வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, July 19, 2008
காலம் மறக்காத Bobby பாடல்
Bobby திரைப்படம் 1973 இல் ராஜ்கபூர் இயக்கத்தில் அவர் மகன் ரிஷிகபூர் நாயகனாக நடித்த படம். அவரோடு ஜோடி சேர்ந்தவர் டிம்பிள் கபாடியா. அந்தக் காலகட்டத்தில் வந்த சிறப்பான பாடல்கள் வரிசையில் Bobby திரைப்படப் பாடல்களும் இடம்பிடித்துக் கொண்டன. அதிலும் குறிப்பாக Main shayar to nahin என்ற பாடல் இத்தனை வருடங்கள் கழித்தும் மலைத்தேனாய் இனிக்கும் பாடல்.

லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையில் சைலேந்திர சிங் பாடும் அந்தப் பாடல் இதோஇந்தப் பாடல் பின்னர் Hum Tum என்ற படத்தில் இருபது வருடங்கள் கழித்து அதே ரிஷிகபூருடன், படத்தின் நாயகன் சையிப் அலிகான் தோன்றிப் பாடும் காட்சிதொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் நடுவராக வந்த ரிஷிகபூர் தம்பதிகள் முன் பாடும் பாடகர், பின்னர் ரிஷிகபூரும் பாடுகின்றார்

posted by கானா பிரபா 6:52 AM  
 
15 Comments:
 • At July 19, 2008 at 7:22 AM, Blogger எம்.ரிஷான் ஷெரீப் said…

  மிக அருமையான பாடல் பிரபா.. காலங்கள் கழிந்தாலும் மனது மறக்காத இனிமையான பாடல். புதுப்படத்தில் வருவதைக் காட்டிலும் அதன் பழைய படத்தில் பாடல் நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

  மிகச் சிரமப்பட்டுத் தேடிப் போட்டிருக்கிறீர்கள்.
  பாராட்டுக்கள் நண்பரே !

   

 • At July 19, 2008 at 7:38 AM, Blogger CVR said…

  நான் பெரிதும் விரும்பி கேட்கும் பாடல்!!!
  இன்றைக்கு கேட்க வைத்ததற்ற்கு மிக்க நன்றி அண்ணாச்சி!!
  ஜப் சே தேகா என வரும்போது ஜெர்காகட்டும்,மகர் ஏக் ஹசீன் பின் வரும் wind instrument piece ஆகட்டும ரசித்து ரசித்து இழைத்திருப்பார்கள் இந்த பாடலை!!
  ரசித்து நாமும் கேட்டால் மிக இனிமையான ஒரு உணர்வை மனதில் ஏற்படுத்திவிடும் பாடல் இது!! :-)

   

 • At July 19, 2008 at 7:40 AM, Blogger தமிழ்நெஞ்சம் said…

 • At July 19, 2008 at 8:48 AM, Blogger ஹேமா said…

  கலக்கிறிங்க பிரபா.அருமையான தேடல்.எப்போதோ கேட்ட ஞாபகம்...அப்பிடித்தான் சொல்ல வேணும்.3-4 தரம் கேட்டாச்சு இப்போ.மொழி விளங்காட்டிலும் ஹம்மிங்ல பாடிட்டேன்.
  இதேபோல"ஆராதனா"
  என்று நினைக்கிறேன்.புகழ் பெற்ற பாடல்கள்.யாழ்ப்பாணத்தில் நாதஸ்வரத்தில் வாசித்துக் கூடக் கேட்டிருக்கிறேன்.முடிந்தால் தேடித் தாருங்கள் இனி.நன்றி பிரபா.

   

 • At July 19, 2008 at 8:55 AM, Blogger G.Ragavan said…

  இந்த லெச்சுமிக்காந்தனும் பியாரிலாலனும் (ரெண்டு பேரும் மன்னிக்க) எக்கச்சக்க இந்திப் படங்களுக்கு இசையமைச்சிப் புகழோட இருந்தவங்க. நெறைய ஹிட் பாட்டுகள் குடுத்திருக்காங்க.

  பாபி படம் ரிஷிகபூருக்கும் டிம்பிள் கபாடியாவுக்கும் வாழ்வளித்த படம். அந்தப் படத்திலிருந்து அருமையான பாடலைக் குடுத்தமைக்கு நன்றி.

   

 • At July 19, 2008 at 9:47 AM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said…

  சூப்பரண்ணே. :-)

   

 • At July 19, 2008 at 1:45 PM, Anonymous Anonymous said…

  பாபி , சாகர் போன்ற படப்பாடல்கள் என்னைக்கும் கேட்க இனிதானவை, சாகர் பாட்டுக்களும் போடுங்க

   

 • At July 19, 2008 at 6:00 PM, Blogger நிர்வாகி said…

  நல்ல பாடல்..
  :)

   

 • At July 19, 2008 at 6:45 PM, Blogger நிஜமா நல்லவன் said…

  தல...சூப்பர்!

   

 • At July 19, 2008 at 8:23 PM, Blogger கானா பிரபா said…

  ரிஷான்

  ஓல்ட் இஸ் கோல்ட் என்று சும்மாவா சொன்னாங்க ;-)

  காமிரா கவிஞர் சீவிஆர்

  உங்கள் ரசனைக்கு இப்பாடல் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் ;-)


  தொடுப்புக்களுக்கு நன்றி தமிழ் நெஞ்சம்

  ஹேமா

  ஆராதனா பாடல்களும் கலக்கல்,அவை பின்னர் தமிழில் சிவகாமியின் செல்வன் என்று மீள எடுத்திருந்தார்கள்.

   

 • At July 19, 2008 at 8:38 PM, Blogger ஆயில்யன் said…

  உங்க காலத்தில 1973ல் வெளியான பாட்டு என்று கேள்விப்பட்டேன்

  சூப்பரா இருக்கு!


  அனேகமா பாட்டு ஏதோ ஒரு நினைப்புல மனசுல வந்து குதிச்சிருக்கும்போல அப்படித்தானே அண்ணா :))) (

   

 • At July 19, 2008 at 9:22 PM, Blogger Ramya Ramani said…

  நல்ல பாடல்கள்

   

 • At July 20, 2008 at 2:38 AM, Blogger கானா பிரபா said…

  வாங்க ராகவன்

  ஒரு காலத்தில் லஷ்மிகாந்தனும், பியாரியும் நிறையவே நம் காதுகளை குத்தகைக்கு எடுத்தாங்க.

  மைபிரண்ட்

  நன்னி ;-)

  சின்ன அம்மணி

  சாகர் பாடல்களையும் தொகுத்துக் கொடுக்கின்றேன்

  நிர்வாகி & நிஜமா நல்லவன்

  நன்றி ;-)

  ஆயில்ஸ்

  இது என் போன பிறப்பில் கேட்டது. புனர்ஜென்ம ஞாபகம் எல்லாம் வந்திடுச்சு ;-)

  ரம்யா ரமணி

  வருகைக்கு நன்றி

   

 • At July 20, 2008 at 2:42 AM, Blogger கயல்விழி முத்துலெட்சுமி said…

  இந்தப்பாடலை நான் இலங்கை வானொலியில் தான் முதலில் கேட்டேன் பின்னர் அதை அப்படியே ரேடியோ ஓடும்போது ரெக்கார்ட் செய்து வைத்திருந்தேன்..
  :)

   

 • At July 20, 2008 at 4:54 AM, Blogger கானா பிரபா said…

  வாங்க முத்துலெட்சுமி

  இலங்கை வானொலியில் ஹிந்திப் பாடல்கள், மலையாளப் பாடல்களைப் போடும் பணி இன்றும் தொடர்கின்றது.

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
நெல்சன் மண்டேலா - 90
சுப்ரமணியபுரம் - விளம்பரப் பாடல்
இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் ரவீந்திரன்
மலையாளம் பறயும் கமல்ஹாசன்
மீரா நந்தன் வருகவே :-(::)
தசாவதாரம் நானும் பார்த்தேன்
கமல் ஹாஸ்யம் 10
எனக்குப் பிடித்த 10 கமல்(கள்)
பச்சப்பனம் தத்தே பொன்னாரப்பூ முத்தே...!
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது