என் மலையாளத் திரைப்பட ரசிப்பில் பரத்கோபியின் படங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்த நடிகர் இவ்வளவு பிரபலமானவர் என்பதை இவரின் இறப்புக்குப் பின்னரே தெரிந்து கொண்டேன். இனிமேல் தான் இவரின் படங்களை தேடி எடுத்துப் பார்க்க வேண்டும். சமீபகாலத்தில் இவரின் படம் என்றால் என்னை மிகவும் ஈர்த்தது "ரசதந்திரம்". அதில் நாயகன் மோகன்லாலின் தந்தையாக வந்து தந்தை மகன் உறவில் இவரின் பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருந்தார்.
பிரபல மலையாள நடிகர் பரத்கோபியின் மரணம் குறித்த யாகூவின் செய்தியைக் கீழே தருகின்றேன். திருவனந்தபுரம் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஜனவரி 2008 ( 17:53 IST )
பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான பரத்கோபி இன்று மரணமடைந்தார்.
அவருக்கு வயது 71 ஆகும்.தனது ' கொடியேட்டம் ' படத்திற்காக 1977 ம் ஆண்டுக்குரிய சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற கோபி, கடந்த வாரம் கிருஷ்ணாபுரம் அரண்மனையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மரணமடைந்தார்.
100 க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் பரத்கோபி, 3 படங்களை இயக்கி உள்ளார்.இவருக்கு மனைவியும், மகள் மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர். கடந்த 1991 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரசதந்திரம் படத்தில் தந்தையாக இவர் தோன்றிய நடிப்பில் சில காட்சிகள்
Kaatathe Kilikkoodu (1983) படத்தில் பரத்கோபி நடித்த பாடற் காட்சி
Ente Mamattukuttiyammakku (1983) படத்தில் பரத்கோபி நடித்த பாடற் காட்சி
Ente Mamattukuttiyammakku (1983) படத்தில் பரத்கோபி நடித்த பாடற் காட்சி
வினீத் ஜோன் ஆப்ரஹாம் என்ற ரசிகர் youtube இல் இணைத்த பரத் கோபியின் வீடியோ
நடிகர் கோபியின் ஆன்மா அமைதி பெறட்டும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், மலையாளத்திரையுலகத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவர் சமீபத்தில் கிளாஸ்மேட்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நீங்கள் வீடியோவில் குடுத்திருக்கும் எண்டே மாமாட்டுக்குட்டியோடே அம்மாவுக்கு என்ற படம் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்று வந்திருக்கிறது. கோபியின் பாத்திரத்தைத் தமிழில் செய்தவர் சத்யராஜ்.
\\ சமீபகாலத்தில் இவரின் படம் என்றால் என்னை மிகவும் ஈர்த்தது "ரசதந்திரம்". அதில் நாயகன் மோகன்லாலின் தந்தையாக வந்து தந்தை மகன் உறவில் இவரின் பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருந்தார். \\\
என்னைப் போல உங்களுக்கும் பேரைத் தெரியாமலே ஆளின் நடிப்பை ரசித்திருக்கோமா?
//G.Ragavan said... நீங்கள் வீடியோவில் குடுத்திருக்கும் எண்டே மாமாட்டுக்குட்டியோடே அம்மாவுக்கு என்ற படம் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்று வந்திருக்கிறது. //
'ரசன' என்ற ஒரு பழைய படம் கிடைச்சாப் பாருங்க.
அதுலே அவர் எழுத்தாளரா வருவார். மனைவி ஸ்ரீவித்யா. நம்ம நெடுமுடிவேணு புதுசா வேலைக்கு ஸ்ரீவித்யாவோட ஆஃபீஸுக்கு வருவார்.
அட்டகாசமான கதை & நடிப்பு.