வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Monday, June 28, 2010
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா

கடந்த வருடம் வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தில் ஒரு நாயகியாக நடித்த அபிநயா, தன் பிறவியிலேயே காது கேட்காதவர், வாய் பேசமுடியாதவர். நாடோடிகள் பட வாய்ப்புக் கிட்டியதும் அந்தப் படத்தில் இவருக்கு இன்னொருவர் பின்னணிக் குரல் கொடுத்திருந்தாலும் அந்தச் சுவடே தெரியாமல் குறித்த பாத்திரமாக இயல்பாக நடித்துத் தன் நடிப்புத்திறனைச் சாதித்துக் காட்டியவர். ஒரு இயக்குனரின் குறித்த பாத்திரத்தின் தேவையை அறிந்து அதை உள்வாங்கி நடிப்பது என்பது எவ்வளவு சவாலானது. இந்த அபிநயாவிற்கு விஜய் தொலைக்காட்சியின் 2009 படங்களுக்கான விஜய் அவார்ட்ஸில் சிறந்த இணை நடிகைக்கான விருது கிட்டியது. அப்போது அவர் உணர்வுகளை எப்படிப் பகிர்ந்து கொள்கின்றார் என்று பாருங்களேன் (முதல் வீடியோவில் எட்டாவது நிமிடத்தில் வருகிறது). கூடவே அவரின் தந்தை பேசும் போது பார்த்துக் கொண்டிருக்கும் கண்களில் நீர் வராமல் இருப்பதைத் தவிர்க்க முடியாது. நிகழ்ச்சிக்கு வந்த ஜாம்பவான்களில் இருந்து பாமரர் வரை எழுந்து நின்று இந்தச் சாதனைப் பெண்ணுக்கு வாழ்த்தியது ஒரு மகுடம்



posted by கானா பிரபா 5:21 AM  
 
4 Comments:
  • At June 28, 2010 at 5:40 AM, Blogger வந்தியத்தேவன் said…

    அபிநயாவை உருவாக்கிய சிற்பி சமுத்திரக்கனிக்கும் பாராட்டுகள்.
    அவரின் தந்தையின் கண்கள் குளமாகி இருந்தன. நெகிழ்வான நிகழ்வு,.

     

  • At June 28, 2010 at 5:49 AM, Blogger Thamiz Priyan said…

    படம் பார்த்ததற்குப் பின் தான் விமர்சனங்களில் அது தெரிந்தது.. அழகான நடிப்பு... அவருக்கான அங்கீகாரம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. வாழ்த்துக்கள்!

     

  • At June 28, 2010 at 11:05 AM, Blogger Pragash said…

    கண்டிப்பாக அபிநயா பாராட்டப்படவேண்டியவர்.

     

  • At June 28, 2010 at 11:44 PM, Blogger MyFriend said…

    அபிநயா deserved it.. இவர் பாராட்டக்கூடியவர்.. ஆனால், எல்லா புகழும் சிற்பத்தை செதுக்கிய சிற்பி சமுத்திரக்கனிக்கே!! :-)

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
And, Now...
கலாட்டா கல்யாணம் ;-)))
நான் ரசித்த மலையாள மென் மெட்டுக்கள்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது