ஒரே மெட்டு திரையிசையாக தமிழ், தெலுங்கு மலையாளப் பாடல்களாக வந்திருப்பதை அப்பாடல்களோடு இணைத்துத் தருகின்றேன்.
மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக்கோர்ப்பு ஒன்றை அப்பட இயக்குனர் பாலுமகேந்திரா, தனது ஓளங்கள் மலையாளப்படத்தின் பாடல் வடிவமாக்கித் தருமாறு இசையமைப்பாளர் இளையராஜாவைக் கேட்கவும் அவர் அப்படியே மலையாளப்பாடலாக்கிக் கொடுத்திருந்தார். பின்னர் அதே மெட்டு பாலுமகேந்திராவின் "நிரீக்சனா" என்ற தெலுங்குப் படப்பாடலாகவும், ஓட்டோ ராஜா தமிழ்த் திரைப்படத்தின் காதல் ஜோடிப் பாடலாகவும் தாவியதை விபரிக்கின்றது இவ் ஒளித்தொகுப்பு.
மலையாள வடிவம் - தும்பி வா
தமிழ் வடிவம் - சஙகத்தில் பாடாத கவிதை
தெலுங்கு வடிவம் - ஆகாசம் ( எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கு பெறும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளினி பாடுகின்றார்.
தல என்ன சொல்லறது...வார்த்தைகளே இல்ல அந்த அளவுக்கு இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
தும்பி வா.
இப்போது தான் இந்த காட்சியை பார்க்கிறேன். பாலுமகேந்திரா பாலுமகேந்திரா தான்...ஒவ்வொரு காட்சியும் கவிதை...அந்த பாடலை சிதைக்காமல் எவ்வளவு அருமையாக காட்சிகளை அமைத்து கலக்கியிருக்காரு..கிரேட் ;))) படம் கிடைத்தால் பார்க்க வேண்டும்.
இது உங்களுக்கு தெரியும் இருந்தாலும் சொல்லிவிடுகிறேன்....சென்னையில் நடந்த கச்சேரியில் ராஜா இந்த பாடலை வாத்தியங்களில் மூலம் கேட்டால் எப்படி இருக்கும் என்று இசை அமைத்து காட்டியிருப்பாரு...அந்த காட்சி கிடைத்தால் போடுங்கள் ;))
தமிழ் வடிவம்....வேண்டாம் ஒன்றும் சொல்லவதற்கில்லை...;)
இப்படி ஒரு அழகான பாடல் காட்சியை போட்டுவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாத உங்களுக்கு என் லேசான கண்டனங்கள் ;)
//ஆதிபகவன் said... பிரபா, பாலுமகேந்திராவின் தெலுங்குப் படமொன்று தமிழில் டப் செய்தபோது இதே மெட்டில் வேறொரு பாடலாக வெளிவந்தது என நினைக்கிறேன்.//
வணக்கம் ஆதிபகவன்
நீங்கள் சொல்லும் பாடல் தான் நான் தந்திருக்கும் தெலுங்குப்பாடல். இது நிரீக்ஷணா என்று தெலுங்கில் முதலில் வந்திருந்தது. பின்னர் கண்ணே கலைமனே என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இன்னொரு தகவல், இதே படம் தான் மலையாளத்தில் யாத்ரா என்றும், தமிழில் அது ஒரு கனாக்காலம் என்றும் பாலுமகேந்திராவால் எடுக்கப்பட்டது.
மலையாளத்தின் தற்போதய முன்னணி இயக்குனர் கமல் இயக்கத்தில் நம்மள் என்ற திரைப்படம் வந்திருந்தது. அதில் மோகன் சித்தாராவின் இசையில் விது ப்ரதீப், ஜோற்ஸ்னா பாடிய "சுகமானி நிலாவு" எனக்கு மிகவும் பிடித்த பாட்டுக்களில் ஒன்று. படமும் பார்க்கக் கூடியதே.
அவுஸ்திரேலியத் தேர்தலில் தீவிரவாதம் குறித்த விவாதம்
அவுஸ்திரேலியாவில் அதிபருக்கான பொதுத்தேர்தல் வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரவிருக்கும் இவ்வேளை தற்போதைய அதிபர் ஜோன் ஹாவார்ட் சந்திக்கும் முக்கிய சவால்களில் ஒன்றாக, தீவிரவாதத்தில் அமெரிக்க அணிசார் நிலைப்பாடு விளங்குகின்றது. தொழிற்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருக்கும் கெவின் ரட் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக, மத்திய கிழக்கில் நிலைகொள்ளும் துருப்புக்கள் விலகவேண்டும் என்பதில் கடும் நிலைப்பாட்டோடு இருக்கின்றார். இந்த இருவரும் சந்திக்கும் ஊடக விவாதத்தில் இது குறித்த கருத்துப் பரிமாறல்களை வழங்கிய காணொளித் துண்டைத் தருகின்றேன்.
உலகின் எல்லா நாட்டுப் பாராளுமன்றத்து உறுப்பினர்களுமே ஒரே தகைமையோடு உலாவருவது குறித்துப் பெருமிதமாக இருக்கின்றது. சாம்பிளுக்குச் சில: சிறீலங்கா (சும்மா சொல்லக்கூடாது சிறீலங்கன் சிறீலங்கன் தான் ;)
"மாடப்புறாவே வா..ஒரு தூது செல்வோம் வா" ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாட்டு இது. தேவராஜன் மாஸ்டர் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடி "பருவ மழை" திரைக்காக வெளிவந்தது. அதன் மூல வடிவம் மலையாளத்தில் "மதனோற்சவம்" திரையில் வந்திருந்தது. அப்பாடல் காட்சியை இங்கே தருகின்றேன். Youtube உரிமை: தீபக்மோகன்
When I heard it first in Tamil I could not understand what bra had to do with the song. Then I realised that KJY has pronounced Pura as something closer to sounding bra.
இன்றைக்கு இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே தெரியாது. காரில் போகும் போதும் வீட்டுக் கணினியிலும் "காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்" மயம் தான். இப்போதெல்லாம் இளையராஜாவின் இசையில் வரும் பாடல்கள் பழைய தெம்பில் வருவதில்லையே என்ற ஏக்கம் அதிகப்படியாக வருவதில்லை. காரணம், யுவன் அந்த இடத்துக்குத் தற்காலிகமாக வந்துவிட்டார்.
தீபாவளி படத்தில் இடம்பெற்ற, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் இந்தப் பாடலின் ஒளிப்பகிர்வைப் பாருங்கள். காட்சியமைப்பையும் எழிலாக அமைத்திருக்கின்றார் இயக்குனர் எழில். ஸ்பெஷல் போனஸ் நம்ம தலைவி பாவனாவே தோன்றிருப்பது ;-) (youtube பாடல் உதவி:geethams)
Youtube மேற்கண்ட பாடலைத் தேடும் போது தன்னிச்சையாக வந்து விழுந்தது இன்னொரு பொக்கிஷம். சிங்கப்பூர் வசந்தம் சென்றல் தொலைக்காட்சியின் பாடகர் தேர்வு நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்காக வந்திருந்த நான்கு பாடகர்கள், "காதல் வைத்து காதல் வைத்துக் காத்திருந்தேன்" பாடலைப் பாடும் தொகுப்பைப் பாருங்கள். அருமையிலும் அருமை (youtube பாடல் உதவி:Haresh)
இந்தப் பாடலை வெறுமனே ஒப்புக்குக் குரல்வளத்தில் மட்டும் நிரூபிக்காமல் மிகவும் ரசித்துப் பாடியிருப்பது தான் மிகச் சிறப்பு. சில மேடைகளில் பசையால் மேடையில் ஒட்டிவைத்து நிற்பது போல் நின்றுகொண்டே பாடுவது கொடுமை.
(கொண்டோடி இதுக்கும் கண்டனம் சொல்ல வருவாரோ தெரியேல்லை ;-)
தமிழ் மலையாள மொழிகளில் தன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய நடிகை, பாடகி ஸ்ரீ வித்யாவைக் கான்சர் தின்று இன்றோடு ஒரு வருட நினைவில் "கற்பூர முல்லை" திரையில் இருந்து "பூங்காவியம்...பேசும் ஓவியம் என்ற பாடலைத் தருகின்றேன்.
பாசில் "எண்ட சூர்ய புத்ரிக்கு" என்று மலையாளத்தில் முதலில் இயக்கிப் பின்னர் இசைஞானி இளையராஜா தயாரிப்பில் தமிழில் ஸ்ரீ வித்யா, அமலா, ராஜா நடித்து வெளிவந்த திரைப்படமே "கற்பூர முல்லை". பெரும் புகழ்பெற்ற பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளாகப் பிறந்து, திரையுகம் புகுந்து வாழ்க்கைச் சுழலில் சிக்கிப் பின் திரைமறைவிலேயே மரணத்தின் பிடியில் அகப்பட்ட இந்த நடிகைக்கு இப்பாடல் சமர்ப்பணம்.
ஸ்ரீ வித்யா நேற்று தான் பிவித்திரம் பார்த்தேன் (மோகன்லால், ஸ்ரீ வித்யா, ஷோபானா) அருமையான நடிகை, அம்மா காதபாத்திரங்களுக்கு கணகச்சிதமாக பொருந்த கூடிய நடிகை.
பாடல் ராஜாவின் தாலாட்டுகளில் இந்த பூங்காவியம் முக்கிய இடம் உண்டு. இந்த படம் ராஜாவின் தயாரிப்பு என்பது இப்போது தான் தெரியும்.
அருமையான பாடல். ஸ்ரீவித்யாவிற்குத் தமிழில் மிகமிக அருமையான பாடல்கள் கிடைத்துள்ளன. தேசியவிருது பாடலில் கூட நடித்துள்ளாரே. ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம். கங்கை யமுனை என்று நடிகர் திலகத்தோடு ஆடியதாகட்டும்....தகதகவென ஆடவா என்று கே.பி.எஸ் பாட்டுக்கு சிவகுமாரோடு தாண்டவமாடியதாகட்டும்...பூங்காவியம் பாட்டில் "யார் மகள் இப்பூமகள்" என்று உருகியதாகட்டும். நிறைய நல்ல பாட்டுகள் ஸ்ரீவித்யாவிற்குக் கிடைத்தேயிருக்கின்றன.
அவருடைய நினைவுநாளில் பாடலை நினைவு கூர்ந்தமை சிறப்பு.
ஸ்ரீ வித்யா நேற்று தான் பவித்திரம் பார்த்தேன் (மோகன்லால், ஸ்ரீ வித்யா, ஷோபானா) அருமையான நடிகை, அம்மா காதபாத்திரங்களுக்கு கணகச்சிதமாக பொருந்த கூடிய நடிகை. // // இந்த படம் ராஜாவின் தயாரிப்பு என்பது இப்போது தான் தெரியும்.//
வாங்க தல
பவித்ரம், படமா அது காவியமல்லவா? விரிவாக அப்படத்தைப் பற்றிச் சொல்லவிருக்கின்றேன்.
கற்பூரமுல்லை படத்தில் டைட்டிலில் இளையராஜாவின் தயாரிப்பு என்று வந்தபோது நானும் பிரமித்துப் போனேன்.
முன்னர் றேடியோஸ்பதியில் தந்த பதிவில் ஒலியாகக் கேட்ட பாடல்களை இங்கே காட்சியோடு கானம் கலந்து தருகின்றேன். இப்பாடல்களை ஒலிவடிவில் மட்டும் கேட்க
80 களின் இறுதியில் தெலுங்கு தேசத்திலிருந்து ஏராளமான படங்கள் தமிழில் வெளியாகி நன்றாக ஓடி திருட்டு வீ.சி.டிக்கு நிகராக தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களுக்குத் தலைவலி தந்த காலமது.
விஜயசாந்தியின் "பூவொன்று புயலானது", டாக்டர் ராஜசேகரின் "இதுதாண்டா போலீஸ்", நாகர்ஜூனாவின் " உதயம்", "இதயத்தைத் திருடாதே" என்று தொடர்ந்து "எங்கடா உங்க எம்.எல்.ஏ", "ஆம்பள", "சத்தியமா நான் காவல்காரன்" என்று தமிழ் ரசிகர்களின் பொறுமைக்குச் சோதனை கொடுத்தது வேறு கதை. ஒன்றில் அதி தீவிர சண்டைக் காட்சிகள், அல்லது இளையராஜாவின் இசை இவை தான் இந்த மொழிமாற்றுப் படங்களின் வெற்றியை அப்போது தீர்மானித்தன.
அந்தவகையில் தமிழ் பேசக்கூடிய தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் ரேவதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்த, வெங்கடேஷின் அப்பா ராமா நாயுடுவே முதலீடு போட்ட தெலுங்கு திரைப்படமான "பிரேமா" இளையராஜாவின் இசையில் முத்திரை பதித்தது. பின்னர் அது தமிழில் "அன்புச் சின்னம்" என்று மொழிமாற்றப்பட்டும் ஹிந்தியில் "Love" என்று மீள சல்மான் கான், ரேவதி ஜோடியோடு எடுக்கப்பட்டும் வெளியாகின. தமிழ், தெலுங்குக்கு ராஜாவின் இசையே இருந்தது. தெலுங்கில் எஸ்.பி.பி ஐ வைத்து அழகான பாடல்கள் இருக்கும். அதில் "ஈ நாடே" என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. சித்ராவும் பாலுவும் பாடிய சிறந்த ஜோடிப்பாடல்களில் இதையும் அடித்துச் சொல்லலாம். இந்தப் பாடலைக் காண
தமிழில் வந்த பாட்டு
ஹிந்தியில் "Love" என்ற பெயரில் வெளியான போது அந்தப்படத்திற்கு இசை ஆனந்த் மிலிந்த். ஆனால் அவருக்குக் கை கொடுத்ததென்னவோ இளையராஜாவே தான். தெலுங்கில் "ஈ நாடே", தமிழில் "ஆத்தாடி ஏதோ ஆசைகள்" இந்த இரண்டு பாட்டின் மெட்டினையும், இசையில் சில சங்கதிகளையும் எடுத்து எஸ்.பி.பி, சித்ரா கூட்டோடு ஒரு மாதிரி ஒப்பேற்றிவிட்டார்.
ஹிந்தித் தழுவலும் இனிமையாகத் தான் இருக்கின்றது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய சேவையான ஏர்பஸ் A380 இன் வெள்ளோட்டம் காணுங்கள். இது உலகின் மிகப்பெரியதொரு பயணிகள் விமானமாக, சொகுசு கட்டிலில் படுத்துறங்கவும், களியாட்டத்தோடு வானில் பறக்கவும் வருகின்றது. உலகின் முதல் பயணிகள் சேவையாக A380 ஏர்பஸ் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி தன் சேவையை ஆரம்பிக்கின்றது இது.
காணொளி உதவி: SingaporeAirlinesSIN
Singapore Airlines CEO Chew Choon Seng takes the CEOs of Airbus and Rolls Royce on a tour of its first Airbus A380
கானா, நல்லப்பதிவு, இந்தியா கூட அந்த விமானத்திற்கு ஆர்டர் தந்துள்ளது, ஆனால் நமக்கு வர 2 வருடங்கள் ஆகும், இந்தியாவில் , சென்னை, மும்பை விமான ஓடுபாதைகள் தான் இந்த பெரிய விமானத்திற்கு ஏற்றதாக உள்ளதாம் ,மற்ற விமான நிலையங்களின் ஓடு பாதை நீளம் போதாது. மேலும் தனி ஏறி இறங்கும் பாதை கட்ட வேண்டி இருக்கும், அதெல்லாம் முடிந்தால் தான் வரும்.
இளையராஜா தெலுங்கில் இசைமைத்த, மணிரத்னம் இயக்கத்தில் வந்த படம் கீதாஞ்சலி, இது தமிழில் இதயத்தைத் திருடாதே என்று வந்தது. "அதில் சித்ரா பாடும் "ஜல்லண்ட" என்ற பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.
குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை. இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.
இதே திரைப்படத்தில் வந்த "ஓ ப்ரியா ப்ரியா" தெலுங்கு வடிவம். பாட்டும் அழகு, காட்சியும் அழகு. தெலுங்கில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களைத் தமிழ் வடிவத்தில் மனோ பாடியிருப்பார்.
ஒரு நல்ல பாட்டை எப்படியெல்லாம் காட்சியில் எடுத்துக் கெடுக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடலை இங்கு தருகின்றேன். கிராமத்து அத்தியாயம் திரையில் இருந்து கங்கை அமரன் வரிகளில், மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் "ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது" என்ற இனிய பாடல் எப்படிச் சுரத்தே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பாருங்கள். இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலப் பாடல்களை உரியமுறையில் காட்சிப்படுத்தலில் கொண்டுவராமல் சதி செய்த இப்படியான இயக்குனர்கள் பலர் இருக்கின்றார்கள். நாயகனும் சரி நாயகியும் சரி ஒரு ஜீவனும் இல்லாமல் வந்து போகிறார்கள். இவர்களை இளையராஜா ஆண்டவர் மன்னிப்பாராக.
எலோ டைரக்டரு ! தமிழ் நாட்டுல இதை விட நல்ல ஒரு ஆத்துமேடும் உம்ம கண்ணில் படலியா?
இதை விட இன்னும் எழிலான ஆற்றுப்படுக்கை, களனி எல்லாம் இலவச லொகேஷனாக தமிழகம் முழுதும் விரவியிருக்கின்றது. அதில் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பதே என் உள்ளக் கிடக்கை. மற்றப்படி ராஜேந்தர் மாதிரி முழு இதயத்தை செட்டில் வைத்துப் படம் எடுப்பது போல அவ்வளவு நெருக்கமாகவும் வரத்தேவையில்லை. உங்கட கதையைப் பார்த்தால் "உன் மூச்சுக் காற்று நான்" எண்ட வரி வந்தால் ஆளைச் சாகடிக்கோணுமோ எண்டு கேட்பியள் போல.
சுரத்து என்ற விசயத்தைக் கவனிப்போம். இப்பாடலின் துள்ளும் மெட்டுக்கும், இசைக்கும் அவர்கள் பிடிக்கும் அபிநயதை நன்றாகக் கவனித்துப் பார்த்தால் புரியும். எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத அபிநயங்கள்.
கானா தம்பி.. என் வாழ்க்கைல முதல் முறையா இப்பத்தான் இந்தக் கொடுமையை பார்க்குறேன்..
ஆனாலும் இது மட்டுமில்லே.. ஆரம்பக் கால விஜயகாந்த் படங்கள், கார்த்திக் படங்களிலெல்லாம் பார்த்தீர்களானால் அவைகளும் இந்த லட்சணத்தில்தான் எடுத்திருப்பார்கள்.
அது வேறு காலம் பிரபா.. அப்போது சினிமா வெறும் பொழுது போக்கு மட்டுமே.. சர்க்கஸ் மாதிரி.. அப்போது அழகுணர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம் என்பதெல்லாம் தேவையே இல்லாமல் இருந்தது. அதனால்தான் இப்படி ஒரு கொடுமையும் நடந்துள்ளது..
அந்தக் காலத்திலும் அழகுணர்ச்சியோடு பாடல்கள் எடுத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாரதிராஜா (வெள்ளுடைத் தேவதைகள் தவிர்த்து), மகேந்திரன், பாலுமகேந்திரா என்று பட்டியல் நீளும். என்ன செய்வது பிளாக்கில் தான் மொக்கை என்றால், இங்கே பாடலிலும் மொக்கை போடுகிறார்கள்.
பிரபா மிகவும் அருமையான பாட்டு. உங்கள் கருத்தோடு பாதிதான் ஒத்துப் போகிறேன். என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு முன் ஒரு டிஸ்கி. இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பாடியவர்கள், இசை எல்லாமே மிகமிக அருமை. சரி. இப்பொழுது கருத்துக்குப் போவோம்.
1. என்னைக் கேட்டால் பாடற்காட்சி மிகமிக இயல்பாகவும்..இசை பலபடிகள் இயல்பிற்கும் மேலாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. தமிழர்களில் நூற்றுக்கு 99 பேர் இப்பிடித்தான் ஆடுவார்கள். இப்படித்தான் சிரிப்பார்கள். இப்படித்தான் முழிப்பார்கள். ஆகையால்தான் பாடற்காட்சியும் இசையும் பொருந்தி வரவில்லை. இதை மிகத் திறமையாகக் கையாண்டவர் மகேந்திரன். யாரும் பாட மாட்டார்கள். பாடற்காட்சி போய்க்கொண்டேயிருக்க பின்னணியில் பாடல் ஒலிக்கும். நித்தம் நித்தம் நெல்லிச்சோறு விதிவிலக்கு. அதுவும் மெல்லிசை இசைக்கோர்வையோடு. இந்தப் பாடல் அளவிற்கு அதீத இனிமையான இசைக்கோர்வை இருக்காது. இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது.
2. மிகமிக இனிமையான இந்தப் பாடலை மிக அழகாகவும் படமாக்கியிருக்கலாம். பலர் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் செய்திருக்கலாம். அதில் மாற்றுக்கருத்தில்லை.
//என்னைக் கேட்டால் பாடற்காட்சி மிகமிக இயல்பாகவும்..இசை பலபடிகள் இயல்பிற்கும் மேலாகவும் இருப்பது போலத் தோன்றுகிறது. //
ராஜாவைக் குறை சொன்னதை மன்னிக்கிறேன் ;-)
இசையமைத்த பாட்டைத் தானே காட்சிப்படுத்தினார்கள்? எனவே ஒன்றுக்கு நாலு முறை யோசித்திருக்கலாம். குறிப்பா லொகேஷனிலும், மெதுவாக அபிநயம் பிடிக்கும் பாங்கையும், காமிரா கோணத்தையும் சிரத்தையோடு பார்த்திருக்கலாம்.
ஆகா...பிரபா, நான் எப்போ ராஜாவைக் குறை சொன்னேன்? அந்தப் பின்னூட்டத்துல தவறு எங்க நேர்ந்திருக்குன்னு எனக்குத் தோணியதைத் தெளிவாச் சொல்லீருக்கேனே.
=============================== இயக்குனர் மனதில் நினைத்ததும்...இசையமைப்பாளரிடம் சொன்னதும் சரியாகப் பொருந்திடவில்லை. ஆகையால்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ===============================
நானும் இயக்குனர் மேலதான தவறைச் சொல்லியிருக்கிறேன். :)
//உங்கட கதையைப் பார்த்தால் "உன் மூச்சுக் காற்று நான்" எண்ட வரி வந்தால் ஆளைச் சாகடிக்கோணுமோ எண்டு கேட்பியள் போல.//
ஐயா பிரபா, பிளேட்டை மாத்திப் போடுறியள் பாருங்கோ. உப்பிடிக் கேக்கக்கூடிய கட்சி உங்கட.. அதைத்தான் நான் கேள்வி கேட்டிருக்கிறன். நீங்கள் மாறி என்னையே திருப்பிக் கேக்கிறியள்.
சரி, அதை விடுங்கோ.. இஞ்ச ராகவனும் உஷா அக்காவும் சொன்னதோட கிட்டத்தட்ட ஒத்துப்போறன். இந்தப்படத்தின்ர கதையென்ன, அது எப்பிடி எடுக்கப்பட்டது எண்டது எனக்குத் தெரியாது. ஆனால் நாயக, நாயகி முகங்களும் சரி, பாடற்காட்சியும் சரி மிக இயல்பாயிருக்கு எண்டதை மட்டும் சொல்லிக்கொள்ளிறன்.
உங்களுக்கெல்லாம் வடநாட்டுக்காரி ஆராவது வந்து ஆடினாத்தான் பிடிபடும்... ;-)
திரும்பவும் சொல்றன். வட நாட்டுக்காரி தேவையில்லை. கொடுத்த பாட்டை ஒழுங்காப் பயன்படுத்தியிருக்கலாம். இயல்பு என்பது ஆளைச் சாகடிக்கும் வரை இருக்கவேணும் எண்டு எதிர்பார்க்கவில்லை ;)
சில பாடல்களை ஒலிவழியாகக் கேட்டுக் கொண்டே கண்களை மூடிக்கொண்டே ஆனந்த சயனத்தில் இருந்தால் எங்கோ ஒரு காற்று வெளியிடை கொண்டு போகும் வல்லமை கொண்டிருக்கும். இங்கே நான் தரும் பாடலும் அவ்வாறானதொன்றே. ஆனால் பாடலின் இனிமை இம்மியளவும் பிசகாது காட்சிக்குள்ளும் அடங்கியிருப்பதனால் இவ் ஒளி வழிப்பாடலைப் பார்ப்பதிலும் இரட்டிப்பு சுகம்.
"காற்று வெளியிடை கண்ணம்மா" என்று சங்கீதம் சொல்லித் தரும் மோகன்லாலில் ஆரம்பித்து அழகாக விரியும் காட்சிகளை நீங்களும் பார்த்து ரசியுங்கள். இப்பாடல் தன்மத்ரா திரையில் இருந்து மோகன் சித்தாரா இசையில் ஷீலா மணி, விது பிரதாப், உன்னிகிருஷணன் பாடக் கேட்கலாம். பாடல் உதவி: யூரிப் வழி tmsfreebird
நீண்ட நாளைக்குப் பின்பு மனம் விட்டுப் படம் முடியும் வரைக்கும் சிரித்து, இன்னும் நினைத்துச் சிரிக்க வைத்த படமொன்றை நேற்றுப் பார்த்தேன். "பாண்டிப் படா" (பான்டிப் படை) என்ற அந்த மலையாளப் படத்தில் திலீப், பிரகாஷ் ராஜ், நவ்யா நாயர் என்று ஏகத்துக்கும் பிரபலங்கள் பங்கு போட்டு நடித்த படம்.
"கில்லி" படத்தில் பிரகாஷ் ராஜ் ஏற்றிருந்த முத்துப்பாண்டி என்ற வில்லன் பாத்திரத்தை இன்னொரு களத்தில் நகைச்சுவையாகப் பயன்படுத்தினால் எப்படியிருக்கும்? அது தான் இப்படத்தின் ஒரு வரிக் கரு. ஆனால் படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை காட்சிக்குக் காட்சி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துச் சேட்டன்கள் ஒரு வழி பண்ணிவிட்டார்கள். படத்தின் கதைக்களமே தமிழ்நாட்டின் "கருவேலக்காடு" என்ற ஒரு கிராமம் என்பதால் தமிழும் மலையாளமும் கலந்த கலவையாகத் தான் படம் முழுதுமே எடுக்கப்பட்டிருக்கின்றது.
"தென்காசிப் பட்டணம்" படத்தின் இயக்குனர் ரபி மெகர்தீன் இயக்கியிருக்கிறார். இசை சுரேஷ் பீட்டர்ஸ்.
இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளைப் பார்த்து அனுபவியுங்கள்.
அந்தக் காட்சியில் உறுமி மேளமும் நாதஸ்வரமும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. கரகம் போன்றவை ஆடும்போது இவை பெருமளவு பயன்படுத்தப்படும். கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவற்றைப் பயன்படுத்திப் பாடலும் பின்னணி இசையும் இருக்கும்.
பிரபா!
தமிழ் வடிவம் படமாக இப்போது தான் பார்த்தேன்; இது விஜயகாந் படமா???
தேடிப் போட்டதுக்கு நன்றி!