
இயக்குனர் பாசிலின் பல மலையாளப் படங்கள் தமிழுக்கு மாற்றம் கண்டு தயாரிக்கும் போது நிரந்தர இசையமைப்பாளராக இருப்பது இசைஞானி இளையராஜா. இசைஞானியின் பின்னணி இசையின் ஆழம் எவ்வளவு தூரம் சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணத்தை இங்கே தருகின்றேன்.
அனியத்தி பிறாவு திரைப்படத்தினை நான் காதலுக்கு மரியாதை திரைப்படம் வருவதற்கு முன்னர் பார்த்து ரசித்திருந்தேன். மீண்டும் அனியத்தி பிறாவு படத்தைப் பார்த்த போது "காதலுக்கு மரியாதை" திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா எவ்வளவு தூரம் தன் பின்னணி இசையினால் இன்னும் அந்தக் காவியத்தை உயரே தூக்கி நிறுத்தியிருக்கின்றார் என்பதை அழகாகக் காட்டுகின்றது இங்கே நான் தரும் இரண்டு படங்களின் இறுதிக் காட்சியும்.
முதலில் "அனியத்தி பிறாவு" படத்தின் இறுதிக்காட்சி, இசை வழங்கியவர் Ouseppachan
இதோ இசைஞானியின் ராக சாம்ராஜ்யத்தில் "காதலுக்கு மரியாதை" இறுதிக் காட்சி, குறிப்பாக நிமிடம் 2.07 வினாடிக்கு முன்னும் பின்னுமுள்ள இசைமாற்றத்தை அவதானித்துப் பாருங்கள். காதலர் கண்கள் சந்திக்கும் போது அதுவரை இருந்த இசை மெல்ல மாறி சோக இழையோடலில் என்னைத் தாலாட்ட வருவாளோ
ராஜா ராஜா தான்..,
ReplyDeleteஅருமையான ஒப்பீடு..,
வெயிலின் அருமை
நிழலில் தானே தெரியும்பாங்க
Supper
ReplyDeleteஎடுத்தோ
ReplyDeleteஎடுத்தோண்டு போக்கோ
**********
எடுத்துக்கோங்க
கூட்டிட்டு போங்க
வசனம் கேட்டு விசில் அடிச்ச கூட்டமில் ஞானும் ஒருவனாக்கும் பட்சே இவ்விட நான் முழுசாயிட்டு பேக் கிரவுண்ட் மியூசிக் கேட்டு நன்னாயிட்டு கலக்கியிருக்காரு ராசா!
அதுவும் அந்த ஆனந்தமான தருணங்கள்
சூப்பரேய்ய்ய்ய்
வீடியோக்களை பார்க்க முடியவில்லை பிரபா...
ReplyDeleteஆனா இளையராஜாவுக்கு நிகர் அவரே...
அருமை , கடற்கரையோரம் இருவரும் அமர்ந்து பிரிவை பற்றி பேசுவார்களே, அப்போது ஒலிக்கும் பின்னனி இசை அபாரம்.
ReplyDeleteபிரபா அண்ணா,
ReplyDeleteஇப்படி உங்களை போல இசையை அணு அணுவாக நான் ரசித்ததில்லை.
இப்படி 2.07 வினாடி என்றெல்லாம்.
ஆனால் ரசிக்கும் போது நல்லா இருக்கு.
அதுவும் இளையராஜா என்றால் சொல்ல வேண்டுமா?
சாலினி இன்னும் சில படங்களிலாவது நடித்திருக்கலாம்.
ம்ம் நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.
வீடியோஸ்பதியில் மாதம் கடைசி ஒரு 3 பதிவுகளாவது எழுதலாமே.
முன்பு போல.
இப்படி இசையை ரசிக்கும் ஒருவரிடம் நான் எதிர்பார்ப்பது தப்பில்லை என நினைக்கிறேன்.
உங்களது பதிவுகள் வாசித்த பின் தான் நான் இசையை நுணுக்கமாக அவதானிக்க தொடங்கினேன்.
ம்ம் நேரம் உள்ள போது எழுதுங்கள்.
நன்றி
கலக்கல் தல!... அப்புறம் முதன் முதலில் இருவரும் புக் ஷாப்பில் சந்தித்துக் கொள்வார்கள். அந்த சீனையும் போட்டு இருக்கும். தலைவர் பிச்சு உதறி இருப்பார்.
ReplyDeleteகலைக்கோவன்
ReplyDeleteவெயிலின் அருமையை தேடிக்கொண்டிருக்கிறோம் இல்லையா
யூபி
நன்றி :)
ஆயில்ஸ்
கனவுதேசம் டயலாக்கையும் விடலியா
வாங்க டக்ளஸ்
வணக்கம் மணி
அந்த தொகுப்பையும் தருகின்றேன்.
வணக்கம் வாசுகி
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, நிச்சயமாக இது போன்ற எனக்கு எட்டிய விஷயங்களைத் தர நானும் ஆவலாக இருக்கின்றேன். ஷாலினி அருமையான, இயல்பான நடிப்பைத் தரும் ஒரு கலைஞர்.
தமிழ்பிரியன்
நீங்க சொன்ன சீனும் செம கலக்கலா இருக்கும்.
பிரபா,
ReplyDeleteநல்ல பதிவு . இளைய ராஜாவின் ராக சாம்ராஜ்யத்திற்கு இன்னௌறு உதரணம்
Fazil ன் வருஷம் 16. திரைப்படம்.
வருஷம் 16ல் ராஜா வின் ராஜாங்கம் இசையில் தெரியும்.
Malayalam title: என்னென்னும் கண்ணன் சேட்டன் Ennennum Kannetante(1986).
இசை : ஜெரி அமல்டேவ் (Jeri Amaldev )
http://www.youtube.com/watch?v=mSvSL7KdHJM&feature=related
http://www.youtube.com/watch?v=dKs9sElRTEY&feature=related
அருண்
Wow. Nice comparison. I have written in detail about KM background score here
ReplyDeletehttp://backgroundscore.blogspot.com/2008/05/listening-kaadhalukku-mariyaathai.html
வாங்க அருண்
ReplyDeleteநீங்க என்னெட்டும் கண்ணெட்டானே, வருஷம் 16 ஒப்பீடு கூட கலக்கல். இதே மாதிரி இன்னொன்று கற்பூர முல்லை - எண்டே சூர்ய புத்ரிக்கு இரண்டுக்குமே ராஜா தான்
வணக்கம் சுரேஷ்குமார்
உங்க காதலுக்கு மரியாதை தொகுப்பையும் நண்பர்களோடு சேர்ந்து ரசித்தேன் அருமை