You Tube பை மேய்ந்த போது மலையாள அம்ருதா டிவியில் வரும் சூப்பர் சிங்கர்" சிறுவர் சுற்றில் பார்வதி என்ற சிறுமி பாடிய பாடலை ரசித்த கணம் அவளின் ஊனத்தை மறைத்தது இவளின் சிறப்பான பாட்டும், நடனமும். ஆண்டவன் இவளுக்கு வளமான எதிர்காலத்தைக் கொடுக்கட்டும்.
கூடுதல் தகவல்:- பார்வதி பாடிய பாடல் - தலைவி ஸ்ரேயா கோஷல் பாடியது என்பதினை இச்சமயத்தில் இங்கு கூறிக்கொள்வதில் ஸ்ரேயா நற்பணி மன்றத்தின் சார்பில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்
// ஆயில்யன் said... கூடுதல் தகவல்:- பார்வதி பாடிய பாடல் - தலைவி ஸ்ரேயா கோஷல் பாடியது என்பதினை இச்சமயத்தில் இங்கு கூறிக்கொள்வதில் ஸ்ரேயா நற்பணி மன்றத்தின் சார்பில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்//
ஆகா, பாடகியைக் கூட நமீதா ரேஞ்சுக்கு ஆக்கிப்புட்டீங்களாப்பு? ;-)
//எம்.ரிஷான் ஷெரீப் said... "This video is currently not available' என்று வருகிறது.கொஞ்சம் கவனிக்கவும்.//
ஊனமுற்றவர்களின் வெற்றிக்கு அடிப்படையே அவங்களோட அபார தன்னம்பிக்கை தான். அது நிறையவே பார்வதிகிட்ட இருக்கு. வளமான எதிர்காலம் அமைய எல்லாம்வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
நீண்ட நாளைக்குப் பின் நம்ம தோஸ்து கவுண்டமணி வந்து கலக்கியிருக்கிறார். காட்டில் சிங்கம் ஒன்றிடம் அகப்பட்ட கவுண்டர், தன் துப்பாக்கியையும் தொலைத்து விட்டு தன் மூளை (!) பலத்தால் அந்தச் சிங்கத்தை விரட்டிய கதையைச் சொல்லுகின்றார், கேளுங்கள். Youtube: charlesch27
"ஓம் சாந்தி ஓம்" திரைப்படத்தின் மூலம் பரபரப்பான புது கனவுக்கன்னியாக வந்திருக்கிறார் தீபிகா படுகோன். இவரின் தந்தை பிரகாஷ் படுகோன் ஒரு காலகட்டத்து பிரபல பட்மிண்டன் விளையாட்டுக்காரர். ஆரம்பத்தில் விளம்பரத்துறயில் காலடி வைத்து பின்னர் அவரின் முதல் படமாக உபேந்திராவுடன் கன்னடத்தில் நடித்திருந்த "ஐஸ்வர்யா" திரைப்படம் ஓடாமல் ஓரம் கட்டப்பட்ட படமாம். இப்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக மாறிவிட்டார்.
தீபிகா படுகோனின் கன்னடத் திரைப்படமான ஐஸ்வர்யாவில் ஒருந்து இரு பாடல்களும், ஓம் சாந்தி ஓம் படப் பாடலையும் இங்கே தருகின்றேன்.
ஓம் சாந்தி ஓம் படத்த ஆம்ஸ்டர்டாம்ல கூட்டத்துல போய்ப் போத்தேன். மட்டமான படம். நாலஞ்சு இங்கிலீஷ் படத்துல இருந்தும் சில பழைய இந்தியப் படங்கள்ள இருந்தும் சுட்டிருக்காங்க.
ஆனா நீங்க குடுத்துருக்குற பாட்டு...கேக்க ரொம்ப நல்லாயிருக்கு. Singing in the rain படத்துல இருந்து சுட்ட காட்சியமைப்புன்னாலும் தீபிகா படுகோனே பிரமாதம்.
பிரபா அண்ணா, தீபிகாவைப்பற்றி நன்றாக ஜொள்ளியுள்ளீர்கள். ஓம் சாந்தி ஓம் பாட்டைக் கேட்கும்போது... உனை நான் உனை நான் பாடலும்... அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா (பாலசுப்ரமணியம் பாடியது) பாடலுமே ஞாபகத்திற்கு வருகின்றன (அந்தப் பாடலை மெதுவாக - slow நினைத்துப் பார்த்தால் அதனுடைய மெட்டும் வருவது தெரியும்....
வணக்கம். தொழில் நுட்பரீதியாக நல்ல படம். மேலும் தமிழ் கலைஞர்கள் (தொழில்நுட்பம்) இந்தித் திரையுலகில் கலக்கும் படம். இந்த படத்தில் தமிழ் கலைஞர்க்ள பங்கு மிக அதிகம். அதற்காகப் பாராட்டலாம். மற்றும் படி சராசரி இந்திப்படத்தில் சிறந்த படம்.
"தமிழ் சினிமா 75" என்ற மலேசியாவில் நடிகர்களின் கலை நிகழ்ச்சியை சமீபத்தில் பார்த்திருந்தேன். நாலு மணி நேர நிகழ்ச்சியில் இரண்டு மணி நேர விளம்பரமும், குத்தாட்டமும் நிரம்பியிருக்க, அவற்றை ஓட விட்டுப் பார்த்த நிகழ்ச்சியில் தேறியதை மட்டும் You tube இல் ஏற்றி உங்களோடு பகிரலாம் என்று இந்தப் பதிவைத் தருகின்றேன்.
நடிகை மனோரமாவிற்கான கெளரவமாக இடம்பெற்ற நிகழ்வில், நடிகர் கமலஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு வராமலே (அதுவும் நல்லதுக்கு தான்), மனோரமாவுடன் இணைந்து போற்றிப் பாடிய "முத்துக்குளிக்க வாரீகளா" பாட்டு புது வடிவில் சிறப்பாக இருந்தது. ஏற்கனவே பாடிவைத்து ஒலிப்பதிவு செய்த கமலஹாசனின் குரலுக்கு நடிகர் பரத் வாயசைக்க மனோரமாவும் கூடவே இணைந்து கொண்டார். ஆனால் சில இடங்களில் அவர் பாடும் கணங்களை மறந்து வாயை மூடி இருந்ததும் கவனிக்கத் தவறவில்லை. இதோ அந்தக் காட்சி.
சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மனோரமாவைக் கெளரவிக்கும் நிகழ்வொன்றில் கமலகாசனே மேடையில் இணைந்து மனோரமாவுடன் அந்தப் பாடலைப் பாடியிருந்தார். ரொம்பப் பழைய அந்நிகழ்வை அண்மையில் இந்திய குடியரசு தின நிகழ்வில் சன் ஒளிபரப்பியது.
அந்தப் பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.எஸ்சும் பாடுனது. அதை மனோரமாவும் கமலும் நல்லாவே பாடியிருக்காங்க. காலத்தை வென்ற பாடல். தூத்துக்குடிப் பாடல். தேடிக் கொடுத்தமைக்கு நன்றி.
// கொழுவி said... சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த மனோரமாவைக் கெளரவிக்கும் நிகழ்வொன்றில் கமலகாசனே மேடையில் இணைந்து மனோரமாவுடன் அந்தப் பாடலைப் பாடியிருந்தார். //
மேலதிக தகவலுக்கு நன்றி கொழுவி
//G.Ragavan said... அந்தப் பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.எஸ்சும் பாடுனது. அதை மனோரமாவும் கமலும் நல்லாவே பாடியிருக்காங்க. காலத்தை வென்ற பாடல். தூத்துக்குடிப் பாடல். தேடிக் கொடுத்தமைக்கு நன்றி.//
வாங்க ராகவன்
இந்த உறுத்தல் இல்லாத மீள் கலவைப் பாடலை ரசிக்க முடிகின்றது. இந்த வாட்டி நானே யூடிபில் ஏற்றினேனாக்கும் ;-)
கொழுவி சொல்லும் விழா நடிகைகள் சிறிபிரியாவும், ராதிகாவும் மனோரமாவுக்கென நடத்திய விழா. பத்மசிறி விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விழா நடைபெற்றது. எப்போது ஆச்சிக்கு விருது வழங்கப்பட்டதென்பது சரியாக ஞாபகமில்லை.
ஆனால் கலைஞர் ஆட்சியிலிருக்கும்போது அவ்விழா நடைபெற்றது. கலைஞரின் வாழ்த்துச் செய்தியை நடிகர் சரத்குமார் வாசித்தார்.
பார்வதி மிக நன்றாகப் பாடுகிறார். தன்னம்பிக்கை மிளிர்கிறது. அவருக்கு நல்ல வளமான எதிர்காலம் அமைய முருகப் பெருமானை வேண்டுகிறேன்.