அலைகள் ஓய்வதில்லையில் ஆரம்பித்து ஓயாது அலையடித்துக் கொண்டிருந்த கார்த்திக் எண்பதுகளில் நடுப்பகுதியில் வாய்ப்பு கொஞ்சம் வற்றி விசு, ராமநாராயணன் வகையறாக்களின் படங்களில் வந்து போனதோடு தெலுங்கிலும் குறிப்பிட்ட சில படங்களில் நடித்தார். அதில் ஒன்று தான் தெலுங்கில் கார்த்திக், பானுபிரியா ஜோடி போட்ட அன்வேஷனா (Anveshana) தெலுங்கின் பிரபல இயக்குனர் வம்சியின் கைவண்ணத்தில் 1985 இல் வந்தது. அது பின்னர் தமிழில் பாடும் பறவைகள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அப்படத்தில் வந்த பாடல்களில் ஒன்றான "கீரவாணி! இரவிலே கனவிலே பாடவா நீ", தமிழிலும் வெகு பிரசித்தம். கீரவாணி ராகத்திலேயே அமைந்த இப்பாடலை ராகதேவன் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுவதை இன்னும் 20 வருஷம் கழித்தும் அதே இனிய சுகத்தோடு கேட்கலாம்.
இரண்டு மொழிப் பாடல்களும் உங்களுக்காகக் காணொளியாக இதோ.
புகைப்படம் உதவி: வம்சி ரசிகர் தளம் தெலுங்கு Youtube: suri2k6 & dee4kay தமிழ் Youtube: unanoche98
"உன் கண்ணில் பூவும் பெண்ஜாதியோ"ம், பாடலின் துவக்கத்தையும் கூறவும். என்னுடைய ஞாபகம் சரியென்றால் பாடல் துவக்கம் "ஆகாயம் பூப்பூக்கும் நேரம்" பிழை என்றால் மன்னிக்கவும்.
சட்டென்று படம் பெயர் ஞாபகம் வரவில்லை. இன்னும் ஓரிண்டு குறிப்பு தந்தீர்களென்றால் யோசித்துச் சொல்கின்றேன். அதாவது எக்கால கட்டத்தில் வந்தது, யார் நடித்தது?
என் ஞாபகம் சரியென்றால் விஜயகாந்த் நடித்தது. படம் பெயர் தெரியவில்லை. ஆனால் பாடலின் இடையில் வரும் வரிகள் "காஷ்மீரின் ரோஜா உன் ஜாதியோ. உன் கண்ணில் பூவும் பெண்ஜாதியோ". இதற்க்கு மேல் தெரியவில்லை. மன்னிக்கவும்.
அண்ணா
இந்தப் பாடல் எந்த படம் என்று
"உன் கண்ணில் பூவும் பெண்ஜாதியோ"ம், பாடலின் துவக்கத்தையும் கூறவும். என்னுடைய ஞாபகம் சரியென்றால் பாடல் துவக்கம் "ஆகாயம் பூப்பூக்கும் நேரம்" பிழை என்றால் மன்னிக்கவும்.
ஸ்ரீ