Saturday, June 13, 2009

நான் ரசித்த மலையாள மென் மெட்டுக்கள்

நான் பார்த்து ரசித்த சில மலையாளப் படங்களில் வெளிவந்த இனிய பாடல்களின் தொகுப்பை இங்கே பகிர்கின்றேன்.

சிபி மலயில் இயக்கி, நடிகை சாரதா தயாரிப்பில், திலீப், நவ்யா நாயர், சாரதா போன்றோர் நடித்த திரைப்படம் "மழைத்துளிக்காலம்" இந்தப் படத்தில் இருந்து மோகன் சித்தாரா இசையில் ஜெயச்சந்திரன் பாடும் இனிய பாடல் ஒன்று. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சேதாரப்படாத குரலில் பாடலின் கனிவைக் காட்டுகின்றார் ஜெயச்சந்திரன்.



வித்யாசாகர் மழையடிக்கும் போது ஒதுங்கிப் போய் மலையாளத்தில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு வருவார். Rock N Roll என்ற திரைப்படம் மோகன்லால் நடித்து கலகலப்பாகப் பார்க்கக் கூடிய படம். இசைக் கலைஞன் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் இங்கே நான் தும் பாடலே போதும் வித்யாசாகரின் சாகித்யத்துக்கு. கடந்த ஆண்டு இந்தப் பாடல் மது பாலகிருஷ்ணனுக்கு சிறந்த பாடகர் விருதை அள்ளிக் கொடுத்தது.



"இஷ்டம்" திரைப்படத்தை இப்போது தான் பார்த்து முடித்து வந்திருக்கிறேன். திலீப், நெடுமுடிவேணு, நவ்யா நாயர், ஜெயசுதா ஆகியோர் நடித்த கலக்கலான படம். தன் தகப்பனின் நிறைவேறாத காதலை மகன் நிறைவேற்றும் வித்யாசமான கதையோட்டம் இது. தகப்பனின் காதல்கவிதையை மகன் பாடலாக்கிப் பாடும் காட்சி.

7 comments:

  1. பாஸ் இந்த “காணும் போல்” பாட்டு நிறைய வாட்டி கேட்டிருக்கேன் பட் பார்த்ததில்லை இன்னிக்குத்தான் முத முதலா பாக்குறேன் நல்லா இருக்கு !

    நவ்யா நாயரும் கூட நல்லா இருக்காங்க :))))

    ReplyDelete
  2. பாஸ்

    நவ்யா நாயர் எப்போ அழகில்லாம இருந்திருக்காங்க?

    ReplyDelete
  3. //கானா பிரபா said...

    பாஸ்

    நவ்யா நாயர் எப்போ அழகில்லாம இருந்திருக்காங்க?/


    கிகிகிகி அப்ப உங்களுக்கு அவுங்க மேல ஒரு கண்ணு இருக்கு! ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்! :)))))))

    ReplyDelete
  4. ஜெயச்சந்திரனின் குரல் வளமும் திறமையும் சிறப்பாகவே இருக்கின்றன. மலையாளியாக இருந்தாலும் தமிழை மதிக்கும் கலைஞர். அவருடைய கீழ்க்கண்ட வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதை இங்கே கொடுக்கிறேன்.
    http://www.jayachandransite.com/html/profra.html

    Jayachandran likes to sing Tamil songs. He comments' "The natural flow of the Tamil language gives a musical touch to Tamil which makes its songs much more musical".

    இப்படித் தமிழை மதிக்கின்ற கலைஞர்களைத்தானே தமிழ் இசையமைப்பாளர்கள் மிகவும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். மிகவும் வருத்தமான விஷயம்.

    இவருடைய உச்சரிப்பும் இசையும் கலந்து சிறக்கும் திறமையைத் தமிழ்த் திரையுலகம் கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. வாங்க ராகவன்

    சுவையான பல தகவல்களைத் தந்திருக்கீங்க, ஜெயச்சந்திரன் இன்னும் நம் தமிழ்த்திரையுலகம் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள சிறந்ததொரு பாடகர்.

    ReplyDelete
  6. ஜெயச்சந்திரன் எனக்கும் பிடித்த பாடகர்.
    அவருக்கு வாய்ப்பு தராமல் எங்கிருந்தோ வடக்கிலிருந்து தமிழைக் கடித்துத் துப்பும் பாடகர்களை ஏன் இழுத்து வருகிறார்கள்?

    ReplyDelete
  7. வாங்க ஜோ

    வடக்கின் பாடகர்களை இது நாள் வரை அழைத்து வருவதன் மர்மம் எனக்கும் தான் புரியல,

    ReplyDelete