கும்பலாப் படம் பார்க்கப் போன சர்வேசனிலிருந்து, சீடி வாங்கிப்பார்த்த இராம் வரை "அழகிய தமிழ் மகனை" நினைத்து விசும்பி விசும்பி அழுது பதிவு போடும் இவ்வேளை ஆறுதல் கொடுக்கும் முகமாக இதோ ஒரு செய்தி.
தெலுங்கு போக்கிரி மகேஷ்பாபுவின் புதுப் படம் அதிதி (Athidhi) மெகா ஹிட்டாம். நிச்சயம் புரட்சி இயக்குனர் சந்திரசேகர் அப்படத்தின் ரீமேக்கை வாங்கி விடுவார் என்ற நம்பிக்கையோடு அத்தடுவில் இருந்து சில காட்சிகள்.
ஆமாம் அதுவும் தெலுங்கு உருவல் தான் , ஆனால் அப்போ வந்த அதுவும் இதே போன்ற கதை என்பதால் இதை சுட மாட்டார் என்று சொன்னேன், யார் கண்டது, எத்தனை தடவை வேண்டுமானாலும் பழைய கள்ளை புது மொந்தையில் கு(டு)டிப்பார்களே சினிமாக்காரர்கள், நாமும் தான் :-))
கானா பிரபா, இந்தப் படத்தின் சரியான உச்சரிப்பு athidhi. இந்தப் படம் தமிழில் திரும்ப எடுக்கப் பட வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கிறேன். தெலுங்கிலேயே அவ்வளவாக ஓடவில்லை என்பது தான் உண்மை. படத்தைப் பார்த்து விட்டேன். மிகச் சாதாரண பழி வாங்கல் கதை தான். மகேஷ் பாபு மேல் எந்தக் குறையும் சொல்ல இயலாத அளவுக்குத் தான் நடத்திருக்கிறார். ஆனால், அவர் திறமைக்குக் கதை எழுதத் தான் ஆட்கள் பஞ்சம் போல்
அதுவே அத்தடு, போக்கிரி, சைனிக்குடு படங்களோட ரீமேக் தானே?//
அநானி நண்பா
ஒரு ஊகம் தான், சுத்தி சுத்தி தமிழ்நாட்டுக்கே வந்துடும்லே
//ரவிசங்கர் said... கானா பிரபா, இந்தப் படத்தின் சரியான உச்சரிப்பு athidhi. இந்தப் படம் தமிழில் திரும்ப எடுக்கப் பட வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கிறேன்.//
நடிகர் விஜய் என்பதை உடனே டாக்டர் விஜை என்று மாற்றவும். கூடவே பார்வை நேரம் 6 -10 என்றும் போடவும். :) எவ்வளவு கஷ்டபட்டு பட்டம் வாங்கி இருக்காக , நீங்க என்னாடன்ன சும்மா நடிகர்ன்னு போட்டுகிட்டு இருக்கீங்களே.
//தெலுங்கில் அர்ஜின் என்ற பெயரில் வந்தது. இன்னொரு குழப்பம் ;-)//
நான் தெலுங்கில் அர்ஜுன் என்று வந்த படம் தானே என்று தான் கேட்க வந்தேன், அதில் தானே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செட் போட்டாங்க, அதனால் தான் வர்றேண்டா மதுரைக்குனு டப் பண்ணிடாங்க போல.
மருதமலைக்கு அரோகரா போட்டது நடிகர் அர்ஜுன் என்று தெரியாதா !
இப்போ தான் நிஜம் படத்துக்கு தமிழில் விளம்பரம் வந்திருக்கு அப்போ அதுவும் முன்னரே வந்த படமா?
எனக்குள் ஒருவர் திரையில் "தேர் கொண்டு வந்தவன் யாரென்று சொல்லடி தோழி" என்ற பாடலை இளையராஜா இசையில் பி.சுசீலா தனித்துப் பாடியிருப்பார். இந்தப் பாடல் "ஒன்னானு நம்மள்" (1984) திரைப்படத்தில் எஸ்.ஜானகி பின்னணி ஸ்வரம் பாட கே.கே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். மம்முட்டி, மோகன்லால், சீமா நடித்திருக்கின்றார்கள்.
நண்பர் ஜி.ராகவன் வெகு நாளாகத் தேடிக்கொண்டிருந்த பாட்டு இது. எனக்கும் இந்தப் பாடலைத் தேடிக் கேட்டு ரசிக்க வேண்டும் என்ற தீராக் காதல் இன்று நிறைவேறியிருக்கின்றது. மூலப் பாடலை இதோ ஒலி வடிவில் கேட்டு இன்புறுங்கள். பொதுவாக இளையராஜா தன் டியூனை இன்னொரு மானிலத்துக்கு கொண்டுபோகும் போது சிலவேளை சொதப்பி விடுவார். ஆனால் இங்கே நிலமை மாறியிருக்கின்றது என்பதற்கு இப்பாடல் ஓர் சான்று.
இப்பாடலை அம்ருதா தொலைக்காட்சி, மற்றும் ஏஷியா நெட்டில் பாடல் போட்டிகளில், போட்டிப் பாடகர்களால் பாடிய காணொளி இதோ:
நம்ப பிரபு அண்ணா போல ஒரு நல்லவர இந்த பதிவுலகில் பார்க்க முடியுமா? அவரைப் போல கிடைக்காத பாட்டை எல்லாம் தேடி பதிவு போட முடியுமா? அவரைப் போல தன்னடக்கம் வருமா? அவரைப் போல மத்தவங்களை பேசி அறுத்தே சாக அடிக்க முடியுமா?? அவருக்கு இருக்கின்ற பெண் "விசிறிகள்" போல யாருக்காவது இருக்கின்றதா??
அலைகள் ஓய்வதில்லையில் ஆரம்பித்து ஓயாது அலையடித்துக் கொண்டிருந்த கார்த்திக் எண்பதுகளில் நடுப்பகுதியில் வாய்ப்பு கொஞ்சம் வற்றி விசு, ராமநாராயணன் வகையறாக்களின் படங்களில் வந்து போனதோடு தெலுங்கிலும் குறிப்பிட்ட சில படங்களில் நடித்தார். அதில் ஒன்று தான் தெலுங்கில் கார்த்திக், பானுபிரியா ஜோடி போட்ட அன்வேஷனா (Anveshana) தெலுங்கின் பிரபல இயக்குனர் வம்சியின் கைவண்ணத்தில் 1985 இல் வந்தது. அது பின்னர் தமிழில் பாடும் பறவைகள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அப்படத்தில் வந்த பாடல்களில் ஒன்றான "கீரவாணி! இரவிலே கனவிலே பாடவா நீ", தமிழிலும் வெகு பிரசித்தம். கீரவாணி ராகத்திலேயே அமைந்த இப்பாடலை ராகதேவன் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுவதை இன்னும் 20 வருஷம் கழித்தும் அதே இனிய சுகத்தோடு கேட்கலாம்.
இரண்டு மொழிப் பாடல்களும் உங்களுக்காகக் காணொளியாக இதோ.
புகைப்படம் உதவி: வம்சி ரசிகர் தளம் தெலுங்கு Youtube: suri2k6 & dee4kay தமிழ் Youtube: unanoche98
"உன் கண்ணில் பூவும் பெண்ஜாதியோ"ம், பாடலின் துவக்கத்தையும் கூறவும். என்னுடைய ஞாபகம் சரியென்றால் பாடல் துவக்கம் "ஆகாயம் பூப்பூக்கும் நேரம்" பிழை என்றால் மன்னிக்கவும்.
சட்டென்று படம் பெயர் ஞாபகம் வரவில்லை. இன்னும் ஓரிண்டு குறிப்பு தந்தீர்களென்றால் யோசித்துச் சொல்கின்றேன். அதாவது எக்கால கட்டத்தில் வந்தது, யார் நடித்தது?
என் ஞாபகம் சரியென்றால் விஜயகாந்த் நடித்தது. படம் பெயர் தெரியவில்லை. ஆனால் பாடலின் இடையில் வரும் வரிகள் "காஷ்மீரின் ரோஜா உன் ஜாதியோ. உன் கண்ணில் பூவும் பெண்ஜாதியோ". இதற்க்கு மேல் தெரியவில்லை. மன்னிக்கவும்.
கானா, சிரிப்பு வருது சிரிப்பு வருது என்ற சந்திரபாபு பாட்டைதான்(ஆண்டவன் கட்டளை) போட்டு இருக்கிங்க என்று வந்தால் ஒரு "சுந்தரபாபு" சுட்டிப்பையன் படம் காட்டுறிங்களே! இதெல்லாம் ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கே :-))
அடுத்த இடுகைக்கு 'ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுதே' எண்டு தலைப்பு வையுங்க. சரியா.
பின்பாட்டுப்பாட மைலாப்பூர் கச்சேரி ஓரமா ஆரையாவது கூட்டியண்டு வாறன். Or better yet the song 'More than a feeling' from the rockband Boston would be appropriate. ;)
// அத்தடி //
ஆத்தாடி