வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, June 14, 2008
தசாவதாரம் நானும் பார்த்தேன்
"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".
(சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் அக்டோபர் 1976, இகாரஸ் பிரகாஸின் வலையில் மீள இட்டிருந்தார்).

இப்படம் குறித்த ஏற்கனவே வந்த எந்த விதமான வலையுலக விமர்சனங்களையோ, கதைச்சுருக்கத்தையோ வாசிக்காமல் இப்போது தான் தசாவதாரத்தை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். ஒவ்வொருவர் பார்வையில் கமல்ஹாசன் குறித்த எதிர்ப்பார்ப்போ அல்லது இப்படத்தின் பிரமாண்டம் கொடுத்த எதிர்பார்ப்போ அவரவர் ரசனையைத் தீர்மானித்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை படத்தின் ஆரம்பம் முதல் முடிவுவரை கட்டிப் போட்டு விட்டது என்றுதான் சொல்வேன். தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.

சில உறுத்தல்களை மட்டும் சொல்லிவைக்கிறேன்.
1. சோழமன்னனாக வரும் நெப்போலியனின் "தமிள்"
2. கமல் - அசினின் நீளமான அலும்புகள்
3. சில காட்சிகளில் வரும் புஷ், ஜப்பானியன், நெட்டை மனிதன், வில்லன் வேடங்களின் அதீத மேக்கப் உறுத்தல்கள்.

படம் முடியும் போது வரும் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டோர் குறித்த எழுத்தோட்டங்களில் கதை விவாதக் குழுவில் அமரர் சுஜாதாவும் இருக்கிறார்.
32 வருடங்களுக்கு முன்னர் கணையாழியில் அவர் சொன்னதை அவரே மெய்ப்பிக்க உதவிப் போயிருக்கிறார்.

பி.கு: என் பார்வை எல்லோர் பார்வையை ஒத்திருக்கவேண்டும் என்ற எந்த வித அவசியமும் இல்லை.

எனக்கு பிடித்த தசாவதாரம் கமல்கள் ஒழுங்கின் படி
1.பூவராகன் என்னும் சமூகப் போராளி
2. ரங்கராஜன் நம்பி என்னும் வைணவ பக்தர்
3. பல்ராம் நாயுடு என்னும் குடிவரவு அதிகாரி
4. சிதம்பரம் கிருஷ்ணா பாட்டி
5. ஜப்பானிய அண்ணன்
6. பாடகர் அவதார் சிங்
7. பத்தடி உயர காலிஃபுல்லா
8. புஷ்
9.வில்லன்
10. கோவிந்தராஜன் என்னும் வழக்கமான முகம் மழித்த ஹீரோ



posted by கானா பிரபா 5:48 AM  
 
17 Comments:
  • At June 14, 2008 at 6:41 AM, Blogger MyFriend said…

    :-))

     

  • At June 14, 2008 at 6:44 AM, Blogger VSK said…

    ஒரிஜினல் கமலுக்குப் பத்தாவது இடத்தைக் கொடுத்தது 'நச்'சுன்னு இருக்கு!

    நவராத்திரியில் ஒரு சின்னச் சின்ன உடை, முடி அலங்காரங்கள் மூலமாகவே ஒன்பது குணச்சித்திரத்தைக் காட்டிய நடிகர்திலகத்துக்கும், இத்தனை மேக்க்கப் உதவியுடன் இவர் செய்திருக்கும் 10 வேஷங்களையும் ஒப்பிடும்போதுதான் நடிகர்திலகத்தின் பெருமை இன்னமும் வானளாவி உயர்ந்து நிற்கிறது.

     

  • At June 14, 2008 at 6:44 AM, Blogger ஜோ/Joe said…

    நன்றி கானா பிரபா!

     

  • At June 14, 2008 at 6:46 AM, Blogger ஆ.கோகுலன் said…

    //"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".
    //

    வாசிக்கும்போதே ஒரு எக்கோ செளண்ட் வருகிறது.
    அமரர் சுஜாதா..:(

    //தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//

    கொன்னுட்டிங்க..! :)

     

  • At June 14, 2008 at 6:47 AM, Blogger VIKNESHWARAN ADAKKALAM said…

    :-))

    நானும் ஸிமைலிதான் போடுவேன்... பிறகு பத்தை பார்த்துட்டுதான் பின்னூட்டம்.

     

  • At June 14, 2008 at 6:50 AM, Blogger G.Ragavan said…

    கடைசியாச் சொன்னீங்களே.. அதுதான் என் கருத்தும். உண்மையான கமலுக்கு இறுதியிடம்தான்.

    படத்தின் சிறப்பே...தொடர்புச் சங்கிலிதான். தொடங்கியதில் இருந்து முடியும் வரையில் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஓடுகிறது.

    மேக்கப் சரியில்லை. உறுத்தலாகத் தெரிகிறது. நவராத்திரியிலோ மைக்கேல் மதன காமராஜனிலோ இவ்வளவு மேக்கப் தேவையிருக்கவில்லையெ!!!!!

     

  • At June 14, 2008 at 6:54 AM, Blogger Samuthra Senthil said…

    தசாவதாரம் பற்றி நடிகை அசினின் சிறப்பு பேட்டியை நிருபர் வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். வந்து ஒரு எட்டு பார்த்து படித்து விட்டு செல்லுங்கள் வாசகர்களே...!

     

  • At June 14, 2008 at 7:03 AM, Blogger பினாத்தல் சுரேஷ் said…

    //தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//

    அருமை!

    உங்கள் டாப் டென்னுடன் ஒத்துப்போகிறேன். தலைவரை நினைவு கூர்ந்தமைக்கும் நன்றி.

     

  • At June 14, 2008 at 8:13 AM, Blogger கானா பிரபா said…

    மைபிரெண்ட்

    என்ன சிரிப்பான் ;-) மீ த பெஸ்ட்னு சொல்ல வேண்டியது தானே.

    வாங்க வி.எஸ்.கே

    நடிகர் திலகத்தோடு யாரும் ஒப்பிட முடியாதவர்கள். ஆனால் இந்த தசாவதாரம் கதைக்களமும், பாத்திரங்களின் படைப்பும் மேக்கப்பின் தேவையை உணர்த்தியே இருக்கின்றன. மேக்கப்பில் அசிரத்தை இருப்பதை ஏற்கிறேன்.

    வருகைக்கு நன்றி ஜோ

     

  • At June 14, 2008 at 8:17 AM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கு நன்றி கோகுலன்

    வாங்க விக்னேஸ்வரன்

    மைபிரண்ட் படம் பார்த்துட்டு தான் ஸ்மைலி போட்டாங்க. எதுக்கும் இப்பவே ஒரு பாதுகாப்புக்கு ஸ்மைலி போட்டுக்குங்க ;-)

    வாங்க ராகவன்

    படத்தின் விறுவிறுப்பு சொல்லியே ஆகணும். வி.எஸ்.கே அவர்களுக்கு சொன்னது தான் நவராத்திரி, மைக்கேல் மதன காமராஜன் பாத்திரப்படைப்புக்கள் வித்தியாசமானவை.

    சினிமா நிருபர்

    தங்கள் தகவலுக்கு நன்றி

    சுரேஷ்

    இப்பட முயற்சியில் ஒத்துழைத்த சுஜாதா சார் தற்போது இருந்து முழுமையான படத்தைப் பார்க்கவில்லையே என்ற மனப்பாரம் இறுதி எழுத்தோட்டம் வரும்போது ஏற்பட்டது.

     

  • At June 14, 2008 at 7:18 PM, Blogger Thiruu00 said…

    உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".

     

  • At June 14, 2008 at 8:24 PM, Blogger Unknown said…

    எதிர்பார்ப்பு இல்லைன்னா ஏமாற்றம் இல்லைதானே? :)

    எதார்த்தமான விமர்சனம்..

     

  • At June 15, 2008 at 1:15 AM, Blogger ஆயில்யன் said…

    நல்லா இருக்கு :))

    நான் இன்னும் பார்க்கலை படத்தை ஒன்லி விமர்சனங்கள் மட்டும் படிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!

    ////தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//

    நானும் கூட முதலில் இதில் ஹேராமினை தேடினேன் :)

     

  • At June 15, 2008 at 2:40 AM, Blogger கோபிநாத் said…

    தல

    சுருக்கமாக சொன்னாலும் சூப்பராக சொன்னிங்க ;))


    \\தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.
    \\\

    சூப்பர் தல...சும்மா நச்சுன்னு சொன்னிங்க ;))

     

  • At June 15, 2008 at 4:01 AM, Blogger சுரேகா.. said…

    நல்லா சொல்லியிருக்கீங்க அண்ணா!


    எப்பவும் கமல் சார் அப்படித்தான்.

    அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே அவர் பிரம்மாண்டம் புரியும்.

     

  • At June 15, 2008 at 6:09 AM, Blogger கானா பிரபா said…

    திரு, தஞ்சாவூரான், ஆயில்யன், தல கோபி, சுரேகா

    மிக்க நன்றி ;-))

     

  • At June 15, 2008 at 6:27 AM, Blogger சி தயாளன் said…

    //தெனாலி பார்க்கப் போய் மகாநதி கமலைத் தேடுவதும், ஹேராம் பார்க்கப் போய் மைக்கேல் மதன காமராஜனைத் தேடுவதும் தான் விமர்சனமாக அமையும் என்றால் அதை இப்படத்திற்கு செய்ய மாட்டேன்.//

    சரியாகச் சொன்னீர்கள்..! கதாநாயகன் கமல் அதீத heroism காட்டாமல், தன்னால் முடிஞ்ச அளவு மட்டும் போராடுவதாக காட்டியிருப்பதுதான் கமலின் சாணக்கியதனம்.. உதாரணம் கிளைமாக்ஸ் காட்சி..!

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
கமல் ஹாஸ்யம் 10
எனக்குப் பிடித்த 10 கமல்(கள்)
பச்சப்பனம் தத்தே பொன்னாரப்பூ முத்தே...!
திரைக்கலைஞர் ஜான் அமிர்தராஜ் நினைவாக...!
குத்தாட்டம் போடும் கொரியக் குழந்தை
"ஆரேரே ஆரேரே" - Happy Days பாட்டு
மலையாளத்தின் திரையிசை விருதுகள் 2007
இளைய நிலா மெட்டு ஹிந்தியில் இத்தனை பாட்டு
மொழி தாவிய இசை மெட்டுக்கள் - பாகம் 2
மொழி தாவிய திரை மெட்டுக்கள்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது