வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Sunday, September 27, 2009
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
"காற்றில் எந்தன் கீதம்" இந்தப் பாடல் 29 வருஷங்களுக்கு முன்னர் "ஜானி" திரைப்படத்தில் வந்த, இன்றும் ரசிகர் மனதை விட்டு நீங்காது ஆணி அடித்தது போல நிற்கும் பாடல். இளையராஜாவைக் கேட்டு வளராத அடுத்த தலைமுறை கூட இந்தப் பாடலை நேசம் கொண்டு பாடிப் பரவசம் அடையும் அளவுக்கு பாட்டின் மெட்டும், பாடிய ஜானகியின் குரல் இனிமையும், பின்னணியில் கலக்கும் இசையும் வியாபித்து நிற்கும்.

ஆர்ப்பாட்டமாக மட்டுமல்ல அமைதியான தென்றலாகக்கூடத் தன்னால் பாடி வைக்க முடியும் என்று எஸ்.ஜானகி நிரூபித்த பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இந்தப் பாடல். கஸல் வடிவில் பொருத்திப் பார்க்கக் கூடிய இந்தப் பாடலை எஸ்.ஜானகி பாடிய போது இந்தக் குரலே அவருக்கு அந்நியமான ஒரு வடநாட்டுப் பாணி போல இருக்கும். வளைந்து நெளிந்து போகும் இந்த குரல் கொடுக்கும் உருக்கம் கேட்போரின் ஊனினை உருக்க வல்லது. கூடவே பின்னணியாய் மெல்லிய மழைச்சாரல் போல வரும் இசை குரலோடு சேர்ந்து ஏக்கத்தைக் காட்டுகின்றது கண் முன்னே. காதல் வயப்பட்ட உள்ளம் மழைதேடி நனைந்து ரசிக்க வைக்கும் வல்லமை கொண்டது.

"காற்றில் எந்தன் கீதம்" மொழி கடந்தும் ரசிக்கப்படுகின்றது என்பதற்கு இங்கே அம்ருதா டிவியில் வந்த இசைப்போட்டிகளில் பாடிய பாடகிகளில் ஒளித் துண்டங்களும், கூடவே மலையாளத்தின் தலைசிறந்த புதிய தலைமுறை இசையமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரன் இப்பாடலைப் பற்றிச் சிலாகிக்கும் கருத்தையும் தந்திருக்கின்றேன்.

Aur Ek Prem Kahani என்ற ஹிந்தித் திரைப்படத்தினை பாலுமகேந்திரா இயக்கியபோது ராஜாவிடம் பழைய மெட்டுக்களைக் கேட்டுப் பயன்படுத்திக் கொண்டார். அதிலும் "காற்றில் எந்தன் கீதம்" வந்து கலந்தது.

"காற்றில் எந்தன் கீதம்" பாமரனை மட்டுமல்ல சங்கீத விற்பன்னர்களையும் கவரும் அதி அற்புதமான பாடல்.

மூலப்பாடலைப் பார்த்து ரசிக்க


அம்ருதா டிவியில் Super Star Junior 2 இல் அனகா பாடும் "காற்றில் எந்தன் கீதம்"அம்ருதா டிவியில் Super Star 2 நிகழ்ச்சியில் பத்ரா பாடும் "காற்றில் எந்தன் கீதம்"
இந்தப் பாடலை இசையமைத்த ராஜாவின் காலடியில் விழுந்து வணங்குவேன் என்று சொல்லும் மலையாள இசையமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரன்Aur Ek Prem Kahani திரைப்படத்தில் இதே மெட்டை வைத்து ஆஷா போன்ஸ்லே ஐ பாட வைத்திருக்கிறார் இளையராஜா

Labels: ,

posted by கானா பிரபா 3:38 AM  
 
15 Comments:
 • At September 27, 2009 at 4:46 AM, Blogger Thillakan said…

  நல்ல சிலாகிப்பு :)
  All time favourite song !!!
  Thanks for extra bits.

   

 • At September 27, 2009 at 5:24 AM, Blogger ஆயில்யன் said…

  //வளைந்து நெளிந்து போகும் இந்த குரல் கொடுக்கும் உருக்கம் கேட்போரின் ஊனினை உருக்க வல்லது. கூடவே பின்னணியாய் மெல்லிய மழைச்சாரல் போல வரும் இசை குரலோடு சேர்ந்து ஏக்கத்தைக் காட்டுகின்றது கண் முன்னே. காதல் வயப்பட்ட உள்ளம் மழைதேடி நனைந்து ரசிக்க வைக்கும் வல்லமை கொண்டது.///

  பாஸ்

  ரசிகன் பாஸ் அப்படியே அருமையான வர்ணிப்பு!

  எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு !
  :))

   

 • At September 27, 2009 at 5:42 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

  அண்ணன், பல நாட்களுக்கு பிறகு நானும்தான் ஏர்டெல் சுப்பர் சிங்கர் யூனியர் 2 நிகழ்ச்சி பார்த்ததிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக இந்தப்பாடலை பல முறை கேட்டுக்கொண்டிருக்கிறேன் அறையிலும் அலுவலகத்திலுமாக...

  அடுத்தடுத்த தலை முறைகளும் ரசித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி பல இடங்களிலும் தேட அவசியமில்லாமல் இலகுவாக கிடைக்கிற இந்தப்பாடல்தான்...

  நன்றி பகிர்வுக்கு..

   

 • At September 27, 2009 at 5:43 AM, Blogger சென்ஷி said…

  அருமை தலைவா...

  அப்படியே காற்றில் படபடக்குற சேலைத் தலைப்பை பிடிச்சுக்கிட்டு படபடப்போட மழையில் தன் காதலனை தேடுற ஸ்ரீதேவியைப் பத்தியும் எழுதியிருக்கலாம்!

   

 • At September 27, 2009 at 6:12 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  பாஸ்....எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு...நன்றி பாஸ்!

   

 • At September 27, 2009 at 7:21 AM, Blogger Thevesh said…

  காலத்தால் அழியாத சகாவரம்
  பெற்ற ஒரு அற்புதப்பாடலைத்
  தந்துள்ளீர்கள்.நன்றி சொல்ல
  என்னிடம் வார்த்தைகள் இல்லை.

   

 • At September 27, 2009 at 8:47 AM, Blogger துபாய் ராஜா said…

  அருமையான பகிர்வு நண்பா.

  தொகுப்புகளும் அருமை.

  கானா என்றாலே கலக்கல்தான்.

   

 • At September 27, 2009 at 12:57 PM, Blogger ஹேமா said…

  பிரபா ரசனையின் உச்சம்.

   

 • At September 27, 2009 at 4:46 PM, Anonymous Anonymous said…

  எத்தனை தரவை கேட்டிருக்கேன். சலிக்காத பாடல். இதே பாட்டை ஸ்ரேயா கோஷல் ஒரு மேடைல பாடினாங்க. உச்சரிப்பு கொஞ்சம் பிசகல். ஆனா நல்லா பாடினாங்க. அது கிடைக்கலியா உங்களுக்கு.

   

 • At September 27, 2009 at 7:04 PM, Blogger SurveySan said…

  beauty! beauty! beauty! :)

   

 • At September 28, 2009 at 4:28 AM, Blogger கானா பிரபா said…

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

  வணக்கம் சின்ன அம்மணி

  ஸ்ரேயா கோஷல் பாட்டும் கிடைக்குது ஆனா அவங்க "காணாத உன்னைத் தோடுதே"ன்னு பாடியது உறுத்தலா இருந்துச்சு.

   

 • At September 28, 2009 at 4:28 AM, Blogger கலை said…

  உண்மைதான். கேட்க கேட்க சலிக்காத, அழகான, இனிமையான, அமைதியான.... பாடல்.

   

 • At September 28, 2009 at 4:56 AM, Blogger இய‌ற்கை said…

  எப்பிடி பாஸ் இப்பிடி.. உங்க ரசனை சூப்பர்;-)

   

 • At September 29, 2009 at 10:03 AM, Blogger சந்ரு said…

  நல்ல பகிர்வு நன்றிகள்

   

 • At September 29, 2009 at 5:28 PM, Blogger கானா பிரபா said…

  இய‌ற்கை said…

  எப்பிடி பாஸ் இப்பிடி.. //


  அதெல்லாம் "தொளில்" ரகஸ்யம் சொல்லமாட்டோம்ல

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
And, Now...
கலாட்டா கல்யாணம் ;-)))
நான் ரசித்த மலையாள மென் மெட்டுக்கள்
எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே....!
அனியத்தி பிறாவு VS காதலுக்கு மரியாதை BGM ஒப்பீடு
54 ஆவது பிலிம்பேர் (ஹிந்தி) பார்த்ததும் பாதித்ததும...
மொழி தாவிய திரை மெட்டுக்கள் - பாகம் 3
இலங்கை அரச பயங்கரவாதம் குறித்து பாடகி மாயா பேசுகிற...
ஏ.ஆர். ரஹ்மான் பெறும் Golden Globe Award 2009
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது