Friday, March 20, 2009

54 ஆவது பிலிம்பேர் (ஹிந்தி) பார்த்ததும் பாதித்ததும்

ஆரம்பத்தின் கரன் ஜோகரின் கடி மழையை சகித்துக் கொண்டு பார்க்க ஆரம்பித்தால் அவருக்குப் பின் வந்து தொகுத்த ரன்பீன் கபூரும் இம்ரான்கானும் பண்ணிய அலும்பைச் சகிக்க முடியவில்லை. இதுக்கு வேறு ஆளாளுக்கு வந்து பாராட்டு மழை, நல்லா பண்றாங்களாம்.

அதிகம் எதிர்பார்த்த வெட்னிஸ்டே படம் அள்ளவில்லை, மாறாக மும்பை மேரிஜான் கவனிப்புக்குரியதாக இருந்ததுஆறுதல்.

Rock On! படத்தில் அப்படி என்ன தான் விஷேசமப்பா, டிவிடி வாங்கி 4 மாதமா தூங்குது, விருதை அள்ளியதே.

கஜினிக்காக சிறந்த புதுவரவு அசின் தொதும்கல் (என்ன இழவுடா) பரிசை பெற்றார் இயக்குனர் முருகடோஸ் தவிர எல்லாருக்கும் நன்றி சொன்னார்.

ரஹ்மானுக்கு 2 விருது , இப்படி ரெண்டு ரெண்டா வாங்கினா எப்படிங்க? விருதை வழங்கிய ஆஷாபோன்ஸ்லே ரங்கீலாஆஆஅ என்று பாடி ரஹ்மானை அழைத்தது மெய்சிலிர்ப்பு.

கரீனா கபூரும் புதுஜோடி சயிப் அலிகானும் வந்திருந்தனர். உர்ரென்ற முகத்தோடு கரீனாவின் பழைய காதலன் சாஹிட் கபூரும்

பிலிம்பேரின் அரங்கம் ஹைடெக் கலக்கல், சன் டீவி ஒளிபரப்பு போல ஆங்காங்கே காமரா பறப்பு தெரியவில்லை.

இடையிடையே வந்த நடனங்களில் உருப்படியா ஆடியது அபிஷேக் பச்சன், ஆள் செம குஷியில் இருந்தார், பார்வையாளர் பகுதியில் இருந்தும் கலாட்டா பண்ணியவாறே.

அமிதாப் அபிஷேக்கின் தம்பியா அப்பாவா? ட்ரெண்டியா உடையும், பக்கா க்ளாமராக
ஆள் 30 வயசு குறைச்சல்,ஐஸ்வர்யாராய்க்கு வயசு போகுதுப்பா ட்ரெஸ்சென்ஸ் கொடுமை:(

அர்ஜின் ராம்பால் ரசித்தவாறே நிகழ்ச்சியை பார்க்கும் அழகே தனி.

கையொடிந்த ஷாருக் ஸ்லம்டோக் மில்லியனியர் குழந்தைகளை அழைத்து விருது வழங்கினார், சிறப்பான பேச்சு ஆனாலும் மைக்கை கண்டா இவருக்கு குஷி போல.

ஸ்லம்டோக் மில்லியனியரில் நடிச்ச குழந்தைகளில் ஒன்று ஹாலிவூட்டை விட பாலிவூட் தான் பெட்டர் என்ற பேச்சு செம செயற்கை 5 நாள் ட்ரெய்னிங் போல.

ஆனா இன்னொரு குழந்தை முன்வரிசையில் எம்மாம் பெரீய்ய்ய்ய நடிகர்கள் என்று வாய்விட்டு பேசியது படு இயற்கை.

ஜோதா அக்பர் படத்துக்கு சிறந்த இயக்குனர், படம் விருதை பெற்றவர்கள் பெயிண்ட் அடிச்சவன் பேர் சொல்லி கூடநன்றி மழை, ஆனா ரஹ்மான் பேர் மட்டும் இல்லை.

புதுமுகப்பாடகர் பென்னி தயாள் (மதுரைக்கு போகாதடி) ரஹ்மான் புண்ணியத்தில் விருதை வாங்கி ஏகத்துக்கும் புகழ்ந்தார் நெகிழ்வாக இருந்தது.

ஷ்ரேயா கொசலுக்கு எப்பதான் பிலிம்பேர் விருது கொடுக்காமல் நிறுத்தப் போறாங்க?

சிறந்த நடிகர் விருதை வாங்க ஹ்ரித்திக் வரவில்லை.

ஓம் பூரிக்கு வாழ்நாள் சாதனையாளர், அமிதாப் விருதை வழங்கிக் கொண்டே ஓம்புரியின் அடக்கம் பற்றி பேசப்பேச இவரோ கண்களை மூடிக்கொண்டு முகம் சிவக்க அழுகை.

ஓம்பூரி 74 இல் திரைப்படக் கல்லூரியில் நுழையும் போது இவன் ஹீரோவும் இல்லாம வில்லனும் இல்லாம இரண்டும் கெட்டானா இருக்கானே என்று எல்லோரும் ஒதுக்கஅப்போது திரைப்படக் கல்லூரி முதல்வர் க்ரீஷ் கர்னாட்டின் கருணைக்கடாட்சம் மூலம் நுழைவு கிடைத்தது அதனால் இங்கே உங்கள் முன் நிற்கிறேன் இப்படிச் சொன்னார் ஓம்பூரி.








வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஓம் பூரி

18 comments:

  1. //ஷ்ரேயா கொசலுக்கு எப்பதான் பிலிம்பேர் விருது கொடுக்காமல் நிறுத்தப் போறாங்க?///
    இதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
    (இதை போடச் சொன்னது ஆயில்யன் என்பதை வெளியில் சொல்ல வாணாம்)

    ReplyDelete
  2. //
    Rock On! படத்தில் அப்படி என்ன தான் விஷேசமப்பா, டிவிடி வாங்கி 4 மாதமா தூங்குது, விருதை அள்ளியதே.//

    அண்ணே, இது சூப்பர் படம்ண்ணே.. திரும்ப திரும்ப பார்க்க தூண்டும்.. farhan akhtar Rocks! ;-)

    ReplyDelete
  3. நான் இதெல்லாம் நேத்தே டுவீட்டரில் படிச்சுட்டேனே! ;-)

    ReplyDelete
  4. / தமிழ் பிரியன் said...

    //ஷ்ரேயா கொசலுக்கு எப்பதான் பிலிம்பேர் விருது கொடுக்காமல் நிறுத்தப் போறாங்க?///
    இதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
    (இதை போடச் சொன்னது ஆயில்யன் என்பதை வெளியில் சொல்ல வாணாம்)/


    ரிப்பீட்டு...

    ReplyDelete
  5. விழாவுக்கு போக முடியாத எங்களுக்கு நல்ல பதிவு கொடுத்தீர்கள்.
    Rock On! நானும் தான் டிவிடி வாங்கி வைத்திருக்கிறேன்.பார்க்க நேரம் கிடைக்கவில்லை.
    மைஃபிரண்ட் சூப்பர் படம் என்கிறாரே?

    ReplyDelete
  6. தமிழ்ஸ்

    ஆயில்ஸ் ஸ்ரேயா ஜீரத்தில் இருந்து விடுபட்டுட்டாரே, இப்போதைக்கு ஆயில்யா

    மைபிரண்ட்

    வாங்க வாங்க, ட்ராப் எழுத ட்விட்டர் உபயோகப்படுத்து இல்லையா :)நீங்க சொல்லீட்டீங்க அதனால பார்த்துடுவோம்

    நிஜம்ஸ்

    தமிழ்ஸ்ஸுக்கு சொன்னது தான் உங்களுக்கும்

    வணக்கம் டொக்டர்

    மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, உங்களுக்கும் ஹீந்திப் படம் பிடிக்கும் போல.

    ReplyDelete
  7. அடேங்கப்பா... இதெல்லாம் ஊடூபுல ஏத்துறாங்களா இப்போ. அருமை.

    ஓம்புரி ஒரு நல்ல நடிகர். பாரத் ஏக் கோஜ்-னு ஒரு தொடர் வந்தது. ஷியாம் பெனகல் எடுத்தது. ரொம்பச் சின்ன வயசு. அதுல என்ன கத ஓடுதுன்னே ஒழுங்காப் புரியாது. ஆனா அதுல ஓம்பூரியோட நடிப்பு அவ்ளோ பிடிச்சிருந்தது.

    ஷ்ரெயா கோஷல் நல்ல பாடகி. அவங்களுக்கு விருது குடுக்கலைல...கூட்டத்துல எருது பத்தி விடுவோம்னு இப்பவே இங்கயே மெரட்டிக்கிறேன்.

    ReplyDelete
  8. வாங்க ராகவன்

    இது நான் டிவிடியில் பார்த்தேன் பின்னர் யூடிபிலும் ஏத்தியிருக்காங்க.

    ஆஹா நீங்க கூட ஷ்ரேயா பக்தரா :)

    ReplyDelete
  9. \\
    ஆஷாபோன்ஸ்லே ரங்கீலாஆஆஅ என்று பாடி ரஹ்மானை அழைத்தது மெய்சிலிர்ப்பு.
    \\
    உண்மைதான்...
    அவங்களோட குரல் இப்பவும் எப்படி இருக்கிறது...

    ReplyDelete
  10. \\
    கஜினிக்காக சிறந்த புதுவரவு அசின் தொதும்கல் (என்ன இழவுடா) பரிசை பெற்றார்
    \\
    :))

    ஆத்தா உன்னை தமிழில் பார்த்த மாதிரி அழகா இல்லையே பாலிவுட்ல...
    வேணாம் நீ திரும்பி வந்துடு...

    \\
    இயக்குனர் முருகடோஸ் தவிர எல்லாருக்கும் நன்றி சொன்னார்.
    \\

    Y?

    ReplyDelete
  11. அமிதாப் மனுஷன் வயசு ஏற ஏற கலக்கலாதான் இருக்கிறார்...

    ReplyDelete
  12. ஷரேயா கோஷல்...
    அண்ணே இது துரோகம்.. ;)

    ReplyDelete
  13. மும்பை மேரிஜான்,Rock On! நானும் ஓசியில வாங்கிட்டு வந்துயிருக்கேன். சென்ஷி சொன்னான் Rock on நல்லாயிருக்குன்னு...பார்க்கானும்...வீடியோஸ்க்கு நன்னி ;)

    ReplyDelete
  14. //தமிழ் பிரியன் said...
    //ஷ்ரேயா கொசலுக்கு எப்பதான் பிலிம்பேர் விருது கொடுக்காமல் நிறுத்தப் போறாங்க?///
    இதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
    (இதை போடச் சொன்னது ஆயில்யன் என்பதை வெளியில் சொல்ல வாணாம்)
    //
    கொடுத்த காசுக்கு எக்ஸ்ட்ராவா சவுண்டு வுடுறீயே ராசா.....!
    உன்னிய நினைச்சா எனக்கு ஆனந்த கண்ணீர் தான் வருது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  15. //கானா பிரபா said...
    தமிழ்ஸ்

    ஆயில்ஸ் ஸ்ரேயா ஜீரத்தில் இருந்து விடுபட்டுட்டாரே, இப்போதைக்கு ஆயில்யா
    //

    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  16. "அலும்பைச் சகிக்க முடியவில்லை.இதுக்கு வேறு ஆளாளுக்கு வந்து பாராட்டு மழை, நல்லாபண்றாங்களாம்"... Rockon நல்லாயிருக்குன்னா...நானும் பார்க்கணும்.

    ReplyDelete
  17. கானா தம்பீ..

    ரொம்ப நல்ல வர்ணனை..

    ராக் ஆன் திரைப்படத்தை நானும் இன்னமும் பார்க்கவில்லை. அப்படியென்னதான் இருக்கு.. பார்த்திருவோம்..!

    ஓம்புரி மனிதர் கெட்ட நடிப்பு நடிப்பவர்.. ஒரு வங்க மொழிப் படத்தில் விறகு வெட்டும் தொழிலாளியாகவும், ரிக்-ஷா ஓட்டுபவராகவும் வருவார்.. அத்திரைப்படம் இன்னமும் என் கண்களில் நிற்கிறது..

    ஆனாலும் ஹிந்தியுலகம் தவிர மற்ற ஊர்களில் அவர் பெயர் பரவியது ஆஸ்தாவினால்தான்..! என்ன கொடுமை பாருங்க..!

    ReplyDelete
  18. வாங்கோ தமிழன்

    ஒரு படம் தோத்தா அசின் உங்கட கதையைக் கேட்பா. ஏன் நன்றி சொல்லேல்ல எண்டு தெரியாது. ஆஹா இன்னொரு ஷ்ரேயா கொ வெறி ரசிகரா?

    தல கோபி

    படத்தைப் பார்த்துட்டு சொல்லுங்க கேட்போம்.


    ஆயில்ஸ்

    உண்மையைச் சொன்னா கோபப்படக் கூடாது.

    வாங்க மாதேவி, படத்தை பார்த்திட்டு சொல்லுங்க

    உண்மைத் தமிழன் அண்ணாச்சி

    நல்லா நடிப்பவங்களை வில்லனாக்கியே இவங்க சாவடிச்சுடுவாங்க போல, இல்லையா

    ReplyDelete