வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Friday, February 27, 2009
மொழி தாவிய திரை மெட்டுக்கள் - பாகம் 3

மொழி தாவிய திரை மெட்டுக்களாக இந்த முறை தமிழ், தெலுங்கு திரையில் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் வலம் வர இருக்கின்றன. அந்த வகையில் மூன்று முத்தான பாடல்கள் மாற்றம் பெற்ற விதத்தைக் காட்சிகளோடு காணப் போகின்றீர்கள். முதலிரண்டு பாடல்களைப் பரிந்துரைத்த ஜி.ராகவனுக்கு நன்றிகள்.

முதலில் கொடுத்திருக்கும் பாடல் தமிழில் புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் வெளிவந்த தம்தன தம்தன பாடல். இந்தப் பாடலை ஜென்சி குழுவினர் பாடியிருக்கின்றார்கள். பின்னர் தெலுங்கில் தனது முதல் படமான Kotta Jeevithalu வை எடுத்த போது இதே பாடலினை தெலுங்கில் பி.சுசீலா, எஸ்.ஜானகி குழுவினரோடு பாட வைத்திருக்கிறார் ராஜா. தெலுங்கு வடிவத்தைக் கேட்டதில் இருந்து தமிழை விட மிக அழகாக இந்த தெலுங்கு பாடல் அமைந்திருப்பதாக இருக்கின்றது. நண்பர் ஜி.ராகவனும் சொன்னார், ராஜா தான் எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் இப்பாடல் அமையாததால் தெலுங்கில் பி.சுசீலா, ஜானகி குழுவினரைப் போட்டதாக. உண்மையிலேயே ராஜாவிற்கு தெலுங்கு பாடல் நிச்சயம் நிறைவாக வந்திருக்கும்.

தெலுங்கில் "தம்தன தம்தன தாளம் வரும்" பாடலை மாற்றிய விதம்
யூடிப் இடுகை: satabisha
பாடியவர்கள்: பி.சுசீலா, ஜானகி, குழுவினர்



தமிழில்
யூடிப் இடுகை: hemanu
பாடியவர்கள்: ஜென்சி, வசந்தா, குழுவினர்


தெலுங்கில் கே.விஸ்வநாத் "சாகர சங்கமம்" படத்தை எடுத்த போது வான் போலே வண்ணம் கொண்டு பாடலுக்காக ஜெயச்சந்திரன், மாதுரி ஜோடியை உபயோகித்துக் கொண்டார் ராஜா. ஆனால் தமிழில் சலங்கை ஒலி பேசிய போது எஸ்.பி.பால சுப்ரமணியம், சைலஜா ஜோடி வந்தது. தெலுங்கை விட அண்ணன் தங்கை தான் கலக்கியிருக்கிறார்கள் என்பது என் எண்ணம்.

தெலுங்கில் "வான் போலே வண்ணம் கொண்டு" பாடலை மாற்றிய விதம்
யூடிப் இடுகை: ignatiuskm
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், மாதுரி



தமிழில்
யூடிப் இடுகை: rajshri
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சைலஜா



தமிழில் வெளிவந்த புது புது அர்த்தங்கள் படத்தில் எஸ்.பி.பி மற்றும், சித்ராவை "குருவாயூரப்பா குருவாயூரப்பா" பாடலை பாடவைத்த ராஜா Bharyalu Jagratha என்று தெலுங்கு பேசிய போது அந்தப் பாடலை மனோ, சித்ராவை ஜோடியாக்கினார். தமிழின் சிறப்பை தெலுங்கில் காணோம்.

Bharyalu Jagratha

தெலுங்கில்
யூடிப் இடுகை: sx42007
பாடியவர்கள்: மனோ, சித்ரா



தெலுங்கில் "குருவாயூரப்பா குருவாயூரப்பா" பாடலை மாற்றிய விதம்
யூடிப் இடுகை: rajshri
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ரா

posted by கானா பிரபா 10:49 PM   7 comments
 
7 Comments:
  • At February 28, 2009 at 2:03 PM, Blogger G.Ragavan said…

    எல்லாமே அருமையான பாட்டுகள்.

    தம்தனதம்தன பாட்டு தமிழில் இருந்ததை விட தெலுங்கில் நன்றாக இருக்கிறது. தமிழிலும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தெலுங்கில் கொஞ்சம் உசத்தியாக. ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டியில் இளையராஜா சொன்னார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி... ஏன் பி.சுசீலாவை நிறைய பயன்படுத்துவதில்லை?

    அதற்கான பதில்... அவங்களுக்கு நான் நெறைய பாட்டுகள் குடுக்கலாம். அவங்களும் நல்லாத்தான் பாடுவாங்க. ஆனா... அந்தப் பாட்ட மத்த பாடகிகளாலும் கூட பாடக் கூடியதா இருக்கும். அத அவங்க லேசாப் பாடிருவாங்க. ஆக.... அவங்களால மட்டுமே பாட முடியுங்குற பாட்டுகளை அவங்களுக்குக் குடுக்குறேன். ஏன்னா.. அதையெல்லாம் வேற யார்ட்டயுமே குடுக்க முடியாது. இதுதான் காரணம்னு சொன்னாரு.

    அதே போல எஸ்.ஜானகியின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியதே இளையராஜாதான் என்பது என்னுடைய கருத்து. மெல்லிசை மன்னரும் எஸ்.ஜானகிக்குப் பாட்டு குடுத்திருக்காரு. ஆனா அவருடைய இசையில் எஸ்.ஜானகியின் குரலைக் கேளுங்க. குறிப்பா இளையராஜா வர்ரதுக்கு முன்னாடி.... கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்.... உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம்...பொன்னென்பேன் சிறு பூவென்பேன்.. நல்லாத்தான் இருக்கும். ஆனா ஏதோ ஒன்னு குறையிறாப்புல இருக்கும். ஆனா இளையாராஜா வந்தப்புறம் எம்.எஸ்.வி குடுத்த பாட்டுகளைக் கேளுங்க... காற்றுக்கென்ன வேலி.... தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ.... போக்கிரிக்குப் போக்கிரி ராஜா... வித்யாசம் தெரியும்.

    தம்தனதம்தன பாட்டைத் தமிழில் போட்டப்போ ஜென்சியும் வசந்தாவும் பாடியிருந்தாங்க. பொதுவாகவே ரெண்டு பெண்கள் பாடுற பாட்டுன்னாலே...பி.சுசீலா...எல்.ஆர்.ஈஸ்வரிதான். பிறகு பி.சுசீலா... வாணி ஜெயராம்னு ஆச்சு. இளையராஜா வந்தப்புறம் பி.சுசீலா எஸ்.ஜானகின்னு ஆச்சு. ஆனா இந்தப் பாட்டுல ஜென்சியும் வசந்தாவும். பொட்டு வைத்த முகமோ பாட்டுல...லல்லல்லா பாடுவாங்களே..அவங்கதான் வசந்தா.

    ஆனா இளையராஜாவிற்கு இந்தப் பாட்டு திருப்தி அளிக்கவில்லையாம். ஆனா பாட்டைக் கேட்ட எல்லாரும் ரொம்ப நல்லாயிருக்குன்னு பாராட்டினாங்களாம். பின்னாடி தெலுங்குல எடுக்குறப்போ.... ஜென்சிக்குப் பதிலா பி.சுசீலாவையும் வசந்தாவுக்குப் பதிலா ஜானகியையும் பாட வெச்சிருக்காரு. அவர் மதிப்பு வெச்சிருக்குற இரண்டு பெரிய பாடகிகள் அவரை ஏமாத்தல. அவர் விரும்புனது கிடைச்சது. எல்லாரும் பாடுறாங்க. சில பாடகர்கள்தான் பாட்டாகவே வாழ்றாங்க. அதுல பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் முன்னிலை வகிக்கிறாங்கன்னு சொல்றது மிகப் பொருத்தம்.

     

  • At February 28, 2009 at 6:08 PM, Blogger நிஜமா நல்லவன் said…

    ஜி.ரா. ரொம்ப தெளிவா சொல்லிட்டாரு. நானும் மறுக்கா சொல்லிக்கிறேன்..:)

     

  • At February 28, 2009 at 7:10 PM, Blogger MSATHIA said…

    அட ஆமாம் தெலுகுல நல்லா இருக்கே தம்தனதம்தன பாட்டு. ராகவன் விளக்கத்துக்கு நன்னி ;-))

     

  • At March 1, 2009 at 12:27 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க ராகவன்

    உங்க பின்னூட்டமே சுவையான பதிவா இருக்கு, நன்றி

    நிஜம்ஸ் மற்றும் சத்தியா

    வருகைக்கு நன்றிகள்

     

  • At March 2, 2009 at 10:01 AM, Blogger கோபிநாத் said…

    தல

    சாரி கொஞ்சம் லேட்டு...அன்னிக்கே பாட்டை கேட்டுட்டேன்...

    உண்மையில் தெலுங்கு கலக்கல் தான்...;)

    வான் போலே வண்ணம் கொண்டு" - நம்ம தமிழ் தான் கலக்கல் ;)

     

  • At March 9, 2009 at 7:53 AM, Anonymous Anonymous said…

    தம்தனதம்தன... நான் கேட்டுக் கேட்டு இன்புறுகின்ற பாட்டுககளிலொன்று.
    நீங்கள் சொல்வது உண்மை பிரபா- சுந்தரத்தெலுங்கில் நன்றாகத்தானிருக்கிறது.
    'ஜி.ரா'வின் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது SPB-P.சுசீலா- இளையராஜா கூட்டணியின் முத்துமணிமாலை(சின்னக்கவுண்டர்)
    நினைவுக்கு வருகின்றது.
    அனைவருக்கும் நன்றி.

     

  • At March 13, 2009 at 6:05 PM, Blogger கானா பிரபா said…

    தல கோபி

    வருகைக்கு நன்றி :)

    வணக்கம் கரவெட்டியான்

    முத்துமணி மாலை அருமையான பாடல் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது