கும்பலாப் படம் பார்க்கப் போன சர்வேசனிலிருந்து, சீடி வாங்கிப்பார்த்த இராம் வரை "அழகிய தமிழ் மகனை" நினைத்து விசும்பி விசும்பி அழுது பதிவு போடும் இவ்வேளை ஆறுதல் கொடுக்கும் முகமாக இதோ ஒரு செய்தி.
தெலுங்கு போக்கிரி மகேஷ்பாபுவின் புதுப் படம் அதிதி (Athidhi) மெகா ஹிட்டாம். நிச்சயம் புரட்சி இயக்குனர் சந்திரசேகர் அப்படத்தின் ரீமேக்கை வாங்கி விடுவார் என்ற நம்பிக்கையோடு அத்தடுவில் இருந்து சில காட்சிகள்.
ஆமாம் அதுவும் தெலுங்கு உருவல் தான் , ஆனால் அப்போ வந்த அதுவும் இதே போன்ற கதை என்பதால் இதை சுட மாட்டார் என்று சொன்னேன், யார் கண்டது, எத்தனை தடவை வேண்டுமானாலும் பழைய கள்ளை புது மொந்தையில் கு(டு)டிப்பார்களே சினிமாக்காரர்கள், நாமும் தான் :-))
கானா பிரபா, இந்தப் படத்தின் சரியான உச்சரிப்பு athidhi. இந்தப் படம் தமிழில் திரும்ப எடுக்கப் பட வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கிறேன். தெலுங்கிலேயே அவ்வளவாக ஓடவில்லை என்பது தான் உண்மை. படத்தைப் பார்த்து விட்டேன். மிகச் சாதாரண பழி வாங்கல் கதை தான். மகேஷ் பாபு மேல் எந்தக் குறையும் சொல்ல இயலாத அளவுக்குத் தான் நடத்திருக்கிறார். ஆனால், அவர் திறமைக்குக் கதை எழுதத் தான் ஆட்கள் பஞ்சம் போல்
அதுவே அத்தடு, போக்கிரி, சைனிக்குடு படங்களோட ரீமேக் தானே?//
அநானி நண்பா
ஒரு ஊகம் தான், சுத்தி சுத்தி தமிழ்நாட்டுக்கே வந்துடும்லே
//ரவிசங்கர் said... கானா பிரபா, இந்தப் படத்தின் சரியான உச்சரிப்பு athidhi. இந்தப் படம் தமிழில் திரும்ப எடுக்கப் பட வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கிறேன்.//
நடிகர் விஜய் என்பதை உடனே டாக்டர் விஜை என்று மாற்றவும். கூடவே பார்வை நேரம் 6 -10 என்றும் போடவும். :) எவ்வளவு கஷ்டபட்டு பட்டம் வாங்கி இருக்காக , நீங்க என்னாடன்ன சும்மா நடிகர்ன்னு போட்டுகிட்டு இருக்கீங்களே.
//தெலுங்கில் அர்ஜின் என்ற பெயரில் வந்தது. இன்னொரு குழப்பம் ;-)//
நான் தெலுங்கில் அர்ஜுன் என்று வந்த படம் தானே என்று தான் கேட்க வந்தேன், அதில் தானே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செட் போட்டாங்க, அதனால் தான் வர்றேண்டா மதுரைக்குனு டப் பண்ணிடாங்க போல.
மருதமலைக்கு அரோகரா போட்டது நடிகர் அர்ஜுன் என்று தெரியாதா !
இப்போ தான் நிஜம் படத்துக்கு தமிழில் விளம்பரம் வந்திருக்கு அப்போ அதுவும் முன்னரே வந்த படமா?
// அத்தடி //
ஆத்தாடி