வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, March 8, 2008
மொழி தாவிய இசை மெட்டுக்கள் - பாகம் 2
இன்றைய பகுதியில், சலீல் செளத்ரியின் இசையில் மலர்ந்த பாடல்கள் தமிழ், மலையாள, ஹிந்தி வடிவம் பெற்றதைக் காட்சியோடு ரசிக்கலாம். சலீல் எவ்வளவு அழகாக இந்த மெட்டுக்களை அந்தந்த பிராந்திய மொழிகளுக்கேற்ப மெட்டைச் சிதைக்காமல் இசைக்கருவிகளிலும், குரலிலும் மட்டும் வித்தியாசம் காட்டி இசைய வைத்திருக்கின்றார் என்பதைக் கேட்கும் போது உண்மையில் அவரைப் போற்றத் தான் வேண்டும். இந்திய சினிமா இசையின் இன்னொரு உன்னதக் கலைஞன் சலீல் செளத்ரி.

தமிழில் இந்தப் பாடல்கள் அழியாத கோலங்கள் திரையில் வந்திருந்தன. அதில் வரும் "நான் என்னும் பொழுது" பாடல் என் சாவு வரை தொடர இருக்கும் முதற் தெரிவுகளில் ஒன்று. இந்தப் பாடல் தமிழ், ஹிந்தி தவிர முதலில் பெங்காலியிலும் வந்திருந்தது அப்பாடலை முன்னர் றேடியோஸ்பதியில் இட்டிருந்தேன்.

பூ வண்ணம் போல நெஞ்சம்


மலையாள வடிவம்: Etho Oru Swapnam (1978)


ஒத்திகை ஒன்று


நான் என்னும் பொழுது

ஹிந்தி வடிவம்: Anand


இசை வடிவில்
posted by கானா பிரபா 5:09 AM  
 
3 Comments:
 • At March 8, 2008 at 9:46 PM, Blogger சிறில் அலெக்ஸ் said…

  பூ வண்ணம் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ராஜா என நினைத்திருந்தேன்.
  செம்மீன் பாடல்கள் மிகவும் ரசித்திருக்கிறேன்.

  பகிர்ந்ததற்கு நன்றி

   

 • At March 9, 2008 at 1:42 AM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் சிறில் அலெக்ஸ்

  சலீல் செளத்ரியின் அற்புதமான பாடல்களில் இந்தத் தொகுப்பு முத்தாய்ப்பானவை. கூடவே பாலுமகேந்திரா இளையராஜா தவிர்த்து விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் செய்த போது சேர்ந்த கூட்டணியில் இதுவும் ஒன்று.

   

 • At March 12, 2008 at 4:11 PM, Blogger G.Ragavan said…

  சலீல் சௌத்திரியின் இசை மிகப் பிரபலமானது. மாநிலங்களைக் கடந்தது என்றும் சொல்லலாம். இதே பாட்டை இசையரசியில் இப்படி இட்டேன் முன்பு.

  http://isaiarasi.blogspot.com/2007/06/06.html

  இந்தியையும் மலையாளத்தையும் விட வங்களத்தில் ஓஓ ஆமார் சஜோனி கோ என்று கேட்கும் பொழுது மிகவும் பிடிக்கும்.

  சலீல் சௌத்திரி சிலப்பதிகார கானல்வரிப் பாடலை இசையரசியை வைத்தும் யேசுதாசை வைத்தும் பதிந்திருக்கிறார்.

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
மொழி தாவிய திரை மெட்டுக்கள்
பார்வதி பாடும் "ஆசை அதிகம் வச்சு"
சிங்கத்தை விரட்டிய வேட்டையன் கவுண்டமணி
"தீபிகா படுகோன்"
மனோரமாவிற்காக கமல் பாடிய பாடல்
மலையாள நடிகர் பரத்கோபி நினைவாக..!
ஹீரோ - வில்லன்...ம்....குட் காம்பினேசன்
Britney Spears தோன்றும் மலையாளப் பாடல்
நடிகர் பாண்டியனுக்காக...
என்ன கொடுமை இது அம்பயர்?
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது