ஒரு நல்ல பாட்டை எப்படியெல்லாம் காட்சியில் எடுத்துக் கெடுக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடலை இங்கு தருகின்றேன். கிராமத்து அத்தியாயம் திரையில் இருந்து கங்கை அமரன் வரிகளில், மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் "ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது" என்ற இனிய பாடல் எப்படிச் சுரத்தே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பாருங்கள். இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலப் பாடல்களை உரியமுறையில் காட்சிப்படுத்தலில் கொண்டுவராமல் சதி செய்த இப்படியான இயக்குனர்கள் பலர் இருக்கின்றார்கள். நாயகனும் சரி நாயகியும் சரி ஒரு ஜீவனும் இல்லாமல் வந்து போகிறார்கள். இவர்களை இளையராஜா ஆண்டவர் மன்னிப்பாராக.
எலோ டைரக்டரு ! தமிழ் நாட்டுல இதை விட நல்ல ஒரு ஆத்துமேடும் உம்ம கண்ணில் படலியா?
இதை விட இன்னும் எழிலான ஆற்றுப்படுக்கை, களனி எல்லாம் இலவச லொகேஷனாக தமிழகம் முழுதும் விரவியிருக்கின்றது. அதில் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பதே என் உள்ளக் கிடக்கை. மற்றப்படி ராஜேந்தர் மாதிரி முழு இதயத்தை செட்டில் வைத்துப் படம் எடுப்பது போல அவ்வளவு நெருக்கமாகவும் வரத்தேவையில்லை. உங்கட கதையைப் பார்த்தால் "உன் மூச்சுக் காற்று நான்" எண்ட வரி வந்தால் ஆளைச் சாகடிக்கோணுமோ எண்டு கேட்பியள் போல.
சுரத்து என்ற விசயத்தைக் கவனிப்போம். இப்பாடலின் துள்ளும் மெட்டுக்கும், இசைக்கும் அவர்கள் பிடிக்கும் அபிநயதை நன்றாகக் கவனித்துப் பார்த்தால் புரியும். எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத அபிநயங்கள்.
கானா தம்பி.. என் வாழ்க்கைல முதல் முறையா இப்பத்தான் இந்தக் கொடுமையை பார்க்குறேன்..
ஆனாலும் இது மட்டுமில்லே.. ஆரம்பக் கால விஜயகாந்த் படங்கள், கார்த்திக் படங்களிலெல்லாம் பார்த்தீர்களானால் அவைகளும் இந்த லட்சணத்தில்தான் எடுத்திருப்பார்கள்.
அது வேறு காலம் பிரபா.. அப்போது சினிமா வெறும் பொழுது போக்கு மட்டுமே.. சர்க்கஸ் மாதிரி.. அப்போது அழகுணர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம் என்பதெல்லாம் தேவையே இல்லாமல் இருந்தது. அதனால்தான் இப்படி ஒரு கொடுமையும் நடந்துள்ளது..
அந்தக் காலத்திலும் அழகுணர்ச்சியோடு பாடல்கள் எடுத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாரதிராஜா (வெள்ளுடைத் தேவதைகள் தவிர்த்து), மகேந்திரன், பாலுமகேந்திரா என்று பட்டியல் நீளும். என்ன செய்வது பிளாக்கில் தான் மொக்கை என்றால், இங்கே பாடலிலும் மொக்கை போடுகிறார்கள்.
பிரபா மிகவும் அருமையான பாட்டு. உங்கள் கருத்தோடு பாதிதான் ஒத்துப் போகிறேன். என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு முன் ஒரு டிஸ்கி. இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பாடியவர்கள், இசை எல்லாமே மிகமிக அருமை. சரி. இப்பொழுது கருத்துக்குப் போவோம்.
1. என்னைக் கேட்டால் பாடற்காட்சி மிகமிக இயல்பாகவும்..இசை பலபடிகள் இயல்பிற்கும் மேலாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. தமிழர்களில் நூற்றுக்கு 99 பேர் இப்பிடித்தான் ஆடுவார்கள். இப்படித்தான் சிரிப்பார்கள். இப்படித்தான் முழிப்பார்கள். ஆகையால்தான் பாடற்காட்சியும் இசையும் பொருந்தி வரவில்லை. இதை மிகத் திறமையாகக் கையாண்டவர் மகேந்திரன். யாரும் பாட மாட்டார்கள். பாடற்காட்சி போய்க்கொண்டேயிருக்க பின்னணியில் பாடல் ஒலிக்கும். நித்தம் நித்தம் நெல்லிச்சோறு விதிவிலக்கு. அதுவும் மெல்லிசை இசைக்கோர்வையோடு. இந்தப் பாடல் அளவிற்கு அதீத இனிமையான இசைக்கோர்வை இருக்காது. இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது.
2. மிகமிக இனிமையான இந்தப் பாடலை மிக அழகாகவும் படமாக்கியிருக்கலாம். பலர் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் செய்திருக்கலாம். அதில் மாற்றுக்கருத்தில்லை.
//என்னைக் கேட்டால் பாடற்காட்சி மிகமிக இயல்பாகவும்..இசை பலபடிகள் இயல்பிற்கும் மேலாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. //
ராஜாவைக் குறை சொன்னதை மன்னிக்கிறேன் ;-)
இசையமைத்த பாட்டைத் தானே காட்சிப்படுத்தினார்கள்? எனவே ஒன்றுக்கு நாலு முறை யோசித்திருக்கலாம். குறிப்பா லொகேஷனிலும், மெதுவாக அபிநயம் பிடிக்கும் பாங்கையும், காமிரா கோணத்தையும் சிரத்தையோடு பார்த்திருக்கலாம்.
ஆகா...பிரபா, நான் எப்போ ராஜாவைக் குறை சொன்னேன்? அந்தப் பின்னூட்டத்துல தவறு எங்க நேர்ந்திருக்குன்னு எனக்குத் தோணியதைத் தெளிவாச் சொல்லீருக்கேனே.
=============================== இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ===============================
நானும் இயக்குனர் மேலதான தவறைச் சொல்லியிருக்கிறேன். :)
//உங்கட கதையைப் பார்த்தால் "உன் மூச்சுக் காற்று நான்" எண்ட வரி வந்தால் ஆளைச் சாகடிக்கோணுமோ எண்டு கேட்பியள் போல.//
ஐயா பிரபா, பிளேட்டை மாத்திப் போடுறியள் பாருங்கோ. உப்பிடிக் கேக்கக்கூடிய கட்சி உங்கட.. அதைத்தான் நான் கேள்வி கேட்டிருக்கிறன். நீங்கள் மாறி என்னையே திருப்பிக் கேக்கிறியள்.
சரி, அதை விடுங்கோ.. இஞ்ச ராகவனும் உஷா அக்காவும் சொன்னதோட கிட்டத்தட்ட ஒத்துப்போறன். இந்தப்படத்தின்ர கதையென்ன, அது எப்பிடி எடுக்கப்பட்டது எண்டது எனக்குத் தெரியாது. ஆனால் நாயக, நாயகி முகங்களும் சரி, பாடற்காட்சியும் சரி மிக இயல்பாயிருக்கு எண்டதை மட்டும் சொல்லிக்கொள்ளிறன்.
உங்களுக்கெல்லாம் வடநாட்டுக்காரி ஆராவது வந்து ஆடினாத்தான் பிடிபடும்... ;-)
திரும்பவும் சொல்றன். வட நாட்டுக்காரி தேவையில்லை. கொடுத்த பாட்டை ஒழுங்காப் பயன்படுத்தியிருக்கலாம். இயல்பு என்பது ஆளைச் சாகடிக்கும் வரை இருக்கவேணும் எண்டு எதிர்பார்க்கவில்லை ;)
சுரத்தாவரணும் எண்டா என்ன செய்யவேணும் உவை ?