பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இசைப்பள்ளியில் படிக்கும் போது நண்பராக அறிமுகமானவர் திரு ரவீந்திரன் அவர்கள். பின்னர் ஜேசுதாஸ் திரைத்துறைக்கு வந்து புகழ்பெற்றாலும் ரவீந்திரனால் பெரிய அளவில் பிரகாசிக்க முடியவில்லை. தன் நண்பன் ரவீந்திரனுக்காக ஐ.வி.சசியிடம் வாய்ப்புப் பெற்று சூலா என்ற திரைப்படத்தில் இவரை இசையமைப்பாளராக்கினார்.
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம் உட்பட பல மலையாளத்திரைப்படங்களில் ரவீந்திரனின் இசை தான் ஹீரோ. கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் பண்ணியவர். பரதம் திரைப்படத்திற்காக தேசியவிருதும் பல மாநில விருதுகளையும் பெற்றவர். தமிழிலும் ரசிகன் ஒரு ரசிகை உட்பட சில படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார். இவரின் இசையில் வடக்கும் நாதன் திரைப்படம் வெளிவர முன்னரே 2005 இல் புற்றுநோயால் காலமாகிவிட்டார். இவரின் மகன் கூட ஒரு பாடகரே.
இவரின் தனிப்பாடல் ஒன்றை மலையாள ஏஷியா நெட்டுக்காகப் பாடும் காட்சி
இசையமைப்பாளர் ரவீந்திரன் இசையில் வந்த சில பாடல்கள்
முதலிரு பாடல்களும் மிகவும் கவர்ந்தது. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா பாடல் தரவிறக்கி காதுக்குள் கேட்டதில் தபேலாவின் பாயாவையும் மிருதங்கத்தின் வலந்தரையையும் கலந்து ஒலிப்பதிவு செய்திருந்தது அருமையாக இருந்தது. அறிமுகத்திற்கு நன்றி.
தெளிந்த ஓடை போன்ற இசை இவருடையது. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவில் கர்நாடக இசை பாணியுடன் ஹிந்தி பாடலையும் கலக்கி அசத்தியிருப்பார். ரசிகன் ஒரு ரசிகையின் 'பாடி அழைப்பேன் உன்னை' எப்போதும் பிடித்த பாடல்...
அவரின் நடிப்புலக ஆரம்பத்தில் நிறைய மலையாளப் படங்களில் நடித்திருத்த காரணத்தினாலோ என்னவோ மலையாள சினிமா உலகு மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே அலாதிப் பிரியம். சில மாதங்களுக்கு முன்னர் இவரின் "கமஹாசண்டே ரெண்டு திரைக்கதாக்கள்" என்ற மகாநதி, ஹேராம் திரைக்கதையும் மலையாளத்தில் நூலாக வெளியிடப்பட்டபோது தன் ஓய்வுகாலத்தைக் கேரளாவில் கழிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். தசாவதாரம் பாடல் வெளியீட்டில் மம்முட்டியின் தனியாவர்த்தனம் திரைப்படத்தைத் தமிழில் நடிக்க ஆசை என்றும் மேடையில் சொல்லியிருக்கிறார்.
எண்பதுகளில் இவரின் நாயகன் திரைப்படம் கொடுத்த புகழும், வெற்றியும் இருந்தாலும் குறுகிய வர்த்தகச் சந்தை வாய்ப்புள்ள மலையாளத் திரையுலகிலும் டெய்சி, சாணக்யன் ஆகிய படங்களில் நடித்திருப்பார். சாணக்யன் திரைப்படம் பின்னர் தமிழில் மொழி மாற்றப்பட்டும் வெளியானது. இதோ சாணக்யன் மலையாளத் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி.
சாணக்கியன் படத்தின் ஆரம்பம்
சாணக்கியன் படத்தின் இறுதிக்காட்சி
கமல்ஹாசன் நடித்த மலையாளத் திரைப்படங்கள் சிலவற்றின் பாடற் காட்சிகள்
ஜெயா டீவியில் கலக்கப்போவது கமல் நிகழ்ச்சியில் ஒரு முறை சில மலையாளப் படங்களில் நடித்துவிட்டு வந்த சூட்டோடு பாடிய பாடலில் மலையாள வாசம் வீச தமிழ் பாட்டு பாடியதாக சொல்லியிருந்தார்.
//புதுகைத் தென்றல்: ஜெயா டீவியில் கலக்கப்போவது கமல் நிகழ்ச்சியில் ஒரு முறை சில மலையாளப் படங்களில் நடித்துவிட்டு வந்த சூட்டோடு பாடிய பாடலில் மலையாள வாசம் வீச தமிழ் பாட்டு பாடியதாக சொல்லியிருந்தார்.
அந்தப் பாட்டு ஞாயிறு ஒளி மழையில்
கேட்டுப்பாருங்கள் தெரியும்//
அந்த பாடல் பன்னீர் புஷ்பங்களே". அதில் தான் மலையாள வாடை அதிகம்.
மீரா ஜாஸ்மின் மாண்டலின் இசைக்கப் போய்விட்டார். கோபிகா அயர்லாந்துக்குப் போகிறாராம். பாவனா சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்கப் போய்விட்டார். மல்லுவூட் என்ன செய்யும்? இதோ புத்தம் புது தயாரிப்பு, மீரா நந்தன். இயக்குனர் பாசிலின் உதவி இயக்குனர்களாக இருந்து பின் இரட்டை இயக்குனர்களாக உருவெடுத்த லால் ஜோஷின் புதுப்படமான "முல்லா" மூலம் வலது காலை எடுத்து வைத்திருக்கிறார் மீரா நந்தன் ;-) தமிழுக்கு "வால்மீகி" படம் மூலம் வருகிறார்.
இதோ முல்லா படத்தில் இருந்து வித்யா சாகர் இசையில் சில தேன் மெட்டுக்கள். கூடவே போனஸாக மீரா நந்தன் பறயும் பேட்டி ஒண்ணு கேட்டோ
"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்". (சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் அக்டோபர் 1976, இகாரஸ் பிரகாஸின் வலையில் மீள இட்டிருந்தார்).
இப்படம் குறித்த ஏற்கனவே வந்த எந்த விதமான வலையுலக விமர்சனங்களையோ, கதைச்சுருக்கத்தையோ வாசிக்காமல் இப்போது தான் தசாவதாரத்தை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். ஒவ்வொருவர் பார்வையில் கமல்ஹாசன் குறித்த எதிர்ப்பார்ப்போ அல்லது இப்படத்தின் பிரமாண்டம் கொடுத்த எதிர்பார்ப்போ அவரவர் ரசனையைத் தீர்மானித்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை படத்தின் ஆரம்பம் முதல் முடிவுவரை கட்டிப் போட்டு விட்டது என்றுதான் சொல்வேன். தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.
சில உறுத்தல்களை மட்டும் சொல்லிவைக்கிறேன். 1. சோழமன்னனாக வரும் நெப்போலியனின் "தமிள்" 2. கமல் - அசினின் நீளமான அலும்புகள் 3. சில காட்சிகளில் வரும் புஷ், ஜப்பானியன், நெட்டை மனிதன், வில்லன் வேடங்களின் அதீத மேக்கப் உறுத்தல்கள்.
படம் முடியும் போது வரும் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டோர் குறித்த எழுத்தோட்டங்களில் கதை விவாதக் குழுவில் அமரர் சுஜாதாவும் இருக்கிறார். 32 வருடங்களுக்கு முன்னர் கணையாழியில் அவர் சொன்னதை அவரே மெய்ப்பிக்க உதவிப் போயிருக்கிறார்.
பி.கு: என் பார்வை எல்லோர் பார்வையை ஒத்திருக்கவேண்டும் என்ற எந்த வித அவசியமும் இல்லை.
எனக்கு பிடித்த தசாவதாரம் கமல்கள் ஒழுங்கின் படி 1.பூவராகன் என்னும் சமூகப் போராளி 2. ரங்கராஜன் நம்பி என்னும் வைணவ பக்தர் 3. பல்ராம் நாயுடு என்னும் குடிவரவு அதிகாரி 4. சிதம்பரம் கிருஷ்ணா பாட்டி 5. ஜப்பானிய அண்ணன் 6. பாடகர் அவதார் சிங் 7. பத்தடி உயர காலிஃபுல்லா 8. புஷ் 9.வில்லன் 10. கோவிந்தராஜன் என்னும் வழக்கமான முகம் மழித்த ஹீரோ
ஒரிஜினல் கமலுக்குப் பத்தாவது இடத்தைக் கொடுத்தது 'நச்'சுன்னு இருக்கு!
நவராத்திரியில் ஒரு சின்னச் சின்ன உடை, முடி அலங்காரங்கள் மூலமாகவே ஒன்பது குணச்சித்திரத்தைக் காட்டிய நடிகர்திலகத்துக்கும், இத்தனை மேக்க்கப் உதவியுடன் இவர் செய்திருக்கும் 10 வேஷங்களையும் ஒப்பிடும்போதுதான் நடிகர்திலகத்தின் பெருமை இன்னமும் வானளாவி உயர்ந்து நிற்கிறது.
//"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்". //
வாசிக்கும்போதே ஒரு எக்கோ செளண்ட் வருகிறது. அமரர் சுஜாதா..:(
//தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//
//தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//
அருமை!
உங்கள் டாப் டென்னுடன் ஒத்துப்போகிறேன். தலைவரை நினைவு கூர்ந்தமைக்கும் நன்றி.
என்ன சிரிப்பான் ;-) மீ த பெஸ்ட்னு சொல்ல வேண்டியது தானே.
வாங்க வி.எஸ்.கே
நடிகர் திலகத்தோடு யாரும் ஒப்பிட முடியாதவர்கள். ஆனால் இந்த தசாவதாரம் கதைக்களமும், பாத்திரங்களின் படைப்பும் மேக்கப்பின் தேவையை உணர்த்தியே இருக்கின்றன. மேக்கப்பில் அசிரத்தை இருப்பதை ஏற்கிறேன்.
உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".
நான் இன்னும் பார்க்கலை படத்தை ஒன்லி விமர்சனங்கள் மட்டும் படிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!
////தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//
\\தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன். \\\
//தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//
சரியாகச் சொன்னீர்கள்..! கதாநாயகன் கமல் அதீத heroism காட்டாமல், தன்னால் முடிஞ்ச அளவு மட்டும் போராடுவதாக காட்டியிருப்பதுதான் கமலின் சாணக்கியதனம்.. உதாரணம் கிளைமாக்ஸ் காட்சி..!
கமல்ஹாசனின் சீரியஸ் நடிப்புக்குப் பல உதாரணங்கள் போல, நகைச்சுவை நடிப்பிலும் அதீத ஈடுபாடு கொண்டு பல படங்களில் நடித்தவர். கிரேசி மோகன் வசனக் கூட்டணியில் மிகவும் அதிகமான படங்களில் நடித்த நட்சத்திரமும் இவரே. நடிகர் கமல்ஹாசனின் நகைச்சுவைப் பாத்திரப் படைப்புக்களில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.
புன்னகை மன்னன் (1986) கதாபாத்திரம்: சாப்ளின் செல்லப்பா
மைக்கேல் மதன காமராஜன் (1991) கதாபாத்திரம்: காமேஸ்வரன்
தசாவதாரம் வரும் வேளை, தமிழில் எனக்கு மிகவும் பிடித்தமான நாயகன் கமலின் படங்களில் பத்துப் படங்களின் கதாபாத்திரங்களை இங்கே காட்சிப்படுத்துகின்றேன். இவற்றைத் தவிர மேலும் வறுமையின் நிறம் சிகப்பு, பதினாறு வயதினிலே, இந்தியன் என்று பட்டியல் நீண்டாலும் என்னைப் பொறுத்தவரை அவையெல்லாம் இந்தப் பட்டியலின் பின்னர் தான் வைத்துப் பார்ப்பேன். இங்கே கொடுக்கப்பட்டவை தரவரிசையில் அமைந்தவை அல்ல. வெளிவந்த ஆண்டுகள் வரிசையில் இருக்கின்றன. Youtube மூலத்தொடுகை கொடுத்தவர்களுக்கு தனித்தனியான நன்றிகள்.
மூன்றாம் பிறை (1982) கதாபாத்திரம்: சிறீனிவாசன் என்னும் பள்ளி ஆசிரியர்
ஐயோ பிரபா...என்னைப் போலவே நீங்களும் கமல் பைத்தியமா!!!!!!!மூன்று முடிச்சு,நிழல் நிஜமாகிறது, உயர்ந்தவர்கள்,வாழ்வே மாயம், குருதிப்புனல்...இன்னும் இன்னும். எங்களுக்காக அதாவது ஈழத் தமிழருக்காக அவர் எதுவும் செய்தது இல்லைதான்.நளதமயந்தி, தெனாலியில் எங்களைக் கேலி செய்தது மாதிரியும் நடித்திருக்கிறார். என்றாலும் நடிப்பிற்கு நாயகன்.வாழ்க கமல்.பிரபாவுக்கு நன்றி. தசாவதாரத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.
கமலை வைத்து அவரால் மட்டும் தனித்துவமாக நடிக்கக்கூடிய பாத்திரங்கள் உங்கள் பட்டியலோடு நிறையவே இருக்கின்றன. நடனத்தில் இருந்து நடிப்புக்கு தாவியபோது முழுமையாக அதை நேசித்தார். அதன் விளைவே இப்படியான நல்ல படங்கள்.
வருகைக்கு நன்றி மாயா
நன்றி தூயா
கோகுலன்
நான் பின்னுக்கு தள்ளேல்லை, படம் வந்த ஒழுங்கில் போட்டிருக்கிறன் ;)
கமல் படங்களை கூர்ந்து பார்ப்பதாலோ என்னவோ ஒரு காட்சிக்கு அவர் எப்படியான நடிப்பை தருவார் என்று நமக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. உங்கள் வரிசையோடு ஒத்து போகும் சில பாத்திரப் படைப்புகள் -
அவள் அப்படித்தான் - முற்போக்கு சிந்தனையோடு வரும் இளைஞன் பிற்பாடு மிகச் சாதாரணனாக் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் hypocryte இளைஞன்.
சிப்பிக்குள் முத்து - இன்றும் கண்ணில் நீரை வரவழைக்கும் நடிப்பு.
மீண்டும் கோகிலா - spontanity என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒரு performance. காமேச்வரனுக்கு முன்னோடி என்று சொல்லலாம்.
துக்கடாவாக - மணக் கணக்கு என்னும் விஜய்காந்த் படத்தில் அருமையாக ஒரு கௌரவ வேடம் செய்திருப்பார். மிக அருமை.
தப்புத் தாளங்களில் - தெலுங்கு பேசிக்கொண்டு ஒரு கௌரவ வேடம்.
அவருக்கு 'வேட்டையாடு விளையாடு' படத்திற்கு விருது கொடுக்காமல் இருந்திருக்கலாம் :-)
M.ஜெயசந்திரன் மலையாளத்தில் தற்போதைய முன்னணி இசையமைப்பாளராக விளங்கிவருகின்றார். கே.ஜே.ஜேசுதாஸ் சிட்னி வந்திருந்த போது தன் இசை நிகழ்ச்சியிலும் இவரைப் பற்றி சிலாகித்துச் சொல்லிப் பாடிய பாடலை இன்றைய வீடியோ பதிவாக்குகின்றேன்.
"பச்சப்பனம் தத்தே" என்னும் இந்த இனிமையான பாடல் நோட்டம் என்னும் திரைப்படத்தில் பொன்குணம் தாமோதரன் இயற்ற கே.ஜே.ஜேசுதாஸ் தனிப்பாடலாகவும், சித்ரா தனிப்பாடலாகவும் பாடியிருக்கின்றார்கள். இசை வழங்கியிருப்பவர் எம்.ஜெயச்சந்திரன். ஒரு கிராமிய நாட்டுப்பாடல் வடிவில் தாலாட்டாக வரும் இந்தப் பாடல் என்றும் கேட்க இதமானது. இந்தப் பாடலைக் கேட்டதுமே இப்படத்தின் ஒரிஜினல் டி.வி.டியையும் வாங்கி வைத்துவிட்டேன். இனிமேல் தான் படத்தைப் பார்க்கவேணும்.
இந்தப் பாடலுக்கான கேரள அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பொன்குணம் தாமோதரனுக்கு கிடைத்தது. இதே படத்தில் வேறு ஒரு பாடலான மெல்லே மெலே பாடலைப் பாடிய இசையமைப்பாளர் எம்.ஜெயசந்திரனுக்கும் (சிறந்த பாடகர்), மயங்கி போயி என்ற பாடலைப் பாடிய சித்ராவுக்கும் (சிறந்த பாடகி) கேரள மாநில விருதுகள் கிடைத்தன.
நியூயோர்க்கில் இருந்து சபிதா ஜேசுதாஸ் பாடுகின்றார்
ஏற்கனவே கேட்ட அனுபவ இருக்கறதால் சூப்பர் பாட்டுன்னு சொல்லலாம் ( மல்லுக்கள் இத பாடச்சொன்ன அப்படியே பாடிக்கிட்டே இருக்காங்கங்க! )
ஆமாம் எப்படி உங்களுக்கு ஒரு பாட்டு இவ்ளோ வெரைட்டியா கிடைக்குது? ( ஸ்ரேயா கோஷலுக்கு நான் தேடி தேடி தவிச்சுப்போறேன் எனக்கு மட்டும் ரகசியமாம் சொல்லலாமே!?)
Although it's a good song, its actulay a remix song from old 70's.It was critized by various old age singers for killing the soul of the song. The original track was introduced on comunist drama stages and later 70's it got filmed with the music of devarajan master.
சில பாடல்களை கேட்டுயிருக்கிறேன். ஆனால் உங்கள் பதிவின் மூலம் தான் இசையமைப்பாளர் இவர் தான் என்று தெரிந்துக் கொண்டேன். அருமையான பாடல்கள்...நன்றி தல ;))