பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இசைப்பள்ளியில் படிக்கும் போது நண்பராக அறிமுகமானவர் திரு ரவீந்திரன் அவர்கள். பின்னர் ஜேசுதாஸ் திரைத்துறைக்கு வந்து புகழ்பெற்றாலும் ரவீந்திரனால் பெரிய அளவில் பிரகாசிக்க முடியவில்லை. தன் நண்பன் ரவீந்திரனுக்காக ஐ.வி.சசியிடம் வாய்ப்புப் பெற்று சூலா என்ற திரைப்படத்தில் இவரை இசையமைப்பாளராக்கினார்.
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம் உட்பட பல மலையாளத்திரைப்படங்களில் ரவீந்திரனின் இசை தான் ஹீரோ. கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் பண்ணியவர். பரதம் திரைப்படத்திற்காக தேசியவிருதும் பல மாநில விருதுகளையும் பெற்றவர். தமிழிலும் ரசிகன் ஒரு ரசிகை உட்பட சில படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார். இவரின் இசையில் வடக்கும் நாதன் திரைப்படம் வெளிவர முன்னரே 2005 இல் புற்றுநோயால் காலமாகிவிட்டார். இவரின் மகன் கூட ஒரு பாடகரே.
இவரின் தனிப்பாடல் ஒன்றை மலையாள ஏஷியா நெட்டுக்காகப் பாடும் காட்சி
இசையமைப்பாளர் ரவீந்திரன் இசையில் வந்த சில பாடல்கள்
முதலிரு பாடல்களும் மிகவும் கவர்ந்தது. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா பாடல் தரவிறக்கி காதுக்குள் கேட்டதில் தபேலாவின் பாயாவையும் மிருதங்கத்தின் வலந்தரையையும் கலந்து ஒலிப்பதிவு செய்திருந்தது அருமையாக இருந்தது. அறிமுகத்திற்கு நன்றி.
தெளிந்த ஓடை போன்ற இசை இவருடையது. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவில் கர்நாடக இசை பாணியுடன் ஹிந்தி பாடலையும் கலக்கி அசத்தியிருப்பார். ரசிகன் ஒரு ரசிகையின் 'பாடி அழைப்பேன் உன்னை' எப்போதும் பிடித்த பாடல்...
சில பாடல்களை கேட்டுயிருக்கிறேன். ஆனால் உங்கள் பதிவின் மூலம் தான் இசையமைப்பாளர் இவர் தான் என்று தெரிந்துக் கொண்டேன். அருமையான பாடல்கள்...நன்றி தல ;))