வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, March 8, 2008
மொழி தாவிய இசை மெட்டுக்கள் - பாகம் 2
இன்றைய பகுதியில், சலீல் செளத்ரியின் இசையில் மலர்ந்த பாடல்கள் தமிழ், மலையாள, ஹிந்தி வடிவம் பெற்றதைக் காட்சியோடு ரசிக்கலாம். சலீல் எவ்வளவு அழகாக இந்த மெட்டுக்களை அந்தந்த பிராந்திய மொழிகளுக்கேற்ப மெட்டைச் சிதைக்காமல் இசைக்கருவிகளிலும், குரலிலும் மட்டும் வித்தியாசம் காட்டி இசைய வைத்திருக்கின்றார் என்பதைக் கேட்கும் போது உண்மையில் அவரைப் போற்றத் தான் வேண்டும். இந்திய சினிமா இசையின் இன்னொரு உன்னதக் கலைஞன் சலீல் செளத்ரி.

தமிழில் இந்தப் பாடல்கள் அழியாத கோலங்கள் திரையில் வந்திருந்தன. அதில் வரும் "நான் என்னும் பொழுது" பாடல் என் சாவு வரை தொடர இருக்கும் முதற் தெரிவுகளில் ஒன்று. இந்தப் பாடல் தமிழ், ஹிந்தி தவிர முதலில் பெங்காலியிலும் வந்திருந்தது அப்பாடலை முன்னர் றேடியோஸ்பதியில் இட்டிருந்தேன்.

பூ வண்ணம் போல நெஞ்சம்


மலையாள வடிவம்: Etho Oru Swapnam (1978)


ஒத்திகை ஒன்று


நான் என்னும் பொழுது

ஹிந்தி வடிவம்: Anand


இசை வடிவில்
posted by கானா பிரபா 5:09 AM   3 comments
 
3 Comments:
 • At March 8, 2008 at 9:46 PM, Blogger சிறில் அலெக்ஸ் said…

  பூ வண்ணம் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ராஜா என நினைத்திருந்தேன்.
  செம்மீன் பாடல்கள் மிகவும் ரசித்திருக்கிறேன்.

  பகிர்ந்ததற்கு நன்றி

   

 • At March 9, 2008 at 1:42 AM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் சிறில் அலெக்ஸ்

  சலீல் செளத்ரியின் அற்புதமான பாடல்களில் இந்தத் தொகுப்பு முத்தாய்ப்பானவை. கூடவே பாலுமகேந்திரா இளையராஜா தவிர்த்து விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் செய்த போது சேர்ந்த கூட்டணியில் இதுவும் ஒன்று.

   

 • At March 12, 2008 at 4:11 PM, Blogger G.Ragavan said…

  சலீல் சௌத்திரியின் இசை மிகப் பிரபலமானது. மாநிலங்களைக் கடந்தது என்றும் சொல்லலாம். இதே பாட்டை இசையரசியில் இப்படி இட்டேன் முன்பு.

  http://isaiarasi.blogspot.com/2007/06/06.html

  இந்தியையும் மலையாளத்தையும் விட வங்களத்தில் ஓஓ ஆமார் சஜோனி கோ என்று கேட்கும் பொழுது மிகவும் பிடிக்கும்.

  சலீல் சௌத்திரி சிலப்பதிகார கானல்வரிப் பாடலை இசையரசியை வைத்தும் யேசுதாசை வைத்தும் பதிந்திருக்கிறார்.

   

Post a Comment
<< HOME
 
Wednesday, March 5, 2008
மொழி தாவிய திரை மெட்டுக்கள்
வீடியோஸ்பதியில் பல்லின மொழிப்பாடல்களையும் இணைத்து வருவது கண்டு நம்ம நண்பர் ஜி.ராகவன் சில தெலுங்குப் பாடல்களைத் தந்திருக்கின்றார். கூடவே என் பங்கிற்கு புதுசா வந்த காப்பி ஒன்றையும் கடைசியில் தேடிக் கொடுத்திருக்கின்றேன். இந்தப் பாடல்களின் சிறப்பு என்னவென்றால் இவை தமிழிலும் வந்திருக்கின்றன. தமிழில் வந்த பாடல்களைக் கண்டுபிடியுங்களேன்.

1. படம்: Prema Sagaram2.படம்: Sithara3.படம்: "Maharshi"


நிறையப்பேரைக் கஷ்டப்படுத்தி கண்டுபிடிக்கமுடியாத இதன் தமிழ் வடிவம் இதோ:
படம்: செண்பகமே செண்பகமே


4. படம்: April 1st Vidudala


5. படம்: Anumanaspadam
posted by கானா பிரபா 1:43 AM   8 comments
 
8 Comments:
 • At March 5, 2008 at 2:03 AM, Blogger Jeeves said…

  1 - இதயமதைக் கோவிலென்பேன்
  2 - ஒரு கிளி உருகுது
  3 -(சரியா தெரியல - இன்னொரு முறைக் கேட்டு சொல்லுதேன் )
  4 -சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன்
  5 - மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

   

 • At March 5, 2008 at 2:11 AM, Anonymous Anonymous said…

  கானா பிரபா,

  I don't think these can be termed as copies, Same MD using it in another language is perfectly legal :)

  1. Idhayam athaik kovil enben (Which Movie?? T Rajendar is the MD)
  2. Oru KiLi Uruguthu (Aanadha Kummi)
  3. ???
  4. Chithira Sevvaanam Sirikkak KaNdaen(???)
  5. Mayanginen Solla Thayanginaen (Naane Raja, Naane Mandhiri)

  N Chokkan,
  Bangalore.

   

 • At March 5, 2008 at 2:24 AM, Blogger கானா பிரபா said…

  மூன்றாவது பாட்டு தவிர சரியான விடையை ஜீவ்ஸ் அண்ணாச்சியும் சொக்கனும் சொல்லியிருக்கீங்க,

  வணக்கம் சொக்கன்

  நீங்க சொல்றது சரிதான் அதே இசையமைப்பாளர் என்பதால் இது திருட்டு காப்பி இல்லை, ஆனா காப்பி தானே ;)

   

 • At March 5, 2008 at 4:00 AM, Blogger வந்தியத்தேவன் said…

  2. ஒரு கிளி உருகுது படம் ஞாபகம் இல்லை
  5. படம்: Anumanaspaடம்
  மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் நானே ராஜா நானே மந்திரி படப்பாடல்.
  ஏனைய பாடல்கள்

   

 • At March 5, 2008 at 2:42 PM, Blogger G.Ragavan said…

  எல்லாமே நல்ல பாட்டுக்கதான். ஆனா ஏன் இந்தக் கண்டசாலா இப்பிடிக் கொதறுறாரே!

  மெல்லிசை மன்னர் சினிமாவுக்கு வந்த புதுசுல போட்ட பாட்டு "உலகே மாயம் வாழ்வே மாயம்".. தேவதாஸ் படத்துக்கு. அந்தப் பாட்டு ரெக்கார்டிங் முடிஞ்சதும் அந்தப் பாட்ட எழுதுன உடுமலை நாராயணக் கவி. அவரு பளார்னு விஸ்வநாதனா அறைஞ்சிட்டாராம். "ஏனடா... இவர ஏண்டா பாட வெச்சே? உலகே மாயம் வால்வே மாயம்னு பாடீருக்கானே"ன்னு சொன்னாராம். :)

   

 • At March 5, 2008 at 4:35 PM, Blogger துளசி கோபால் said…

  அந்த மூணாவது பாட்டு......ரொம்ப ஃபெமிலியரா இருக்கு.

  மஞ்சப்பொடி தேய்க்கையிலே என் நெஞ்சைத்தொட்டு போன புள்ளெ....
  மாதிரி இருக்கு


  ஆமாம். அந்த முதல் பாட்டுக் க்ளிப்புலே நளினியா அது!!!!1

  எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்களேன்னு இருக்கு.

   

 • At March 5, 2008 at 5:10 PM, Blogger கோபிநாத் said…

  ஆகா...தல... ஜிராவுக்கும் உங்களுக்கும் நன்றி ;))

  நமக்கு 2வது பாட்டும், 5வது பாட்டும் ஞாபகத்துல வருது....மீதி எல்லாம் சாரி தல ;)

  @ துளசி டீச்சர்
  \\ஆமாம். அந்த முதல் பாட்டுக் க்ளிப்புலே நளினியா அது!!!!1

  எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்களேன்னு இருக்கு.\\

  டீச்சர் நளினி மாட்டுமா...பானுப்பிரியாவை பார்க்கலியா!!!

   

 • At March 6, 2008 at 2:45 AM, Blogger கானா பிரபா said…

  வந்தியத் தேவன்

  இரண்டு பாட்டுதான் கண்டுபிடிக்க முடிந்ததா ;-)

  ராகவன்

  நீங்க சொன்ன சம்பவத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்துச் சிரித்தேன் ;-))

  துளசிம்மா

  நீங்க ஒருவர் தான் கண்டுபிடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  தல கோபி

  இப்போ எதுக்கு பானுப்பிரியாவைப் பற்றி ஜொள்ளணும்?

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது