Saturday, May 29, 2010

அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்


இப்போதெல்லாம் பழைய பாடல்களை ரீமிக்ஸ் என்று கைமா பண்ணும் காலம் இது. முன்னொரு காலத்தில் எண்பதுகளில் சிங்கப்பூர் ஒளி ஒலி என்ற வீடியோ நாடாக்கள் வெகு பிரசித்தமாக இருந்தன. அந்த ஒலி ஒளி இசை நிகழ்ச்சியில் திறமையான சிங்கப்பூர் பாடகர்கள் தங்கள் பாணியில் பாடியும் ஆடியும் சினிமாப்பாடல்களைக் கொடுப்பதே சுவாரஸ்யமாக இருக்கும். அந்த நிகழ்ச்சி ஓய்ந்து விட்டது ஒரு துரதிஷ்டமே.

அண்மையில் சிங்கப்பூர் சென்ற போது ஒரு பாடல் இசைத்தட்டு வாங்கினேன். அதில் சிங்கப்பூரின் பிரபல கலைஞர்கள் எண்பதுகளில் வந்த சினிமாப்பாடல்களுக்கு புது மாதிரியான மெல்லிசை கொடுத்துப் பாடி இருந்தார்கள். எல்லாப்பாடல்களுமே கேட்பதற்கு இதமாக இருக்கும். இதேமாதிரி ஒரு அனுபவம் யூடிபை மேய்ந்த போது கிட்டியது. ஏஷியா நெட்டின் Rosebowl என்ற சானல் இளையோருக்கான ஒரு சானல் என்று தன்னை முன்னுறுத்தி வித்தியாசமான படைப்புக்களை வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தான் Rosebowl Youth Icon 2010 இந்த நிகழ்ச்சியின் சில பகிர்வுகளைக் கண்டு வியந்து போனேன். பழைய பாடல்களை பியானோ போன்ற நவீன வாத்தியங்களைக் கொண்டு இசைத்தவாறே இளம் பாடகர்கள் தம் பாணியில் கொடுத்த விதம் உண்மையிலேயே வித்தியாசமானதொரு படையலாக இருக்கின்றது. இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தான் என்றும் இனிக்கும் எமது திரையிசைச் செல்வங்களை மாசு கெடாது அடுத்த தலைமுறையும் ரசிக்கும் வகையில் செய்யும் என்பதில் ஐயமே இல்லை. நான் அனுபவித்தை நீங்களும் அனுபவித்து மகிழுங்கள்.


"என்ன சத்தம் இந்த நேரம்" புன்னகை மன்னன் படப்பாடலை அனுபவித்துப் பாடும் உன்னிமேனன்




"நின்னுக்கோரி வர்ணம்"அக்னி நட்சத்திரம் படப்பாடலைப் பாடுகின்றார் ஹரிணி



"விடை கொடு எங்கள் நாடே" ஜாப் பாடும் கன்னத்தில் முத்தமிட்டால் படப்பாடல்



மலையாளத்தின் எவர் க்ரீன் பாடல் "தும்பீ வா தும்பக் குளத்தில்" ஓளங்கள் பாடலைப் பாடும் மஞ்சரி


"என்னுயிரே என்னுயிரே" உயிரே படப்பாடலோடு உருகும் ஶ்ரீனிவாஸ்



"உன்னைக் காணாத கண்ணும்" நேகா உருகிப்பாடும் இதயக்கமலம் பாடல்


"மஞ்சள் வெய்யில் மாலையிலே" வேட்டையாடு விளையாடு பாடலோடு துள்ளிசைக்கும் க்ரிஷ்



"புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது" ரோஜா பாடலை வெள்ளை மழையில் அனுபவித்துப் பாடும் சிசிலி



கடந்த வருச மலையாள ஹிட் பாடல் "பிச்ச வச்ச நாள் முதல்" புதியமுகம் படப்பாடலைப் பாடும் நேகா

8 comments:

  1. பிரபா,
    பகிர்தலுக்கு நன்றி , இளையராஜாவின் "தும்பீ வா தும்பக் குளத்தில்" உண்மையில் ஒரு அருமையான இசை அமைப்புடன் கூடிய என்றும் அழிய பாடல், ஜானகி இன் குரலில் இப்பாடல் இன்றும் கேரளத்தில் அதிக இசை போட்டிகளில் ஒலிக்கும் பாடல் ஆகும் .
    இப்பாடல் மெட்டு தமிழில் ஆட்டோ சங்கர் என்ற படத்தில் சந்தத்தில் என்ற பாடலில் ராஜா பயன்படுத்தி இருப்பர்.

    ReplyDelete
  2. தும்பி வா ...
    என்னோட பாவரிட் ...
    என்னோட வகுப்புத் தோழியோட குரலில் கேட்ட பாட்டு ..
    முத முதலில் பிறர் குரலில் கேட்கப் போகிறேன் ..
    நன்றி நண்பரே ....

    ReplyDelete
  3. அருமையான தயாரிப்புகள். எத்தனை திறமைகள். நன்றி பிரபா.

    ReplyDelete
  4. மிக அருமை பிரபா. ஓம். பார்த்தால் பசி தீரும்.

    தந்து எம் பசியையும் தீர்ந்த்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. Anonymous Anonymous said...

    பிரபா,
    பகிர்தலுக்கு நன்றி , இளையராஜாவின் "தும்பீ வா தும்பக் குளத்தில்" உண்மையில் ஒரு அருமையான இசை அமைப்புடன் கூடிய என்றும் அழிய பாடல்,//

    வருகைக்கு நன்றி நண்பரே

    தமிழில் வந்த , தெலுங்கில் வந்த வடிவங்களை முன்னர் வீடியோஸ்பதியில் இட்டிருக்கின்றேன்


    நியோ said...

    தும்பி வா ...
    என்னோட பாவரிட் ...
    என்னோட வகுப்புத் தோழியோட குரலில் கேட்ட பாட்டு ..//

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. சிறில் அலெக்ஸ் said...

    அருமையான தயாரிப்புகள். எத்தனை திறமைகள். நன்றி பிரபா./

    வாங்க சிறில், இப்படியான புதுமைப்படைப்பைப் பார்க்கும் போது உண்மையில் ஒரு புத்துணர்வு வருகிறது

    மணிமேகலா said...

    மிக அருமை பிரபா. ஓம். பார்த்தால் பசி தீரும்.

    தந்து எம் பசியையும் தீர்ந்த்தமைக்கு நன்றி.//

    மிக்க நன்றி

    ReplyDelete
  7. தும்பீ வா தும்பக் குளத்தில் அந்த குரலும் அந்த காட்சி அமைப்பும் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு....யப்பா...சூப்பரு ;)

    ஆனா மஞ்சரியை வச்சி பார்க்க முடியல்ல...என்னால முடியல ;(

    மத்தபடி எல்லாமே ஓகே தல ;)

    ReplyDelete
  8. பிரபா,

    பகிர்வுக்கு நன்றி.ராஜா இசை மஞ்சரி குரல்.போதும்

    ReplyDelete