வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Wednesday, October 31, 2007
சங்கத்தில் பாடாத கவிதை - மூன்று வடிவில்
ஒரே மெட்டு திரையிசையாக தமிழ், தெலுங்கு மலையாளப் பாடல்களாக வந்திருப்பதை அப்பாடல்களோடு இணைத்துத் தருகின்றேன்.

மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக்கோர்ப்பு ஒன்றை அப்பட இயக்குனர் பாலுமகேந்திரா, தனது ஓளங்கள் மலையாளப்படத்தின் பாடல் வடிவமாக்கித் தருமாறு இசையமைப்பாளர் இளையராஜாவைக் கேட்கவும் அவர் அப்படியே மலையாளப்பாடலாக்கிக் கொடுத்திருந்தார். பின்னர் அதே மெட்டு பாலுமகேந்திராவின் "நிரீக்சனா" என்ற தெலுங்குப் படப்பாடலாகவும், ஓட்டோ ராஜா தமிழ்த் திரைப்படத்தின் காதல் ஜோடிப் பாடலாகவும் தாவியதை விபரிக்கின்றது இவ் ஒளித்தொகுப்பு.

மலையாள வடிவம் - தும்பி வாதமிழ் வடிவம் - சஙகத்தில் பாடாத கவிதை


தெலுங்கு வடிவம் - ஆகாசம் ( எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கு பெறும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளினி பாடுகின்றார்.
posted by கானா பிரபா 2:59 AM   13 comments
 
13 Comments:
 • At October 31, 2007 at 5:35 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

  பிரபா!
  தமிழ் வடிவம் படமாக இப்போது தான் பார்த்தேன்; இது விஜயகாந் படமா???
  தேடிப் போட்டதுக்கு நன்றி!

   

 • At October 31, 2007 at 7:51 AM, Anonymous Anonymous said…

  நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

   

 • At October 31, 2007 at 7:52 AM, Blogger உடுவைத்தில்லை said…

  பிரபா எனது வாழ்த்துக்கள்.

   

 • At October 31, 2007 at 3:14 PM, Blogger கானா பிரபா said…

  //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
  பிரபா!
  தமிழ் வடிவம் படமாக இப்போது தான் பார்த்தேன்; இது விஜயகாந் படமா???
  தேடிப் போட்டதுக்கு நன்றி!//

  யோகன் அண்ணா

  ஆமாம் இது விஜயகாந்தின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. மிக்க நன்றி தங்கள் வருகைக்கு

   

 • At October 31, 2007 at 7:57 PM, Blogger கானா பிரபா said…

  அநானி நண்பர் மற்றும் தில்லை அண்ணாவின் வருகைக்கு நன்றிகள்

   

 • At November 2, 2007 at 7:42 AM, Blogger Ram Prasad said…

  ஆய்யா

  "சந்தத்தில் .." எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

  உங்களிடம், "நண்டு" படத்தில் வரும் "மஞ்சள் வெய்யில்.." பாடல் உள்ளதா ?

  - ராம்

   

 • At November 2, 2007 at 8:29 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் ராம்

  இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் யூடிபில் பிடித்தவை. நண்டு பாடல் இருந்தால் போடுகின்றேன்.

   

 • At November 6, 2007 at 3:18 PM, Blogger கோபிநாத் said…

  தல என்ன சொல்லறது...வார்த்தைகளே இல்ல அந்த அளவுக்கு இந்த பாடல் எனக்கு பிடிக்கும்


  தும்பி வா.

  இப்போது தான் இந்த காட்சியை பார்க்கிறேன். பாலுமகேந்திரா பாலுமகேந்திரா தான்...ஒவ்வொரு காட்சியும் கவிதை...அந்த பாடலை சிதைக்காமல் எவ்வளவு அருமையாக காட்சிகளை அமைத்து கலக்கியிருக்காரு..கிரேட் ;)))
  படம் கிடைத்தால் பார்க்க வேண்டும்.

  இது உங்களுக்கு தெரியும் இருந்தாலும் சொல்லிவிடுகிறேன்....சென்னையில் நடந்த கச்சேரியில் ராஜா இந்த பாடலை வாத்தியங்களில் மூலம் கேட்டால் எப்படி இருக்கும் என்று இசை அமைத்து காட்டியிருப்பாரு...அந்த காட்சி கிடைத்தால் போடுங்கள் ;))

  தமிழ் வடிவம்....வேண்டாம் ஒன்றும் சொல்லவதற்கில்லை...;)

  இப்படி ஒரு அழகான பாடல் காட்சியை போட்டுவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாத உங்களுக்கு என் லேசான கண்டனங்கள் ;)

   

 • At November 6, 2007 at 3:22 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க தல

  ராஜா சொன்ன அந்த ஒளித்துண்டைத் தேடிப் போடுகின்றேன். பாட்டே ஆயிரம் சேதி சொல்லுதே? நான் வேற சொல்ல வேண்டுமா?

   

 • At November 6, 2007 at 6:22 PM, Blogger கோபிநாத் said…

  \\கானா பிரபா said...
  வாங்க தல

  ராஜா சொன்ன அந்த ஒளித்துண்டைத் தேடிப் போடுகின்றேன். பாட்டே ஆயிரம் சேதி சொல்லுதே? நான் வேற சொல்ல வேண்டுமா?\\

  தல இதோ கண்டுபிடிச்சிட்டேன்...

  http://www.youtube.com/watch?v=tV_IVtXcg4g

  பாருங்கள் ;)))

   

 • At November 6, 2007 at 6:34 PM, Blogger ஆதிபகவன் said…

  பிரபா,
  பாலுமகேந்திராவின் தெலுங்குப் படமொன்று தமிழில் டப் செய்தபோது இதே மெட்டில் வேறொரு பாடலாக வெளிவந்தது என நினைக்கிறேன்.

  "நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே
  தீ கூட குளிர் காயுதே...."
  என்று ஆரம்பிக்கும். பாடலை கவிஞர் அறிவுமதி எழுதியிருந்ததாக ஞாபகம்.

  பானுசந்தர் நடித்தா படமென நினைக்கிறேன்.

   

 • At November 7, 2007 at 2:03 AM, Blogger கானா பிரபா said…

  //கோபிநாத் said...

  தல இதோ கண்டுபிடிச்சிட்டேன்...

  http://www.youtube.com/watch?v=tV_IVtXcg4g

  பாருங்கள் ;)))//

  மிக்க நன்றி தல

  இதையும் இப்பதிவில் நாளை சேர்த்துவிடுகின்றேன்.

   

 • At November 7, 2007 at 2:06 AM, Blogger கானா பிரபா said…

  //ஆதிபகவன் said...
  பிரபா,
  பாலுமகேந்திராவின் தெலுங்குப் படமொன்று தமிழில் டப் செய்தபோது இதே மெட்டில் வேறொரு பாடலாக வெளிவந்தது என நினைக்கிறேன்.//

  வணக்கம் ஆதிபகவன்

  நீங்கள் சொல்லும் பாடல் தான் நான் தந்திருக்கும் தெலுங்குப்பாடல். இது நிரீக்ஷணா என்று தெலுங்கில் முதலில் வந்திருந்தது. பின்னர் கண்ணே கலைமனே என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இன்னொரு தகவல், இதே படம் தான் மலையாளத்தில் யாத்ரா என்றும், தமிழில் அது ஒரு கனாக்காலம் என்றும் பாலுமகேந்திராவால் எடுக்கப்பட்டது.

   

Post a Comment
<< HOME
 
Tuesday, October 30, 2007
சுகமானி நிலாவு - நம்மள் பாட்டு ஒண்ணு
மலையாளத்தின் தற்போதய முன்னணி இயக்குனர் கமல் இயக்கத்தில் நம்மள் என்ற திரைப்படம் வந்திருந்தது.
அதில் மோகன் சித்தாராவின் இசையில் விது ப்ரதீப், ஜோற்ஸ்னா பாடிய "சுகமானி நிலாவு" எனக்கு மிகவும் பிடித்த பாட்டுக்களில் ஒன்று. படமும் பார்க்கக் கூடியதே.


posted by கானா பிரபா 3:54 AM   0 comments
 
0 Comments:
Post a Comment
<< HOME
 
Friday, October 26, 2007
அவுஸ்திரேலியத் தேர்தலில் தீவிரவாதம் குறித்த விவாதம்

அவுஸ்திரேலியாவில் அதிபருக்கான பொதுத்தேர்தல் வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரவிருக்கும் இவ்வேளை தற்போதைய அதிபர் ஜோன் ஹாவார்ட் சந்திக்கும் முக்கிய சவால்களில் ஒன்றாக, தீவிரவாதத்தில் அமெரிக்க அணிசார் நிலைப்பாடு விளங்குகின்றது. தொழிற்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருக்கும் கெவின் ரட் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக, மத்திய கிழக்கில் நிலைகொள்ளும் துருப்புக்கள் விலகவேண்டும் என்பதில் கடும் நிலைப்பாட்டோடு இருக்கின்றார். இந்த இருவரும் சந்திக்கும் ஊடக விவாதத்தில் இது குறித்த கருத்துப் பரிமாறல்களை வழங்கிய காணொளித் துண்டைத் தருகின்றேன்.

காணொளி உதவி: Salvatoe
கார்ட்டூன்: cartoonaustralia.com
posted by கானா பிரபா 3:13 AM   0 comments
 
0 Comments:
Post a Comment
<< HOME
 
Tuesday, October 23, 2007
பாராளுமன்றத்து ஜல்லிக்கட்டு
உலகின் எல்லா நாட்டுப் பாராளுமன்றத்து உறுப்பினர்களுமே ஒரே தகைமையோடு உலாவருவது குறித்துப் பெருமிதமாக இருக்கின்றது.
சாம்பிளுக்குச் சில:
சிறீலங்கா (சும்மா சொல்லக்கூடாது சிறீலங்கன் சிறீலங்கன் தான் ;)


செச்னியா


ரஷ்யா


தாய்வான்
posted by கானா பிரபா 4:59 AM   0 comments
 
0 Comments:
Post a Comment
<< HOME
 
Monday, October 22, 2007
மாடப்புறாவே வா..! (மலையாள வடிவம்)
"மாடப்புறாவே வா..ஒரு தூது செல்வோம் வா"
ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாட்டு இது. தேவராஜன் மாஸ்டர் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடி "பருவ மழை" திரைக்காக வெளிவந்தது.
அதன் மூல வடிவம் மலையாளத்தில் "மதனோற்சவம்" திரையில் வந்திருந்தது. அப்பாடல் காட்சியை இங்கே தருகின்றேன்.
Youtube உரிமை: தீபக்மோகன்

posted by கானா பிரபா 5:00 AM   3 comments
 
3 Comments:
 • At November 18, 2007 at 5:35 AM, Anonymous Anonymous said…

  When I heard it first in Tamil I could not understand what bra had to do with the song. Then I realised that KJY has pronounced Pura as something closer to sounding bra.

   

 • At November 18, 2007 at 2:17 PM, Blogger G.Ragavan said…

  அனானி சொன்னதப் படிச்சி விழுந்து விழுந்து சிரிச்சேன். உண்மைதான் ஏசுதாஸ் உச்சரிப்பு மொதல்ல மோசமாத்தான் இருந்துச்சு. தெருக்கோயிலே ஓடிவா ரொம்பப் பிரபலமாச்சே. தண்ணீரில் மூல்காது காற்றுல்ல பந்து. ஆனா அப்புறம் நல்லா உச்சரிச்சாரு.

   

 • At November 18, 2007 at 9:23 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க அநாமோதய நண்பர் மற்றும் ராகவன்

  ஜேசுதாஸ் தமிழை மொன்று துப்பிய காலத்தில் வைரமுத்துவும் விசனப்பட்டு கருத்து தெரிவித்ததாக வைரமுத்துவின் பேட்டி ஒன்றில் படித்திருந்தேன்.

  மாடப்பிறாவே வா என்று தான் தமிழிலும் பாடிருப்பார் ;-)

   

Post a Comment
<< HOME
 
Saturday, October 20, 2007
காதல் வைத்து காதல் வைத்துக் காத்திருந்தேன்.....!
இன்றைக்கு இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே தெரியாது. காரில் போகும் போதும் வீட்டுக் கணினியிலும் "காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்" மயம் தான். இப்போதெல்லாம் இளையராஜாவின் இசையில் வரும் பாடல்கள் பழைய தெம்பில் வருவதில்லையே என்ற ஏக்கம் அதிகப்படியாக வருவதில்லை. காரணம், யுவன் அந்த இடத்துக்குத் தற்காலிகமாக வந்துவிட்டார்.

தீபாவளி படத்தில் இடம்பெற்ற, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் இந்தப் பாடலின் ஒளிப்பகிர்வைப் பாருங்கள். காட்சியமைப்பையும் எழிலாக அமைத்திருக்கின்றார் இயக்குனர் எழில். ஸ்பெஷல் போனஸ் நம்ம தலைவி பாவனாவே தோன்றிருப்பது ;-) (youtube பாடல் உதவி:geethams)

Youtube மேற்கண்ட பாடலைத் தேடும் போது தன்னிச்சையாக வந்து விழுந்தது இன்னொரு பொக்கிஷம். சிங்கப்பூர் வசந்தம் சென்றல் தொலைக்காட்சியின் பாடகர் தேர்வு நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்காக வந்திருந்த நான்கு பாடகர்கள், "காதல் வைத்து காதல் வைத்துக் காத்திருந்தேன்" பாடலைப் பாடும் தொகுப்பைப் பாருங்கள். அருமையிலும் அருமை (youtube பாடல் உதவி:Haresh)
posted by கானா பிரபா 5:31 AM   10 comments
 
10 Comments:
 • At October 20, 2007 at 10:04 AM, Anonymous Anonymous said…

  பிரபா அருமையான தேர்வு.இன்றைய இளைஞர்களைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது.எவ்வளவு அழகாக இருக்கிறாங்கள்!நாங்கள் அங்கே பனங்கொட்டை சூப்பியபடி கிளித்தட்டு விளையாடியதுதான் மிச்சம்.சங்கீத அறிவு மருந்துக்கும் கிடையாது.ஆனால்,பாடல்களை இரசிகத் தெரிந்திருக்கிறது.இதற்காக நம்மட தேவாரங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.

   

 • At October 20, 2007 at 3:17 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் நண்பரே

  இந்தப் பாடலை வெறுமனே ஒப்புக்குக் குரல்வளத்தில் மட்டும் நிரூபிக்காமல் மிகவும் ரசித்துப் பாடியிருப்பது தான் மிகச் சிறப்பு.
  சில மேடைகளில் பசையால் மேடையில் ஒட்டிவைத்து நிற்பது போல் நின்றுகொண்டே பாடுவது கொடுமை.

  (கொண்டோடி இதுக்கும் கண்டனம் சொல்ல வருவாரோ
  தெரியேல்லை ;-)

   

 • At October 20, 2007 at 4:46 PM, Blogger CVR said…

  very nice song! :-)

   

 • At October 20, 2007 at 7:48 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க சீவிஆர்,

  வார இறுதி முழுசும் கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க ;)

   

 • At October 20, 2007 at 9:19 PM, Blogger தம்பி said…

  அண்ணே அது நம்ம ஆளுன்னே!

   

 • At October 21, 2007 at 12:12 AM, Blogger கானா பிரபா said…

  வாங்க தம்பி

  சரி சரி உங்களுக்கும் நம்ம சங்கத்துல கெளரவமான பதவி கொடுத்திடறேன் ;-)

   

 • At October 21, 2007 at 1:36 AM, Blogger மலைநாடான் said…

  காதல் நிரம்பப் பெருகுதோ..? :). ம் பாடல் நல்லாத்தான் இருக்கு..

   

 • At October 21, 2007 at 2:28 AM, Blogger கானா பிரபா said…

  வாங்கோண்ணா

  காதலுக்கு வயசேது? கட்டையில போகும் வரைக்கும் தானே ;-)

   

 • At October 22, 2007 at 5:50 AM, Blogger வி. ஜெ. சந்திரன் said…

  //காதலுக்கு வயசேது? கட்டையில போகும் வரைக்கும் தானே//

  :) இப்ப தான் உண்மைய ஒத்துகொண்டிருக்கிறியள்

   

 • At October 22, 2007 at 5:52 AM, Blogger கானா பிரபா said…

  ஆஹா, கிண்டர் கார்டனால வந்திட்டியளே? இண்டைக்கு ரீச்சர் என்ன பாட்டு சொல்லித்தந்தவ? ;-)

   

Post a Comment
<< HOME
 
Friday, October 19, 2007
ஸ்ரீ வித்யா நினைவில்: பூங்காவியம் பேசும் ஓவியம்!
தமிழ் மலையாள மொழிகளில் தன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய நடிகை, பாடகி ஸ்ரீ வித்யாவைக் கான்சர் தின்று இன்றோடு ஒரு வருட நினைவில் "கற்பூர முல்லை" திரையில் இருந்து "பூங்காவியம்...பேசும் ஓவியம் என்ற பாடலைத் தருகின்றேன்.

பாசில் "எண்ட சூர்ய புத்ரிக்கு" என்று மலையாளத்தில் முதலில் இயக்கிப் பின்னர் இசைஞானி இளையராஜா தயாரிப்பில் தமிழில் ஸ்ரீ வித்யா, அமலா, ராஜா நடித்து வெளிவந்த திரைப்படமே "கற்பூர முல்லை". பெரும் புகழ்பெற்ற பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளாகப் பிறந்து, திரையுகம் புகுந்து வாழ்க்கைச் சுழலில் சிக்கிப் பின் திரைமறைவிலேயே மரணத்தின் பிடியில் அகப்பட்ட இந்த நடிகைக்கு இப்பாடல் சமர்ப்பணம்.

posted by கானா பிரபா 3:47 AM   7 comments
 
7 Comments:
 • At October 19, 2007 at 10:16 PM, Blogger பனிமலர் said…

  நன்றி கானா

   

 • At October 19, 2007 at 10:19 PM, Blogger கானா பிரபா said…

  வருகைக்கு நன்றி பனிமலர்

  உங்க பதிவு தான் நினைப்பூட்டியது. அதற்கும் நன்றி

   

 • At October 19, 2007 at 11:15 PM, Blogger கோபிநாத் said…

  நன்றி தல ;-)

  ஸ்ரீ வித்யா
  நேற்று தான் பிவித்திரம் பார்த்தேன் (மோகன்லால், ஸ்ரீ வித்யா, ஷோபானா) அருமையான நடிகை, அம்மா காதபாத்திரங்களுக்கு கணகச்சிதமாக பொருந்த கூடிய நடிகை.

  பாடல்
  ராஜாவின் தாலாட்டுகளில் இந்த பூங்காவியம் முக்கிய இடம் உண்டு. இந்த படம் ராஜாவின் தயாரிப்பு என்பது இப்போது தான் தெரியும்.

   

 • At October 20, 2007 at 1:29 AM, Blogger G.Ragavan said…

  அருமையான பாடல். ஸ்ரீவித்யாவிற்குத் தமிழில் மிகமிக அருமையான பாடல்கள் கிடைத்துள்ளன. தேசியவிருது பாடலில் கூட நடித்துள்ளாரே. ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம். கங்கை யமுனை என்று நடிகர் திலகத்தோடு ஆடியதாகட்டும்....தகதகவென ஆடவா என்று கே.பி.எஸ் பாட்டுக்கு சிவகுமாரோடு தாண்டவமாடியதாகட்டும்...பூங்காவியம் பாட்டில் "யார் மகள் இப்பூமகள்" என்று உருகியதாகட்டும். நிறைய நல்ல பாட்டுகள் ஸ்ரீவித்யாவிற்குக் கிடைத்தேயிருக்கின்றன.

  அவருடைய நினைவுநாளில் பாடலை நினைவு கூர்ந்தமை சிறப்பு.

   

 • At October 20, 2007 at 3:35 AM, Blogger தாசன் said…

  ஒரு வானொலி கலைஞன் என்பதை நிருபித்து வருகின்றிர்கள் அண்ணா :). வாழ்த்துக்கள்

   

 • At October 20, 2007 at 3:49 AM, Blogger கானா பிரபா said…

  //கோபிநாத் said...
  நன்றி தல ;-)

  ஸ்ரீ வித்யா
  நேற்று தான் பவித்திரம் பார்த்தேன் (மோகன்லால், ஸ்ரீ வித்யா, ஷோபானா) அருமையான நடிகை, அம்மா காதபாத்திரங்களுக்கு கணகச்சிதமாக பொருந்த கூடிய நடிகை. //
  // இந்த படம் ராஜாவின் தயாரிப்பு என்பது இப்போது தான் தெரியும்.//

  வாங்க தல

  பவித்ரம், படமா அது காவியமல்லவா? விரிவாக அப்படத்தைப் பற்றிச் சொல்லவிருக்கின்றேன்.

  கற்பூரமுல்லை படத்தில் டைட்டிலில் இளையராஜாவின் தயாரிப்பு என்று வந்தபோது நானும் பிரமித்துப் போனேன்.

   

 • At October 20, 2007 at 6:25 AM, Blogger கானா பிரபா said…

  //G.Ragavan said...
  அருமையான பாடல். ஸ்ரீவித்யாவிற்குத் தமிழில் மிகமிக அருமையான பாடல்கள் கிடைத்துள்ளன. //

  வாங்க ராகவன்

  அருமையான அந்தப் பாடல்களைச் சுட்டியமைக்கு மிக்க நன்றி

  //தாசன் said...
  ஒரு வானொலி கலைஞன் என்பதை நிருபித்து வருகின்றிர்கள் அண்ணா :). வாழ்த்துக்கள்//

  வாங்கோ தாசன்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
  நான் ஒளியில் தானே பாட்டுப் போட்டிருக்கிறேன் ;-)

   

Post a Comment
<< HOME
 
Thursday, October 18, 2007
தெலுங்கு இளையராஜா vs ஹிந்தி ஆனந்த் மிலிந்த்
முன்னர் றேடியோஸ்பதியில் தந்த பதிவில் ஒலியாகக் கேட்ட பாடல்களை இங்கே காட்சியோடு கானம் கலந்து தருகின்றேன். இப்பாடல்களை ஒலிவடிவில் மட்டும் கேட்க

80 களின் இறுதியில் தெலுங்கு தேசத்திலிருந்து ஏராளமான படங்கள் தமிழில் வெளியாகி நன்றாக ஓடி திருட்டு வீ.சி.டிக்கு நிகராக தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களுக்குத் தலைவலி தந்த காலமது.

விஜயசாந்தியின் "பூவொன்று புயலானது", டாக்டர் ராஜசேகரின் "இதுதாண்டா போலீஸ்", நாகர்ஜூனாவின் " உதயம்", "இதயத்தைத் திருடாதே" என்று தொடர்ந்து
"எங்கடா உங்க எம்.எல்.ஏ", "ஆம்பள", "சத்தியமா நான் காவல்காரன்" என்று தமிழ் ரசிகர்களின் பொறுமைக்குச் சோதனை கொடுத்தது வேறு கதை. ஒன்றில் அதி தீவிர சண்டைக் காட்சிகள், அல்லது இளையராஜாவின் இசை இவை தான் இந்த மொழிமாற்றுப் படங்களின் வெற்றியை அப்போது தீர்மானித்தன.

அந்தவகையில் தமிழ் பேசக்கூடிய தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் ரேவதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்த, வெங்கடேஷின் அப்பா ராமா நாயுடுவே முதலீடு போட்ட தெலுங்கு திரைப்படமான "பிரேமா" இளையராஜாவின் இசையில் முத்திரை பதித்தது. பின்னர் அது தமிழில் "அன்புச் சின்னம்" என்று மொழிமாற்றப்பட்டும் ஹிந்தியில் "Love" என்று மீள சல்மான் கான், ரேவதி ஜோடியோடு எடுக்கப்பட்டும் வெளியாகின. தமிழ், தெலுங்குக்கு ராஜாவின் இசையே இருந்தது. தெலுங்கில் எஸ்.பி.பி ஐ வைத்து அழகான பாடல்கள் இருக்கும். அதில் "ஈ நாடே" என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. சித்ராவும் பாலுவும் பாடிய சிறந்த ஜோடிப்பாடல்களில் இதையும் அடித்துச் சொல்லலாம். இந்தப் பாடலைக் காண தமிழில் வந்த பாட்டு ஹிந்தியில் "Love" என்ற பெயரில் வெளியான போது அந்தப்படத்திற்கு இசை ஆனந்த் மிலிந்த். ஆனால் அவருக்குக் கை கொடுத்ததென்னவோ இளையராஜாவே தான். தெலுங்கில் "ஈ நாடே", தமிழில் "ஆத்தாடி ஏதோ ஆசைகள்" இந்த இரண்டு பாட்டின் மெட்டினையும், இசையில் சில சங்கதிகளையும் எடுத்து எஸ்.பி.பி, சித்ரா கூட்டோடு ஒரு மாதிரி ஒப்பேற்றிவிட்டார். ஹிந்தித் தழுவலும் இனிமையாகத் தான் இருக்கின்றது.

posted by கானா பிரபா 5:31 AM   3 comments
 
3 Comments:
Post a Comment
<< HOME
 
Tuesday, October 16, 2007
ஆகாயப் பந்தலிலே SG A380 பறக்குதம்மா
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய சேவையான ஏர்பஸ் A380 இன் வெள்ளோட்டம் காணுங்கள். இது உலகின் மிகப்பெரியதொரு பயணிகள் விமானமாக, சொகுசு கட்டிலில் படுத்துறங்கவும், களியாட்டத்தோடு வானில் பறக்கவும் வருகின்றது. உலகின் முதல் பயணிகள் சேவையாக A380 ஏர்பஸ் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி தன் சேவையை ஆரம்பிக்கின்றது இது.

காணொளி உதவி: SingaporeAirlinesSIN

Singapore Airlines CEO Chew Choon Seng takes the CEOs of Airbus and Rolls Royce on a tour of its first Airbus A380


Singapore Airlines A380 Product Video
posted by கானா பிரபா 5:22 AM   6 comments
 
6 Comments:
 • At October 16, 2007 at 5:36 AM, Blogger வவ்வால் said…

  கானா,
  நல்லப்பதிவு,
  இந்தியா கூட அந்த விமானத்திற்கு ஆர்டர் தந்துள்ளது, ஆனால் நமக்கு வர 2 வருடங்கள் ஆகும், இந்தியாவில் , சென்னை, மும்பை விமான ஓடுபாதைகள் தான் இந்த பெரிய விமானத்திற்கு ஏற்றதாக உள்ளதாம் ,மற்ற விமான நிலையங்களின் ஓடு பாதை நீளம் போதாது. மேலும் தனி ஏறி இறங்கும் பாதை கட்ட வேண்டி இருக்கும், அதெல்லாம் முடிந்தால் தான் வரும்.

   

 • At October 16, 2007 at 6:06 AM, Blogger கானா பிரபா said…

  வாங்க நண்பரே

  சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்த விமானத்தில் பறக்க இப்பவே மனம் பரபரக்குது ;-)

  கர்னாடகாவிலும் (தேவனஹள்ளி) புது ஏர்போர்ட் வருதே, அது இடங்கொடுக்கலாம் இல்லையா?

   

 • At October 17, 2007 at 12:08 AM, Blogger வடுவூர் குமார் said…

  நேற்று முழுவதும் உங்கள் பக்கத்தை திறக்க முடியவில்லை.
  இன்று மாலை 6.30 மணிக்கு சிங்கை முனையம் 3 யில் தரை இறங்க இருக்கிறது.

   

 • At October 17, 2007 at 2:57 AM, Blogger கானா பிரபா said…

  என் பதிவு வரவில்லையா?

  என்ன கொடுமை குமார் சார் :(

   

 • At October 17, 2007 at 3:34 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

  பிரபா!
  அங்க நல்லாத்தான் பறக்குது; இங்கேயும் இதன் தாய் நிறுவனத்தில் மகா ஊழல் என பாராளுமன்றத்தில் சூடு பறக்குது

   

 • At October 17, 2007 at 3:28 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் யோகன் அண்ணா

  இந்தச் சாதனைக்குப் பின் இப்படியொரு சோதனையும் இருக்குதா?

   

Post a Comment
<< HOME
 
Saturday, October 13, 2007
இளையராஜா ஆர்மோனியம் இசைத்த பாட்டு
இளையராஜா தெலுங்கில் இசைமைத்த, மணிரத்னம் இயக்கத்தில் வந்த படம் கீதாஞ்சலி, இது தமிழில் இதயத்தைத் திருடாதே என்று வந்தது. "அதில் சித்ரா பாடும் "ஜல்லண்ட" என்ற பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.இதே திரைப்படத்தில் வந்த "ஓ ப்ரியா ப்ரியா" தெலுங்கு வடிவம். பாட்டும் அழகு, காட்சியும் அழகு. தெலுங்கில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களைத் தமிழ் வடிவத்தில் மனோ பாடியிருப்பார்.ஓ பாப்பா லாலி
posted by கானா பிரபா 9:22 PM   6 comments
 
6 Comments:
 • At October 14, 2007 at 2:04 AM, Blogger வடுவூர் குமார் said…

  விஜயவாடாவில் இந்த படத்தை பார்த்தேன்,பிச்சிகிட்டு ஓடியது அப்போ!
  பாடலகள் எல்லாம் அருமையாக படத்துடன் பிணைந்திருக்கும்.

   

 • At October 14, 2007 at 5:11 AM, Blogger கானா பிரபா said…

  வாங்க வடுவூர் குமார்

  ஆந்திர அரசின் நந்தி விருதை வாங்கிக் குவித்த படமல்லவா.

  ராஜாவின் பாடல்களில் இந்தப் படமும் ஒரு மைல்கல்.

   

 • At October 14, 2007 at 2:19 PM, Blogger கோபிநாத் said…

  தல அங்கே கேள்வி இங்கே பதிலா...கலக்கல் ;))

   

 • At October 14, 2007 at 6:53 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க தல

  எனக்கு இதயத்தைத் திருடாதே படத்தில் மனோ பாடியதை விட, தெலுங்கில் எஸ்.பி.பி பாடியதுதான் இன்னும் பிடிக்கும். அதையும் சேர்த்துக் கொடுத்திருக்கின்றேன்.

   

 • At October 14, 2007 at 8:39 PM, Blogger வசந்தன் said…

  அண்ணை,
  உதில முதற்பாட்டில 'காவாலியே' எண்டு ஒரு சொல் வருது.
  உதுக்கு என்ன அர்த்தம் எண்டு ஒருக்கா கேட்டுச் சொல்லுவியளே?

   

 • At October 14, 2007 at 9:46 PM, Blogger கானா பிரபா said…

  காவாலி எண்டால் தேவை/வேண்டும் என்று அர்த்தம். என்னை முழுநேர மொழிபெயர்ப்பாளர் ஆக்கிற பிளானே ராசா?

   

Post a Comment
<< HOME
 
Friday, October 12, 2007
ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேட்குது...!
ஒரு நல்ல பாட்டை எப்படியெல்லாம் காட்சியில் எடுத்துக் கெடுக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடலை இங்கு தருகின்றேன். கிராமத்து அத்தியாயம் திரையில் இருந்து கங்கை அமரன் வரிகளில், மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் "ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது" என்ற இனிய பாடல் எப்படிச் சுரத்தே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பாருங்கள். இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலப் பாடல்களை உரியமுறையில் காட்சிப்படுத்தலில் கொண்டுவராமல் சதி செய்த இப்படியான இயக்குனர்கள் பலர் இருக்கின்றார்கள். நாயகனும் சரி நாயகியும் சரி ஒரு ஜீவனும் இல்லாமல் வந்து போகிறார்கள். இவர்களை இளையராஜா ஆண்டவர் மன்னிப்பாராக.

எலோ டைரக்டரு ! தமிழ் நாட்டுல இதை விட நல்ல ஒரு ஆத்துமேடும் உம்ம கண்ணில் படலியா?

posted by கானா பிரபா 7:37 PM   22 comments
 
22 Comments:
 • At October 12, 2007 at 7:51 PM, Blogger வி. ஜெ. சந்திரன் said…

  சுரத்தாவரணும் எண்டா என்ன செய்யவேணும் உவை ?

   

 • At October 12, 2007 at 8:25 PM, Blogger கானா பிரபா said…

  கானா பிரபா said...
  அண்ணை

  பாட்டை வடிவாப் பாத்தியளெண்டா விளங்கும். என்னட்டை கேளாதேங்கோ, சொல்ல மாட்டன்.

   

 • At October 12, 2007 at 8:49 PM, Blogger தஞ்சாவூரான் said…

  இந்த பாட்டை ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால், காட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்.... கொடுமைதான்!

   

 • At October 12, 2007 at 8:52 PM, Blogger கொண்டோடி said…

  முதற்கேள்வி: ஆத்துமேடு எண்டு எதைச்சொல்லிறியள்?
  'நல்ல ஆத்துமேட்டைத்தான்' காட்ட வேணுமெண்டால், இதயமெண்ட சொல்லுக்கு துடிக்கிற இதயத்தைக்காட்டிற ரி.ராஜேந்தரை ஏன் நக்கலடிக்க வேணும்?
  ரெண்டாவது கேள்வி: சந்திரன் கேட்டதுதான். (எனக்கெண்டா இதுதான் சரியான சுரத்துப் போல கிடக்கு. நாயகன் பெரும்பாலான நேரங்களில பல்லைக்காட்டிக் கொண்டிருக்கிற மாதிரித்தான் எங்கட பெடியள் பெட்டையளைக் கண்டால் நிப்பாங்கள் எண்டு நினைக்கிறன்.)

   

 • At October 12, 2007 at 8:59 PM, Blogger கானா பிரபா said…

  கொண்டோடி அண்ணை

  இதை விட இன்னும் எழிலான ஆற்றுப்படுக்கை, களனி எல்லாம் இலவச லொகேஷனாக தமிழகம் முழுதும் விரவியிருக்கின்றது. அதில் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பதே என் உள்ளக் கிடக்கை. மற்றப்படி ராஜேந்தர் மாதிரி முழு இதயத்தை செட்டில் வைத்துப் படம் எடுப்பது போல அவ்வளவு நெருக்கமாகவும் வரத்தேவையில்லை. உங்கட கதையைப் பார்த்தால் "உன் மூச்சுக் காற்று நான்" எண்ட வரி வந்தால் ஆளைச் சாகடிக்கோணுமோ எண்டு கேட்பியள் போல.

  சுரத்து என்ற விசயத்தைக் கவனிப்போம்.
  இப்பாடலின் துள்ளும் மெட்டுக்கும், இசைக்கும் அவர்கள் பிடிக்கும் அபிநயதை நன்றாகக் கவனித்துப் பார்த்தால் புரியும். எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத அபிநயங்கள்.

  இவ்வளவும் போதும் எண்டு நினைக்கிறன்.

   

 • At October 12, 2007 at 9:33 PM, Blogger கானா பிரபா said…

  //தஞ்சாவூரான் said...
  இந்த பாட்டை ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால், காட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்.... கொடுமைதான்!//

  வாங்க தஞ்சாவூரான்

  உங்க ஊர்லயே நிறைய இடம் இருக்கில்லையா. இந்தப் பாடலில் எனக்கிருக்கும் அளவுகடந்த அபிமானம் தான் இந்த ஆதங்கத்துக்கு காரணம்.

   

 • At October 12, 2007 at 9:55 PM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said…

  என்ன கொடுமை பிரபா இது!

  பாடலை ஏற்கனவே கேட்டிருந்தாலும் இன்னைக்குதான் அதன் காட்சியை பார்க்கிறேன். இயக்குனருக்கு ஒரு :-(

   

 • At October 13, 2007 at 1:57 AM, Blogger கானா பிரபா said…

  //.:: மை ஃபிரண்ட் ::. said...
  என்ன கொடுமை பிரபா இது!//

  இது கொலக்கொடுமை மை பிரண்ட்
  ;-)

   

 • At October 13, 2007 at 3:01 AM, Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said…

  கானா தம்பி.. என் வாழ்க்கைல முதல் முறையா இப்பத்தான் இந்தக் கொடுமையை பார்க்குறேன்..

  ஆனாலும் இது மட்டுமில்லே.. ஆரம்பக் கால விஜயகாந்த் படங்கள், கார்த்திக் படங்களிலெல்லாம் பார்த்தீர்களானால் அவைகளும் இந்த லட்சணத்தில்தான் எடுத்திருப்பார்கள்.

  அது வேறு காலம் பிரபா.. அப்போது சினிமா வெறும் பொழுது போக்கு மட்டுமே.. சர்க்கஸ் மாதிரி.. அப்போது அழகுணர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம் என்பதெல்லாம் தேவையே இல்லாமல் இருந்தது. அதனால்தான் இப்படி ஒரு கொடுமையும் நடந்துள்ளது..

  சுட்டிக்கும், தகவலுக்கும் நன்றி பிரபா..

   

 • At October 13, 2007 at 3:13 AM, Blogger கானா பிரபா said…

  வாங்கோண்ணா அட வாங்கோண்ணா ;-))

  அந்தக் காலத்திலும் அழகுணர்ச்சியோடு பாடல்கள் எடுத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாரதிராஜா (வெள்ளுடைத் தேவதைகள் தவிர்த்து), மகேந்திரன், பாலுமகேந்திரா என்று பட்டியல் நீளும். என்ன செய்வது பிளாக்கில் தான் மொக்கை என்றால், இங்கே பாடலிலும் மொக்கை போடுகிறார்கள்.

  சோளக் கொல்லை பொம்மைக்கு வேட்டி சுத்தினமாதிரி நம்ம கதாநாயகன்
  வேற ;-))

   

 • At October 13, 2007 at 3:38 AM, Blogger G.Ragavan said…

  பிரபா மிகவும் அருமையான பாட்டு. உங்கள் கருத்தோடு பாதிதான் ஒத்துப் போகிறேன். என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு முன் ஒரு டிஸ்கி. இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பாடியவர்கள், இசை எல்லாமே மிகமிக அருமை. சரி. இப்பொழுது கருத்துக்குப் போவோம்.

  1. என்னைக் கேட்டால் பாடற்காட்சி மிகமிக இயல்பாகவும்..இசை பலபடிகள் இயல்பிற்கும் மேலாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. தமிழர்களில் நூற்றுக்கு 99 பேர் இப்பிடித்தான் ஆடுவார்கள். இப்படித்தான் சிரிப்பார்கள். இப்படித்தான் முழிப்பார்கள். ஆகையால்தான் பாடற்காட்சியும் இசையும் பொருந்தி வரவில்லை. இதை மிகத் திறமையாகக் கையாண்டவர் மகேந்திரன். யாரும் பாட மாட்டார்கள். பாடற்காட்சி போய்க்கொண்டேயிருக்க பின்னணியில் பாடல் ஒலிக்கும். நித்தம் நித்தம் நெல்லிச்சோறு விதிவிலக்கு. அதுவும் மெல்லிசை இசைக்கோர்வையோடு. இந்தப் பாடல் அளவிற்கு அதீத இனிமையான இசைக்கோர்வை இருக்காது. இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது.

  2. மிகமிக இனிமையான இந்தப் பாடலை மிக அழகாகவும் படமாக்கியிருக்கலாம். பலர் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் செய்திருக்கலாம். அதில் மாற்றுக்கருத்தில்லை.

   

 • At October 13, 2007 at 3:44 AM, Blogger கானா பிரபா said…

  வாங்க ராகவன்

  //என்னைக் கேட்டால் பாடற்காட்சி மிகமிக இயல்பாகவும்..இசை பலபடிகள் இயல்பிற்கும் மேலாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. //

  ராஜாவைக் குறை சொன்னதை மன்னிக்கிறேன் ;-)

  இசையமைத்த பாட்டைத் தானே காட்சிப்படுத்தினார்கள்? எனவே ஒன்றுக்கு நாலு முறை யோசித்திருக்கலாம். குறிப்பா லொகேஷனிலும், மெதுவாக அபிநயம் பிடிக்கும் பாங்கையும், காமிரா கோணத்தையும் சிரத்தையோடு பார்த்திருக்கலாம்.

  சரி படம் வந்து 27 வருசமாச்சு விட்டுடுவோம் ;-)

   

 • At October 13, 2007 at 7:37 AM, Blogger G.Ragavan said…

  // வாங்க ராகவன்

  ராஜாவைக் குறை சொன்னதை மன்னிக்கிறேன் ;-) //

  ஆகா...பிரபா, நான் எப்போ ராஜாவைக் குறை சொன்னேன்? அந்தப் பின்னூட்டத்துல தவறு எங்க நேர்ந்திருக்குன்னு எனக்குத் தோணியதைத் தெளிவாச் சொல்லீருக்கேனே.

  ===============================
  இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது.
  ===============================

  நானும் இயக்குனர் மேலதான தவறைச் சொல்லியிருக்கிறேன். :)

   

 • At October 13, 2007 at 8:32 AM, Blogger ramachandranusha(உஷா) said…

  பிரபா. நல்லாதானே இருக்கு, ரெண்டு பேரும் இயற்கையாய் நடிச்சிருக்காங்க. உங்களுக்கு எல்லாம் சிவாஜி மன்னிச்சிக்குங்க ரஜினி, ஸ்ரேயா குதிச்சாதான் திருப்தி படும் :-)

   

 • At October 13, 2007 at 12:03 PM, Blogger SurveySan said…

  தலைவரே,நல்லாதான் இருக்கு.
  அந்த காலகட்டத்துக்கு ஏத்த போல இருக்கு.

  என்ன, ஹீரோவும் ஹீரோயினும் டொக்கா இருக்காங்க; கமலும் ஸ்ரீதேவியும் ஆடியிருந்தா ப்ரமாதமாயிருக்கும் ;)

  உங்க டெம்ப்ளேட் அம்புட்டு நல்லால்ல, வீடியோத் தளம் என்பதற்க்கு ஏத்தமாதிரி ஏதாவது நச்சுனு செய்யலாம்.

   

 • At October 13, 2007 at 12:22 PM, Blogger கோபிநாத் said…

  \\தஞ்சாவூரான் said...
  இந்த பாட்டை ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால், காட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்.... கொடுமைதான்!\\

  ஆஹா...நான் மட்டும் தான்னு நினைச்சேன் ஒரு கூட்டமா தான் இருக்கோம் போல இருக்கு..;))))

  தல இதே போல ஒரு விஜயகாந்த் பாட்டு இருக்கு....;))

   

 • At October 13, 2007 at 3:15 PM, Blogger கானா பிரபா said…

  //G.Ragavan said...
  // வாங்க ராகவன்

  ஆகா...பிரபா, நான் எப்போ ராஜாவைக் குறை சொன்னேன்? அந்தப் பின்னூட்டத்துல தவறு எங்க நேர்ந்திருக்குன்னு எனக்குத் தோணியதைத் தெளிவாச் சொல்லீருக்கேனே.//

  மன்னிக்கணும் ராகவன், ஒத்துக்கிறேன் ;-)


  //ramachandranusha(உஷா) said...
  பிரபா. நல்லாதானே இருக்கு, ரெண்டு பேரும் இயற்கையாய் நடிச்சிருக்காங்க. உங்களுக்கு எல்லாம் சிவாஜி மன்னிச்சிக்குங்க ரஜினி, ஸ்ரேயா குதிச்சாதான் திருப்தி
  படும் :-)//

  என்ன உஷாக்கா, இப்பிடி சொல்லீட்டீங்க ;-),

   

 • At October 13, 2007 at 3:19 PM, Blogger கானா பிரபா said…

  //SurveySan said...
  உங்க டெம்ப்ளேட் அம்புட்டு நல்லால்ல, வீடியோத் தளம் என்பதற்க்கு ஏத்தமாதிரி ஏதாவது நச்சுனு செய்யலாம்.//

  சர்வேசரே

  அப்பிடியும் இருக்கலாம் இல்லையா. சரி வீடியோஸ்பதியில் இன்னும் வேறு விஷயங்களும் வரும்.

  //கோபிநாத் said...
  ஆஹா...நான் மட்டும் தான்னு நினைச்சேன் ஒரு கூட்டமா தான் இருக்கோம் போல இருக்கு..;))))//

  வாங்க கொ.ப.செ ;-))

   

 • At October 13, 2007 at 4:45 PM, Blogger செல்லி said…

  எனக்குப் பிடிச்ச பாடல்களில இதுவும் ஒன்று. காட்சியை இப்பதான் பாக்கிறேன்.
  நன்றி, பிரபா

   

 • At October 14, 2007 at 5:10 AM, Blogger கானா பிரபா said…

  வருகைக்கு நன்றி செல்லியக்கா

   

 • At October 14, 2007 at 7:05 AM, Blogger கொண்டோடி said…

  //உங்கட கதையைப் பார்த்தால் "உன் மூச்சுக் காற்று நான்" எண்ட வரி வந்தால் ஆளைச் சாகடிக்கோணுமோ எண்டு கேட்பியள் போல.//

  ஐயா பிரபா,
  பிளேட்டை மாத்திப் போடுறியள் பாருங்கோ. உப்பிடிக் கேக்கக்கூடிய கட்சி உங்கட.. அதைத்தான் நான் கேள்வி கேட்டிருக்கிறன். நீங்கள் மாறி என்னையே திருப்பிக் கேக்கிறியள்.

  சரி, அதை விடுங்கோ..
  இஞ்ச ராகவனும் உஷா அக்காவும் சொன்னதோட கிட்டத்தட்ட ஒத்துப்போறன்.
  இந்தப்படத்தின்ர கதையென்ன, அது எப்பிடி எடுக்கப்பட்டது எண்டது எனக்குத் தெரியாது. ஆனால் நாயக, நாயகி முகங்களும் சரி, பாடற்காட்சியும் சரி மிக இயல்பாயிருக்கு எண்டதை மட்டும் சொல்லிக்கொள்ளிறன்.

  உங்களுக்கெல்லாம் வடநாட்டுக்காரி ஆராவது வந்து ஆடினாத்தான் பிடிபடும்...
  ;-)

   

 • At October 14, 2007 at 7:09 AM, Blogger கானா பிரபா said…

  கொண்டோடி அண்ணை

  திரும்பவும் சொல்றன். வட நாட்டுக்காரி தேவையில்லை. கொடுத்த பாட்டை ஒழுங்காப் பயன்படுத்தியிருக்கலாம். இயல்பு என்பது ஆளைச் சாகடிக்கும் வரை இருக்கவேணும் எண்டு எதிர்பார்க்கவில்லை ;)

   

Post a Comment
<< HOME
 
Monday, October 8, 2007
மலையாளம் தரும் "காற்றுவெளியிடைக் கண்ணம்மா"
சில பாடல்களை ஒலிவழியாகக் கேட்டுக் கொண்டே கண்களை மூடிக்கொண்டே ஆனந்த சயனத்தில் இருந்தால் எங்கோ ஒரு காற்று வெளியிடை கொண்டு போகும் வல்லமை கொண்டிருக்கும். இங்கே நான் தரும் பாடலும் அவ்வாறானதொன்றே. ஆனால் பாடலின் இனிமை இம்மியளவும் பிசகாது காட்சிக்குள்ளும் அடங்கியிருப்பதனால் இவ் ஒளி வழிப்பாடலைப் பார்ப்பதிலும் இரட்டிப்பு சுகம்.

"காற்று வெளியிடை கண்ணம்மா" என்று சங்கீதம் சொல்லித் தரும் மோகன்லாலில் ஆரம்பித்து அழகாக விரியும் காட்சிகளை நீங்களும் பார்த்து ரசியுங்கள். இப்பாடல் தன்மத்ரா திரையில் இருந்து மோகன் சித்தாரா இசையில் ஷீலா மணி, விது பிரதாப், உன்னிகிருஷணன் பாடக் கேட்கலாம்.
பாடல் உதவி: யூரிப் வழி tmsfreebird
posted by கானா பிரபா 3:53 AM   9 comments
 
9 Comments:
 • At October 8, 2007 at 1:38 PM, Blogger G.Ragavan said…

  காற்றுவெளியிடைக் கண்ணம்மா....நின்றன் காதலை எண்ணிக் களிக்கிறேன்....காதலிக்கிறது களிப்பில்லையாம். அந்தக் காதலை எண்ணி எண்ணிப் பாக்குறது களிப்பாம். பாரதியாரு சொல்றாரு. கேட்டுக்கோங்க. :)

  நல்ல பாட்டு பிரபா. பாரதியின் மெட்டிலிருந்து விலகி போடப்பட்டிருக்கும் மெட்டும் காட்சியழகும் பரவசமூட்டுகின்றன.

   

 • At October 8, 2007 at 3:53 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் ராகவன்

  ஏனோ தெரியவில்லை, இப்பாடல் இன்னும் வசீகரித்துக் கொண்டே இருக்கின்றது.

   

 • At October 8, 2007 at 4:35 PM, Blogger குமரன் (Kumaran) said…

  பையன் பாட மட்டுமில்லை நன்கு ஆடவும் செய்கிறான். நல்ல பாடல் காட்சியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பிரபா.

   

 • At October 8, 2007 at 4:55 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் குமரன்

  அந்தப் பையனின் இயல்பான ஆட்டம் இன்னும் சிறப்பு

   

 • At October 9, 2007 at 5:24 PM, Blogger கோபிநாத் said…

  தல அருமையான பாடல் காட்சி ;)))

  இந்த படத்தில் இந்த பாடலுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. பாடத்தை பத்தி விமர்சனம் போடுங்களோன்..;)

   

 • At October 9, 2007 at 5:26 PM, Blogger கோபிநாத் said…

  தல இந்த படத்தில் இன்னொரு பாடலும் இருக்கு..மேலே வெள்ளி திங்கள்ன்னு நினைக்குறேன் அந்த பாடல் கிடைத்தால் போடுங்கள் ;)))

   

 • At October 9, 2007 at 8:38 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க தல

  தன்மத்ரா பற்றி விலாவாரியா ஒரு பதிவு போடணும். பிளெஸ்ஸியின் ஆஸ்தான இசை இயக்குனர் மோகன் சித்தாராவின் பாட்டுக்கள் பெரும்பாலும் நல்லாவே இருக்கு.

   

 • At October 9, 2007 at 9:44 PM, Blogger SurveySan said…

  //பாரதியின் மெட்டிலிருந்து விலகி போடப்பட்டிருக்கும் மெட்டும்//

  பாரதியார் மெட்டு எது? ஜெமினி பாடுவாரே அந்த மெட்டா?

   

 • At October 10, 2007 at 4:31 PM, Blogger கானா பிரபா said…

  சர்வேசரே

  ராகவன் "கப்பலோட்டிய தமிழன்" படத்தில் வரும் அப்பாடலைத் தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

   

Post a Comment
<< HOME
 
Wednesday, October 3, 2007
வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த "பாண்டிப்படை"


நீண்ட நாளைக்குப் பின்பு மனம் விட்டுப் படம் முடியும் வரைக்கும் சிரித்து, இன்னும் நினைத்துச் சிரிக்க வைத்த படமொன்றை நேற்றுப் பார்த்தேன். "பாண்டிப் படா" (பான்டிப் படை) என்ற அந்த மலையாளப் படத்தில் திலீப், பிரகாஷ் ராஜ், நவ்யா நாயர் என்று ஏகத்துக்கும் பிரபலங்கள் பங்கு போட்டு நடித்த படம்.

"கில்லி" படத்தில் பிரகாஷ் ராஜ் ஏற்றிருந்த முத்துப்பாண்டி என்ற வில்லன் பாத்திரத்தை இன்னொரு களத்தில் நகைச்சுவையாகப் பயன்படுத்தினால் எப்படியிருக்கும்? அது தான் இப்படத்தின் ஒரு வரிக் கரு. ஆனால் படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை காட்சிக்குக் காட்சி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துச் சேட்டன்கள் ஒரு வழி பண்ணிவிட்டார்கள்.

படத்தின் கதைக்களமே தமிழ்நாட்டின் "கருவேலக்காடு" என்ற ஒரு கிராமம் என்பதால் தமிழும் மலையாளமும் கலந்த கலவையாகத் தான் படம் முழுதுமே எடுக்கப்பட்டிருக்கின்றது.

"தென்காசிப் பட்டணம்" படத்தின் இயக்குனர் ரபி மெகர்தீன் இயக்கியிருக்கிறார். இசை சுரேஷ் பீட்டர்ஸ்.

இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளைப் பார்த்து அனுபவியுங்கள்.posted by கானா பிரபா 1:30 AM   9 comments
 
9 Comments:
 • At October 3, 2007 at 3:16 AM, Anonymous Anonymous said…

  Mr Prabha,
  Udhayanau tharam was directed by roshen andrwes. Screen play by srinvasan.

   

 • At October 3, 2007 at 4:00 AM, Blogger கானா பிரபா said…

  மிக்க நன்றி நண்பரே

  ஏதோ நினைவில் எழுதிவிட்டேன். இவர் இயக்கிப் புகழ்பெற்றது தென் காசிப்பட்டணம். திருத்திவிட்டேன்

   

 • At October 3, 2007 at 6:01 AM, Blogger கோபிநாத் said…

  தல பதிவே போட்டு கலக்கிட்டிங்க.... ;))))

   

 • At October 3, 2007 at 6:02 AM, Blogger கோபிநாத் said…

  தல பதிவே போட்டு கலக்கிட்டிங்க.... ;))))

   

 • At October 3, 2007 at 4:43 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க தல

  உங்களைப் போல ஆட்கள் மிஸ் பண்ணிடக்கூடாது என்பதற்காகத் தான் வீடியோ இணைப்பு கொடுத்திருக்கின்றேன்.

   

 • At October 3, 2007 at 5:12 PM, Anonymous Anonymous said…

  பன்ஞாபி ஹவுஸ் படத்தை ஞாபகம் படுத்திகிறது :D

   

 • At October 3, 2007 at 8:45 PM, Blogger கானா பிரபா said…

  பஞ்சாபி கவுஸ் கூட ரபி மெகர்தீன் கூட்டு இயக்கத்தில் வந்ததல்லவா, நம்ம் லிஸ்ட்டில் இருக்கு, பார்த்திடவேண்டியது தான்

   

 • At December 29, 2007 at 12:20 PM, Anonymous Anonymous said…

  வணக்கம். கானா. ஆருமையான வலைப்பதிவு. முதல் விடியொவில் 1.07 தொடக்கம் 1.13 வரையான நநத்தில் கலைஞாகள் இசைக்கும் இசை என்ன

   

 • At December 29, 2007 at 2:47 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் நண்பரே

  அந்தக் காட்சியில் உறுமி மேளமும் நாதஸ்வரமும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. கரகம் போன்றவை ஆடும்போது இவை பெருமளவு பயன்படுத்தப்படும். கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவற்றைப் பயன்படுத்திப் பாடலும் பின்னணி இசையும் இருக்கும்.

  வருகைக்கு மிக்க நன்றிகள்.

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது