன் நடித்த தையல்காரன் திரைப்படம், எண்பதுகளில் கலக்கிய கால் இழந்த நடிகை சுதா சந்திரன் நடித்த மயூரி போன்றவற்றிற்கும் இசை இவர் தான். இறுதியாக தன் மகன் சரண் தயாரிப்பில் வந்த "உன்னைச் சரணடைந்தேன்" திரைப்படத்திற்கும் இசை கொடுத்திருந்தார். அப்படத்தின் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனாலும் இசைஞானி இளையாராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, மற்றும் எஸ்.பி.பி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் பாடிய "நட்பு நட்பு" பாடல் ஒரு புதுமை படைத்தது.

ரஜினிகாந்த் நடித்த "துடிக்கும் கரங்கள்" திரைப்படத்தின் இசை கூட எஸ்.பி.பி தான். ஆனால் அவரின் உத்தியோகபூர்வ தளத்தில் கூட அப்படத்தைத் இசையமைப்புப் பட்டியலில் போட மறந்து விட்டார். அப்படத்தில் இருந்து

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்

சிகரம் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே முத்துக்கள் என்றாலும், எடுத்த எடுப்பில் முதலில் என்னைக் கவராவிட்டாலும் இப்போது இந்தப் பாடலை எப்போதும், எத்தனை முறை கேட்டாலும் காதில் தேன் வந்து பாயுது.
"இதோ இதோ என் பல்லவி"



இதோ இதோ என் பல்லவி பாடலை முதற்தடவையாக மேடையில் பாடுகின்றார் எஸ்.பி.பி. இணைந்து பாடுகின்றார் சைந்தவி. எனக்கு மிகவும் பிடித்த, ஆனால் இன்றுவரை அதிகம் பேசப்படாத இசையமைப்பாளர் தாயன்பன் இந்த இசை நிகழ்ச்சியை வழங்குகின்றார். சுமார் 8 வருசங்களுக்கு முன்னர் தாயன்பன் அவுஸ்திரேலியா வந்திருந்தபோது தன்னுடைய முழு இசைக்கலைஞர்களையும் கொண்டு வந்து எந்த வித கீபோர்ட் ஜாலமும் இல்லாமல் நேரடி இசைவிருந்து கொடுத்தவர். தாயன்பன் இசையில் வந்த "உன்னிடத்தில் நான்" என்ற திரைப்படத்தில் "நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்" என்ற ஜேசுதாஸ், வாணி ஜெயராம் பாடலைக் கேட்டுப்பாருங்கள். (Dhool தளத்தில் அந்தப் பாடலைக் கேட்க) தாயன்பன் திறமை புரியும்.

posted by கானா பிரபா 2:27 AM   15 comments
 
15 Comments:
  • At July 5, 2008 at 3:53 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    ///சிகரம் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே முத்துக்கள் என்றாலும்//

    உண்மை தான். இப்படத்தின் எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும்.

     

  • At July 5, 2008 at 4:00 AM, Blogger ஆயில்யன் said…

    சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் - எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு :))


    //சிகரம் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே முத்துக்கள் ///

    சரிதான் அதிகம் நான் கேட்டு மகிழ்ந்த பாடல் அகரம் இப்ப சிகரமாச்சுத்தான் :))

    இப்பத்தான் இந்த பாட்டு நிதானிச்சு கேட்டுக்கிட்டிருக்கேன் :))

     

  • At July 5, 2008 at 4:19 AM, Blogger G.Ragavan said…

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகர். இசையமைப்பாளராக அவர் சில பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பாடகராகவே சிறப்பாக ஜொலித்தார் என்பது என் கருத்து. எல்லாப் பாடகர்களிலும் ஒரு குட்டி இசையமைப்பாளர் ஒளிந்திருக்கிறார். மயூரி படத்திற்கு இசை எஸ்.ஜானகி. எஸ்.பி.பி கிடையாது. டி.எம்.எஸ் இசையமைத்த முருகன் பாடல்கள் மிகப் பிரபலம். இசையமைப்பாளராக பி.சுசீலாவும் சில பல பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

    துடிக்கும் கரங்கள் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. இளையராஜாவின் சாயல் தெரிந்தாலும் எல்லாப் பாடல்களுமே அருமை. மேகம் முந்தானை, சந்தனம் பூசும் மஞ்சள் நிலாவும் பாடல்களும் மிக அருமை. சிகரம்தான் உண்மையிலேயே சிகரம்.

     

  • At July 5, 2008 at 4:50 AM, Blogger கோபிநாத் said…

    \\"இதோ இதோ என் பல்லவி"\\

    எனக்கும் பிடித்த பாடல்...நீண்ட நாட்களுக்கு பிறகு தான் இந்த படத்திற்க்கு இசை எஸ்.பி.பின்னு தெரிஞ்சிக்கிட்டேன் ;)

    ஆனால் அதிகம் கேட்டது அகரம் இப்ப சிகரமாச்சு என்ற பாடல் தான் ;)

    மீதி பாடல்கள் எல்லாம் உங்க புண்ணியத்துல இப்பதான் கேட்குறேன் தல ;))

     

  • At July 5, 2008 at 6:34 AM, Blogger CVR said…

    சிகரம் படத்தில் எனக்கு பிடித்தது "வர்ணம் கொண்ட வெண்ணிலவே" பாட்டுதான்....
    என்ன ஒரு மெலடி,என்ன ஒரு மெலடி.....
    நல்ல பதிவு தல!
    பாடகராகவே பெரும்பான்மையானவருக்கு தெரிந்திருக்கும் எஸ் பி பி பத்தி மேலே தெரிய வெச்சிருக்கீங்க..
    :)
    வாழ்த்துக்கள்!!

     

  • At July 5, 2008 at 7:25 AM, Blogger கானா பிரபா said…

    நிஜமா நல்லவரே

    வருகைக்கு நன்றி

    ஆயில்ஸ்

    உங்க தல பாட்டில் பிடிக்காத பாட்டு வேற இருக்கா ;)

    வணக்கம் ராகவன்

    எஸ்.பி.பியின் பிரத்தியோக தளத்திலும் மயூரிக்கு இசை அவரே என்று போட்டிருக்கிறார்கள் :( இருங்க வீசிடி எடுத்துப் பார்த்து உறுதிப்படுத்துகின்றேன். பாலு உண்மையில் பாடகராகத் தான் என்றுமே மிளிர்வார். சிகரம் போன்றவை அத்திப்பூ போலத் தான்.

    தல

    நீண்ட நாளைக்குப் பிறகு கேளுங்க கேளுங்க, கேட்டுக்கொண்டே இருங்க.

    சிவிஆர்

    வருகைக்கு நன்றி ;)

     

  • At July 5, 2008 at 7:47 AM, Blogger ஆ.கோகுலன் said…

    சைந்தவி பாடுவது அபாரம்..

    இதே படத்தில் வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலும் பிரபலமானது.

    மேலதிக தகவல்களுக்கு நன்றி..

     

  • At July 5, 2008 at 2:32 PM, Anonymous Anonymous said…

    காபி அண்ணா, ரெண்டாவது வீடியோ, sorry not available அப்படீன்னு வருது. சரி பண்ணரீங்களா

     

  • At July 5, 2008 at 4:02 PM, Blogger கானா பிரபா said…

    // ஆ.கோகுலன் said...
    சைந்தவி பாடுவது அபாரம்..//

    எஸ்.பி.பி பாடுவது தெரியலியோஓஓ;-)


    //சின்ன அம்மிணி said...
    காபி அண்ணா, ரெண்டாவது வீடியோ, sorry not available அப்படீன்னு வருது. சரி பண்ணரீங்களா//

    சில வேளை அப்படிக் காட்டும் , ரிப்ரெஷ் பண்ணிப் பாருங்க, எனக்கு இங்கே பார்க்கக் கூடியதா இருகே.

     

  • At July 5, 2008 at 6:34 PM, Blogger ஆ.கோகுலன் said…

    //எஸ்.பி.பி பாடுவது தெரியலியோஓஓ;-)//

    :))) எஸ்பிபியைப் பற்றி நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன..?

    பாடகர் என்ற ரீதியில் அவர் விமர்சனங்கள் என்ற ஈர்ப்பு விசையைக்கடந்து தன்னியக்கத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர்.. :)

     

  • At July 7, 2008 at 5:23 AM, Blogger ஹேமா said…

    S.Pஅவர்களே ஒரு சிகரம்தானே.அவரைத்தாண்ட இன்னும் யாரும் இல்லையென்றே சொல்வேன்.யார் என்னதான் பாடினாலும்(K.Jஜேசுதாஸ் தவிர) அவர்களின் குரலில் தழுவும் பாவம் யாரிடமும்"இல்லையே!இதோ இதோ என் பல்லவி..."அருமையான பாட்டு.கேட்க கேட்கத் திகட்டாததாய். சைந்தவிக்கும் சபாஷ்.ஏன்..."மயூரி" படப் பாடல்களும் அருமை.ஆனால் ஏனோ அவைகள் பிரபல்யம் ஆகவில்லை. அந்தப் பாடல்களையும் எங்காவது சேர்த்துக் கொள்ளுங்கள் பிரபா.என்ன ஒரு கவலை என்றால் S.P.அவர்கள் தன் திறமை வளர்வதோடு தன் உடம்பையும் அதிகமாக வளர்க்கிறாரே!!!இன்னும் பல காலங்கள் அவர் வாழவேண்டும்.

     

  • At July 8, 2008 at 2:18 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ஹேமா

    மயூரி பாடல்களையும் பின்னர் சேர்க்கின்றேன். எஸ்.பி.பி இன்னொரு தலைமுறை கடந்தும் நிலைத்திருப்பதே அவரின் தனித்துவம் இல்லையா.

     

  • At July 9, 2008 at 3:14 AM, Anonymous Anonymous said…

    Hi Prabha,
    i am unable to open the link for சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்.. i am getting following error message in you tube.

    This is a private video. If you have been sent this video, please make sure you accept the sender's friend request.
    Help please

    i like the songs from the movie Mayuri

     

  • At July 9, 2008 at 3:43 AM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் ஞானராஜா

    அங்கு எம்பெட் பண்ணும் வசதி இல்லாததால் இப்போது நேரடி லிங்க் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.

    மயூரி விரைவில் வரும்.

     

  • At July 9, 2008 at 6:34 AM, Anonymous Anonymous said…

    பாட்டு கேட்டுக்கிட்டிருக்கேன் in another window. நன்றி

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது