முன்னர் றேடியோஸ்பதியில் தந்த பதிவில் ஒலியாகக் கேட்ட பாடல்களை இங்கே காட்சியோடு கானம் கலந்து தருகின்றேன். இப்பாடல்களை ஒலிவடிவில் மட்டும் கேட்க
80 களின் இறுதியில் தெலுங்கு தேசத்திலிருந்து ஏராளமான படங்கள் தமிழில் வெளியாகி நன்றாக ஓடி திருட்டு வீ.சி.டிக்கு நிகராக தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களுக்குத் தலைவலி தந்த காலமது.
விஜயசாந்தியின் "பூவொன்று புயலானது", டாக்டர் ராஜசேகரின் "இதுதாண்டா போலீஸ்", நாகர்ஜூனாவின் " உதயம்", "இதயத்தைத் திருடாதே" என்று தொடர்ந்து "எங்கடா உங்க எம்.எல்.ஏ", "ஆம்பள", "சத்தியமா நான் காவல்காரன்" என்று தமிழ் ரசிகர்களின் பொறுமைக்குச் சோதனை கொடுத்தது வேறு கதை. ஒன்றில் அதி தீவிர சண்டைக் காட்சிகள், அல்லது இளையராஜாவின் இசை இவை தான் இந்த மொழிமாற்றுப் படங்களின் வெற்றியை அப்போது தீர்மானித்தன.
அந்தவகையில் தமிழ் பேசக்கூடிய தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் ரேவதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்த, வெங்கடேஷின் அப்பா ராமா நாயுடுவே முதலீடு போட்ட தெலுங்கு திரைப்படமான "பிரேமா" இளையராஜாவின் இசையில் முத்திரை பதித்தது. பின்னர் அது தமிழில் "அன்புச் சின்னம்" என்று மொழிமாற்றப்பட்டும் ஹிந்தியில் "Love" என்று மீள சல்மான் கான், ரேவதி ஜோடியோடு எடுக்கப்பட்டும் வெளியாகின. தமிழ், தெலுங்குக்கு ராஜாவின் இசையே இருந்தது. தெலுங்கில் எஸ்.பி.பி ஐ வைத்து அழகான பாடல்கள் இருக்கும். அதில் "ஈ நாடே" என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. சித்ராவும் பாலுவும் பாடிய சிறந்த ஜோடிப்பாடல்களில் இதையும் அடித்துச் சொல்லலாம். இந்தப் பாடலைக் காண
தமிழில் வந்த பாட்டு
ஹிந்தியில் "Love" என்ற பெயரில் வெளியான போது அந்தப்படத்திற்கு இசை ஆனந்த் மிலிந்த். ஆனால் அவருக்குக் கை கொடுத்ததென்னவோ இளையராஜாவே தான். தெலுங்கில் "ஈ நாடே", தமிழில் "ஆத்தாடி ஏதோ ஆசைகள்" இந்த இரண்டு பாட்டின் மெட்டினையும், இசையில் சில சங்கதிகளையும் எடுத்து எஸ்.பி.பி, சித்ரா கூட்டோடு ஒரு மாதிரி ஒப்பேற்றிவிட்டார்.
ஹிந்தித் தழுவலும் இனிமையாகத் தான் இருக்கின்றது.
பாடல் காட்சிக்கு நன்றி தல ;))