வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Friday, September 28, 2007
மணிச்சித்ரதாளு -> ஆப்த மித்ரா -> சந்திரமுகி
மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பிப்பதற்கு எனக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த படம் "மணிச்சித்ர தாளு". மதுமுட்டம் எழுத பாசிலின் இயக்கத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா தோன்றி நடித்த அப்படம் 1993 இல் வெளியாகி ஷோபனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைக் கொடுத்த படம். இன்று வரை எனக்கு மணிச்சித்ரதாளு வோடு சந்திரமுகியை ஒப்பிடமுடியவில்லை.

மணிச்சித்ரதாளுவின் பாடல்கள் எல்லாமே பிரமாதம். ஜேசுதாசுக்கு கூட விருதைக் கொடுத்திருந்த அப்பாடல்களின் இசை எம்.ஜி.ராதாகிருஷ்ணன்.

இப்படம் கன்னடத்துக்குத் தாவிய போது விஷ்ணுவர்த்தன், ரமேஷ் அர்விந்த், ஷோபனா நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் "ஆப்தமித்ரா" என்று வெளியாகி கன்னா பின்னாவென்று ஓடியதைப் பார்த்து குமாரசாமி கெளடாவே பயந்திருப்பார். கன்னடத்தில் இசை குரு கிரண்.

பின்னர் தமிழுக்கும் தெலுங்குக்கும் இப்படம் தாவியபோது வித்யாசாகர் "ரா ராவை" மட்டும் குருகிரணிடம் பங்கு போட்டுக் கொண்டார்.

இந்தப் படங்களின் பாடல்களை ஒரே நேரத்தில் காணொளியாகத் தரவேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். என் எண்ணவோட்டத்தை ஒத்து என் றேடியோஸ்பதி வலைப்பதிவில் ஐயப்பன் கிருஷ்ணன் என்ற பதிவர் மணிச்சித்ர தாளுவில் இருந்து "ஒருமுறை வந்து பார்ப்பாயா" பாட்டைக் கேட்டிருந்தார். இதை அனுபவியுங்கள் ;))

மலையாளத்தில் வந்த "மணிச்சித்ர தாளு", "ஒரு முறை வந்து பார்ப்பாயா" என்று பாடும் காட்சிகன்னடத்தில் வந்த " ஆப்த மித்ரா" தெலுங்குப் பாட்டுக்கு ஆடிப் பாடும் காட்சிதமிழில் வந்த "சந்திரமுகி" தெலுங்குப் பாட்டு்க்கு ஆடிப் பாடும் காட்சிதெலுங்கில் மொழி மாற்றம் செய்த "சந்திரமுகி" தமிழ் பேயாட்டம் ஆடும் காட்சி

BHOOL BHULAIYA என்ற பெயரில் ப்ரீதம் இசையில் ஹிந்தி பேசப் போகும் இப்படத்தின் ட்ரெய்லர்
posted by கானா பிரபா 4:20 AM   0 comments
 
0 Comments:
Post a Comment
<< HOME
 
Wednesday, September 26, 2007
நடிகர் விஜயனுக்காக
திரையுலகில் மளமளவென்று சிலருக்கு வாய்ப்புக்கள் வந்து கொட்டும். அதுவும் கிடைத்த வாய்ப்புக்கள் எல்லாமே குறிப்பிடத்தக்க, சொல்லிக் கொள்ளத் தக்கதாக வந்தது நடிகர் விஜயனுக்கு. ஆனால் அதை அனுபவிக்கத்தான், அவருடைய குறுகியகாலச் சந்தோஷங்கள் இடங் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அவர் தமிழ் சினிமாவுலகில் மீளக் கால் பதித்தபோது ஒரு வாரப் பத்திரிகைக்காகத் தன்னையே நொந்து கொண்டு நடிகர் விஜயன் கொடுத்த பேட்டி இப்போது நினைவுக்கு வருகின்றது. தொடர்ந்து வருடா வருடம் படங்களில் நடித்துக் குவித்தவர், ஒரு கட்டத்தில் ஒன்றுமே இல்லாமலும் இருந்து மீண்டு(ம்) வந்தார்.


உதிரிப்பூக்கள், நிறம் மாறாத பூக்கள், தனி மரம், விடுகதை ஒரு தொடர்கதை, பசி என்று அவருக்குத் தனி முத்திரை கொடுத்த படங்களின் பட்டியல் நீளும். மலையாளத் திரையுலகில் கூட அவருக்கென்று ஒரு இடமுண்டு. இவர் நடிகராக மட்டுமன்றி திரைக் கதாசிரியராகவும் இருந்திருக்கின்றார்.
அண்மையில் மறைந்த விஜயன் நினைவாக "நிறம் மாறாத பூக்கள்" திரையில் இருந்து "ஆயிரம் மலர்களே மலருங்கள்"

பாடல் உதவி: யூ ரியூப் வழி ரெக் சதீஷ்

posted by கானா பிரபா 3:02 AM   10 comments
 
10 Comments:
 • At September 26, 2007 at 5:37 AM, Blogger வல்லிசிம்ஹன் said…

  விஜயன் மறைவு மிக்க வருத்தத்தை கொடுத்தது.
  நல்லதொரு நடிகர்.

  எடுத்த பாத்திரங்களின் பரிணாமங்களை அறிந்து பூரணமாகப்
  படைத்துக் காட்டினார்.

  அவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.
  நன்றி பிரபா.

   

 • At September 26, 2007 at 6:19 AM, Blogger மங்கை said…

  ஆம்...ஏனோ அவருக்கு வாய்புகள் வரவேயில்லை...ஹ்ம்ம் கேள்விப்படதும் மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது...

   

 • At September 26, 2007 at 5:31 PM, Blogger கானா பிரபா said…

  வருகைக்கு நன்றிகள் வல்லி சிம்ஹன் மற்றும் மங்கை

  விஜயனைத் தேடி நல்ல வாய்ப்புக்கள் வராமல் இல்லை, ஆனால் போதையின் பாதையில் சில காலம் அவர் வழி தவறிவிட்டார், அது திரையுலகிற்கும் ஒரு இழப்பே.

   

 • At September 26, 2007 at 6:50 PM, Blogger வவ்வால் said…

  கானாப்பிரபா,

  வழக்கம் போல நல்லப்பதிவு அதுவும் , தற்போது மறைந்த விஜயன் அவர்களின் நினைவாக போட்டிருப்பது ஒரு கலைஞனுக்கான அஞ்சலியாகவும் அமையும், நன்றி!

  //விஜயனைத் தேடி நல்ல வாய்ப்புக்கள் வராமல் இல்லை, ஆனால் போதையின் பாதையில் சில காலம் அவர் வழி தவறிவிட்டார், அது திரையுலகிற்கும் ஒரு இழப்பே.//

  உண்மை தான் போதையின் பாதையில் வழி தவறியவர் தான், திரை உலகில் அனேகமாக அனைவரும் மது அருந்துவார்கள், ஆனால் அது கேமிராவுக்கு பிறகே , இவர் படப்பிடிப்பிலே மது அருந்திவிட்டு தான் நடிப்பார் எனவும் செய்தியுண்டு, மேலும் சரியான காலத்தில் படத்தை முடிக்க உதவாமல் பல சமயங்களில் இழுப்பார் எனவும் கேள்வி அதனாலேயே பட வாய்ப்புகள் போயிற்று.

  இதனாலேயே திறமை இருந்தும் பிரகாசிக்க முடியாமல் போயிற்று.உணவுக்கே நண்பர்களை எதிர்ப்பார்த்து தான் வாழ்வதாக அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்!அவ்வப்போது கிடைக்கும் சிறிய பாத்திரங்கள் மூலம் அப்படி என்ன பிரமாதமான வருவாய் வந்திருக்கும்.

   

 • At September 26, 2007 at 8:27 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க வவ்வால்

  விஜயனின் படங்கள் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம்,
  சுஜாதா என்றொரு படம், அதில் "நீ வருவாய் என நான் இருந்தேன்" என்ற பாடலும் உண்டு, இதன் கதை கூட விஜயன் எழுதியதாக எங்கோ படித்த ஞாபகம் ஆனால் இதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.

  காஜா இயக்கத்தில் வந்த "ஒரு விடுகதை ஒரு தொடர்கதையும்" இவரின் நல்ல படங்களில் ஒன்று. இப்படத்தின் பாடலொன்று இன்றிரவு றேடியோஸ்பதியில் வரவிருக்கின்றது.

   

 • At September 26, 2007 at 8:32 PM, Blogger VSK said…

  திறமையான ஒரு நடிகர் தன் பழக்கங்களினால் சோடை போனதுதான் பெரிய சோகம்.

  இன்னொருவர் கார்த்திக்!

   

 • At September 26, 2007 at 10:38 PM, Blogger கானா பிரபா said…

  //VSK said...
  திறமையான ஒரு நடிகர் தன் பழக்கங்களினால் சோடை போனதுதான் பெரிய சோகம்.

  இன்னொருவர் கார்த்திக்!//  கரெக்டா சொன்னீங்க வீ.எஸ்.கே

   

 • At September 26, 2007 at 11:15 PM, Blogger வல்லிசிம்ஹன் said…

  குடித்தல் என்ற அரக்கன் எல்லோரையும் விழுங்கி விடுகிறான்.
  அந்த விஷயத்தில் சாவித்திரி நினைவும் வருகிறது.:((((

   

 • At September 26, 2007 at 11:39 PM, Anonymous Anonymous said…

  Dear sir

  One more doubt pls.

  this is vijayakanth movie. song:Anthipoo kanatha penmai manjathil vandhathu
  senganthal malargalai kai enre nee sonnal naan nambavo

  can u pls identify this song beginning and the name of the picture pls

   

 • At September 26, 2007 at 11:46 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க நண்பரே

  நீங்கள் கேட்ட பாடல் "ஆட்டோ ராஜா"வில் வரும் "சங்கத்தில் பாடாத கவிதை என்ற பாடல். இசை இளையராஜா

   

Post a Comment
<< HOME
 
Sunday, September 23, 2007
A படத்தில் எனக்குப் பிடிச்ச பாட்டு
பதிவின் தலைப்பைப் பார்த்து வித்தியாசமான நினைப்போடு வருபவர்கள் திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிடுங்க ;))

கன்னடத்தில் தற்போதுள்ள நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் உபேந்திரா. ஆனாலும் இந்த ஆளு ஓவரா கிறுக்குத்தனமான வேலைகளைச் செய்வதில் நடிகர் பார்த்திபனின் ஜெராக்ஸ் என்றே சொல்லி விடலாம். படத்தின் தலைப்பிலோ அல்லது கதையிலோ மனுஷன் ஏதாவது செய்து விடுவார். தமிழில் வந்த "தேவர் மகன்"படத்தை "தாண்டகே தக்கா மகா" என்றும், "அண்ணாமலை" படத்தை "கோகர்ணா" என்றும், "ரத்தக்கண்ணீர்" படத்தை "ரத்தக் கண்ணீரு" என்றும், "பிதாமகன்" படத்தை "அனாதரு" என்றும் எடுத்தவர்.காவிரியைக் காதலியாக உருவகப்படுத்தி கன்னட ஆளாகத் தானும் , தமிழ் ஆளாகப் பிரபுதேவாவையும் நடிக்க வைத்து என்ற H2O பெயரில் எடுத்துச் சொதப்பியவர்.

பத்து வருசங்களுக்கு முன் இவர் இயக்கி நடித்த திரைப்படமான A ஏனோ என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. புதுமையான வகையில் காட்சிகளும் கதையும் சொல்லப்பட்டிருந்தது. கன்னடத்தில் அப்போது வசூலை வாரியிறைத்த படமும் கூட. அது பின்னர் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்தது.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று இன்னும் அடிக்கடி என்னை முணு முணுக்க வைக்கும். அதையே இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இப்பாடலை குருகிரண் இசையில் ராஜேஷ் கிருஷ்ணன் பாடியிருக்கின்றார். 2001 பெங்களூருக்கு நான் முதல் பயணம் மேற் கொண்ட போது இந்தப் படத்தின் பாடல் காசெட்டை எப்படி வாங்குவது என்று யோசித்துப் பின் கைவிட்ட முயற்சியும் தற்போது நினைவுக்கு வருகின்றது.
சரி, பாட்டைப் பாருங்கள், உங்களுக்கும் பிடித்திருக்கிறதா சொல்லுங்கள்.

posted by கானா பிரபா 5:32 AM   11 comments
 
11 Comments:
 • At September 23, 2007 at 6:21 AM, Blogger மருதமூரான். said…

  Kana Prabha anna,
  Super..
  Very nice melody..

   

 • At September 23, 2007 at 6:48 AM, Anonymous prakash said…

  பிரபா, அவரோட ஓம் பாத்திருக்கீங்களோ? அதைத்தவிர அவர் எடுத்த அத்தனை படங்களுமே சொதப்பல் ரகம்.

  ஓம் இலே இருந்து ஓ குலாபி, ஓஓ குலாபியே கிடைக்குதான்னு பாருங்கள். படத்தில் நடித்த சிவராஜ்குமாரின் அப்பா ராஜ்குமார் பாடிய பாடல். மிக அருமையான பாடல்.

   

 • At September 23, 2007 at 7:01 AM, Blogger கானா பிரபா said…

  வாங்க பிரகாஷ்

  ஓ குலாபியே பாட்டைக் கேட்டிருக்கேன். கன்னடத்தில் பார்க்கவில்லை. தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் மீள நடித்து ஓம் என்று தமிழிலும் வந்தது அல்லவா? நிஜ தாதாக்களையே நடிக்க வைத்திருப்பார்.

  தமிழ் சாயம் பூசியதைப் பார்த்திருக்கிறேன். தேடிப் பார்த்துக் கிடைத்தால் கன்னடப் பாட்டைத் தருகின்றேன்.

   

 • At September 23, 2007 at 2:15 PM, Blogger கானா பிரபா said…

  //மருதமூரான். said...
  Kana Prabha anna,
  Super..
  Very nice melody..//

  வாங்கோ மருதமூரான்

  இப்படியான நல்ல பாடல்களை இன்னும் எடுத்து வருகின்றேன்.

   

 • At September 25, 2007 at 3:07 AM, Anonymous Anonymous said…

  Sir

  Thank you very much for clearing the doubt. Innumm oru song:

  Padam peyar theriyathu. Aaana Vijayakanth padam. Heroine puthusu. padal varigal

  "Anthi poo kanatha sandham"
  Sengatha malargalai kai enre nee sonnal naan nambavo" Hmm Hmm

  pls sir.

   

 • At September 25, 2007 at 3:42 AM, Blogger கானா பிரபா said…

  வாங்க நண்பரே

  நீங்கள் கேட்ட பாடல் "ஆட்டோ ராஜா"வில் வரும் "சங்கத்தில் பாடாத கவிதை என்ற பாடல். இசை இளையராஜா

   

 • At September 25, 2007 at 1:09 PM, Blogger G.Ragavan said…

  ஏ திரைப்படம் பயங்கர வெற்றி பெற்ற படம். உபேந்திராவுக்குப் பெருவாழ்வு குடுத்த படம். அப்ப இருந்த முதல்வர் வீரேந்திர பாட்டீலைக் கிண்டலிச்சிருந்தாருன்னும் சொல்லுவாங்க. படத்தத் தமிழிலும் டப் செஞ்சாங்களே. ஆனா யாரும் கண்டுக்கலை.

  பிரியங்கா திரிவேதின்னு ஒரு நடிகை தமிழ்ல ஒன்னு ரெண்டு படத்துல நடிச்சாங்கள்ள...அவங்கதான் உபேந்திராவோட மனைவி.

   

 • At September 25, 2007 at 6:21 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க ராகவன்

  கன்னடம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த இப்படத்தைத் தமிழில் ரசிகர்கள் புறங்கையால் ஒதுக்கி விட்டார்கள்.

  பிரியங்காவை இவர் மண ஒப்பந்தம் செய்த நேரம் நடிகர் ரவிச்சந்திரன் பிரியங்காவைத் தாறுமாறாகப் படமெடுத்துப் பேஜார் பண்ணினாராம் ;)

   

 • At September 26, 2007 at 11:05 AM, Blogger G.Ragavan said…

  // கானா பிரபா said...
  வாங்க ராகவன்

  கன்னடம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த இப்படத்தைத் தமிழில் ரசிகர்கள் புறங்கையால் ஒதுக்கி விட்டார்கள்.

  பிரியங்காவை இவர் மண ஒப்பந்தம் செய்த நேரம் நடிகர் ரவிச்சந்திரன் பிரியங்காவைத் தாறுமாறாகப் படமெடுத்துப் பேஜார் பண்ணினாராம் ;) //

  பண்ணினாரே. :) அப்ப பெங்களூர்லதான இருந்தேன். ரவிச்சந்திரன் ரசிகர்கள் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? பிரியங்காவொட கொழந்தை ரவிச்சந்திரனைப் போல இருக்குன்னு!!!!!!!!!!!! அந்த அளவுக்கு ரவிச்சந்திரன் ரசிகர்களுக்கும் உபேந்திரா ரசிகர்களுக்கும் ஆகாது.

   

 • At September 26, 2007 at 8:44 PM, Blogger வவ்வால் said…

  முன்னா பாய் ஹிந்தி படத்தின் கன்னட பதிப்பு இவர் தானே அதையும் சொதப்பினாரா? எல்லா மொழிலயும் ஓடிய படம் அதுக்கு என்ன கதி தெரிந்தால் சொல்லுங்கள்!

   

 • At September 26, 2007 at 8:54 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் வவ்வால்

  நடிகை சுமித்ராவின் கணவர், மற்றும் நடிகை உமாவின் அப்பா தான் முன்னாபாய் படத்தை உப்பிதாதா MBBS என்று உபேந்திராவை வைத்து போன வருசம் எடுத்திருந்தார், படம் உப்புமா தானாம்.

  போன வருஷம் கன்னடத்தில் சொல்லிக்கொள்ளத் தக்க ஹிட்டடித்தவை ஆட்டொகிராப் படத்தின் தழுவல், சுதீப் நடித்த மை ஆட்டோகிராப், மற்றும் ராஜ்குமார் மகனின் "யோகி"

   

Post a Comment
<< HOME
 
Friday, September 21, 2007
பாடி அழைத்தேன் பாட்டின் மூலப் பாட்டு
மலையாளத்தின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் திரு ரவீந்திரன். இவர் கடந்த ஆண்டு காலமாகி விட்டார். ஆனால் இவரின் பாடல்கள் என்றும் இவரின் நினைவை உயிர்ப்பிக்கும். அதற்கு உதாரணமாக இன்று இரண்டு மலையாளப் பாடல்களைத் தருகின்றேன். அவை நீங்கள் தமிழில் அடிக்கடி கேட்ட "ரசிகன் ஒரு ரசிகை" என்ற சத்யராஜ், அம்பிகா நடிப்பில் வந்த படப்பாடலான " பாடி அழைத்தேன், உன்னை இதே தேடும் நெஞ்சம்" என்ற பாடலின் மூலப் பாட்டாகும்.

மலையாளத்தில் 1981 ஆம் ஆண்டு "தேனும் வயம்பும்" என்ற பெயரில் பிரேம் நசீர், மோகன் லால், நெடுமுடி வேணு, சுமலதா போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வந்த இப்பாடல்களைக் கண்டு களியுங்கள்.

தமிழில் 1986 ஆம் ஆண்டு வெளி வந்த ரசிகன் ஒரு ரசிகை திரைப்படத்தை இயக்கியிருந்தவர், தற்போது நகைச்சுவை நடிகனாக வலம் வரும் பாலு ஆனந்த்

இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாக மலையாளத்தில் ஜானகி பாடும் பாடலை முதலில் தருகின்றேன். பாடல் காட்சியையும் பாருங்கள், எவ்வளவு அழகுணர்ச்சியோடு படமாக்கப் பட்டிருக்கின்றது. (இந்தப் பாடலை மட்டும் இரண்டு முறை கிளிக்கி You tube பக்கம் சென்ற பின் பார்க்கவும்)மலையாளத்தில் ஆண் குரலில் ஒலிக்கும் பாடலில் தோன்றி நடிக்கின்றார் நெடுமுடி வேணுஇதோ தமிழுக்கு வந்த "ரசிகன் ஒரு ரசிகை" படப் பாடல்

posted by கானா பிரபா 2:48 AM   11 comments
 
11 Comments:
 • At September 21, 2007 at 3:36 AM, Anonymous வெயிலான் said…

  எந்தா பிரபு ஏட்டா!

  ஓணத்துக்கு போய் இன்னும் மலையாள நாட்டுல இருந்து வரலையா?

   

 • At September 21, 2007 at 4:07 AM, Anonymous Anonymous said…

  can u identify the begining of this song?

  "Vanchi magal koonthal kalanthirukka, vandhu thodum un kaigal vagideutkka, bothai kondu poo azhakka, thedi vandhu then edukka"

  this was sung by s.janaki & i think if i am right the name of the movie is "Eeramana Rojave" can u pls help

   

 • At September 21, 2007 at 8:47 AM, Blogger கானா பிரபா said…

  //எந்தா பிரபு ஏட்டா!

  ஓணத்துக்கு போய் இன்னும் மலையாள நாட்டுல இருந்து வரலையா?//

  சேட்டா

  ப்ரியப்பட்ட மகா ஜனங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஓணம் கொண்டாடலாம் ;)

   

 • At September 21, 2007 at 9:18 AM, Blogger கானா பிரபா said…

  //Anonymous said...
  can u identify the begining of this song?

  "Vanchi magal koonthal kalanthirukka, vandhu thodum un kaigal vagideutkka, bothai kondu poo azhakka, thedi vandhu then edukka"//

  வணக்கம் நண்பரே

  நீங்கள் கேட்ட பாட்டு " இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும்" என்று ஆரம்பிக்கும். படத்தின் பெயர் இளமைக் காலங்கள். அந்தப் படத்தில் "ஈரமான ரோஜாவே" என்று தொடங்கும் பாட்டும் இருக்கின்றது. ஆனால் "ஈரமான ரோஜாவே" வேறு படம். இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை இசை இளையராஜா

   

 • At September 21, 2007 at 12:29 PM, Blogger G.Ragavan said…

  தேனும் வயம்பும் வாயில் தூவும் வானம்பாடி....இது மலையாள வரிகள். ஒரே ஒரு எழுத்து மட்டும் மாத்துனா தமிழ். தேனும் வசம்பும் வாயில் தூவும் வானம்பாடி....அழகான கவித்துவமான வரிகள். இதுல இருக்குற கவிதை பாடி அழைத்தேன் வரிகள்ள இல்ல.

  வசம்பு குழந்தைகளுக்கு உரசி ஊட்டுவாங்க. தூத்துக்குடி ஓதுவார் கடைல கிடைக்கும்.

  ரவீந்திரன் ஒரு இனிய கலைஞர். சமீபத்தில் இவருடைய இசையில் வந்த அம்மகிளிக்கூடு படத்துல வர்ர ஹ்ருதய கீதமாய் பாட்டு எனக்கு மிகமிகப் பிடித்த பாட்டு.
  http://www.youtube.com/watch?v=JlFNX9D0blI
  இதைக் கேட்கும்படி பரிந்துரைக்கிறேன்.

   

 • At September 21, 2007 at 12:31 PM, Blogger G.Ragavan said…

  ஒரு சிறிய தவறு செய்து விட்டேன். தேனும் வயம்பும் வாயில் என்று தவறாக எழுதி விட்டேன்.

  தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி....

  வசம்பை உரசி நாவில்தான் தேய்ப்பார்கள்.

  இந்தப் பாட்டை முழுமையாக மலையாளத்தில் கேட்ட பொழுது இன்றைய தமிழ் சினிமா கவிஞர்கள் மேல் ஏமாற்றம் வந்தது. :(

   

 • At September 21, 2007 at 8:30 PM, Blogger SurveySan said…

  chetta, adipoli.

   

 • At September 22, 2007 at 2:13 AM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் ராகவன்

  நான் பாடலை ஒலியேற்றினாலும் ஒளியேற்றினாலும் உங்கள் கருத்துத் தான் எப்போதுமே அதற்கு மெருகூட்டுக்கின்றது. தேனும் வயம்பும் என்ற வரிகளில் "வயம்பு" என்றால் என்ன என்று தேடிக்கொண்டிருந்தேன். வசம்பு தெரிந்தும் கூட இப்படிப் பொருத்திப் பார்க்கவில்லை.

  மற்றப்படி பாட்டு வரிகள் தமிழில் எத்தனையோ படி கீழிறங்கியே இருக்கின்றது. மலையாளப் பாட்டுக்கு கேரள அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பிஜு திருமலாவுக்குக் கிடைத்திருப்பது மேலுமொரு அங்கீகாரம்.

   

 • At September 22, 2007 at 6:28 PM, Blogger கானா பிரபா said…

  //SurveySan said...
  chetta, adipoli.//

  தாங்க் யூ சேட்டா ;-))

   

 • At September 23, 2007 at 7:45 AM, Blogger கோபிநாத் said…

  தல...இந்த பாட்டுக்கு இசையமைச்சது..ஒரு மலையாள இசையமைப்பாளர்ன்னு இப்பதான் இது தெரியும்...

  கலக்கல்...தல ;))

   

 • At September 23, 2007 at 2:13 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க தல,

  லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வந்திருக்கீங்க, ரவீந்திரன் சார் இன்னும் சில படங்கள் தமிழில் பண்ணியிருக்கிறார்.

   

Post a Comment
<< HOME
 
Wednesday, September 19, 2007
உந்தன் தேசத்தின் குரல்.....

லகான் என்ற திரைப்படம் எடுத்ததன் மூலம் இந்தியாவைத் தாண்டிப் பேசப்பட்டவர் Ashutosh Gowarikar, தொடர்ந்து இவர் எடுத்த திரைப்படம் தான் "ஸ்வதேஷ்". 2004 இல் வெளியாகிய இப்படத்தின் இசை ஏ.ஆர்.ரகுமான்.

படித்து விட்டு வெளிநாட்டுக்கும் பெயரும் இளைஞர்களைச் சொந்த நாட்டையும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கப்பா என்று போதித்த திரைப்படம். ஷாருக்கான், நாசாவில் வேலை பார்க்கும் இளைஞனாக அற்புதமாக நடித்திருந்தார். புலம்பெயர்ந்து சொந்த நாட்டை விட்டு விலகி ஏக்கத்தோடு இருப்பவர்களுக்கு இப்படம் இன்னும் விசேசமாகப் பிடிக்கும்.

