வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Thursday, December 27, 2007
அண்ணன் மேர்வின் சில்வாவை ஆறுதல் படுத்த
வணக்கம் மேர்வின் அண்ணா

நேற்று ரூபவாஹினி என்னும் பாசிச மீடியா உங்களின் அறப்போராட்டத்தை நசுக்கியதைக் கண்டு சற்றும் கலங்காமல் நீங்கள் கொண்ட கொள்கையோடு தொடர்ந்து செல்ல வேண்டும் என்று உங்கள் குண்டர்களில் மன்னிக்கவும் தொண்டர்களில் ஒருவனாகக் கேட்டுக் கொள்கின்றேன். நீங்கள் சற்றும் சலியாமல் சிறுபான்மை தமிழர்களை எள்ளி நகையாட வேண்டும் என்றும், உங்கள் மகனுக்கு நாளொன்றுக்கு ஒரு இரவு விடுதியினையாவது அடித்து உடைக்கவும் குழப்பம் விளைவிக்கவும் இருக்கக்கூடிய ஆகக்கூடிய ஜனநாயக உரிகை கிடைக்கவும் தொடர்ந்து போராடவும் கேட்டுக் கொள்கின்றேன்.

You tube இல் அண்ணன் மேர்வினின் வீடியோ கிளிப்புக்களைத் தேடிய போது அவற்றை Comedy என்ற வகைப்பிரிவில் இட்டிருப்பதை வன்மையாக்க் கண்டிக்கின்றோம்.

உங்களைப் போலவே திரையுலகில் இப்படியான லட்சிப்பாத்திரங்களால் கலக்கும் வடிவேலு அண்ணனுக்கும் இப்படி அடிக்கடி நிகழும் அனுபவங்களை ஓய்வாக இருக்கும் போது பார்த்து ஆறுதலடைய வேண்டுகிறேன்.நன்றி: புகைப்படம் மற்றும் மேலதிக செய்தியை அறிய : புதினம் இணையத்தளம்

சிரச தொலைக்காட்சியின் பாசிசப் போக்கைக் கண்டித்து அண்ணன் மேர்வின் வழங்கிய ஜனநாயகக் குரல்நேற்று ரூபவாகினி பாசிச மீடியாவில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அண்ணன் மேர்வின் மேற்கொண்ட களப் போராட்டம்.


posted by கானா பிரபா 10:54 PM  
 
19 Comments:
 • At December 28, 2007 at 12:00 AM, Blogger மதுலா சித்திரவேலாயுதம் said…

  நக்கல்..... நானே எவ்வளவு மனம் நொந்து போய் இருக்கிறேன்...Hehehe

   

 • At December 28, 2007 at 12:02 AM, Blogger கானா பிரபா said…

  வாங்கோ தங்கச்சி

  யார் சொன்னது நக்கல் எண்டு ;-)

   

 • At December 28, 2007 at 12:15 AM, Blogger வந்தியத்தேவன் said…

  டொக்டர் மேர்வின் சில்வாவுடன் வம்பு வைக்காதீர்கள். பிறகு உங்களுக்கும் ஆப்படிப்பார். ஆனாலும் வடிவேலுடன் இந்த ராஸ்கலை ஒப்பிட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். என்ன தலையில் அடித்தவர்கள் வாயிலும் இரண்டு சாத்து சாத்தி வாயைக் கிழித்திருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும்.

   

 • At December 28, 2007 at 12:18 AM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் வந்தியத்தேவன்

  இதுவே சிரசவில் நடந்திருந்தால் கொழும்புத் தமிழர் கூண்டோட பூஸாவுக்குப் போயிருப்பினம்.

   

 • At December 28, 2007 at 12:26 AM, Anonymous Anonymous said…

  Mervin thuge is right hand for main thuge in Sri Lanka. So noone can do anything for him.

   

 • At December 28, 2007 at 12:30 AM, Blogger கானா பிரபா said…

  // Anonymous said...
  Mervin thuge is right hand for main thuge in Sri Lanka. So noone can do anything for him.//

  அதெண்டா உண்மை தான்,
  அடிச்சவை பாடு தான் திண்டாட்டம்

   

 • At December 28, 2007 at 12:35 AM, Blogger வந்தியத்தேவன் said…

  //இதுவே சிரசவில் நடந்திருந்தால் கொழும்புத் தமிழர் கூண்டோட பூஸாவுக்குப் போயிருப்பினம்.//

  உண்மை தான். ஆனால் இதனை இப்பொழுது சிரச நன்றாக பயன்படுத்துகின்றது, ரூபவாஹினிக்காரர்கள் இவனின் முன்னைய அடாவ்டிகளை ரூபவாஹினிகாரர்கள் பெரிதுபடுத்தவில்லை.

   

 • At December 28, 2007 at 1:36 AM, Blogger குட்டிபிசாசு said…

  பிரபா,

  இவருதான் இலங்கை கைப்புள்ளயா? ரணகளமா ஆக்கிட்டாங்க போல!! நேத்து மயூரன் பதிவில் படிச்சேன்.

  சிங்களவங்களுக்கு இப்பத்தான் உரைக்க ஆரம்பிச்சிட்டுதாக்கும்.

   

 • At December 28, 2007 at 1:44 AM, Blogger கானா பிரபா said…

  வாங்க அருண்

  இவர் இலங்கை இம்சை அரசனின் அமைச்சர்களில் ஒருவர். கைப்பு, தீப்பொறி ஆறுமுகம், என்கவுண்டர் ஏகாம்பரம் என்று பல அவதாரங்கள் இவருக்கு.

  இவரின் அட்டகாசங்கள் இவர் மருத்துவமனையில் இருந்து வந்ததும் தொடரும்,,,

   

 • At December 28, 2007 at 6:58 AM, Blogger தமிழ்பித்தன் said…

  என்னதான் இருந்தாலும் இப்படியெல்லாம் சொல்லப்படாது அண்ணன் மனம் எவ்வளவு புண்படும்
  கொசுறு ;- குண்டர் சீ..சீ..தொண்டர் அமைப்பில் எனக்கு ஓர் வேலை வேண்டித்தர முடியுமா நானும் ரவுடி ஆக வேணும் என்று கனகால கனவு

   

 • At December 28, 2007 at 8:57 AM, Blogger பொன்வண்டு said…

  சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிருச்சி உங்க ஒப்பீடைப் பார்த்து... :))))

  நானும் பார்த்தேன் சன் செய்திகளில்.. அவர் அடிவாங்கியது ரூபவாகினியில் நேரடி ஒளிபரப்பு செய்தார்களாமே? செம காமெடி.... ;))))))))

  கடைசியில் காரில் ஏறப்போகும்போது தலையில் நொங்குன்னு ஒரு அடிவிழகுமே சரியான காமெடி போங்கள் ;)))))))))))))

   

 • At December 28, 2007 at 9:18 AM, Blogger முகமூடி said…

  நானும் பார்க்கிறேன், டாக்டர்.மேர்வின் என்று யாருமே குறிப்பிடுவதில்லை? ஏன் இந்த கொலைவெறி.

  ரூபவாஹினியில் தலைவர் மன்னிப்பு(?!) கேட்பதாக ஒரு வீடியோ பார்த்தேன். சிங்களத்தில் பேசியதால் மன்னிப்புதான் கேட்கிறாரா இல்லை மிரட்டல் எதுவும் விடுக்கிறாரா என்று தெரியாத அளவு அதிகார தோரணை ? ஆராவது சிங்கள நண்பர்கள் இருந்தால் மொழிபெயர்த்து போடக்கூடாதா?

  மேலும் இந்தாளை வடிவேலுவுடன் ஒப்பிட்டு வடிவேலுவை கேவலப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

   

 • At December 28, 2007 at 2:52 PM, Blogger கானா பிரபா said…

  // தமிழ்பித்தன் said...
  குண்டர் சீ..சீ..தொண்டர் அமைப்பில் எனக்கு ஓர் வேலை வேண்டித்தர முடியுமா நானும் ரவுடி ஆக வேணும் என்று கனகால கனவு//

  தம்பி தமிழ்பித்தா

  குண்டர் சீ சீ தொண்டர் அமைப்பில் சேர முன் அனுபவம் இருக்கா?
  சைக்கிள் செயின் சுத்தணும்,
  குடு அடிக்கணும்,
  இருந்தால் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

   

 • At December 28, 2007 at 3:01 PM, Blogger தமிழ்பித்தன் said…

  இப்படி அனுபவம் எல்லாம் எனக்கு இல்லையே ஆனால் நான் அறிய பல பல பெரியவங்கள் இதை எல்லாம் தெரிஞ்சு வைச்சிருந்தவை நான் சின்னப்பெடியன் தானே பழக்கினால் பழகீடுவன் பழகலாம் வாங்க!

   

 • At December 28, 2007 at 3:57 PM, Blogger கானா பிரபா said…

  //பொன்வண்டு said...
  சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிருச்சி உங்க ஒப்பீடைப் பார்த்து... :))))

  நானும் பார்த்தேன் சன் செய்திகளில்.. அவர் அடிவாங்கியது ரூபவாகினியில் நேரடி ஒளிபரப்பு செய்தார்களாமே? செம காமெடி.... ;))))))))//


  வாங்க பொன்வண்டு

  இப்படியான காமடியன்கள் நிறையப்பேர் இலங்கை அமைச்சரவையில் இருக்கின்றார்கள் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ;-))
  //முகமூடி said...
  நானும் பார்க்கிறேன், டாக்டர்.மேர்வின் என்று யாருமே குறிப்பிடுவதில்லை? ஏன் இந்த கொலைவெறி//

  வாங்க முகமூடி

  இவருக்கு டாக்டர் பட்டம் போட்டு மேர்வினை சிறுமைப்படுத்தக் கூடாது. அதை விட பெரிய பட்டங்களை இவர் வைத்திருக்கின்றார்.

  மன்னிப்பெல்லாம் இவர் அகராதியில் கிடையாது.

  //மேலும் இந்தாளை வடிவேலுவுடன் ஒப்பிட்டு வடிவேலுவை கேவலப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.//

  இப்போதைக்கு வடிவேலு தான் கிடைச்சார் ;-))

   

 • At December 29, 2007 at 3:30 AM, Anonymous Anonymous said…

  தம்பி பிரபா!
  ஏவின், மன்னிக்கவும் மேர்வின் அண்ணனின் அன்புச் சகோதரா!!
  எம்மைப்போலவே துன்பத்தில் துடித்தமைந்த உங்கள் வலைப்பக்கம் பார்த்து ரத்தக் கண்ணீர் விட்டவர்களில் நானும் ஒருவன்.
  அண்ணன் மேர்வின் போன்றோரின், அறச்செயல் ஆற்றாத மானிடப் பதர்களை என்ன சொல்ல.

  எப்போதும் தருமத்திற்காய்க் குரல் கொடுக்கும் அண்ணைனை ஒத்த (முதல் எழுத்து குற்றெழுத்தே என்பதை கவனித்துக் கொள்ளவும்) பலரை சமூகம் ஏற்றுக் கொண்டதில்லை. வெண்ணை எடுக்கப் போன கண்ணனையே உரலில் கட்டிய சமூகம் இது. 'எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்த' எங்கள் அண்ணனைத் தொட்ட சமூகத்தை தர்ம உலகு தண்டிக்கும் என்பதில் நம்பிக்கை கொள்க!!

  இவ்விடத்தில் அண்ணனின் அற்புதங்கள் குறித்து எங்கள் பா(ர)தியார் எழுதிய பாவை இணைக்கிறேன்.
  படித்து ஆறுதல் கொள்க!!
  (அண்ணனின்) தருமம் மறுபடியும் (பொலீஸை) வெல்லும் என்ற மர்மத்தை காணும்வரை காத்திருப்போம்!!!!!!!!!!!!  தீராத விளையாட்டுப் பிள்ளை


  ராகம்: ராகமாலிகா
  தாளம்: ஆதி
  தீராத விளையாட்டுப் பிள்ளை - அண்ணன்
  ஊரிலே எங்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத)

  சின்னத் தனங்கொண்டு வருவான் - சேதி
  சொல்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
  என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
  வெட்டிக் கிழித்துப் படிக்கக் கொடுப்பான். (தீராத)

  நாயொத்த எண்ணங்கள் கொண்டு - என்ன
  செய்தாலும் எட்டாத உயரத்தில் நிற்பான்;
  ஆருக்கும் போட்டடி என்பான்-அங்கு
  சனமெழும் நேரத்திலே சல்லி விடுவான் (தீராத)

  பலமுள்ள பலர்கொண்டு வந்தே - எம்மை
  அழஅழச் செய்துபின், 'கண்ணை மூடிக்கொள்;
  சிறையிலே பூட்டுவேன்' என்பான் - எம்மைச்
  செகிடாக்கிப் புழுகினை அரசுக்கு ரைப்பான் (தீராத)

  இன்னலை முன் நின்று எடுப்பான் -அரசு
  மங்கிச் சரியநற் கீதம் படிப்பான்;
  பொல்லால் இளக்குவத னாலே -அதை
  கண்மூடி வாய்திறந்தே சும்மா இருப்போம். (தீராத)

  அங்காங் கிருக்கும் நம் மேலே - அண்ணன்
  தீயோட றுப்பைப் போட்டு விடுவான்;
  எங்காகிலும் பார்த்த துண்டோ? - அண்ணன்
  எங்களுக் கிளைக்கின்ற வேடிக்கை யொன்றோ (தீராத)

   

 • At December 29, 2007 at 3:58 AM, Blogger கானா பிரபா said…

  அநானியாக வந்த அன்பரே

  அருமையான பாட்டையும் கொடுத்து அண்ணனைப் பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் ;-)

   

 • At December 29, 2007 at 4:42 AM, Blogger எம்.ரிஷான் ஷெரீப் said…

  அடாடா....
  அண்ணனின் சூப்பர் காமெடிய வீடியோ ஆதாரங்களுடன் இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கீங்களே..!
  ஆனாலும் இதனை தமிழ்மணத்தின் 'சினிமா,பொழுதுபோக்கு' பிரிவில் சேர்த்ததில்தான் அண்ணனுக்கு வருத்தமாம்.ஆகவே அடுத்த படையெடுப்பு உங்களை நோக்கி வரலாம் ;).
  சகல ஊடகங்களையும்,நல்ல கலர் சாயத்தையும் பக்கத்திலேயே வைத்திருக்கவும்.

  (வடிவேலுவின் பொருத்தமான காமெடி சீனைச் சேர்த்து மேர்வின் சில்வாவின் அடாவடியை நல்லதொரு பொழுது போக்கு சினிமா ஆக்கிவிட்டீர்கள்) ;)

   

 • At December 29, 2007 at 4:48 AM, Blogger கானா பிரபா said…

  வாங்கோ ரிஷான்

  விளையாட்டு/புதிர் என்ற வகைக்குள் தான் இது வந்திருக்கோணும்.

  வடிவேலுவை விட பொருத்தம் தேவையா?

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
என் பார்வையில் ==> *** Taare Zameen Par***
2007 இல் நான் ரசித்த ஹிந்திப்படம் =>Heyy Babyy
Aap Jaisa Koi - ஆஹா எத்தனை வடிவமடா?
பார்த்தேன் சிரித்தேன் - தமிழும் தெலுங்கும்
"இதழில் கதை எழுதும் நேரமிது" - ஜேசுதாஸ் to எஸ்.பி....
நடிகர் விஜய் சுடப்போகும் அடுத்த படம் :)
வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ?
கீரவாணி.....இரவிலே கனவிலே பாட வா நீ
பாவனா பேட்டி
சின்ன மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது!
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது