என் மலையாளத் திரைப்பட ரசிப்பில் பரத்கோபியின் படங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்த நடிகர் இவ்வளவு பிரபலமானவர் என்பதை இவரின் இறப்புக்குப் பின்னரே தெரிந்து கொண்டேன். இனிமேல் தான் இவரின் படங்களை தேடி எடுத்துப் பார்க்க வேண்டும். சமீபகாலத்தில் இவரின் படம் என்றால் என்னை மிகவும் ஈர்த்தது "ரசதந்திரம்". அதில் நாயகன் மோகன்லாலின் தந்தையாக வந்து தந்தை மகன் உறவில் இவரின் பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருந்தார்.
பிரபல மலையாள நடிகர் பரத்கோபியின் மரணம் குறித்த யாகூவின் செய்தியைக் கீழே தருகின்றேன். திருவனந்தபுரம் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஜனவரி 2008 ( 17:53 IST )
பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான பரத்கோபி இன்று மரணமடைந்தார்.
அவருக்கு வயது 71 ஆகும்.தனது ' கொடியேட்டம் ' படத்திற்காக 1977 ம் ஆண்டுக்குரிய சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற கோபி, கடந்த வாரம் கிருஷ்ணாபுரம் அரண்மனையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மரணமடைந்தார்.
100 க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் பரத்கோபி, 3 படங்களை இயக்கி உள்ளார்.இவருக்கு மனைவியும், மகள் மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர். கடந்த 1991 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரசதந்திரம் படத்தில் தந்தையாக இவர் தோன்றிய நடிப்பில் சில காட்சிகள்
Kaatathe Kilikkoodu (1983) படத்தில் பரத்கோபி நடித்த பாடற் காட்சி
Ente Mamattukuttiyammakku (1983) படத்தில் பரத்கோபி நடித்த பாடற் காட்சி
Ente Mamattukuttiyammakku (1983) படத்தில் பரத்கோபி நடித்த பாடற் காட்சி
வினீத் ஜோன் ஆப்ரஹாம் என்ற ரசிகர் youtube இல் இணைத்த பரத் கோபியின் வீடியோ
நடிகர் கோபியின் ஆன்மா அமைதி பெறட்டும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், மலையாளத்திரையுலகத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவர் சமீபத்தில் கிளாஸ்மேட்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நீங்கள் வீடியோவில் குடுத்திருக்கும் எண்டே மாமாட்டுக்குட்டியோடே அம்மாவுக்கு என்ற படம் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்று வந்திருக்கிறது. கோபியின் பாத்திரத்தைத் தமிழில் செய்தவர் சத்யராஜ்.
\\ சமீபகாலத்தில் இவரின் படம் என்றால் என்னை மிகவும் ஈர்த்தது "ரசதந்திரம்". அதில் நாயகன் மோகன்லாலின் தந்தையாக வந்து தந்தை மகன் உறவில் இவரின் பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருந்தார். \\\
என்னைப் போல உங்களுக்கும் பேரைத் தெரியாமலே ஆளின் நடிப்பை ரசித்திருக்கோமா?
//G.Ragavan said... நீங்கள் வீடியோவில் குடுத்திருக்கும் எண்டே மாமாட்டுக்குட்டியோடே அம்மாவுக்கு என்ற படம் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்று வந்திருக்கிறது. //
காதல் திரைப்படத்தில் இயல்பான கதைக்களனில், காதலர்கள் புகலிடம் சேரும் மேன்ஷனும் அடங்கும். அதில் நகரத்தில் வேலை தேடி வந்து ஒண்டுக்குடித்தனம் வாழும் இளைஞர்களின் வாழ்க்கையும் காட்சியாக்கப்பட்டிருக்கும்.
இங்கே நான் Youtube ஏற்றி உங்களுக்காகத் தருவது ஒரு நகைச்சுவைக் காட்சி. இயக்குனராகவே வராத ஒருவரிடம், ஹீரோ மற்றும் வில்லன் வாய்ப்புத் தேடிப் போன இருவர் சந்திக்கும் அனுபவம் காட்சியாக விரிகின்றது. நகைச்சுவைக்குப் பின்னால் இருக்கும் யதார்த்தமும் இன்னும் ஒரு படி மேலே இந்தக் காட்சியைக் கொண்டு போகின்றது.
"இன்னும் உங்க கிட்ட நான் நிறைய எதிர்பார்க்கிறேன்" போன்ற வசன வெளிப்பாடு காட்சியை நன்றாக ரசிக்க வைக்கின்றது.
Grammy விருது புகழ் Britney Spears தானே பாடல்களை எழுதி, பாடி, ஆடி நடித்துப் புகழேணியின் உச்சிக்குச் சென்றவர். வழக்கமான பிரபலங்கள் போல் இவரோடு புகழும் சேர சர்ச்சைகளும் சேர்ந்து கொண்டன. ஆனாலும் என்ன, இவர் கொடுக்கும் ஹிட்டான பொப்பிசை இவரின் ரசிகர்களின் கண்ணை மறைக்க, வெற்றியோடு உலா வருகின்றார் இந்த ஆங்கிலக் குயில்.
இங்கே நான் தருவது Britney Spears தோன்றும் ஒரு மலையாளப் பாடல் காட்சி
பிற்குறிப்பு: மொக்கைப் பதிவு வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது ;-))
// .:: மை ஃபிரண்ட் ::. said... மொக்கை பதிவு சூப்பர்..//
ரொம்ப நன்றி சிஸ்டர் ;-)
//CVR said... LOL!! :-D
ஒரு அழகான பாடலை இப்படியெல்லாம் அசிங்க படுத்தனுமா??? என்ன கொடுமை அண்ணாச்சி இது??? :-((//
கூல் டவுண் தல, இது 100% அக்மார்க் மொக்கை ;-)
//Sabesh said... ஒரு அன்பான கண்டனம். உங்கள் வீடியோ அடாவடியை இத்தோடு நிறுத்துங்கள். பீ.சுசிலாவின் பாடலுக்கு பாரிஸ் ஹில்டன் வீடியோவை போட்டுவிடாதீர்கள்.:))//
வாங்கோ சபேசன்
நீங்களே ஐடியாவும் தந்திட்டியள், ஆனாலும் இத்தோட நிறுத்திக்குவம் ;-)
நடிகர் பாண்டியன், 80களில் "மண்வாசனை" திரையில் பாரதிராஜா மூல அறிமுகமாகித் தொடர்ந்து, புதுமைப்பெண், முதல் வசந்தம், ஆண்பாவம், தாய்க்கு ஒரு தாலாட்டு, "காதல் என்னும் நதியினிலே" என்று சொல்லத் தக்க திரைப்படங்களில் நடித்தவர். "கிழக்குச் சீமையிலே" வில்லன் நடிப்பு சினிமாவில் அவருக்கு மீள் வரவாக அமைந்தது.
நடிக்க வருமுன் வளையல் கடையில் வேலை பார்த்த இவர் ஒரு நிலையில் பொருத்தமான பாத்திரங்கள் கிடைக்காமல் பழைய நிலைக்கே போகவேண்டி வந்தது. கிராமியப்பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருதும் இவர் சினிமாவில் தகுந்த வழிநடத்தல் இன்றித் திசைமாறிய நடிகர்களில் இவரும் ஒருவர் எனலாம்.
நேற்றோடு அவர் நிரந்தரமாகவே கலையுலகில் இருந்து ஓய்வு பெற்றார். பாண்டியன் நடித்த சில பாடற் காட்சிகள் இதோ:
Photo courtesy: thatstamil.com Video courtesy: mkumarpalani & techsatish
நடிகர் பாண்டியனுக்காகச் சிறப்பு நினைவை நேற்று வானொலியில் பகிர்ந்து கொண்டேன். அவரைத் தனிப்பட்ட ரீதியில் தெரிந்த நண்பர் கூறிய கருத்துப் படி பாண்டியனுக்குக் கூடவே இருந்து வழிநடத்த நல்ல நண்பனோ அல்லது உறவினரோ இல்லாததும் ஒரு குறை.
ஊரில் இருக்கும் போது கிட்டிப்புள்ளில் இருந்து கிறிக்கற் வரை எனக்கு அளாப்பித் தான் ஆடவரும். அளாப்பி என்றால் என்ன என்று இந்திய நண்பர்கள் பலருக்குத் தெரியுமோ எனக்குத் தெரியாது. கவுண்டர் பாஷையில் "இது ஆவுறதில்லை" ஜாதி.
நடந்து கொண்டிருக்கும் கூத்துக்களைப் பார்க்கும் போது ஒஸ்ரேலியன் கிறிக்கற் ரீம் அளாப்பிகளையே மிஞ்சுவான்கள் போல கிடக்கு.
ஆஸ்திரேலிய அணி சென்னை வந்தால் சிக்கலில்லாமல் வெல்வதற்காக சென்னை 28 இன் Sharks team ஐ வீடியோ வழி பரிந்துரை செய்கின்றேன். (Youtube: பாலு)
நீங்களும் நம்ம கூட்டணியா? (அளாப்பல்)நானும் துடுப்பெடுத்தாடும் பொழுது அம்பயராக நிற்பருக்கு முதலில் காலில் கையில் பந்து பட்டு அவுட் கொடுத்தால் மவனே உன் வண்டவாளங்களை வீட்டில் சொல்லிடுவேன் என மிரட்டுவேன், விக்கெட்டில் நேரே பந்துபட்டாலோ அல்லது யாராவது பந்தை ப்டித்தால் மட்டும்தான் நான் அவுட் மற்றும் படி விக்கெட்டை மறைத்து நின்று எப்படியும் அடிதான். (உள்ளூர் மேட்சில் மட்டும். பாடசாலையில் இப்படியெல்லாம் செய்யமுடியாது).
'ரசன' என்ற ஒரு பழைய படம் கிடைச்சாப் பாருங்க.
அதுலே அவர் எழுத்தாளரா வருவார். மனைவி ஸ்ரீவித்யா. நம்ம நெடுமுடிவேணு புதுசா வேலைக்கு ஸ்ரீவித்யாவோட ஆஃபீஸுக்கு வருவார்.
அட்டகாசமான கதை & நடிப்பு.