பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஐம்பது வரையான படங்களுக்கு இசையமைத்தும் இருக்கின்றார். அதில் தெலுங்கில் தான் அதிகம் வந்திருக்கின்றன. இவரின் இசையமைப்புத் திறனுக்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் சிகரம் திரைப்படம். கே.பாலசந்தரின் உதவியாளராக அனந்து பலகாலம் இருந்து பின் கவிதாலா சார்பிலேயே எடுத்த படம் அது.
பார்த்திபன் நடித்த தையல்காரன் திரைப்படம், எண்பதுகளில் கலக்கிய கால் இழந்த நடிகை சுதா சந்திரன் நடித்த மயூரி போன்றவற்றிற்கும் இசை இவர் தான். இறுதியாக தன் மகன் சரண் தயாரிப்பில் வந்த "உன்னைச் சரணடைந்தேன்" திரைப்படத்திற்கும் இசை கொடுத்திருந்தார். அப்படத்தின் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனாலும் இசைஞானி இளையாராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, மற்றும் எஸ்.பி.பி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் பாடிய "நட்பு நட்பு" பாடல் ஒரு புதுமை படைத்தது.
ரஜினிகாந்த் நடித்த "துடிக்கும் கரங்கள்" திரைப்படத்தின் இசை கூட எஸ்.பி.பி தான். ஆனால் அவரின் உத்தியோகபூர்வ தளத்தில் கூட அப்படத்தைத் இசையமைப்புப் பட்டியலில் போட மறந்து விட்டார். அப்படத்தில் இருந்து
சிகரம் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே முத்துக்கள் என்றாலும், எடுத்த எடுப்பில் முதலில் என்னைக் கவராவிட்டாலும் இப்போது இந்தப் பாடலை எப்போதும், எத்தனை முறை கேட்டாலும் காதில் தேன் வந்து பாயுது. "இதோ இதோ என் பல்லவி"
இதோ இதோ என் பல்லவி பாடலை முதற்தடவையாக மேடையில் பாடுகின்றார் எஸ்.பி.பி. இணைந்து பாடுகின்றார் சைந்தவி. எனக்கு மிகவும் பிடித்த, ஆனால் இன்றுவரை அதிகம் பேசப்படாத இசையமைப்பாளர் தாயன்பன் இந்த இசை நிகழ்ச்சியை வழங்குகின்றார். சுமார் 8 வருசங்களுக்கு முன்னர் தாயன்பன் அவுஸ்திரேலியா வந்திருந்தபோது தன்னுடைய முழு இசைக்கலைஞர்களையும் கொண்டு வந்து எந்த வித கீபோர்ட் ஜாலமும் இல்லாமல் நேரடி இசைவிருந்து கொடுத்தவர். தாயன்பன் இசையில் வந்த "உன்னிடத்தில் நான்" என்ற திரைப்படத்தில் "நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்" என்ற ஜேசுதாஸ், வாணி ஜெயராம் பாடலைக் கேட்டுப்பாருங்கள். (Dhool தளத்தில் அந்தப் பாடலைக் கேட்க) தாயன்பன் திறமை புரியும்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகர். இசையமைப்பாளராக அவர் சில பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பாடகராகவே சிறப்பாக ஜொலித்தார் என்பது என் கருத்து. எல்லாப் பாடகர்களிலும் ஒரு குட்டி இசையமைப்பாளர் ஒளிந்திருக்கிறார். மயூரி படத்திற்கு இசை எஸ்.ஜானகி. எஸ்.பி.பி கிடையாது. டி.எம்.எஸ் இசையமைத்த முருகன் பாடல்கள் மிகப் பிரபலம். இசையமைப்பாளராக பி.சுசீலாவும் சில பல பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
துடிக்கும் கரங்கள் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. இளையராஜாவின் சாயல் தெரிந்தாலும் எல்லாப் பாடல்களுமே அருமை. மேகம் முந்தானை, சந்தனம் பூசும் மஞ்சள் நிலாவும் பாடல்களும் மிக அருமை. சிகரம்தான் உண்மையிலேயே சிகரம்.
சிகரம் படத்தில் எனக்கு பிடித்தது "வர்ணம் கொண்ட வெண்ணிலவே" பாட்டுதான்.... என்ன ஒரு மெலடி,என்ன ஒரு மெலடி..... நல்ல பதிவு தல! பாடகராகவே பெரும்பான்மையானவருக்கு தெரிந்திருக்கும் எஸ் பி பி பத்தி மேலே தெரிய வெச்சிருக்கீங்க.. :) வாழ்த்துக்கள்!!
எஸ்.பி.பியின் பிரத்தியோக தளத்திலும் மயூரிக்கு இசை அவரே என்று போட்டிருக்கிறார்கள் :( இருங்க வீசிடி எடுத்துப் பார்த்து உறுதிப்படுத்துகின்றேன். பாலு உண்மையில் பாடகராகத் தான் என்றுமே மிளிர்வார். சிகரம் போன்றவை அத்திப்பூ போலத் தான்.
தல
நீண்ட நாளைக்குப் பிறகு கேளுங்க கேளுங்க, கேட்டுக்கொண்டே இருங்க.
S.Pஅவர்களே ஒரு சிகரம்தானே.அவரைத்தாண்ட இன்னும் யாரும் இல்லையென்றே சொல்வேன்.யார் என்னதான் பாடினாலும்(K.Jஜேசுதாஸ் தவிர) அவர்களின் குரலில் தழுவும் பாவம் யாரிடமும்"இல்லையே!இதோ இதோ என் பல்லவி..."அருமையான பாட்டு.கேட்க கேட்கத் திகட்டாததாய். சைந்தவிக்கும் சபாஷ்.ஏன்..."மயூரி" படப் பாடல்களும் அருமை.ஆனால் ஏனோ அவைகள் பிரபல்யம் ஆகவில்லை. அந்தப் பாடல்களையும் எங்காவது சேர்த்துக் கொள்ளுங்கள் பிரபா.என்ன ஒரு கவலை என்றால் S.P.அவர்கள் தன் திறமை வளர்வதோடு தன் உடம்பையும் அதிகமாக வளர்க்கிறாரே!!!இன்னும் பல காலங்கள் அவர் வாழவேண்டும்.
///சிகரம் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே முத்துக்கள் என்றாலும்//
உண்மை தான். இப்படத்தின் எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும்.