"தமிழ் சினிமா 75" என்ற மலேசியாவில் நடிகர்களின் கலை நிகழ்ச்சியை சமீபத்தில் பார்த்திருந்தேன். நாலு மணி நேர நிகழ்ச்சியில் இரண்டு மணி நேர விளம்பரமும், குத்தாட்டமும் நிரம்பியிருக்க, அவற்றை ஓட விட்டுப் பார்த்த நிகழ்ச்சியில் தேறியதை மட்டும் You tube இல் ஏற்றி உங்களோடு பகிரலாம் என்று இந்தப் பதிவைத் தருகின்றேன்.
நடிகை மனோரமாவிற்கான கெளரவமாக இடம்பெற்ற நிகழ்வில், நடிகர் கமலஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு வராமலே (அதுவும் நல்லதுக்கு தான்), மனோரமாவுடன் இணைந்து போற்றிப் பாடிய "முத்துக்குளிக்க வாரீகளா" பாட்டு புது வடிவில் சிறப்பாக இருந்தது. ஏற்கனவே பாடிவைத்து ஒலிப்பதிவு செய்த கமலஹாசனின் குரலுக்கு நடிகர் பரத் வாயசைக்க மனோரமாவும் கூடவே இணைந்து கொண்டார். ஆனால் சில இடங்களில் அவர் பாடும் கணங்களை மறந்து வாயை மூடி இருந்ததும் கவனிக்கத் தவறவில்லை. இதோ அந்தக் காட்சி.
சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மனோரமாவைக் கெளரவிக்கும் நிகழ்வொன்றில் கமலகாசனே மேடையில் இணைந்து மனோரமாவுடன் அந்தப் பாடலைப் பாடியிருந்தார். ரொம்பப் பழைய அந்நிகழ்வை அண்மையில் இந்திய குடியரசு தின நிகழ்வில் சன் ஒளிபரப்பியது.
அந்தப் பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.எஸ்சும் பாடுனது. அதை மனோரமாவும் கமலும் நல்லாவே பாடியிருக்காங்க. காலத்தை வென்ற பாடல். தூத்துக்குடிப் பாடல். தேடிக் கொடுத்தமைக்கு நன்றி.
// கொழுவி said... சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மனோரமாவைக் கெளரவிக்கும் நிகழ்வொன்றில் கமலகாசனே மேடையில் இணைந்து மனோரமாவுடன் அந்தப் பாடலைப் பாடியிருந்தார். //
மேலதிக தகவலுக்கு நன்றி கொழுவி
//G.Ragavan said... அந்தப் பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.எஸ்சும் பாடுனது. அதை மனோரமாவும் கமலும் நல்லாவே பாடியிருக்காங்க. காலத்தை வென்ற பாடல். தூத்துக்குடிப் பாடல். தேடிக் கொடுத்தமைக்கு நன்றி.//
வாங்க ராகவன்
இந்த உறுத்தல் இல்லாத மீள் கலவைப் பாடலை ரசிக்க முடிகின்றது. இந்த வாட்டி நானே யூடிபில் ஏற்றினேனாக்கும் ;-)
கொழுவி சொல்லும் விழா நடிகைகள் சிறிபிரியாவும், ராதிகாவும் மனோரமாவுக்கென நடத்திய விழா. பத்மசிறி விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விழா நடைபெற்றது. எப்போது ஆச்சிக்கு விருது வழங்கப்பட்டதென்பது சரியாக ஞாபகமில்லை.
ஆனால் கலைஞர் ஆட்சியிலிருக்கும்போது அவ்விழா நடைபெற்றது. கலைஞரின் வாழ்த்துச் செய்தியை நடிகர் சரத்குமார் வாசித்தார்.
நானும் பார்த்தேன்.. என்னடா பரத் கமல் குரல்ல பாடுறாரேன்னு. பாட்டு முடிஞ்சதும்தான் தெரிஞ்சது ஏற்கனவே ரெக்கார்ட் பண்ணதுன்னு. ;-)