கடந்த 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் (எம்.ஜெயசந்திரன்), சிறந்த பாடகி (ஸ்வேதா - சுஜாதா மகள்), சிறந்த பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகிய விருதுகள் நிவேத்யம் என்ற ஒரே படத்தில் கிடைத்தது. அப்படத்தில் இடம்பெற்ற அந்த இனிய பாடல் இதோ (ஏதோவொரு 80களில் வந்த தமிழ்ப்பாட்டு வாடை அடிக்குது, இருக்கட்டும்)
கூடவே சிறந்த மலையாளத்தின் சிறந்த திரைப்படம் முதல் பல்வேறு விருதுகளை சூர்யா தொலைக்காட்சி கொடுத்திருந்தது. அதில் தேர்ந்தெடுத்து திரையிசைக்கான விருதுகளைக் கொடுத்த காணொளிகளைத் தருகின்றேன். இதை வீடியோஸ்பதிக்காகப் பரிந்துரைத்த .:: மை ஃபிரண்ட் ::. க்கு ஒரு ஓ போடுங்க
அந்தப் பாடகர் ஜெயச்சந்திரன் வேறு ஆள், இவர் இளைய தலைமுறை இசையமைப்பாளர், ஜேசுதாஸுக்கு தற்போது பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இவர். ஒரே ஒற்றுமை இரு ஜெயச்சந்திரனும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
மீ தி ஃபர்ஸ்ட்டூ? :-)