"இளைய நிலா பொழிகிறதே" பாடல் இசைஞானி இளையராஜாவின் முத்துக்களில் விலக்கமுடியாதது. இந்தப் பாடல் இடம்பெற்ற "பயணங்கள் முடிவதில்லை" படமே ஒருவருடம் ஓடி வெற்றி கண்டது. குறித்த இந்தப்பாடலில் வரும் கிட்டார் இசையில் சிறப்பை சிலாகிக்காதோர் இல்லையெனலாம். இந்தப் பாடலின் மெட்டு ஹிந்திக்கும் தாவியிருந்தது. சிங்களத்திலும் கேட்டதாக ஞாபகம். இங்கே பாருங்கள் இந்த மெட்டு சமீபத்திய ஹிந்தி ஆல்பங்களில் கூட உலாவுகின்றது.
இது இளையராஜாவின் இசையில் வந்த பாடல் தான். ஆனால், இந்த மெட்டுக்கு பதிலாக இந்த ஹிந்தி படத்திற்க்கு இசையமைத்த இசையமப்பாளரிடமிருந்து வேறு ஒரு மெட்டை அவர் கேட்டு பெற்றார்(sort of a barter system) என்றும் ஓரு செய்தி காற்றில் உண்டு. "கனவு காணும் காலங்கள் யாவும் கலைந்து போகும் கோலங்கள்" என்ற பாடல் தான் அது என்று கேள்விபட்டிருக்கிறேன்.
//Hari said... "கனவு காணும் காலங்கள் யாவும் கலைந்து போகும் கோலங்கள்" என்ற பாடல் தான் அது என்று கேள்விபட்டிருக்கிறேன்.//
வணக்கம் ஹரி
கனவு காணும் காலங்கள் பாடலுக்கான மூல ஹிந்திப்பாடலைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் அந்த ஹிந்திப் பாடலை இந்தப்ப்பாடலுக்கு மூலமாக ராஜா உபயோகித்தார் என்பது எனக்கு புதுச்செய்தி. தங்கள் கருத்துக்கு நன்றி.
////Hari said... "கனவு காணும் காலங்கள் யாவும் கலைந்து போகும் கோலங்கள்" என்ற பாடல் தான் அது என்று கேள்விபட்டிருக்கிறேன்.//
வணக்கம் ஹரி
கனவு காணும் காலங்கள் பாடலுக்கான மூல ஹிந்திப்பாடலைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் அந்த ஹிந்திப் பாடலை இந்தப்ப்பாடலுக்கு மூலமாக ராஜா உபயோகித்தார் என்பது எனக்கு புதுச்செய்தி. தங்கள் கருத்துக்கு நன்றி.//
Ilayaraja & Kalyanji/Anandji duo used to have exchange system where each other would others tune in Tamil and Hindi. Read in itwofs.com?
வணக்கம் கானா பிரபா! அருமையான பாடல் இது. இந்த இடத்தில் இளையராஜா பற்றிய ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இசைஞர் ஒருவர் இளையராஜாவின் குழுவில் சேர விரும்பி அவரை சந்தித்தார். அவரை சோதிக்க விரும்பிய ராஜா சில சப்தங்களை கிட்டாரில் வாசிக்க சொன்னார். இரண்டு மூன்று இசை சப்தங்களை அவர் வாசித்த பின், ராஜா தன் பையிலி ருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஒரு இரும்பு பெட்டியின் மீது நேராக நிற்க வைத்து சுழல விட்டார். சுழலும் போது வரும் சத்தம் மற்றும் அது சுழன்று முடித்தபின் கீழே விழும் போது வரும் சத்தம் இரண்டையும் வாசித்து காண்பிக்க சொன்னார். அந்த இசைஞர் ரால் முடியவில்லை. உடன் கிட்டாரை எடுத்து அந்த சப்தங்களை அருமையாக வாசித்து காட்டினார் இளையராஜா.
//thamizhparavai said... kanavu kaanum kaalangal kalaindhu pohum kolangal song entha padathula vanthathu? athan root hidhi song ethu?//
வணக்கம் நண்பரே
நீங்கள் கேட்டவை படத்தில் தான் கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல் வருகின்றது. இந்த மெட்டும் இசைக்கோர்வையும் Upkar என்ற படத்தில் கல்யாண்ஜி ஆனந்த்ஜி ஆல் போடப்பட்டது. இதுதான் அந்தப்பாடலின் வீடியோ இணைப்பு
//Anonymous said... Ilayaraja & Kalyanji/Anandji duo used to have exchange system where each other would others tune in Tamil and Hindi. Read in itwofs.com?//
வணக்கம் நண்பரே
நீங்கள் தந்த சுட்டியில் இன்னும் பல விபரங்கள் இருக்கின்றன, மிக்க நன்றி
//பிரேம்ஜி said... வணக்கம் கானா பிரபா! அருமையான பாடல் இது. இந்த இடத்தில் இளையராஜா பற்றிய ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். //
வணக்கம் பிரேம்ஜி
சுவையான பகிர்வைத் தந்திருந்தீர்கள் நன்றி, ராஜாவின் வல்லமை பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம், அதைத்தான் நான் தந்த இணைப்பில் பாலு சொல்கிறார். ராஜா ராஜா தான்.
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the TV Digital, I hope you enjoy. The address is http://tv-digital-brasil.blogspot.com. A hug.
அந்த கடைசியில் வரும் கிடாரின் தனிஆவர்த்தனத்துக்குத்தான் காசு.
சும்மா இளையராஜா 16 டேக் எடுத்து பிச்சி உதறிட்டார்