வீர அபிமன்யூ என்ற திரைப்படம் தமிழில் ஏ.வி.எம்.ராஜான், காஞ்சனா நடிப்பில் வந்திருந்தது. அதே திரைப்படம் காஞ்சனாவோடு சோபன் பாபு ஜோடி போட்டு வந்தது. இரண்டுக்கும் இசை கே.வி.மகாதேவன்.
தமிழில் வந்த படத்தில் வரும் "பார்த்தேன் சிரித்தேன்" என்ற பாடல் P.B.சிறீனிவாஸ், மற்றும் P.சுசீலா பாடி ஏக பிரபலம். இந்தப் பாட்டின் மெட்டும் இசையும் தெலுங்கில் கண்டசாலாவும் சுசிலாவும் பாடுவதைக் கண்டு ரசியுங்கள். இவற்றைப் பரிந்துரைத்த நண்பர் ஜி.ராகவனுக்கு மிக்க நன்றி ;-)
அருமையான பாடல். கண்ணதாசனின் (அவர்தானே) வரிகள் மறக்க முடியாதவை.
ஏவிஎம் ராஜன் பல படங்களில் செகண்ட் பிடில் வாசித்துவிட்டு பின்னர் சினிமாவே ஒரு பாவப்பட்ட தொழில் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகை கலக்கிய காஞ்சனா பின்னர் தனது 60 வயதில் ஆந்திராவில் ஒரு கோவிலில் தங்கி அங்கேயே சேவகம் செய்து கொண்டிருந்த்தாக ஆனந்த விகடனில் படித்த ஞாபகம். ஹ்ம்ம்ம்...
பிரபா! இந்தத் "தேனை" பிடிக்காதவர்; இருக்கார். இதன் இனிமைக்கு கண்டசாலாவின் குரலைவிட சிறிநிவாஸ் குரலே பொருத்தமென்பது என் அபிப்பிராயமும் கூட. அன்றைய புகழ் பெற்ற பாடல்கள் யாவும் மறுபிறவி எடுத்துள்ளன. மேலும் "சமரசம் உலாவுமிடமே"...என்ற தமிழ்ப்பாடல் ,சிங்கள உருவில் உண்டு. கிடைத்தால் இடவும்.
ஏவிஎம் ராஜன் பல படங்களில் செகண்ட் பிடில் வாசித்துவிட்டு பின்னர் சினிமாவே ஒரு பாவப்பட்ட தொழில் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டார்.//
வணக்கம் Sridhar
ஏவிஅம் ராஜனும் மனைவி புஷ்பலதாவும் இப்போ கிறீஸ்தவ போதனை நிகழ்ச்சிகளைச் செய்து வருகின்றார்கள். பாடல் வ்ரிகள் உண்மையிலேயே இனிமை தான்.
//புதுகைத் தென்றல் said... பழைய மிஸ்ஸம்மாவிலும் அருமையான பாடல்கள் தமிழ் & தெலுங்கில் இருக்கு. அதையும் பாருங்க.//
வாங்க புதுகைத் தென்றல்
மிஸ்ஸியம்மா பாட்டுக்கள் எல்லாமே இனிமை. அதே போல் மனிதன் மாறி விட்டான் என்று ஒரு படம் தமிழிலும் தெலுங்கிலும் வந்தது. ஜெமினி, நாகேஸ்வரராவ் நடித்தது. அதுவும் அருமை.
தமிழில் கவிதை அருமை. பாடிய குரல்கள் அருமை. பீ.பி.சீனிவாசும் பி.சுசீலாவும். இசையமைப்பும் அருமைதான்.
தெலுங்கில் இசையும் பெண்குரலும் தமிழில் இருந்ததுதான். ஆனால் கவிதை மாறியிருக்கிறது. சூச்சி வலச்சி செந்தக்கு பிலச்சி...பார்த்தேன் சிரித்தேன் மாதிரித்தான் முயன்றிருக்கின்றார்கள். சொல் விளையாட்டு இருக்கிறது. மொழி புரிவதால் தமிழ் வரிகளில் உள்ள ஆழம் தெலுங்கு வரிகளில் இல்லை என்பதும் புரிகிறது. தெலுங்கிலேயே ஆழம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பாடல் வரிகளில் இல்லை.
அடுத்த குறை கண்டசாலா. இவர் நல்ல பாடகர்தான். ஆனால் ஏற்ற இறக்கங்கள் இறங்கியே இருக்கும். பீ.பி.ஸ்ரீநிவாஸ் தெலுங்கும் பேசத் தெரிந்தவர். அவரே பாடியிருக்கலாம். இசையரசியைச் சொல்ல வேண்டியதில்லை. தமிழில் அவர் செய்த சிறப்பைத் தெலுங்கிலும் செய்திருக்கிறார்.
அது சோபன் பாபுவா? யார் இந்த நெளிந்த இடுப்பர்னு நெனச்சேன். :)
//தமிழ்பித்தன் said... சீ...சீ.. என்று நம்மட ஆக்களுட்ட பாடினால் அன்றே கதை கந்தள்தான்//
தம்பி, நீர் உந்த விசப்பரீட்சையில் இறங்கட்டால் அதுவே போதும் ;-)
//G.Ragavan said... தமிழில் கவிதை அருமை. பாடிய குரல்கள் அருமை. பீ.பி.சீனிவாசும் பி.சுசீலாவும். இசையமைப்பும் அருமைதான்.//
ராகவன்
உங்கள் ஆய்வு அருமை, பாடலைப் பரிந்துரைந்தமைக்கு மீண்டும் நன்றி ;-)
//L N Srinivasakrishnan said... தெலுங்கிலெ பொதுவாக டானஸ் எல்லாம் தமிழை காட்டிலும் இன்னும் கொஞ்சம் 'கும்'ன்னு இருக்கும் - இது என்னடா இப்படி இருக்கே-ன்னு யோசிக்க வைத்து விட்டது.//
வாங்க சிறீனிவாசகிருஷணன்
இது பழைய தெலுங்கு என்பதால் கும் குறைச்சலா இருக்கும்.
பிபி ஸ்ரீ்நிவாஸ் பாடல்கள் இன்றும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பாடல் காடசி்யைத் தந்தமைக்கு நன்றி.
இவர் ஏ.வி.எம்.ராஜன் சில ஆண்டுகளுக்கு முதல் சிட்னிக்கு வந்து கிறிஸ்தவ சமயப் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்ததார். பலர் மதம் மாறினார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.
தெலுங்கும் நல்லா தான் இருக்கு...;))