குர்பானி ஹிந்தித் திரைப்படம் 81 இல் வந்து இந்திய சினிமா உலகையே ஒரு கலக்குக் கலக்கியதை நான் சொல்லியா உங்களுக்குத் தெரிய வேண்டும்?
பெரோஸ் கான் இயக்கித் தயாரித்து அவருடன் வினோத் கன்னாவும் ஹிந்தித் திரையுலகின் அப்போதைய ரம்பா, ஊர்வசி, மேனகை ஆகியோரின் ரீமிக்ஸ் ஜீனத் அமனும் நடித்ததும், கூடவே கல்யாண்ஜி ஆனந்த்ஜியின் கலக்கலான இசையும் இப்படத்தின் அமோக வெற்றிக்கு ஒரு காரணம். இங்கே தரும் பாடலுக்கு இப்படத்தில் இசையமைத்தவர் Biddu.
இருபத்தேழு ஆண்டுகள் கழித்தும் இப்போதைய ரஹ்மான், ஹிம்மேஷ் வகையறாக்களுடன் போட்டி போட்டு முன்னுக்கு வரக்கூடிய பாடலான "ஆப் ஜைசா கோயி" என்ற பாடல் பாடிய பாடகி நாசியா ஹசனுக்கு பெரும் புகழையும் அள்ளிக் கொடுத்தது.
இந்தப் பாடல் எத்தனை வடிவங்களில் விதவிதமாக மாற்றப்பட்டு ரசிக்கப்படுகின்றது என்பதை ஒரு தொகுப்பாக இங்கே தருகின்றேன். இதில் வரும் "American Desi" திரைப்படம், நான் விரும்பிப் பார்த்த படங்களில் ஒன்று. இது குறித்து விரிவான விமர்சனம் ஒன்றைப் பின்னர் தருகின்றேன்.
அடப்பாவமே!! ஒரு பாட்டை எத்தனை தடவை தான் காபி அடிக்கறது?? ஆனா!! சும்மா சொல்லக்கூடாது !! எத்தனை பதிப்பு பாத்தாலும் அலுக்கவே இல்லை!! பொறுமையா தொகுத்து ஒரே இடத்துல போட்டிருக்கீங்க!! நன்றி அண்ணாச்சி!! :-)
ஒன்றுக்கு ரண்டாய் மஞ்சள் சிவப்பிலும் ஜீனத்தின் தரிசனத்தைத் தந்தமைக்கு நன்றி. அதெப்படி ஒரே படத்தில் இந்த இரு காட்சியும் வந்திருக்கும்? குழப்பமாயிருக்கு.
உங்களின் தொகுப்பு மிக அருமை. உண்மையில் மனதை விட்டகலா பாடல்கள். இந்த பாட்டின் இசையமையபாளர் பிட்ட்டு. கல்யான்ஜி இல்லை என்று நினைக்கிறேன். இவரை நீங்க்ள யார் என்று நினைத்தால் மிக மிக தெரிந்தவராகவே இருக்கிறார். இவர்தான் மேட் இன் இந்தியா என்ற புகழ் பெற்ற பாடலின் இசையமைபாளருமாவார். லைலா ஓ லைலா பாடலும் இவர்தான் இசையமைத்திருக்கிறார் என நினைக்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
பிரபா,
தமிழில் யாராவது இதை காபி அடித்து இருக்கிறார்களா?