யாழ்ப்பாணத்தின் ஊரெழு என்ற சிற்றூரின் மைந்தன், யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் இராசையா பார்த்திபன் என்னும் லெப்டினட் கேணல் திலீபன் தியாக தீபமாய் மறைந்து இன்றோடு 21 ஆண்டுகள் கழிந்து விட்டன.
சிறீலங்கா ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தம் உயர்கல்வியை உதறித்தள்ளி ஆயுதப் போராட்டமே சரியான வழி என்ற வகையில் அணி திரண்டவர்களில் திலீபன் அண்ணாவும் ஒருவர்.
ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்மக்களின் வாழ்வாதாரங்கள் காகிதத்தில் மட்டும் பேசப்பட்ட போது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து அறவழிப்போராட்டத்திலும் தன் பங்கைக் காட்டியவர் திலீபன் அண்ணா.
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3..அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். 4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். 5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்பனவே அந்தக் கோரிக்கைகள். அந்தக் கோரிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.
பாடசாலைகளே திரண்டு நல்லூருக்குப் படையெடுத்து திலீபன் அண்ணாவின் நீராகாரம் கூட அருந்தாத அறவழிப் போராட்டத்தைக் காணச் சென்றபோது காற்சட்டைப் பையனாய் அவரைப் போய்ப் பார்த்த காலம் இன்னும் பசுமையாய் இருக்கு. அந்தப் பன்னிரண்டாம் நாள் இதே நாள், 21 வருஷத்துக்கு முன்னர் நிதர்சனம் தொலைக்காட்சியில் தியாகி திலீபன் அண்ணாவின் வெற்றுடல் சாய்ந்திருக்க, அவரை பரிசோதிக்க நிதமும் வரும் வைத்தியர், சோதித்து விட்டு அவரைக் மூன்று முறை கும்பிட்டவாறே அப்படியே அசையாது நிற்க, முன்னே குழுமியிருந்த மக்கள் குமுறிக்கொண்டே பேரிரைச்சலோடு அழுது தொலைத்த கணங்கள் அவை.
அந்தப் பன்னிரண்டு நாட்களை கவிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் "திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்" என்ற நூலினை எழுதியிருக்கின்றார். அதனை யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் குரல்வடிவம் கொடுத்துத் தயாரித்ததை இங்கே பகிர்கின்றேன்.
முதலாம் நாள்
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்
ஐந்தாம் நாள்
ஆறாம் நாள்
ஏழாம் நாள்
எட்டாம் நாள்
ஒன்பதாம் நாள்
பத்தாம் நாள்
பதினோராம் நாள்
பன்னிரண்டாம் நாள்
தியாகி திலீபன் முழு ஆவணத் தொகுப்பு
ஒலித்தொகுப்பு நன்றி: யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்
புகைப்படங்கள் நன்றி: அகிலன் தளம், இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்கா
பாடசாலைகளே திரண்டு நல்லூருக்குப் படையெடுத்து திலீபன் அண்ணாவின் நீராகாரம் கூட அருந்தாத அறவழிப் போராட்டத்தைக் காணச் சென்றபோது காற்சட்டைப் பையனாய் அவரைப் போய்ப் பார்த்த காலம் இன்னும் பசுமையாய் இருக்கு.///
இது தியாகத்தின் வெளிப்பாடு... தமிழிழம் மலர இன்று பிரார்த்திப்போம்
இப்படியே எத்தனை பேர் இன்னுயிர் நீத்தாலும் வேடிக்கை தான் பார்க்கும் இந்த மனிதாபிமானம் இல்லாத உலகம். வெட்கம் கெட்வர்கள் இந்த கொடுமையை என்று கண்டு மாறுவார்களோ? நல்ல உள்ளங்கள் பிராத்தனையில் தமிழீழம் நிச்சயம் வெல்லும்.
பாடசாலைகளே திரண்டு நல்லூருக்குப் படையெடுத்து திலீபன் அண்ணாவின் நீராகாரம் கூட அருந்தாத அறவழிப் போராட்டத்தைக் காணச் சென்றபோது காற்சட்டைப் பையனாய் அவரைப் போய்ப் பார்த்த காலம் இன்னும் பசுமையாய் இருக்கு.///
இது தியாகத்தின் வெளிப்பாடு... தமிழிழம் மலர இன்று பிரார்த்திப்போம்