அதனாலோ என்னவோ இதன் தமிழ்ப்பதிப்பு "தேஸம்" என்ற பெயரில் கவிஞர் வாலி அனைத்துப் பாடல்களும் எழுத, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இப்படத்தில் வரும் "உந்தன் தேசத்தின் குரல்" என்ற பாடல் இன்றும் நம்மவர் பலருக்குத் தேசிய கீதம் தான்.இப்பாடலின் ஹிந்தி வடிவத்தை இங்கே தருகின்றேன்.

posted by கானா பிரபா 2:48 AM   0 comments
 
0 Comments:
Post a Comment
<< HOME
 
ஆன்மீகப் பேச்சு வீடியோ நல்லை ஆதீனம்
நல்லை ஆதீனத்துக் குருமகா சந்நிதானம் அவர்கள், நேற்று செப்டெம்பர் 18 ஆம் திகதி சிங்கப்பூர் சிறீ செண்பக விநாயகர் ஆலயத்தில் வழங்கிய ஆன்மீகப் பேச்சின் காணொளி
இணப்பை இங்கே தருகின்றேன்.

பாகம் 1

பாகம் 2

பாகம் 3

பாகம் 4

மின்மடல் மூலம் இந்த காணொளி இணைப்பை அனுப்பிய அன்பருக்கும், புகைப்படத்தினை இணையத்தில் அளித்த சுவிஸ் சிவன் கோவிலுக்கும் நன்றிகள்.
posted by கானா பிரபா 2:12 AM   2 comments
 
2 Comments:
 • At September 19, 2007 at 2:50 PM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

  பிரபா!
  ஒலிப்பதிவு அனுபவிக்கக் கூடிய தெளிவில்லை. இவர் உரை முதல் முறையாகக் கேட்கிறேன்.அருளுரை,ஆத்மீகவுரை இவ்வளவு வேகமாக எவ் எம் வானொலி அறிவிப்பாளர்கள் போல் இடை வெளியின்றி இருக்கக் கூடாதென்பது என் அபிப்பிராயம்.
  முத்தியடைந்த ஆதீன கர்த்தா(மணி ஐயர்) நினைவு வந்தது.அவர் அருளுரையின் அழகே தனி...இனி வரும் ஆத்மீகவாதிகளிடம் அதைப் பெற முடியாது போலும்..வாரியார்..மணிஐயருடன் போய்விட்டுது போல்...
  அடுத்து...முத்தியடைந்த ஆதீனகர்த்தா( மணி ஐயர்) கோவிலுள் ஆசனத்தில் அமர்ந்ததை நான் கண்டதில்லை. அவர் கடைசிக் காலத்திலும் கூட...
  இவர் ஏன்?? இப்படிச் செய்தார்...புரியவில்லை.
  விரல் விட்டெண்ணக்கூடியவர்கள்..இளைஞர்களைக் காணவில்லை...கட்டையில் போகும் வயதில் உள்ள என் போன்றோருக்கா?? இவர் உரை ஆற்றுகிறார்...
  இளைஞர்களுக்குத் தேவையில்லையா??அல்லது பகுத்தறிவாளர்கள் ஆகிவிட்டார்களா??
  எல்லாம் சிவமயமே..
  காணொளியாக இவரைக் காணவைத்ததற்கு நன்றி!

   

 • At September 20, 2007 at 3:59 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் யோகன் அண்ணா

  நான் இந்த வீடியோவை முழுமையாகப் பார்க்கவில்லை, மின்னஞ்சலில் கிடைத்தவுடன் வலையேற்றிவிட்டேன், ஆறுதலாகப் பார்போம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

   

Post a Comment
<< HOME
 
Tuesday, September 18, 2007
பிஞ்சுமனம் - குறும்படம்

பிஞ்சுமனம் என்ற இந்தக் குறும்படத்தில் பொதிந்துள்ள கருப்பொருள் நம் ஓவ்வொரு குடும்பத்திலும் நாம் சந்திப்பவை, குறிப்பாக ஒரு பிள்ளை பிறந்து அதற்கு மனதளவில் முழு முதிர்ச்சி பெற முன்பே, புதிதாக வந்து சேரும் தம்பியோ தங்கையோ இந்தப்பிள்ளைக்குத் தன் பெற்றோரால் கிடைக்கும் அன்பையும் அரவணைப்பையும் பங்கு போட வந்து விடுகின்றது. ஒரு பிள்ளைக்கு தன் பெற்றோர் தான் முழு உலகமுமே, எந்நேரமும் தன் பெற்றோரின், சிறப்பாகத் தன் தாயின் கவனம் தன்மேல் முழுமையாகப் பதிந்திருப்பதையே அது விரும்புகின்றது. தான் எதிர்பாக்கும் இந்த விஷயம் கிடைக்காத பட்சத்தில் பெரும் உளவியல் தாக்கத்துக்கு அது ஆளாகின்றது. இதுவே தொடர்ந்து கொண்டு போகும் போது ஒரு நிலையில், தன் பெற்றோரை வெறுத்து அது தன் முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கும் நிலையும் வந்துவிடுகின்றது. இந்த உளவியற் சிக்கலின் ஆரம்பப படிநிலையை வெகு அழகாகக் காட்டுகின்றது பிஞ்சுமனம்.

குறும்படத்துக்கு அச்சாணி போன்றது நல்ல கமராக்கோணங்களும், திறமையான எடிட்டிங்கும். அதற்குச் சான்று இப்படம். கதையின் முக்கிய பாத்திரத்தையும், அது சொல்லும் சேதிகளையும் மையப்படுத்தி வெகு அழகாக நகர்கின்றது கமரா.
இப்படத்தில் வந்த காட்சிகளின் அழகியல் இப்படியிருக்கின்றது.
இந்தப் பிள்ளையின் சித்திரக்கீறல்களை சலனப்படுத்துகின்றது தன் தாய் தங்கையோடு விளையாடும் விளையாட்டு. பாருங்கள் அந்தக் காட்சியில் கமரா அந்தக் காட்சியை மையப்படுத்தி மெதுவாக நகர்கின்றது. தன் தாயின் கவனம் தன் மேல் பதியாத வேளை தன் அழகான சித்திரவேலையை வேண்டாவெறுப்பாக வட்டமிட்டு ஒதுக்குகின்றது. தாய் தங்கையின் விளையாட்டுக்குள் தானும் நுளைந்து வெறுப்புடன் திரும்புகின்றாள். தன் படுக்கையில் சாய்ந்து ஓரக்கண்ணால் தன் தாயுடன் இருக்கும் படத்தைப் பார்க்கின்றது. தன் தாயின் கவனம் இறுதியாகக் கிடைத்த திருப்தியில் அமைதியாகிறாள் அந்தச் சிறுமி.

சொல்ல வந்த செய்தியை மையப்படுத்தி, வேறெந்த அலட்டலில்லாத காட்சிகள்.அது போல் ஒரு குறும்படத்துக்கு மிக முக்கியமான உறுத்தல் இல்லாத இசை, கஞ்சத்தனமான வசனங்கள் இவையும் இப்படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. இங்கே கமரா தான் நிறையப் பேசியிருக்கிறது. ஒரு படத்தைப் பார்க்கின்றோம் என்ற உணர்வில்லாது, ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைத்திருந்து எடுத்த காட்சிகள் போல், நடித்த கலைஞர்கள் யதார்த்தமாகச் செய்திருக்கிறார்கள். "குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்.............." என்ற கருப்பொருளில் வந்த பிஞ்சுமனம்( Tender heart ) என்ற குறும்படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்:
நடிப்பு: காவ்யா சிவன், சிறீதர் ஐயர், தீபா ராஜகோபால்
திரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி,
சங்கரபாண்டி சொர்ணம்,
வெங்கடேஸ் கிருஸ்ணசாமி ,
எம்.பீ.சிவா,
மற்றும் அஜீவன்
எண்ணம் - எழுத்து - இயக்கம் தீபா ராஜகோபால்

கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம்.

குறும்படத்தைப் பார்ப்பதற்கு இங்கே சுட்டவும்: பிஞ்சு மனம்
posted by கானா பிரபா 8:27 PM   2 comments
 
2 Comments:
 • At September 19, 2007 at 6:30 PM, Blogger கோபிநாத் said…

  சூப்பர் படம் தல ;))

  இசை, ஒளிப்பதிவு, அந்த குழந்தை...அட்டகாசம்...

  ஆனா இந்த விஷயத்துல முதல் குழந்தைகள் மட்டும் இல்ல ரெண்டாவது குழந்தைகளுக்கும் வரும்... ;-)))

   

 • At September 20, 2007 at 3:55 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க தல

  நீங்க உங்க வீட்டில் ரெண்டாவது போல ;)

   

Post a Comment
<< HOME
 
வீடியோஸ்பதி: காலத்தின் கட்டாயம்

வணக்கம் நண்பர்களே

ஏற்கனவே எழுத்திலும், ஒலியிலும் உங்களை ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்கும் நான் தொடங்கியிருக்கும் அடுத்த முயற்சி இது.

கண் குளிரப் பார்த்து ரசிக்க வீடியோஸ்பதி, இது காலத்தின் கட்டாயம் ;-)))
posted by கானா பிரபா 7:35 PM   27 comments
 
27 Comments:
 • At September 18, 2007 at 8:01 PM, Blogger கோபிநாத் said…

  வாழ்த்துக்கள் தலைவா :))

  கலக்கிடுவோம் :)

   

 • At September 18, 2007 at 8:17 PM, Blogger மாயா said…

  கலக்கிடுங்க . . .

  :))

   

 • At September 18, 2007 at 11:11 PM, Blogger Thillakan said…

  Grate (Y).

   

 • At September 18, 2007 at 11:43 PM, Blogger மதுரையம்பதி said…

  வாழ்த்துக்கள்.

   

 • At September 18, 2007 at 11:52 PM, Anonymous தயானந்தா said…

  வாழ்த்துக்கள் பிரபா! ஐந்துபேரறிவும் கண்களேயாகட்டும்,

  தயானந்தா

   

 • At September 18, 2007 at 11:55 PM, Blogger Senthuran said…

  மேலும் மேலும் பல படைப்புக்களை படைத்திட வாழ்த்துக்கள

   

 • At September 20, 2007 at 3:54 PM, Blogger கானா பிரபா said…

  குடிபுகுதலுக்கு வந்து வாழ்த்திய அன்பு உறவுகள் அனைவருக்கும் நன்றி ;)

   

 • At September 20, 2007 at 4:08 PM, Blogger சுதர்சன்.கோபால் said…

  இதோ வந்திட்டேன்ன்ன்ன்....(ஃபிரண்ட்ஸ் பட மதன்பாப் பாணியில் வாசிக்கவும்)

  கலக்குங்க அண்ணாத்தே :-)

   

 • At September 20, 2007 at 5:03 PM, Blogger Boston Bala said…

  :)

   

 • At September 20, 2007 at 5:04 PM, Blogger வடுவூர் குமார் said…

  பார்த்தால் பசி தீரூமா?

