நடிகர் பாண்டியன், 80களில் "மண்வாசனை" திரையில் பாரதிராஜா மூல அறிமுகமாகித் தொடர்ந்து, புதுமைப்பெண், முதல் வசந்தம், ஆண்பாவம், தாய்க்கு ஒரு தாலாட்டு, "காதல் என்னும் நதியினிலே" என்று சொல்லத் தக்க திரைப்படங்களில் நடித்தவர். "கிழக்குச் சீமையிலே" வில்லன் நடிப்பு சினிமாவில் அவருக்கு மீள் வரவாக அமைந்தது.
நடிக்க வருமுன் வளையல் கடையில் வேலை பார்த்த இவர் ஒரு நிலையில் பொருத்தமான பாத்திரங்கள் கிடைக்காமல் பழைய நிலைக்கே போகவேண்டி வந்தது. கிராமியப்பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருதும் இவர் சினிமாவில் தகுந்த வழிநடத்தல் இன்றித் திசைமாறிய நடிகர்களில் இவரும் ஒருவர் எனலாம்.
நேற்றோடு அவர் நிரந்தரமாகவே கலையுலகில் இருந்து ஓய்வு பெற்றார். பாண்டியன் நடித்த சில பாடற் காட்சிகள் இதோ:
Photo courtesy: thatstamil.com Video courtesy: mkumarpalani & techsatish
நடிகர் பாண்டியனுக்காகச் சிறப்பு நினைவை நேற்று வானொலியில் பகிர்ந்து கொண்டேன். அவரைத் தனிப்பட்ட ரீதியில் தெரிந்த நண்பர் கூறிய கருத்துப் படி பாண்டியனுக்குக் கூடவே இருந்து வழிநடத்த நல்ல நண்பனோ அல்லது உறவினரோ இல்லாததும் ஒரு குறை.
எதோ ஒரு படத்தில் இரு வேடங்களில் கூட நடித்திருந்தார்