இன்றைக்கு இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே தெரியாது. காரில் போகும் போதும் வீட்டுக் கணினியிலும் "காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்" மயம் தான். இப்போதெல்லாம் இளையராஜாவின் இசையில் வரும் பாடல்கள் பழைய தெம்பில் வருவதில்லையே என்ற ஏக்கம் அதிகப்படியாக வருவதில்லை. காரணம், யுவன் அந்த இடத்துக்குத் தற்காலிகமாக வந்துவிட்டார்.
தீபாவளி படத்தில் இடம்பெற்ற, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் இந்தப் பாடலின் ஒளிப்பகிர்வைப் பாருங்கள். காட்சியமைப்பையும் எழிலாக அமைத்திருக்கின்றார் இயக்குனர் எழில். ஸ்பெஷல் போனஸ் நம்ம தலைவி பாவனாவே தோன்றிருப்பது ;-) (youtube பாடல் உதவி:geethams)
Youtube மேற்கண்ட பாடலைத் தேடும் போது தன்னிச்சையாக வந்து விழுந்தது இன்னொரு பொக்கிஷம். சிங்கப்பூர் வசந்தம் சென்றல் தொலைக்காட்சியின் பாடகர் தேர்வு நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்காக வந்திருந்த நான்கு பாடகர்கள், "காதல் வைத்து காதல் வைத்துக் காத்திருந்தேன்" பாடலைப் பாடும் தொகுப்பைப் பாருங்கள். அருமையிலும் அருமை (youtube பாடல் உதவி:Haresh)
இந்தப் பாடலை வெறுமனே ஒப்புக்குக் குரல்வளத்தில் மட்டும் நிரூபிக்காமல் மிகவும் ரசித்துப் பாடியிருப்பது தான் மிகச் சிறப்பு. சில மேடைகளில் பசையால் மேடையில் ஒட்டிவைத்து நிற்பது போல் நின்றுகொண்டே பாடுவது கொடுமை.
(கொண்டோடி இதுக்கும் கண்டனம் சொல்ல வருவாரோ தெரியேல்லை ;-)
பிரபா அருமையான தேர்வு.இன்றைய இளைஞர்களைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது.எவ்வளவு அழகாக இருக்கிறாங்கள்!நாங்கள் அங்கே பனங்கொட்டை சூப்பியபடி கிளித்தட்டு விளையாடியதுதான் மிச்சம்.சங்கீத அறிவு மருந்துக்கும் கிடையாது.ஆனால்,பாடல்களை இரசிகத் தெரிந்திருக்கிறது.இதற்காக நம்மட தேவாரங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.