இன்றைய இசைத் தொகுப்பு பகுதியிலே நான் தரவிருப்பது, ஒரே மெட்டு திரையிசையாக தமிழ், தெலுங்கு மலையாளப் பாடல்களாக வந்திருப்பதை அப்பாடல்களோடு இணைத்துத் தருகின்றேன்.
மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக்கோர்ப்பு ஒன்றை அப்பட இயக்குனர் பாலுமகேந்திரா, தனது ஓளங்கள் மலையாளப்படத்தின் பாடல் வடிவமாக்கித் தருமாறு இசையமைப்பாளர் இளையராஜாவைக் கேட்கவும் அவர் அப்படியே மலையாளப்பாடலாக்கிக் கொடுத்திருந்தார். அப்பாடல் "தும்பிவா தும்பக் குடத்தில்" என்று ஜானகி பாடியிருப்பார்.
பின்னர் இப்பாடல் மெட்டு " சங்கத்தில் பாடாத கவிதை" என்று இளையராஜாவும், எஸ்.ஜானகியும் ஓட்டோ ராஜா தமிழ்த் திரைப்படத்தின் காதல் ஜோடிப் பாடலாக அமைந்தது.
தொடர்ந்து அதே மெட்டு பாலுமகேந்திராவின் "நிரீக்சனா" என்ற தெலுங்குப் படத்தில் " ஆகாசம் ஏனாதிதோ" என்ற பாடலாகவும் அமைந்தது.
ஹிந்தி வடிவில் Aur Ek Prem Kahani படத்திற்காக
ஹிந்தியில் "Paa" படத்திற்காக
மலையாளக் குயில் துர்கா விஸ்வநாத் பாடும் "தும்பி வா"
ஓலங்கள் மலையாள படம் 'கண்ணே கலைமானே' என்று தமிழிலே 'remake' செய்யப்பட்ட போது அதே பாடல் 'நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே ' என்று எஸ்.ஜானகியின் குரலில் வெளிவந்தது பலருக்கு தெரியாது. அந்த பாடலின் வரிகள் அபாரமாக இருக்கும். ஆனால் அதை எழுதியது யார் என்று தெரிய வில்லை.
கண்ணே கலைமானே படம் தெலுங்கில் வந்த நிரீக்ஷணாவின் ரீமேக் அந்தப் படத்தை நானும் பார்த்திருந்தேன். பானுசந்தர் அர்ச்சனா ஜோடி. இது முன்னர் பாலுமகேந்திரா எடுத்த யாத்ரா என்ற மலையாளப்படத்தின் தெலுங்கு வடிவம்.
இந்தப் பாடலையும் இங்கேயுள்ள வீடியோ கடைகளில் தேடி எடுத்துப் போடுகின்றேன்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் இளையராஜா, அன்றும் இன்றும் என்றும் என ஒரு நிகழ்ச்சியை தந்தார். அதன் தீம் ம்யூசிக்காக அமைந்த மெட்டு இது. அதன் பிறகு சில நாள் என் மனதை விட்டு இறங்காமல் தம் தம் தம் தம்தன தம்தம் என்று தத்தகாரமாக இருந்த பாடல் இது. ஓட்டோ ராஜா திரைப்படத்துக்கு இளையராஜா , சங்கர் கணேஷ் உட்பட 4 அல்லது 5 பேர் இசையமைத்ததாக நினைவு.
அதுசரி, மலரே என்னென்ன கோலம் பாடல் வந்த ஆட்டோராஜா இதே படம் தானா? ஆட்டோ ராஜா என்று இன்னுமொரு திரைப்படமும் வெளியானதா
அந்தப் படமும் பார்த்திருக்கின்றேன், ரமேஷ் அர்விந்த், ரேவதி, ஹீரா நடித்தது. இந்தக் கதையையே பாலுமகேந்திரா ராஜா போல எல்லா மொழிகளிலும் பரவவிட்டுவிட்டார். முன்னர் காசெட்டில் பார்த்ததால் ஹிந்திப்படம் டிவிடியில் இருக்கின்றதா தெரியவில்லை, தேடுகின்றேன்.
பல இசையமைப்பாளர்கள் இசையமைத்த ஆட்டோ ராஜா தான் இது. ஆட்டோ ராஜா என்று இன்னொரு திரைப்படமும் வெளியானதாக நினைக்கின்றேன். ஜெயா ரிவியின் ராஜா படைத்த இசை விருந்துக்கான இசையாக இது பயன்பட்டது உங்களுக்கு தெரியும் தானே.
அருமையான தொகுப்பு...நமக்கு பிடிச்சது.."தும்பிவா தான்...அதுல ஒரு தாய்மை இருக்கும் ;)