Saturday, November 14, 2009

"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தை விட்டு விட்டுப் பார்க்காமல் முழுமூச்சில் பார்த்து ஓய்ந்திருக்கின்றேன். அதற்குக் காரணம் படு யதார்த்தமான மதுரைப் பக்கம் வீசும் பேச்சு வழக்கும் 99.9% வீதம் ஆக்கிரமிக்கும் புதுமுகங்களின் இயல்பான நடிப்பும் கூடவே சுமாரான அதிக திருப்பம் இல்லாத கதை என்றாலும் எடுத்துக் கொண்ட களத்தைப் பயன்படுத்திய விதமுமாகச் சிறப்பிக்கின்றது "மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" என்ற திரைப்படம்.

"நாடோடிகள்" படம் என்னை ஏனோ அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் பெருவாரியான ரசிகர்களுக்குப் பிடித்துப் பெரும் வெற்றி கண்டது வரலாறு. ஆனால் "மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" படத்திற்கு வலைப்பதிவுகள் பலவற்றிலும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததோடு படமும் பெரிதாக எடுபடவில்லை. இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தூண்டியதே படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒரு ப்ரொமோ பாடலும், காதல் பாடல் ஒன்றும்.


கதாநாயகனாக நடிக்கும் அரவிந்த் வினோத், நாயகி ஸ்ரித்திகா போன்றோரின் அலட்டல் இல்லாத நடிப்போடு ரஜினி ரசிகராக வரும் பஸ் கண்டெக்டர் ராஜ்குமார், குள்ள உருவத்தில் கலாட்டா செய்யும் பையன் மற்றும் பஸ் பயணத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமுமே அறிமுகங்கள் என்ற குறையே வைக்கவில்லை. இயக்குனர் ரதிபாலா, அழகான ஒளிப்பதிவு தந்த எஸ்.பி.எஸ். குகனின் ஒளிப்பதிவு அத்தோடு இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டிய இனிய இசையை வழங்கிய ஜேவியின் இசை எல்லோருக்கும் சபாஷ். உங்கள் அடுத்த கலைப்பயணத்திற்காவது பெரும் அங்கீகாரம் கிடைக்கட்டும்.

இரு விழி இரண்டும் ஓசைகள் எழுப்ப



மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி promo video

11 comments:

  1. பாஸ் பார்த்தாச்சா படம் குட்! (ஹீரோ சன் டிவியில காம்பியரா இருக்காருதானே?)

    சரி ரெக்கமண்டுறீங்க
    பெரியவங்க பார்த்துட்டு எங்கள மாதிரி சின்னபசங்ககிட்ட சொல்லிட்டா உடனே பார்த்துடவேண்டியதுதான்!

    ReplyDelete
  2. வழக்கமா ஆண்பாவம்தானே பாஸ்..பார்த்துக்கிட்டிருப்பீங்க?!! :))) இப்படி ஒரு படத்தை எனக்கு அறிமுகப்படுத்திய கானாஸ் வாழ்க!

    - இப்படிக்கு, ஓடாத படத்தை ஓட வைப்போர் சங்கம்!!

    ReplyDelete
  3. எங்க மண் வாசனை பாஸ்! கண்டிப்பாக பார்க்கனுமே. :)

    ReplyDelete
  4. //இரு விழி இரண்டும் ஓசைகள் எழுப்ப//

    பாஸ் இந்த பாட்டுத்தானே நீங்க திரும்ப திரும்ப ஏழு வாட்டி ரிப்பிட்டு செஞ்சு பார்த்தேன்னு சொன்னீங்க ! நல்லா இருக்கு பாஸ் :)))

    ReplyDelete
  5. ஆயில்ஸ்

    படம் பாருங்க பெரிய பாண்டிக்கு புடிச்சா சின்ன பாண்டிக்கும் பிடிக்கும்லே ;)

    ReplyDelete
  6. Blogger சந்தனமுல்லை said...

    வழக்கமா ஆண்பாவம்தானே பாஸ்..பார்த்துக்கிட்டிருப்பீங்க?!! :))) இப்படி ஒரு படத்தை எனக்கு அறிமுகப்படுத்திய கானாஸ் வாழ்க! //

    ஆச்சி

    இருங்க நீங்களும் பதிவு போடுவீங்க தானே அப்ப கவனிக்கிறோம்,
    எலோ சின்ன பாண்டி!
    கேக்குதா நான் சொல்றது

    பின்னூட்டத்தால் கடுப்பானோர் சங்கம்

    ReplyDelete
  7. கேக்குது சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

    ReplyDelete
  8. தமிழ் பிரியன் said...

    எங்க மண் வாசனை பாஸ்! கண்டிப்பாக பார்க்கனுமே. :)//

    பாருங்க பாஸ் பாருங்க, மண்வாசனையை அனுபவியுங்க

    ReplyDelete
  9. தொலைக்காட்சியில் பாடல் பார்த்திருக்கிறேன்..அப்பவே நல்லபடமாக இருக்குமெனத் தோன்றியது.பார்க்க வேண்டும். விமர்சனத்தில் காதல் கதையா, க்ரைமா.. எது சம்பந்தமான கதைன்னு சொல்லியிருக்கலாம் ல?

    ReplyDelete
  10. ரிஷான்

    கதையை சொன்னா பாக்காமலேயே போய்விடுவீங்களே ;)

    ReplyDelete
  11. //ரிஷான்

    கதையை சொன்னா பாக்காமலேயே போய்விடுவீங்களே ;)//

    பார்த்துட்டேன் பாஸ் :)

    எந்தவொரு ஆபாசமும் இல்லாததால வீட்டில எல்லோருடனும் சேர்ந்து பார்க்கமுடியுமானதாக இருந்தது.

    பஸ் காட்சிகள்ல நாங்களும் அதே பஸ்ல பயணிக்குற மாதிரி ஒரு உணர்வு வருது இல்லையா?

    படம் முழுக்க சுவாரஸ்யமா, தொய்வில்லாம போகுது.

    அத்தோடு பார்த்தீங்கன்னா ஹீரோ,ஹீரோயின், படத்துல வர்றவங்க எல்லோருக்கும் ஒரே காஸ்ட்யூம்தான் கடைசி வரை.

    டூயட்டுக்குக் கூட வெளிநாட்டுக்கு ஓடல.

    அப்புறம் ஒரு குத்துப்பாடலுக்கு சோனா, ரகசியான்னு போகாம தைரியமா குமரிமுத்துவை ஆட வச்சதுக்கே பெரிசா பாராட்டலாம்.

    என்ன ஒரு குறைன்னா, ஹீரோயினைத் தவிர படத்துல வர்ற மற்ற எல்லாப் பெண்களுமே ஓவரா சத்தம் போடுறாங்க.. ஹீரோயின் சத்தம் போட வேண்டிய நேரத்துல கூட அமைதியா பேசுறார்.

    நல்ல படம் பார்த்த திருப்தி.
    நன்றி பாஸ் :)

    ReplyDelete