ஐடியா சிங்கர் காட்டிய இலைமறைகாய் திறமைகளில் வாணி விஸ்வநாத் போன்ற குரல்களை முன்னர் காட்டியிருந்தேன். இதோ இங்கே அம்ருதா சுரேஷின் கலக்கலான குரலில் அச்சுவிண்டே அம்மாவில் இசைஞானி கலக்கிய "எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே". இன்னும் பல உயரங்களைக் கடக்க இந்த இசைக்குயிலுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு தலை..ராஜா ராக்ஸ்... அம்மிணி நல்லாப் பாடுது... இந்தப் படத்தோட விமர்சனம் எங்க தலை..? //அச்சுவிண்ட அம்மா தமிழிலும் வந்ததா? பார்க்க விரும்புகிறேன்.// வரலை... ஆனா பி.வாசு இந்தப் படத்தைப் பார்த்து ரசித்ததைக் கேள்விப்பட்டதிலிருந்து கதிகலங்கிப் போயிருக்கிறேன்...
இயக்குனர் பாசிலின் பல மலையாளப் படங்கள் தமிழுக்கு மாற்றம் கண்டு தயாரிக்கும் போது நிரந்தர இசையமைப்பாளராக இருப்பது இசைஞானி இளையராஜா. இசைஞானியின் பின்னணி இசையின் ஆழம் எவ்வளவு தூரம் சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணத்தை இங்கே தருகின்றேன்.
அனியத்தி பிறாவு திரைப்படத்தினை நான் காதலுக்கு மரியாதை திரைப்படம் வருவதற்கு முன்னர் பார்த்து ரசித்திருந்தேன். மீண்டும் அனியத்தி பிறாவு படத்தைப் பார்த்த போது "காதலுக்கு மரியாதை" திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா எவ்வளவு தூரம் தன் பின்னணி இசையினால் இன்னும் அந்தக் காவியத்தை உயரே தூக்கி நிறுத்தியிருக்கின்றார் என்பதை அழகாகக் காட்டுகின்றது இங்கே நான் தரும் இரண்டு படங்களின் இறுதிக் காட்சியும்.
முதலில் "அனியத்தி பிறாவு" படத்தின் இறுதிக்காட்சி, இசை வழங்கியவர் Ouseppachan
இதோ இசைஞானியின் ராக சாம்ராஜ்யத்தில் "காதலுக்கு மரியாதை" இறுதிக் காட்சி, குறிப்பாக நிமிடம் 2.07 வினாடிக்கு முன்னும் பின்னுமுள்ள இசைமாற்றத்தை அவதானித்துப் பாருங்கள். காதலர் கண்கள் சந்திக்கும் போது அதுவரை இருந்த இசை மெல்ல மாறி சோக இழையோடலில் என்னைத் தாலாட்ட வருவாளோ
வசனம் கேட்டு விசில் அடிச்ச கூட்டமில் ஞானும் ஒருவனாக்கும் பட்சே இவ்விட நான் முழுசாயிட்டு பேக் கிரவுண்ட் மியூசிக் கேட்டு நன்னாயிட்டு கலக்கியிருக்காரு ராசா! அதுவும் அந்த ஆனந்தமான தருணங்கள் சூப்பரேய்ய்ய்ய்
இப்படி உங்களை போல இசையை அணு அணுவாக நான் ரசித்ததில்லை. இப்படி 2.07 வினாடி என்றெல்லாம். ஆனால் ரசிக்கும் போது நல்லா இருக்கு. அதுவும் இளையராஜா என்றால் சொல்ல வேண்டுமா?
சாலினி இன்னும் சில படங்களிலாவது நடித்திருக்கலாம். ம்ம் நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.
வீடியோஸ்பதியில் மாதம் கடைசி ஒரு 3 பதிவுகளாவது எழுதலாமே. முன்பு போல. இப்படி இசையை ரசிக்கும் ஒருவரிடம் நான் எதிர்பார்ப்பது தப்பில்லை என நினைக்கிறேன். உங்களது பதிவுகள் வாசித்த பின் தான் நான் இசையை நுணுக்கமாக அவதானிக்க தொடங்கினேன்.
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, நிச்சயமாக இது போன்ற எனக்கு எட்டிய விஷயங்களைத் தர நானும் ஆவலாக இருக்கின்றேன். ஷாலினி அருமையான, இயல்பான நடிப்பைத் தரும் ஒரு கலைஞர்.
அம்ருதா சுரேஷுக்கு வாழ்த்துக்கள்
சேட்டா விஷு ஆஷாம்ஷங்கள்! :)))