மனசை இலேசாக்கும் படைப்புக்கள் மட்டுமன்றி, பாரமாக இறங்கும் பாத்திரங்களாகவும் நடித்த ரஜினிகாந்த்தின் படங்களில் எனக்குப் பிடித்த பத்துப் படங்கள் இவை. மனம் சஞ்சலப்படும் வேளையில் ரஜினியின் நகைச்சுவை கலந்த படங்கள் அருமருந்து.
கடந்த மார்ச் மாதம் மலேசியாவின் மலாக்கா நகர் போன போது ஒரு வீடியோக்கடையின் கண்ணியில் தென்பட்ட ரஜினியின் அழகான வால்பேப்பரை அப்படியே என் கமராவில் சுட்டிருந்தேன். அந்தப் படத்தைப் போடவும் ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கு ;-)
கீழே நான் தரும் படங்களின் வரிசை அவை வந்த ஆண்டில் தான் இருக்கின்றன. என் ரசனைத் தர வரிசையில் அல்ல. இங்கே தேர்ந்தெடுத்த காட்சிகளின் யூடிப் உரிமைதாரார்களுக்கு நன்றி
//rapp said... புவனா ஒரு கேள்விக்குறி விட்டுட்டீங்களே :(:(:(//
புவனா ஒரு கேள்விக்குறி, அவள் அப்படித்தான் போன்ற படங்களும் விலக்க முடியாதவை, ஆனால் எனக்கு பிடித்த பட்டியலில் இந்தப் படங்கள் ஏனோ நீண்ட நாளாய் ஒட்டியிருக்கு.
நான் ரஜனி ரசிகை இல்லை. என்றாலும் நீங்கள் வரிசைப் படுத்திய படங்கள் அத்தனையுமே அருமை. இவைகளோடு ரஜனி அவர்களின் எங்கேயோ கேட்ட குரல்,புவனா ஒரு கேள்விக்குறி,நான் அடிமை இல்லை, புதுக் கவிதை போன்ற படங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அவரின் அசைவிலும் குரலிலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.என் சிநேகிதியின் 3 வயது மகன் ரஜனியை ஐயா என்கிறான்.ஐயாவின் படம் போட்டால் மட்டுமே குழப்பம் இல்லாமல் சாப்பிட்டும் விடுகிறான்.அப்போ 3 லிருந்து 90 வரை என்று சொல்லலாமா பிரபா!!!
புவனா ஒரு கேள்விக்குறி கை கொடுக்கும் கை (இதுதான் வடுவூர் குமார் சொல்ற படம்ன்னு நினைக்கிறேன்!) தில்லுமுல்லு அவள் அப்படித்தான் காயத்ரி பைரவி தம்பிக்கு எந்த ஊரு
இதெல்லாம் கூட சூப்பராக இருக்கும் அடுத்த லிஸ்டு ரெடி பண்ணுங்க :)))
//ஹேமா said... அவரின் அசைவிலும் குரலிலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.சொல்லலாமா பிரபா!!! // கிட்டதட்ட இந்த ஒரு விசயம்தான் 25 வருடங்களுக்கும் மேலாக இன்று இருந்துக்கொண்டே இருக்கும் அதிசயம்!!!!!!!
நம்ம வலையுலக பாட்டுச் சுனாமி, சுஜாதா ரசிகர் மன்றத்தின் ஒரே ஒரு தலைவி, இளயதளபதி படம் பிடிச்சாலும் சித்துவின் தீவிர ஏஸி (விசிறியை விட பெட்டர்)
.:: மை ஃபிரண்ட் ::. இன் பிறந்த நாள் இன்று. அவருக்குப் ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ள பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துச் சொல்லி அமர்கின்றோம் அவரின் உலகெங்கும் சந்து, குறுக்கு ஓடை, மேல் மாடி, கீழ்மாடி, குடிசை, மேன்ஷனில் வாழும் ப்ரெண்ட்ஸ்.
தங்கைக்கோர் கீதமாக நாம் தருவது
அவருக்காக "ஓ மை ஃபிரண்ட்" (மை ஹாப்பி டேஸ் பாட்டு)
சுஜாவின் ரசிகையான .:: மை ஃபிரண்ட் ::.க்கு கொடுக்கும் ஸ்பெஷல் கிப்ட் இது
ஆமாக்கா.. எங்கக்கா மாதினியும் அண்ணன் சபரியும் ஸ்க்கூலுக்கெல்ல்லாம் போறாங்களாமே.. எங்கவீட்டுல என்னை இன்னும் ஸ்கூலுக்கே அனுப்பல. ஏன்னு கேட்டா, இன்னும் சின்ன ப்பிள்ளை. 2 வயசுக்க்கெல்லாம் ஸ்கூலுக்கு போனா மத்தவங்கல டிஸ்டர்ப் பண்ணுவேன்னு ப்ளாக் திறந்து க்கொடுத்து விளையாட சொல்றாங்க.. என்ன கொடும பிரபா இது! :-P
குடும்பத்தோட வந்து வழ்த்தமைக்கு நன்றி. என் சார்பா இன்று கலா அக்கா வீட்டுல விருந்து. கலா அக்கா சமைத்து அனைவருக்கும் பறிமாருவார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ;-)
Bobby திரைப்படம் 1973 இல் ராஜ்கபூர் இயக்கத்தில் அவர் மகன் ரிஷிகபூர் நாயகனாக நடித்த படம். அவரோடு ஜோடி சேர்ந்தவர் டிம்பிள் கபாடியா. அந்தக் காலகட்டத்தில் வந்த சிறப்பான பாடல்கள் வரிசையில் Bobby திரைப்படப் பாடல்களும் இடம்பிடித்துக் கொண்டன. அதிலும் குறிப்பாக Main shayar to nahin என்ற பாடல் இத்தனை வருடங்கள் கழித்தும் மலைத்தேனாய் இனிக்கும் பாடல்.
லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையில் சைலேந்திர சிங் பாடும் அந்தப் பாடல் இதோ
இந்தப் பாடல் பின்னர் Hum Tum என்ற படத்தில் இருபது வருடங்கள் கழித்து அதே ரிஷிகபூருடன், படத்தின் நாயகன் சையிப் அலிகான் தோன்றிப் பாடும் காட்சி
தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் நடுவராக வந்த ரிஷிகபூர் தம்பதிகள் முன் பாடும் பாடகர், பின்னர் ரிஷிகபூரும் பாடுகின்றார்
மிக அருமையான பாடல் பிரபா.. காலங்கள் கழிந்தாலும் மனது மறக்காத இனிமையான பாடல். புதுப்படத்தில் வருவதைக் காட்டிலும் அதன் பழைய படத்தில் பாடல் நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
மிகச் சிரமப்பட்டுத் தேடிப் போட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் நண்பரே !
நான் பெரிதும் விரும்பி கேட்கும் பாடல்!!! இன்றைக்கு கேட்க வைத்ததற்ற்கு மிக்க நன்றி அண்ணாச்சி!! ஜப் சே தேகா என வரும்போது ஜெர்காகட்டும்,மகர் ஏக் ஹசீன் பின் வரும் wind instrument piece ஆகட்டும ரசித்து ரசித்து இழைத்திருப்பார்கள் இந்த பாடலை!! ரசித்து நாமும் கேட்டால் மிக இனிமையான ஒரு உணர்வை மனதில் ஏற்படுத்திவிடும் பாடல் இது!! :-)
"இந்தப் போரில் ஒருவர் வெற்றி பெறுவார். மற்றவர் தோல்வி காண்பார். ஆனால், போரின் பின்னர் நாட்டின் சாம்பல் மேட்டில் நின்றாவது வெற்றி பெற்றவரும் தோல்வி கண்டவரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசத்தான் வேண்டும். உங்களுக்கே வெற்றி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாமே வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நினைக்கின்றோம்.
ஆனால், பெறுமதியான பகையாளிகள் என்ற வகையில் ஒருவரை மற்றவர் மதிப்பதற்கான வாய்ப்பை எம்மிடம் இருந்து அபகரித்து தவறிழைத்து விடாதீர்கள். இணக்கமான கருத்தைக் கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் நீங்களும் நாங்களும் எதிரிகளாக இருந்தாலும் உங்களை மதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எங்களுக்குத், தாருங்கள்" - நெல்சன் மண்டேலா ஐலண்ட் சிறையின் நிலைவரங்கள் குறித்து சிறைச்சாலை ஆணையாளரான வெள்ளையினத்தவர் ஜெனரல் ஜே.சி.ஸ்ரெயினுடன் பேசுகையில் சொன்னது.( தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியற் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒருமுறை ஜேவிபி இனவாதக் கட்சிக்கு இதை மேற்கோளிட்டிருந்தார், நன்றி தமிழ் நேசன் தளம்)
ஜீலை 18, 1918 இல் பிறந்த ஆபிரிக்கச் சிங்கம் நெல்சன் மண்டேலாவுக்கு இன்றோடு வயது 90 ஆகின்றது. நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 வருட சிறைவாசம் அனுபவித்து, பின்னர் 1990 இல் அவர் சுதந்திரக் காற்றைச் சுவாசித்த போது தன் உடன்பிறப்புக்களுக்கும் ஒரு விடியலை ஏற்படுத்தினார். தென் ஆபிரிக்காவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் ஆனார். நோபல் கமிட்டி அவருக்கு சமாதான விருதைக் கொடுத்தது. ஒருகாலத்தில் ஒதுக்கிய தேசங்கள் சிவப்புக் கம்பளம் இட்டு வரவேற்றன.இவரின் வாழ்வின் சரிதம் Long Walk to Freedom என்ற பெயரில் வடிக்கப்பட்டிருக்கின்றது. நெல்சன் மண்டேலா - சுதந்திரத்திற்கான விலையையும், உறுதியையும் கண் முன் காட்டி நிற்கும் சாட்சியம்.
"நான் வெள்ளையர்களின் அதிகாரத்தை எதிர்க்கிறேன். அதே போல் கறுப்பர்களின் அதிகாரத்தையும் மறுக்கிறேன். தென் ஆப்பிரிக்கா,ஒரு சுதந்திர பூமி! இங்கு அனைத்து மக்களும் சமமான அதிகாரத்துடன்,சகோதரர்களாகக் கைகோத்து வாழ வேண்டும். இதுவே என் கனவு. எனது இந்தக் கனவு முழுமையாக நிறைவேறும் வரை,எனது போராட்டம் தொடரும். இதற்காக என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று உயரிய மனிதத் தத்துவத்தை வெளிப்படுத்திய அந்த உரைதான், மண்டேலா எனும் சாதாரண தலைவனைப் பிற்பாடு வரலாற்று நாயகனாக மாற்றின. ஓர் அபூர்வ நாயகர்... நெல்சன் மண்டேலா!கறுப்பு காந்தி.
90 ஆவது பிறந்தநாளில் உங்களோடு சேர்ந்து நாங்களும் நினைத்துக் கொண்டோம். தொகுத்துத் தந்தமைக்கு நன்றி பிரபா.
சுப்ரமணியபுரம் திரைப்படம் வருவதற்கு முன்னரே அந்தப் படத்தின் ஸ்டில்ஸ், இயக்குனர் சசிகுமாரின் பேட்டி போன்றவற்றிலிருந்தே இப்படம் பெரியதொரு கவனத்தை ஈர்க்கும் என்று நினைத்திருந்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும் இதுவரை வந்த அப்படத்தின் திரை விமர்சனங்கள் நல்லதொரு விதையை சசிகுமார் விதைத்திருப்பதைக் காட்டியிருக்கின்றது. நீண்ட நாட்களாகத் தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர் என்ற வேலையைச் செய்து வந்த ஜேம்ஸ் வசந்தனிடம் இவ்வளவு திறமையான இசையமைப்பாளர் இருந்திருக்கிறார் என்பதைக் காலம் கடந்தது தான் தமிழ் சினிமா கண்டு கொண்டது.
விகடனில் வெளிவந்த பேட்டி ஒன்றில் சுப்ரமணியபுரம் படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பாடலை உருவாக்கியிருப்பதாகவும், அதைப் படத்தில் வைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லியிருந்தார். ஹிந்தித் திரைப்படங்களுக்கு இவ்வாறான விளம்பரப் பாடல்கள் வருவது வழமை. முன்னர் விக்ரம் நடித்த கிங் படத்திற்காகவும் மேலதிகமாகப் பாடல்கள் எடுத்து வீடியோ ஆல்பம் ஆக்க நினைப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். செய்தார்களோ தெரியவில்லை. இதோ சுப்ரமணியபுரத்துக்காக எடுக்கப்பட்ட அந்த விளம்பரப் பாடல். நன்றி: istreamindia
//கானா பிரபா said... புதுகைத் தென்றல் மற்றும் தமிழன்
வருகைக்கு நன்றீங்கோ
பெல்பொட்டமும் சிகையலங்காரமும் பழைய ஸ்ரூடியோவில தான் இப்ப பார்க்கலாம் ;) // உங்களை மாதிரி அந்த காலத்து ஆளுங்க சொன்னாத்தான் எங்களுக்கும் கூட இந்த பெல்பாட்டமும் ஹேர் ஸ்டைலுமே தெரியவரும் :)
படம் நல்லா இருக்கு என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அவசியம் பார்க்க நினைத்திருக்கிறேன்.
ஆயில்ஸ் அண்ணே நீங்க என்ன தான் மாஞ்சு மாஞ்சு உங்களை சின்ன புள்ளை மாதிரி காட்டிக்க முயற்சி பண்ணினாலும் உங்க உண்மையான வயசு எனக்கு தெரியும்னு மட்டும் சொல்லிக்கிறேன்:)
தம்பி உன்னைய நல்லவன்னு நம்பிதானே உன்கிட்ட அம்புட்ட தகவலையும் சொன்னேன்!(பொண்ணு பாக்கறேன்னு வேற நீங்க என்கிட்ட போட்டோ வாங்குனீங்க!) எல்லாத்தையும் இப்படி பப்ளிக்கா ஜொன்னா நான் இன்னா பண்றது! சரி விட்டுதள்ளுங்க! ஆனா அந்த போட்டோவை மட்டும் தனியா பதிவு மாதிரி போட்டுடாதீங்க ப்ளீஸ்! ப்ளீஸ்!!
//நிஜமா நல்லவன் said... படம் நல்லா இருக்கு என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அவசியம் பார்க்க நினைத்திருக்கிறேன்.
ஆயில்ஸ் அண்ணே நீங்க என்ன தான் மாஞ்சு மாஞ்சு உங்களை சின்ன புள்ளை மாதிரி காட்டிக்க முயற்சி பண்ணினாலும் உங்க உண்மையான வயசு எனக்கு தெரியும்னு மட்டும் சொல்லிக்கிறேன்:) //
அடப்பாவி நல்லவா! இதுல வேற நீ அந்த ******* பேரையும் கூட சொல்லியிருக்க போல இது ஆண்டவனுக்கே அடுக்காது :(((
அப்பன்னா நீங்க சொல்ற மாதிரி நான் வடக்கு நோக்கி நகரும் யந்திரமாகிவிடுவேனா????? (ஆயில்யா! வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் உன் பிளாக்கு எங்க போவும்?????)///
ஆயில்ஸ் அண்ணா ஒரு வாரமா புது பதிவுகள் ஏதும் இல்லையே? வடக்கு நோக்கி செல்ல ஆயத்தமாகிவிட்டீர்கள் என்றே நினைக்க தோன்றினாலும் அப்படி ஒன்று நடந்து விடக்கூடாது என்று மனம் பதறுகிறது:)
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஐம்பது வரையான படங்களுக்கு இசையமைத்தும் இருக்கின்றார். அதில் தெலுங்கில் தான் அதிகம் வந்திருக்கின்றன. இவரின் இசையமைப்புத் திறனுக்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் சிகரம் திரைப்படம். கே.பாலசந்தரின் உதவியாளராக அனந்து பலகாலம் இருந்து பின் கவிதாலா சார்பிலேயே எடுத்த படம் அது.
பார்த்திபன் நடித்த தையல்காரன் திரைப்படம், எண்பதுகளில் கலக்கிய கால் இழந்த நடிகை சுதா சந்திரன் நடித்த மயூரி போன்றவற்றிற்கும் இசை இவர் தான். இறுதியாக தன் மகன் சரண் தயாரிப்பில் வந்த "உன்னைச் சரணடைந்தேன்" திரைப்படத்திற்கும் இசை கொடுத்திருந்தார். அப்படத்தின் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனாலும் இசைஞானி இளையாராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, மற்றும் எஸ்.பி.பி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் பாடிய "நட்பு நட்பு" பாடல் ஒரு புதுமை படைத்தது.
ரஜினிகாந்த் நடித்த "துடிக்கும் கரங்கள்" திரைப்படத்தின் இசை கூட எஸ்.பி.பி தான். ஆனால் அவரின் உத்தியோகபூர்வ தளத்தில் கூட அப்படத்தைத் இசையமைப்புப் பட்டியலில் போட மறந்து விட்டார். அப்படத்தில் இருந்து
சிகரம் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களுமே முத்துக்கள் என்றாலும், எடுத்த எடுப்பில் முதலில் என்னைக் கவராவிட்டாலும் இப்போது இந்தப் பாடலை எப்போதும், எத்தனை முறை கேட்டாலும் காதில் தேன் வந்து பாயுது. "இதோ இதோ என் பல்லவி"
இதோ இதோ என் பல்லவி பாடலை முதற்தடவையாக மேடையில் பாடுகின்றார் எஸ்.பி.பி. இணைந்து பாடுகின்றார் சைந்தவி. எனக்கு மிகவும் பிடித்த, ஆனால் இன்றுவரை அதிகம் பேசப்படாத இசையமைப்பாளர் தாயன்பன் இந்த இசை நிகழ்ச்சியை வழங்குகின்றார். சுமார் 8 வருசங்களுக்கு முன்னர் தாயன்பன் அவுஸ்திரேலியா வந்திருந்தபோது தன்னுடைய முழு இசைக்கலைஞர்களையும் கொண்டு வந்து எந்த வித கீபோர்ட் ஜாலமும் இல்லாமல் நேரடி இசைவிருந்து கொடுத்தவர். தாயன்பன் இசையில் வந்த "உன்னிடத்தில் நான்" என்ற திரைப்படத்தில் "நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்" என்ற ஜேசுதாஸ், வாணி ஜெயராம் பாடலைக் கேட்டுப்பாருங்கள். (Dhool தளத்தில் அந்தப் பாடலைக் கேட்க) தாயன்பன் திறமை புரியும்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த பாடகர். இசையமைப்பாளராக அவர் சில பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பாடகராகவே சிறப்பாக ஜொலித்தார் என்பது என் கருத்து. எல்லாப் பாடகர்களிலும் ஒரு குட்டி இசையமைப்பாளர் ஒளிந்திருக்கிறார். மயூரி படத்திற்கு இசை எஸ்.ஜானகி. எஸ்.பி.பி கிடையாது. டி.எம்.எஸ் இசையமைத்த முருகன் பாடல்கள் மிகப் பிரபலம். இசையமைப்பாளராக பி.சுசீலாவும் சில பல பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
துடிக்கும் கரங்கள் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. இளையராஜாவின் சாயல் தெரிந்தாலும் எல்லாப் பாடல்களுமே அருமை. மேகம் முந்தானை, சந்தனம் பூசும் மஞ்சள் நிலாவும் பாடல்களும் மிக அருமை. சிகரம்தான் உண்மையிலேயே சிகரம்.
சிகரம் படத்தில் எனக்கு பிடித்தது "வர்ணம் கொண்ட வெண்ணிலவே" பாட்டுதான்.... என்ன ஒரு மெலடி,என்ன ஒரு மெலடி..... நல்ல பதிவு தல! பாடகராகவே பெரும்பான்மையானவருக்கு தெரிந்திருக்கும் எஸ் பி பி பத்தி மேலே தெரிய வெச்சிருக்கீங்க.. :) வாழ்த்துக்கள்!!
எஸ்.பி.பியின் பிரத்தியோக தளத்திலும் மயூரிக்கு இசை அவரே என்று போட்டிருக்கிறார்கள் :( இருங்க வீசிடி எடுத்துப் பார்த்து உறுதிப்படுத்துகின்றேன். பாலு உண்மையில் பாடகராகத் தான் என்றுமே மிளிர்வார். சிகரம் போன்றவை அத்திப்பூ போலத் தான்.
தல
நீண்ட நாளைக்குப் பிறகு கேளுங்க கேளுங்க, கேட்டுக்கொண்டே இருங்க.
S.Pஅவர்களே ஒரு சிகரம்தானே.அவரைத்தாண்ட இன்னும் யாரும் இல்லையென்றே சொல்வேன்.யார் என்னதான் பாடினாலும்(K.Jஜேசுதாஸ் தவிர) அவர்களின் குரலில் தழுவும் பாவம் யாரிடமும்"இல்லையே!இதோ இதோ என் பல்லவி..."அருமையான பாட்டு.கேட்க கேட்கத் திகட்டாததாய். சைந்தவிக்கும் சபாஷ்.ஏன்..."மயூரி" படப் பாடல்களும் அருமை.ஆனால் ஏனோ அவைகள் பிரபல்யம் ஆகவில்லை. அந்தப் பாடல்களையும் எங்காவது சேர்த்துக் கொள்ளுங்கள் பிரபா.என்ன ஒரு கவலை என்றால் S.P.அவர்கள் தன் திறமை வளர்வதோடு தன் உடம்பையும் அதிகமாக வளர்க்கிறாரே!!!இன்னும் பல காலங்கள் அவர் வாழவேண்டும்.
புவனா ஒரு கேள்விக்குறி விட்டுட்டீங்களே :(:(:(