   

 • At September 20, 2007 at 5:15 PM, Blogger கானா பிரபா said…

  //சுதர்சன்.கோபால் said...
  இதோ வந்திட்டேன்ன்ன்ன்....(ஃபிரண்ட்ஸ் பட மதன்பாப் பாணியில் வாசிக்கவும்)

  கலக்குங்க அண்ணாத்தே :-)//

  ஆஹா (வடிவேலு பாணியில்)

  நீங்களும் வந்திட்டீங்களா ;))


  //Boston Bala said...
  :)//

  சிரிக்காதீங்க பாபா ;-))

  //வடுவூர் குமார் said...
  பார்த்தால் பசி தீரூமா?//

  கண்டிப்பா, அதிலென்ன சந்தேகம் ;-))

   

 • At September 20, 2007 at 7:08 PM, Blogger SurveySan said…

  கலக்குங்க.

   

 • At September 20, 2007 at 11:50 PM, Blogger கானா பிரபா said…

  ரொம்ப நன்றி தலைமைத் தேர்தல் அதிகாரியே ;-))

   

 • At September 21, 2007 at 1:07 AM, Blogger கொழுவி said…

  ஏ..... இனி இங்கே நெறய மலையாளப்படம் பார்க்கலாம்.

   

 • At September 21, 2007 at 2:42 AM, Blogger கானா பிரபா said…

  கொழுவி said...
  ஏ..... இனி இங்கே நெறய மலையாளப்படம் பார்க்கலாம்.


  (வடிவேலு பாணியில்) ஆரம்பிச்சுட்டாருய்யா ;-))

   

 • At September 21, 2007 at 3:22 AM, Blogger முத்துலெட்சுமி said…

  வாழ்த்துக்கள்... இதுலயும் நேயர் விருப்பம் வருமா...?

   

 • At September 21, 2007 at 3:26 AM, Blogger கானா பிரபா said…

  ரொம்ப நன்றி சகோதரி, நேயர் விருப்பம் வீடியோ விருப்பமாக நிச்சயம் வரும்.

   

 • At September 21, 2007 at 3:31 AM, Anonymous வெயிலான் said…

  ஆகா! சின்னக்குட்டி அண்ணைக்கு போட்டியா, இது எப்ப இருந்து ஆரம்பிச்சுது?

  அட்டகாசமா ஆரம்பிச்சிருக்கீங்க பிரபு! வாழ்த்துக்கள்!!!!!!

   

 • At September 21, 2007 at 3:37 AM, Blogger கானா பிரபா said…

  வாங்க வெயிலான்

  சின்னக்குட்டி அண்ணையோடயெல்லாம் போட்டி போட முடியாது. அவரோட வழி தனி வழி.

  இது நமக்குப் பிடித்த உங்களுக்கும் பிடிக்க இருக்கும் வீடியோ தெரிவுகளின் சங்கமம்.

   

 • At September 21, 2007 at 8:51 AM, Anonymous பஹீமாஜஹான் said…

  வாழ்த்துக்கள் பிரபா
  இனிதே தொடர்ந்திடுங்கள்
  அன்புடன்
  பஹீமாஜஹான்

   

 • At September 21, 2007 at 8:54 AM, Blogger கானா பிரபா said…

  மிக்க நன்றி சகோதரி

   

 • At September 22, 2007 at 8:43 PM, Blogger வி. ஜெ. சந்திரன் said…

  சின்னகுட்டிக்கு போட்டியோ?

  என்னவோ அசின், பாவனா, மீரா என உங்க ஆசைக்கு படங்காட்டுங்க

   

 • At September 22, 2007 at 9:37 PM, Blogger கானா பிரபா said…

  வாங்கோ அண்ணை

  சின்னக்குட்டி அண்ணை வழி தனி வழி எண்டு சொல்லியாச்சு.

  //என்னவோ அசின், பாவனா, மீரா என உங்க ஆசைக்கு படங்காட்டுங்க//

  இது தான் என் வழி ;))

   

 • At September 23, 2007 at 6:19 AM, Anonymous Anonymous said…

  //பார்த்தால் பசி தீரும்//
  எனப்பு விடியோஸ்பதிக்கு வாறவைக்கு இலவசமா சாப்பாடு இல்லை ரெஸ்ரோரண்டுக்கு போக காசு குடுக்கிற திட்டம் ஏதும் வச்சிருக்கிறீங்களோ?

   

 • At September 23, 2007 at 6:21 AM, Blogger கானா பிரபா said…

  //Anonymous said...
  எனப்பு விடியோஸ்பதிக்கு வாறவைக்கு இலவசமா சாப்பாடு இல்லை ரெஸ்ரோரண்டுக்கு போக காசு குடுக்கிற திட்டம் ஏதும் வச்சிருக்கிறீங்களோ?//


  விழிக்குணவு இல்லையெனில் ஆங்கே சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் ;))

   

 • At September 23, 2007 at 11:23 AM, Blogger சின்னக்குட்டி said…

  வணக்கம் பிரபா வாழ்த்துக்கள்.

  பிரபா உங்களிடம் அரிதாக கிடைக்க கூடிய வீடியோ தொகுப்புக்கள் உள்ளன என்று கேள்வி பட்டிருக்கிறேன் உ+ ம் குத்து விளக்கு இலங்கை திரைபடம்

  அதை இந்த தளம் மூலம் எல்லோருக்கும் காண வகை செய்வீர்கள் என நம்புகிறேன்

   

 • At September 23, 2007 at 2:11 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் சின்னக்குட்டியர்

  என்னால் முடிந்தளவு இப்படியான அரிய விடயங்களை எடுத்து வருகின்றேன். மிக்க நன்றிகள்.

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது