"இன்று போய் நாளை வா" படத்தில் வரும் ஹிந்தி வாத்தியாரை ஞாபகம் இருக்குமா உங்களுக்கு? அந்தப் படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே இந்தப் பாத்திரத்தைப் பேசாமல் விடமாட்டார்கள். மகளிடம் ஜொள்ளு விட வந்திருக்கும் விடலையின் நோக்கம் தெரியாமல் இவர் ஹிந்தி வகுப்பெடுக்கும் கண்டிப்பையும் அவஸ்தையையும் சிறப்பாகத் தன் நடிப்பில் காட்டியிருப்பார். அவர் தான் ஜான் அமிர்தராஜ் என்னும் நடிகர். பின்னர் இவர் நடிகராக, கதை வசனகர்த்தாவாகவெல்லாம் இருந்திருக்கிறார். கேம் என்ற படத்தைக் கூட இயக்கியிருக்கிறார். இவரைப் பலருக்குத் தெரிந்திருக்காது ஆனால் இவரின் நடிப்பையும், திரைப்பங்களிப்பையும் ரசித்திருக்கின்றோம். ஜான் அமிர்தராஜ் கடந்த மே 28 இல் மாரடைப்பால் மரணமடைந்திருக்கின்றார். அவரின் நினைவாக "இன்று போய் நாளை வா" திரைப்படத்தில் அவர் தோன்றி நடித்த காட்சி ஒன்று இதோ: Youtube by: arunsrid
நேற்று இந்த வீடியோ கிடைத்ததும் பார்த்தேன, வியந்து போனேன். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆடும் கொரியக் குழந்தை என்னமாய் ஆடுகிறாள். ஸ்பிரிங்க் ரோபோ போல இருக்கிறாள். வீடியோவினைப் பரிந்துரைத்த நண்பர் ஆ.கோகுலனுக்கு நன்றி.
Happy Days போன வருஷம் வந்து தெலுங்கில் கன்னாபின்னாவென்று ஓடியபடம். முதலில் தெலுங்கில் வெளியாகிப் பின்னர் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வந்தது. கோதாவரி, பொம்மரிலு வரிசையில் நல்ல பிரதியில் இப்படத்தைப் பார்க்க இன்னும் காத்திருக்கின்றேன். இப்படத்தின் பாடல்களில் ஒன்றை தெலுங்கு வடிவிலும், மலையாளத்திலும் பார்த்து ரசியுங்கள்.மிக்கி ஜே மயர் என்னும் புது இசையமைப்பாளர் கலக்கியிருக்கிறார். இதை வீடியோஸ்பதிக்காகப் பரிந்துரைத்த .:: மை ஃபிரண்ட் ::. க்கு ஒரு ஓ...
தெலுங்கு வடிவம் "ஆரேரே ஆரேரே" Youtube: syendrapalli
மலையாள வடிவம் "ஐய்யயோ ஐய்யயோ" Youtube: asianetGLOBAL
நல்ல படம். இதை தமிழிலும் ரீமேக் செய்ய போட்டி நடந்துட்டு இருக்கு. படத்தில் 2-3 பாடல் ரசிக்க கூடிய பாடலாவே இருக்கு
யூ டியூப்ல ஐயய்யோ ஐய்யயோ பாடலை முதன் முதலில் பார்க்கும் போது, "அடடே, எனக்கும் இப்போ தெலுங்கு புரியுதே"ன்னு ஆச்சர்யப்பட்டேன். திரும்ப கேட்கும்போதுதான் அது மலையாளம். அதான் பாதி வார்த்தைகள் தமிழில் இருப்பது கண்டேன். :-P அப்ப்புறம் அதன் தெலுங்கு பாடலும் தேடி பார்த்துட்டேன்ல.
இப்பொழுதெல்லாம் புதுசா வர்ற புது இசையமைப்பாளர்கள் நல்லா டேலண்டா, ஃப்ரெஷா பாடல்கள் கொடுக்கிறத்தை கேட்க மகிழ்ச்சியா இருக்கு. :-)
நல்ல படம். தமிழ்ல திரும்ப எடுத்துக் கெடுக்கிறதுக்கு முன்னாடி, பார்க்க விரும்புறவங்க தெலுங்கிலேயே பார்த்துடுங்க :) நம்ம வீட்டுத் திரைல தினம் ஓடிக்கிட்டு இருக்கு :)
ரசிக்க வைக்கும் சிரிக்க வைக்கும் காட்சி !
ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் ஏதோ கொஞ்சம் சோகமாகவே இருக்கிறது!
இவர்தானே சண்ட கோழியில் மீராவின் அப்பாவாகவும் நடித்தவர்???