அவரின் நடிப்புலக ஆரம்பத்தில் நிறைய மலையாளப் படங்களில் நடித்திருத்த காரணத்தினாலோ என்னவோ மலையாள சினிமா உலகு மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே அலாதிப் பிரியம். சில மாதங்களுக்கு முன்னர் இவரின் "கமஹாசண்டே ரெண்டு திரைக்கதாக்கள்" என்ற மகாநதி, ஹேராம் திரைக்கதையும் மலையாளத்தில் நூலாக வெளியிடப்பட்டபோது தன் ஓய்வுகாலத்தைக் கேரளாவில் கழிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். தசாவதாரம் பாடல் வெளியீட்டில் மம்முட்டியின் தனியாவர்த்தனம் திரைப்படத்தைத் தமிழில் நடிக்க ஆசை என்றும் மேடையில் சொல்லியிருக்கிறார்.
எண்பதுகளில் இவரின் நாயகன் திரைப்படம் கொடுத்த புகழும், வெற்றியும் இருந்தாலும் குறுகிய வர்த்தகச் சந்தை வாய்ப்புள்ள மலையாளத் திரையுலகிலும் டெய்சி, சாணக்யன் ஆகிய படங்களில் நடித்திருப்பார். சாணக்யன் திரைப்படம் பின்னர் தமிழில் மொழி மாற்றப்பட்டும் வெளியானது. இதோ சாணக்யன் மலையாளத் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி.
சாணக்கியன் படத்தின் ஆரம்பம்
சாணக்கியன் படத்தின் இறுதிக்காட்சி
கமல்ஹாசன் நடித்த மலையாளத் திரைப்படங்கள் சிலவற்றின் பாடற் காட்சிகள்
ஜெயா டீவியில் கலக்கப்போவது கமல் நிகழ்ச்சியில் ஒரு முறை சில மலையாளப் படங்களில் நடித்துவிட்டு வந்த சூட்டோடு பாடிய பாடலில் மலையாள வாசம் வீச தமிழ் பாட்டு பாடியதாக சொல்லியிருந்தார்.
//புதுகைத் தென்றல்: ஜெயா டீவியில் கலக்கப்போவது கமல் நிகழ்ச்சியில் ஒரு முறை சில மலையாளப் படங்களில் நடித்துவிட்டு வந்த சூட்டோடு பாடிய பாடலில் மலையாள வாசம் வீச தமிழ் பாட்டு பாடியதாக சொல்லியிருந்தார்.
அந்தப் பாட்டு ஞாயிறு ஒளி மழையில்
கேட்டுப்பாருங்கள் தெரியும்//
அந்த பாடல் பன்னீர் புஷ்பங்களே". அதில் தான் மலையாள வாடை அதிகம்.
ஜெயா டீவியில் கலக்கப்போவது கமல் நிகழ்ச்சியில் ஒரு முறை சில மலையாளப் படங்களில் நடித்துவிட்டு வந்த சூட்டோடு பாடிய பாடலில்
மலையாள வாசம் வீச தமிழ் பாட்டு பாடியதாக சொல்லியிருந்தார்.
அந்தப் பாட்டு ஞாயிறு ஒளி மழையில்
கேட்டுப்பாருங்கள் தெரியும்.