இன்றைய பகுதியில், சலீல் செளத்ரியின் இசையில் மலர்ந்த பாடல்கள் தமிழ், மலையாள, ஹிந்தி வடிவம் பெற்றதைக் காட்சியோடு ரசிக்கலாம். சலீல் எவ்வளவு அழகாக இந்த மெட்டுக்களை அந்தந்த பிராந்திய மொழிகளுக்கேற்ப மெட்டைச் சிதைக்காமல் இசைக்கருவிகளிலும், குரலிலும் மட்டும் வித்தியாசம் காட்டி இசைய வைத்திருக்கின்றார் என்பதைக் கேட்கும் போது உண்மையில் அவரைப் போற்றத் தான் வேண்டும். இந்திய சினிமா இசையின் இன்னொரு உன்னதக் கலைஞன் சலீல் செளத்ரி.
தமிழில் இந்தப் பாடல்கள் அழியாத கோலங்கள் திரையில் வந்திருந்தன. அதில் வரும் "நான் என்னும் பொழுது" பாடல் என் சாவு வரை தொடர இருக்கும் முதற் தெரிவுகளில் ஒன்று. இந்தப் பாடல் தமிழ், ஹிந்தி தவிர முதலில் பெங்காலியிலும் வந்திருந்தது அப்பாடலை முன்னர் றேடியோஸ்பதியில் இட்டிருந்தேன்.
சலீல் செளத்ரியின் அற்புதமான பாடல்களில் இந்தத் தொகுப்பு முத்தாய்ப்பானவை. கூடவே பாலுமகேந்திரா இளையராஜா தவிர்த்து விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் செய்த போது சேர்ந்த கூட்டணியில் இதுவும் ஒன்று.
வீடியோஸ்பதியில் பல்லின மொழிப்பாடல்களையும் இணைத்து வருவது கண்டு நம்ம நண்பர் ஜி.ராகவன் சில தெலுங்குப் பாடல்களைத் தந்திருக்கின்றார். கூடவே என் பங்கிற்கு புதுசா வந்த காப்பி ஒன்றையும் கடைசியில் தேடிக் கொடுத்திருக்கின்றேன். இந்தப் பாடல்களின் சிறப்பு என்னவென்றால் இவை தமிழிலும் வந்திருக்கின்றன. தமிழில் வந்த பாடல்களைக் கண்டுபிடியுங்களேன்.
1. படம்: Prema Sagaram
2.படம்: Sithara
3.படம்: "Maharshi"
நிறையப்பேரைக் கஷ்டப்படுத்தி கண்டுபிடிக்கமுடியாத இதன் தமிழ் வடிவம் இதோ: படம்: செண்பகமே செண்பகமே
பூ வண்ணம் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ராஜா என நினைத்திருந்தேன்.
செம்மீன் பாடல்கள் மிகவும் ரசித்திருக்கிறேன்.
பகிர்ந்ததற்கு நன்றி