வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Wednesday, January 30, 2008
மலையாள நடிகர் பரத்கோபி நினைவாக..!

என் மலையாளத் திரைப்பட ரசிப்பில் பரத்கோபியின் படங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்த நடிகர் இவ்வளவு பிரபலமானவர் என்பதை இவரின் இறப்புக்குப் பின்னரே தெரிந்து கொண்டேன். இனிமேல் தான் இவரின் படங்களை தேடி எடுத்துப் பார்க்க வேண்டும். சமீபகாலத்தில் இவரின் படம் என்றால் என்னை மிகவும் ஈர்த்தது "ரசதந்திரம்". அதில் நாயகன் மோகன்லாலின் தந்தையாக வந்து தந்தை மகன் உறவில் இவரின் பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருந்தார்.

பிரபல மலையாள நடிகர் பரத்கோபியின் மரணம் குறித்த யாகூவின் செய்தியைக் கீழே தருகின்றேன்.
திருவனந்தபுரம் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஜனவரி 2008 ( 17:53 IST )

பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான பரத்கோபி இன்று மரணமடைந்தார்.

அவருக்கு வயது 71 ஆகும்.தனது ' கொடியேட்டம் ' படத்திற்காக 1977 ம் ஆண்டுக்குரிய சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற கோபி, கடந்த வாரம் கிருஷ்ணாபுரம் அரண்மனையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மரணமடைந்தார்.

100 க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் பரத்கோபி, 3 படங்களை இயக்கி உள்ளார்.இவருக்கு மனைவியும், மகள் மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர். கடந்த 1991 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரசதந்திரம் படத்தில் தந்தையாக இவர் தோன்றிய நடிப்பில் சில காட்சிகள்


Kaatathe Kilikkoodu (1983) படத்தில் பரத்கோபி நடித்த பாடற் காட்சி

Ente Mamattukuttiyammakku (1983) படத்தில் பரத்கோபி நடித்த பாடற் காட்சி

Ente Mamattukuttiyammakku (1983) படத்தில் பரத்கோபி நடித்த பாடற் காட்சி


வினீத் ஜோன் ஆப்ரஹாம் என்ற ரசிகர் youtube இல் இணைத்த பரத் கோபியின் வீடியோ
posted by கானா பிரபா 11:27 PM   10 comments
 
10 Comments:
 • At January 31, 2008 at 1:12 AM, Blogger துளசி கோபால் said…

  'ரசன' என்ற ஒரு பழைய படம் கிடைச்சாப் பாருங்க.

  அதுலே அவர் எழுத்தாளரா வருவார். மனைவி ஸ்ரீவித்யா. நம்ம நெடுமுடிவேணு புதுசா வேலைக்கு ஸ்ரீவித்யாவோட ஆஃபீஸுக்கு வருவார்.

  அட்டகாசமான கதை & நடிப்பு.

   

 • At January 31, 2008 at 4:37 AM, Blogger கானா பிரபா said…

  வருகைக்கு நன்றி துளசிம்மா

  தேடி எடுத்து "ரசன" படத்தைப் பார்க்கின்றேன்.

   

 • At January 31, 2008 at 2:13 PM, Blogger G.Ragavan said…

  நடிகர் கோபியின் ஆன்மா அமைதி பெறட்டும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், மலையாளத்திரையுலகத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  இவர் சமீபத்தில் கிளாஸ்மேட்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நீங்கள் வீடியோவில் குடுத்திருக்கும் எண்டே மாமாட்டுக்குட்டியோடே அம்மாவுக்கு என்ற படம் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்று வந்திருக்கிறது. கோபியின் பாத்திரத்தைத் தமிழில் செய்தவர் சத்யராஜ்.

   

 • At January 31, 2008 at 4:42 PM, Blogger கோபிநாத் said…

  ;( தல இவர் தான் பரத்கோபியா!

  \\ சமீபகாலத்தில் இவரின் படம் என்றால் என்னை மிகவும் ஈர்த்தது "ரசதந்திரம்". அதில் நாயகன் மோகன்லாலின் தந்தையாக வந்து தந்தை மகன் உறவில் இவரின் பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருந்தார். \\\

  நானும் அந்த படத்தில் தான் பார்த்திருக்கிறேன். ;(

   

 • At January 31, 2008 at 6:15 PM, Anonymous Anonymous said…

  அச்சச்சோ... இவர் கோபியல்லே? நான் பரத்கோபி ன்ன உடனே யாரோன்னு நினைச்சு...

  காற்றத்தே கிளிக்கூடு கண்முன்னாலேயெ நிற்கிறது... ஒரு இளம்பெண்ணால் சஞ்சலப்படும் நடுத்தர வயதுக்காரராக....

  அற்புதமான நடிகர்...

  வருந்துகிறேன்.

   

 • At January 31, 2008 at 7:58 PM, Blogger TBCD said…

  ஒரு நடிகையின் கதை என்ற படத்தின் மூலம், மலையாளத்தில் ஒரு நடிகையிண்ட கதா என்று வந்தது என்று நினைக்கிறேன்..

  பாலுமகேந்திரா மற்றும் ஒரு புகழ்பெற்ற நடிகையயை வைத்து எடுக்கப்பட்டதாகக் கேள்வி.

  குட்டி, குஞ்சு என்ற பெயரி வருவார் என்று நினைக்கிறேன்..ரொம்ப நாளாச்சு.

  அலட்டல் இல்லாத நடிப்பு..

  ரேவதியுடன், நடித்தப் படம் என்று நினைக்கிறேன்..ஐக்ராஸ்பிரகாஷ் சொல்லியிருப்பது..

  வருந்துகிறேன்..

   

 • At January 31, 2008 at 8:13 PM, Blogger துளசி கோபால் said…

  பிரகாஷ் சொன்ன படம் தமிழில்கூட வந்துச்சு. பெயர் நினைவில்லை.

  ஜெய்சங்கர் ஸ்ரீவித்யா நடிச்சது.

  நம்ம ஸ்ரீவித்யா, வீணை வாசிச்சுக்கிட்டே 'வீணை எனது குழந்தை, பாடும் பாட்டு அட்டகாசமா இருக்கும்.

  சுரேஷ்னு ஒரு இளைஞரும் அதுலே இருந்தார்.

   

 • At January 31, 2008 at 10:19 PM, Anonymous Anonymous said…

  //நம்ம ஸ்ரீவித்யா, வீணை வாசிச்சுக்கிட்டே 'வீணை எனது குழந்தை, பாடும் பாட்டு அட்டகாசமா இருக்கும்//

  அக்கா.... அது ஊஞ்சலாடும் உறவுகள். பரதனோட மாஸ்டர்பீஸ்

  ஒரு சுட்டி


  சுரேஷ்? இளைஞர்? ஓ... அந்த காலத்துலயா? சரி சரி....

  இப்ப சமீபத்துல காஃபி வித் அனு நிகழ்ச்சியிலே அவரைப் பார்த்தேன்... சாந்திநிலையம் காஞ்சனாவை, மௌனராகத்துல பார்த்தப்ப எப்படி இருந்ததோ, அப்படியே இருந்தது.

   

 • At February 1, 2008 at 1:33 AM, Blogger கானா பிரபா said…

  // கோபிநாத் said...
  ;( தல இவர் தான் பரத்கோபியா!//

  என்னைப் போல உங்களுக்கும் பேரைத் தெரியாமலே ஆளின் நடிப்பை ரசித்திருக்கோமா?


  //G.Ragavan said...
  நீங்கள் வீடியோவில் குடுத்திருக்கும் எண்டே மாமாட்டுக்குட்டியோடே அம்மாவுக்கு என்ற படம் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்று வந்திருக்கிறது. //

  மேலதிக தகவல்களைத் தந்தமைக்கு நன்றி ராகவன்

   

 • At February 1, 2008 at 6:48 AM, Blogger கானா பிரபா said…

  பிரகாஷ் மற்றும் TBCD

  தங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

   

Post a Comment
<< HOME
 
Friday, January 25, 2008
ஹீரோ - வில்லன்...ம்....குட் காம்பினேசன்
காதல் திரைப்படத்தில் இயல்பான கதைக்களனில், காதலர்கள் புகலிடம் சேரும் மேன்ஷனும் அடங்கும். அதில் நகரத்தில் வேலை தேடி வந்து ஒண்டுக்குடித்தனம் வாழும் இளைஞர்களின் வாழ்க்கையும் காட்சியாக்கப்பட்டிருக்கும்.

இங்கே நான் Youtube ஏற்றி உங்களுக்காகத் தருவது ஒரு நகைச்சுவைக் காட்சி. இயக்குனராகவே வராத ஒருவரிடம், ஹீரோ மற்றும் வில்லன் வாய்ப்புத் தேடிப் போன இருவர் சந்திக்கும் அனுபவம் காட்சியாக விரிகின்றது. நகைச்சுவைக்குப் பின்னால் இருக்கும் யதார்த்தமும் இன்னும் ஒரு படி மேலே இந்தக் காட்சியைக் கொண்டு போகின்றது.

"இன்னும் உங்க கிட்ட நான் நிறைய எதிர்பார்க்கிறேன்" போன்ற வசன வெளிப்பாடு காட்சியை நன்றாக ரசிக்க வைக்கின்றது.

posted by கானா பிரபா 7:09 AM   7 comments
 
7 Comments:
 • At January 25, 2008 at 7:25 AM, Blogger கோபிநாத் said…

  தல

  சூப்பர் வீடியோ..;))

  அதில் ஹூரோ தான் சூப்பர் காமெடி ;)

   

 • At January 25, 2008 at 7:43 AM, Blogger கப்பி பய said…

  நல்லா வருவீங்க தம்பி! நல்லா வருவீங்க! :))))

  நன்றி தல :))

   

 • At January 26, 2008 at 12:32 AM, Blogger கானா பிரபா said…

  // கோபிநாத் said...
  தல

  சூப்பர் வீடியோ..;))

  அதில் ஹூரோ தான் சூப்பர் காமெடி ;)//

  தல

  வில்லனா பண்ணியவரும், எதிர்கால இயக்குனரும் கூட கலக்கல் ;)

   

 • At January 26, 2008 at 12:44 AM, Anonymous Anonymous said…

  காம்பினேசன்... :?....

   

 • At January 26, 2008 at 1:06 AM, Blogger கானா பிரபா said…

  //கப்பி பய said...
  நல்லா வருவீங்க தம்பி! நல்லா வருவீங்க! :))))///

  வாங்க கப்பி

  நீங்களும் நன்றாக ரசித்திருக்கின்றீர்கள் போல ;-)

  //Anonymous said...
  காம்பினேசன்... :?....//

  ஓம், அந்த வீடியோ கிளிப்பை பாருங்கள் நண்பரே புரியும். அதில் இயக்குனர் சொல்லும் வசனம் தான் அது. ஈழத்து மொழியாடல் என்றால் கொம்பினேஷன்.

   

 • At January 27, 2008 at 5:15 PM, Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  அண்ணாச்சி...
  என்ன திடீர்னு சினிமா மாயை பக்கம்? :-)

  //நீங்க ஸ்ட்ரெயிட்டா ஹீரோ ரோலே பண்ணலாமே?
  இல்ல சார்...முதல்ல வில்லன், அப்பறம் ஹீரோ, அப்பறம்.....
  படிப்படியா முன்னுக்கு வரனும் சார்!//

  :-))

   

 • At January 27, 2008 at 8:15 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க கண்ணபிரான்

  இது நகைச்சுவை என்றாலும் உள்ளே இருக்கும் யதார்த்ததை ஓவ்வொரு நாளும் கோடம்பாக்கம் சந்தித்துக் கொண்டுதானே இருக்கு.

  மற்றப்படி ஹீரோவோ வில்லனோ எந்த ஆசையும் கிடையாது ;)

   

Post a Comment
<< HOME
 
Monday, January 14, 2008
Britney Spears தோன்றும் மலையாளப் பாடல்
Grammy விருது புகழ் Britney Spears தானே பாடல்களை எழுதி, பாடி, ஆடி நடித்துப் புகழேணியின் உச்சிக்குச் சென்றவர். வழக்கமான பிரபலங்கள் போல் இவரோடு புகழும் சேர சர்ச்சைகளும் சேர்ந்து கொண்டன. ஆனாலும் என்ன, இவர் கொடுக்கும் ஹிட்டான பொப்பிசை இவரின் ரசிகர்களின் கண்ணை மறைக்க, வெற்றியோடு உலா வருகின்றார் இந்த ஆங்கிலக் குயில்.

இங்கே நான் தருவது Britney Spears தோன்றும் ஒரு மலையாளப் பாடல் காட்சி

பிற்குறிப்பு: மொக்கைப் பதிவு வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது ;-))

posted by கானா பிரபா 2:50 AM   6 comments
 
6 Comments:
 • At January 14, 2008 at 6:33 AM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said…

  மொக்கை பதிவு சூப்பர்..

  இந்த மாதிரி அடிக்கடி போடுங்கண்ணே.. நாங்களும் கண்ணு கழுவன மாதிரி இருக்கும். :-)

   

 • At January 14, 2008 at 3:14 PM, Blogger CVR said…

  LOL!! :-D

  ஒரு அழகான பாடலை இப்படியெல்லாம் அசிங்க படுத்தனுமா???
  என்ன கொடுமை அண்ணாச்சி இது??? :-((

   

 • At January 14, 2008 at 3:36 PM, Anonymous Sabesh said…

  ஒரு அன்பான கண்டனம்.
  உங்கள் வீடியோ அடாவடியை இத்தோடு நிறுத்துங்கள். பீ.சுசிலாவின் பாடலுக்கு பாரிஸ் ஹில்டன் வீடியோவை போட்டுவிடாதீர்கள்.:))

   

 • At January 15, 2008 at 1:28 AM, Blogger கானா பிரபா said…

  // .:: மை ஃபிரண்ட் ::. said...
  மொக்கை பதிவு சூப்பர்..//

  ரொம்ப நன்றி சிஸ்டர் ;-)

  //CVR said...
  LOL!! :-D

  ஒரு அழகான பாடலை இப்படியெல்லாம் அசிங்க படுத்தனுமா???
  என்ன கொடுமை அண்ணாச்சி இது??? :-((//

  கூல் டவுண் தல, இது 100% அக்மார்க் மொக்கை ;-)


  //Sabesh said...
  ஒரு அன்பான கண்டனம்.
  உங்கள் வீடியோ அடாவடியை இத்தோடு நிறுத்துங்கள். பீ.சுசிலாவின் பாடலுக்கு பாரிஸ் ஹில்டன் வீடியோவை போட்டுவிடாதீர்கள்.:))//

  வாங்கோ சபேசன்

  நீங்களே ஐடியாவும் தந்திட்டியள், ஆனாலும் இத்தோட
  நிறுத்திக்குவம் ;-)

   

 • At January 15, 2008 at 8:37 PM, Blogger cheena (சீனா) said…

  காதுக்கு இனிமை - கண்ணுக்கு குளிர்ச்சி - நன்றி

   

 • At January 16, 2008 at 3:55 PM, Blogger கானா பிரபா said…

  வருகைக்கு நன்றிகள் சீனா சார்

   

Post a Comment
<< HOME
 
Thursday, January 10, 2008
நடிகர் பாண்டியனுக்காக...

நடிகர் பாண்டியன், 80களில் "மண்வாசனை" திரையில் பாரதிராஜா மூல அறிமுகமாகித் தொடர்ந்து, புதுமைப்பெண், முதல் வசந்தம், ஆண்பாவம், தாய்க்கு ஒரு தாலாட்டு, "காதல் என்னும் நதியினிலே" என்று சொல்லத் தக்க திரைப்படங்களில் நடித்தவர். "கிழக்குச் சீமையிலே" வில்லன் நடிப்பு சினிமாவில் அவருக்கு மீள் வரவாக அமைந்தது.

நடிக்க வருமுன் வளையல் கடையில் வேலை பார்த்த இவர் ஒரு நிலையில் பொருத்தமான பாத்திரங்கள் கிடைக்காமல் பழைய நிலைக்கே போகவேண்டி வந்தது.
கிராமியப்பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருதும் இவர் சினிமாவில் தகுந்த வழிநடத்தல் இன்றித் திசைமாறிய நடிகர்களில் இவரும் ஒருவர் எனலாம்.

நேற்றோடு அவர் நிரந்தரமாகவே கலையுலகில் இருந்து ஓய்வு பெற்றார். பாண்டியன் நடித்த சில பாடற் காட்சிகள் இதோ:

Photo courtesy: thatstamil.com
Video courtesy: mkumarpalani & techsatish

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - மண் வாசனை


கஸ்தூரி மானே - புதுமைப்பெண்


குயிலே குயிலே - ஆண்பாவம்
posted by கானா பிரபா 7:19 PM   7 comments
 
7 Comments:
 • At January 10, 2008 at 9:12 PM, Blogger கோவி.கண்ணன் said…

  எதோ ஒரு படத்தில் இரு வேடங்களில் கூட நடித்திருந்தார்

   

 • At January 10, 2008 at 9:13 PM, Anonymous Anonymous said…

  பிரபு!

  பாத்திரக்கடையில் வேலை பார்த்தவரில்லை. வளையல் கடையில் வேலை பார்த்தவர்.

   

 • At January 10, 2008 at 10:57 PM, Blogger மாயா said…

  அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு எனது ஆழந்த அனுதாபங்கள்

   

 • At January 11, 2008 at 1:59 AM, Blogger கானா பிரபா said…

  //கோவி.கண்ணன் said...
  எதோ ஒரு படத்தில் இரு வேடங்களில் கூட நடித்திருந்தார்//

  வணக்கம் கோவி.கண்ணன்

  அந்தப் படத்தை நான் அறிந்திருக்கவில்லை. ஆண்பாவம் படத்தில் பெரிய பாண்டியாக இவரும் சின்னப்பாண்டியாக பாண்டியராஜனும் கலக்கியிருப்பார்கள்.

  //veyilaan said...
  பிரபு!

  பாத்திரக்கடையில் வேலை பார்த்தவரில்லை. வளையல் கடையில் வேலை பார்த்தவர்.//

  மிக்க நன்றி நண்பா, திருத்தி விட்டேன்

  //மாயா said...
  அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு எனது ஆழந்த அனுதாபங்கள்//

  வருகைக்கு நன்றிகள் மாயா

   

 • At January 11, 2008 at 7:56 AM, Blogger அய்யனார் said…

  இவரை ஒரு தரம் திருவண்ணாமலையில் நண்பர்களுடன் சேர்ந்து கலாய்த்தது செய்தி கேட்கும்போது கண்முன் வந்து குற்றவுணர்வை ஏற்படுத்திவிட்டுப் போனது..

  அஞ்சலியும் வருத்தமும்

   

 • At January 11, 2008 at 6:01 PM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

  இப்போ 'ஆண்பாவம்' பார்த்து முடித்தேன்.
  நல்லாகத் தான் நடித்துள்ளார்.
  குயிலே குயிலே மிகப் பிடித்த பாடல்காட்சி.
  வாழ்க்கை அவரவர்க்கு அளந்ததே!!

   

 • At January 12, 2008 at 12:37 AM, Blogger கானா பிரபா said…

  வருகைக்கு நன்றிகள் அய்யனார் மற்றும் யோகன் அண்ணா

  நடிகர் பாண்டியனுக்காகச் சிறப்பு நினைவை நேற்று வானொலியில் பகிர்ந்து கொண்டேன். அவரைத் தனிப்பட்ட ரீதியில் தெரிந்த நண்பர் கூறிய கருத்துப் படி பாண்டியனுக்குக் கூடவே இருந்து வழிநடத்த நல்ல நண்பனோ அல்லது உறவினரோ இல்லாததும் ஒரு குறை.

   

Post a Comment
<< HOME
 
Tuesday, January 8, 2008
என்ன கொடுமை இது அம்பயர்?
ஊரில் இருக்கும் போது கிட்டிப்புள்ளில் இருந்து கிறிக்கற் வரை எனக்கு அளாப்பித் தான் ஆடவரும். அளாப்பி என்றால் என்ன என்று இந்திய நண்பர்கள் பலருக்குத் தெரியுமோ எனக்குத் தெரியாது. கவுண்டர் பாஷையில் "இது ஆவுறதில்லை" ஜாதி.

நடந்து கொண்டிருக்கும் கூத்துக்களைப் பார்க்கும் போது ஒஸ்ரேலியன் கிறிக்கற் ரீம் அளாப்பிகளையே மிஞ்சுவான்கள் போல கிடக்கு.

ஆஸ்திரேலிய அணி சென்னை வந்தால் சிக்கலில்லாமல் வெல்வதற்காக சென்னை 28 இன் Sharks team ஐ வீடியோ வழி பரிந்துரை செய்கின்றேன். (Youtube: பாலு)
posted by கானா பிரபா 2:13 AM   3 comments
 
3 Comments:
 • At January 8, 2008 at 12:32 PM, Blogger கோபிநாத் said…

  ;)))))))))))))

  சூப்பர் தல

   

 • At January 8, 2008 at 6:58 PM, Blogger வந்தியத்தேவன் said…

  நீங்களும் நம்ம கூட்டணியா? (அளாப்பல்)நானும் துடுப்பெடுத்தாடும் பொழுது அம்பயராக நிற்பருக்கு முதலில் காலில் கையில் பந்து பட்டு அவுட் கொடுத்தால் மவனே உன் வண்டவாளங்களை வீட்டில் சொல்லிடுவேன் என மிரட்டுவேன், விக்கெட்டில் நேரே பந்துபட்டாலோ அல்லது யாராவது பந்தை ப்டித்தால் மட்டும்தான் நான் அவுட் மற்றும் படி விக்கெட்டை மறைத்து நின்று எப்படியும் அடிதான். (உள்ளூர் மேட்சில் மட்டும். பாடசாலையில் இப்படியெல்லாம் செய்யமுடியாது).

  அதிகம் அளாப்பும் விளையாட்டு கார்ட்ஸ்தான்.

   

 • At January 10, 2008 at 2:47 AM, Blogger கானா பிரபா said…

  தல கோபி, வந்தியத்தேவன்

  வருகைக்கு நன்றிகள் ;-)

  அளாப்பாமல் விளையாடுறதில் கிக் இருக்காது கண்டியளோ?

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது