B.R சோப்ரா என்ற Baldev Raj Chopra இன்று தனது 94 வது வயதில் காலமாகியிருக்கின்றார். இந்திய சினிமாவில் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர் இவர். பாகிஸ்தானின் லாகூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டம் பெற்ற இவர் சினிமாவின் மேல் கொண்ட தீரா ஆசையால் சினிமா நிருபராக தன் சினிமா வாழ்வை ஆரம்பித்து, நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக இருந்தவர். இவரின் சகோதரர் யாஷ் சோப்ராவும் ஒரு பெரும் தயாரிப்பாளர்.
பி.ஆர்.சோப்ராவும் யாஷ் சோப்ராவும்
எண்பதுகளின் இறுதியிலே 1988 இல் ஆரம்பித்து 1990 வரை தூரதர்ஷனில் தொடராக இவர் தயாரித்து இவரின் மகன் ரவி சோப்ரா இயக்கிய மஹாபாரத் என்ற மெகா தொடர் இன்று வரை தொலைக்காட்சித் தொடர்களில் மைல் கல். இந்த பிரமாண்டத் தொடரை அதற்கு முன்னர் எந்தத் தொடருமே மிகுந்த பொருட்செலவிலும், உயர் தயாரிப்புத் திறனிலும் எட்டவில்லை.
இவர் தயாரித்த மஹாபாரத் தொடரின் ஆரம்பக் காட்சி ஒன்று
இவர் இயக்கிய Hamraaz (1967) படத்தின் பாடல்கள் இரண்டு
இவர் கதைஎழுதிய Baghban (2003) படப்பாடல்
தகவல் குறிப்பில் உதவி: விக்கிபீடியா புகைப்படங்கள்: http://www.bollywoodhungama.com youtube: பல்வேறு தனிநபர் கோப்புக்கள்
இரண்டாயிரத்து மூன்றெண்டால் அவருக்கு எத்தனை வயது அந்த வயதிலயும் சினிமாவோடு இருந்திருக்கிறார் எண்டால் சும்மா சொல்லக்கூடாது... சில பேரால் மட்டுமே இப்படி நிலைக்க முடிகிறது...
பகிர்வுக்கு நன்றி அண்ணன்...