யாழ்ப்பாணத்தின் ஊரெழு என்ற சிற்றூரின் மைந்தன், யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் இராசையா பார்த்திபன் என்னும் லெப்டினட் கேணல் திலீபன் தியாக தீபமாய் மறைந்து இன்றோடு 21 ஆண்டுகள் கழிந்து விட்டன.
சிறீலங்கா ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தம் உயர்கல்வியை உதறித்தள்ளி ஆயுதப் போராட்டமே சரியான வழி என்ற வகையில் அணி திரண்டவர்களில் திலீபன் அண்ணாவும் ஒருவர்.
ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்மக்களின் வாழ்வாதாரங்கள் காகிதத்தில் மட்டும் பேசப்பட்ட போது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து அறவழிப்போராட்டத்திலும் தன் பங்கைக் காட்டியவர் திலீபன் அண்ணா.
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3..அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். 4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். 5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்பனவே அந்தக் கோரிக்கைகள். அந்தக் கோரிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.
பாடசாலைகளே திரண்டு நல்லூருக்குப் படையெடுத்து திலீபன் அண்ணாவின் நீராகாரம் கூட அருந்தாத அறவழிப் போராட்டத்தைக் காணச் சென்றபோது காற்சட்டைப் பையனாய் அவரைப் போய்ப் பார்த்த காலம் இன்னும் பசுமையாய் இருக்கு. அந்தப் பன்னிரண்டாம் நாள் இதே நாள், 21 வருஷத்துக்கு முன்னர் நிதர்சனம் தொலைக்காட்சியில் தியாகி திலீபன் அண்ணாவின் வெற்றுடல் சாய்ந்திருக்க, அவரை பரிசோதிக்க நிதமும் வரும் வைத்தியர், சோதித்து விட்டு அவரைக் மூன்று முறை கும்பிட்டவாறே அப்படியே அசையாது நிற்க, முன்னே குழுமியிருந்த மக்கள் குமுறிக்கொண்டே பேரிரைச்சலோடு அழுது தொலைத்த கணங்கள் அவை.
அந்தப் பன்னிரண்டு நாட்களை கவிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் "திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்" என்ற நூலினை எழுதியிருக்கின்றார். அதனை யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் குரல்வடிவம் கொடுத்துத் தயாரித்ததை இங்கே பகிர்கின்றேன்.
முதலாம் நாள்
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்
ஐந்தாம் நாள்
ஆறாம் நாள்
ஏழாம் நாள்
எட்டாம் நாள்
ஒன்பதாம் நாள்
பத்தாம் நாள்
பதினோராம் நாள்
பன்னிரண்டாம் நாள்
தியாகி திலீபன் முழு ஆவணத் தொகுப்பு
ஒலித்தொகுப்பு நன்றி: யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்
புகைப்படங்கள் நன்றி: அகிலன் தளம், இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்கா
பாடசாலைகளே திரண்டு நல்லூருக்குப் படையெடுத்து திலீபன் அண்ணாவின் நீராகாரம் கூட அருந்தாத அறவழிப் போராட்டத்தைக் காணச் சென்றபோது காற்சட்டைப் பையனாய் அவரைப் போய்ப் பார்த்த காலம் இன்னும் பசுமையாய் இருக்கு.///
இது தியாகத்தின் வெளிப்பாடு... தமிழிழம் மலர இன்று பிரார்த்திப்போம்
இப்படியே எத்தனை பேர் இன்னுயிர் நீத்தாலும் வேடிக்கை தான் பார்க்கும் இந்த மனிதாபிமானம் இல்லாத உலகம். வெட்கம் கெட்வர்கள் இந்த கொடுமையை என்று கண்டு மாறுவார்களோ? நல்ல உள்ளங்கள் பிராத்தனையில் தமிழீழம் நிச்சயம் வெல்லும்.
இன்றைய இசைத் தொகுப்பு பகுதியிலே நான் தரவிருப்பது, ஒரே மெட்டு திரையிசையாக தமிழ், தெலுங்கு மலையாளப் பாடல்களாக வந்திருப்பதை அப்பாடல்களோடு இணைத்துத் தருகின்றேன்.
மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக்கோர்ப்பு ஒன்றை அப்பட இயக்குனர் பாலுமகேந்திரா, தனது ஓளங்கள் மலையாளப்படத்தின் பாடல் வடிவமாக்கித் தருமாறு இசையமைப்பாளர் இளையராஜாவைக் கேட்கவும் அவர் அப்படியே மலையாளப்பாடலாக்கிக் கொடுத்திருந்தார். அப்பாடல் "தும்பிவா தும்பக் குடத்தில்" என்று ஜானகி பாடியிருப்பார்.
பின்னர் இப்பாடல் மெட்டு " சங்கத்தில் பாடாத கவிதை" என்று இளையராஜாவும், எஸ்.ஜானகியும் ஓட்டோ ராஜா தமிழ்த் திரைப்படத்தின் காதல் ஜோடிப் பாடலாக அமைந்தது.
தொடர்ந்து அதே மெட்டு பாலுமகேந்திராவின் "நிரீக்சனா" என்ற தெலுங்குப் படத்தில் " ஆகாசம் ஏனாதிதோ" என்ற பாடலாகவும் அமைந்தது.
ஹிந்தி வடிவில் Aur Ek Prem Kahani படத்திற்காக
ஹிந்தியில் "Paa" படத்திற்காக
மலையாளக் குயில் துர்கா விஸ்வநாத் பாடும் "தும்பி வா"
ஓலங்கள் மலையாள படம் 'கண்ணே கலைமானே' என்று தமிழிலே 'remake' செய்யப்பட்ட போது அதே பாடல் 'நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே ' என்று எஸ்.ஜானகியின் குரலில் வெளிவந்தது பலருக்கு தெரியாது. அந்த பாடலின் வரிகள் அபாரமாக இருக்கும். ஆனால் அதை எழுதியது யார் என்று தெரிய வில்லை.
கண்ணே கலைமானே படம் தெலுங்கில் வந்த நிரீக்ஷணாவின் ரீமேக் அந்தப் படத்தை நானும் பார்த்திருந்தேன். பானுசந்தர் அர்ச்சனா ஜோடி. இது முன்னர் பாலுமகேந்திரா எடுத்த யாத்ரா என்ற மலையாளப்படத்தின் தெலுங்கு வடிவம்.
இந்தப் பாடலையும் இங்கேயுள்ள வீடியோ கடைகளில் தேடி எடுத்துப் போடுகின்றேன்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் இளையராஜா, அன்றும் இன்றும் என்றும் என ஒரு நிகழ்ச்சியை தந்தார். அதன் தீம் ம்யூசிக்காக அமைந்த மெட்டு இது. அதன் பிறகு சில நாள் என் மனதை விட்டு இறங்காமல் தம் தம் தம் தம்தன தம்தம் என்று தத்தகாரமாக இருந்த பாடல் இது. ஓட்டோ ராஜா திரைப்படத்துக்கு இளையராஜா , சங்கர் கணேஷ் உட்பட 4 அல்லது 5 பேர் இசையமைத்ததாக நினைவு.
அதுசரி, மலரே என்னென்ன கோலம் பாடல் வந்த ஆட்டோராஜா இதே படம் தானா? ஆட்டோ ராஜா என்று இன்னுமொரு திரைப்படமும் வெளியானதா
அந்தப் படமும் பார்த்திருக்கின்றேன், ரமேஷ் அர்விந்த், ரேவதி, ஹீரா நடித்தது. இந்தக் கதையையே பாலுமகேந்திரா ராஜா போல எல்லா மொழிகளிலும் பரவவிட்டுவிட்டார். முன்னர் காசெட்டில் பார்த்ததால் ஹிந்திப்படம் டிவிடியில் இருக்கின்றதா தெரியவில்லை, தேடுகின்றேன்.
பல இசையமைப்பாளர்கள் இசையமைத்த ஆட்டோ ராஜா தான் இது. ஆட்டோ ராஜா என்று இன்னொரு திரைப்படமும் வெளியானதாக நினைக்கின்றேன். ஜெயா ரிவியின் ராஜா படைத்த இசை விருந்துக்கான இசையாக இது பயன்பட்டது உங்களுக்கு தெரியும் தானே.
அடுத்தவர் ஜொள்ளா விட அழகுப் படங்களை அசத்தலா போட்டுத்தந்து அற்புதமாய் இருந்துவந்தார் நம்ம கும்மி புகழ் அன்பு நண்பர் சிவராமன்.! என்னமாயம் நடந்துச்சோ இப்பல்லாம் சொந்த ஜொள்ளை மட்டும் விட்டு கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார். நல்லபொண்ணு யாராவது நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை இல்லாம எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!
பிரபா ஒரு திருத்தம் ஜெர்மன் பூங்கொடி அல்ல. இந்திய பூங்கொடிதான். :)))/
ஆமா...ரொம்ப முக்கியம்....நாங்க தொண்டை தண்ணி வற்றிப்போய் கேட்டப்ப எல்லாம் சொல்லாம எல்லோருக்கும் தெரிஞ்ச பிறகு வந்து திருத்தம் எல்லாம் சொல்லுறீங்க....:))
"பூங்காற்று புதிதானது" கமலுக்கு ஹிந்தி ரஜினிக்கு தமிழ்
கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை திரைப்படம் கதையில் மட்டுமல்ல, பாடல்களாலும் மனசை வருடிய திரைப்படம். இப்படத்தின் முத்தான பாடல்களில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய "பூங்காற்று புதிதானது" பாடல் விலக்கமுடியாத ஒன்று.
இப்படம் ஹிந்தியில் சத்மா என்று எடுக்கப்பட்டப் போது அந்தப் பாடலின் மெட்டைக் கொஞ்சம் மாற்றி இசையில் ஏறக்குறைய ஒரே மாதிரி வாத்தியப் பின்னணியோடு சுரேஷ் வட்காரை வைத்துப் பாடவைத்தார் ராஜா.
பின்னர் ஹிந்திப் பாடலின் மெட்டையும் இசையையும் மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் "என் வாழ்விலே" என்ற பாடலாக, ரஜினி நடித்த "தம்பிக்கு எந்த ஊரு" திரைப்படத்தில் பயன்படுத்தினார் இளையராஜா. இசையில் வித்தியாசத்தை மட்டுமல்ல, புதுமையையும் படைத்தார் ராஜா என்பதற்கு இதுவோர் உதாரணம்.
கமல்ஹாசன் நடித்த "சத்மா" ஹிந்திப் படத்தின் பாடல் Ae zindagi gale laga le (You tube by: rafie282000)
இதே பாடல் மெட்டும் இசையும் ரஜினி நடித்த "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் என் வாழ்விலே" (You tube by:llBthere)
மேலே காட்டிய பாடல்களுக்கு மூலமான மூன்றாம் பிறை படப்பாடல் "பூங்காற்று புதிதானது"(You tube by: greatindiandons1)
மூன்றாம் பிறை இளையராஜாவின் இசை ராஜாங்கம் விரிவடைந்த ஒரு திரைப்படம். இதில் பெரும்பாலானவர்களை கண்ணே கலைமானே கவர்ந்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பூங்காற்று புதிதானது. அதிலும் "என் வாழ்விலே நீ வந்தது விதியென்றால் நீ எந்தன் உயிர் அன்றோ"... என்ற வரிகள். இது வைரமுத்துவின் வரிகள் என்று நினைக்கிறேன். அதே சமயம் கண்ணே கலைமானே கண்ணதாசன் எழுதிய இறுதிப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளே திரண்டு நல்லூருக்குப் படையெடுத்து திலீபன் அண்ணாவின் நீராகாரம் கூட அருந்தாத அறவழிப் போராட்டத்தைக் காணச் சென்றபோது காற்சட்டைப் பையனாய் அவரைப் போய்ப் பார்த்த காலம் இன்னும் பசுமையாய் இருக்கு.///
இது தியாகத்தின் வெளிப்பாடு... தமிழிழம் மலர இன்று பிரார்த்திப்போம்