Friday, October 8, 2010

எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்


எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சினிமாஆயுதத்தால் அ.தி.மு.க வை சீண்டிப்பார்த்ததில் எஸ்.எஸ்.சந்திரன் பங்குமுக்கியமானது. குறிப்பாக 80 களில் வந்த எஸ்.எஸ்.சந்திரன் முக்கிய நகைச்சுவை வேடமிட்டு வந்த படங்களில் அ.தி.மு.க குறித்தஎள்ளல் இருக்கும்.எஸ்.எஸ்.சந்திரன் அளவுக்கு பின்னாளில் கட்சிப்பரப்புரைக்காக திரை நகைச்சுவையைப்பயன்படுத்தியவர் இல்லை என்றேசொல்லலாம். புருஷன் எனக்கு அரசன் படத்தைத் தயாரித்தவர் எஸ்.எஸ்.சந்திரன்.



இராம.நாராயணனின் நகைச்சுவைப் படங்களில் எஸ்.எஸ்.சந்திரன் இணைந்திருப்பார், இருவருமே தி.மு.க அணி பிரச்சாரத்துக்கு வசதி. விஜயகாந்த் டி.ராஜேந்தர் தி.மு.க சார்பு நிலையில் இருந்த காலகட்டத்தில் எஸ்.எஸ் சந்திரன் காட்டில் மழை.

"நல்லா இருந்து நாசமாப்போக" மணமகளே வா படத்தில் எஸ்.எஸ்.சந்திரன் சாமியாராக நடித்த போது விட்ட பஞ்ச்.

80 களில் கவுண்டமணி ஹீரோ ரேஞ்சுக்குப் போக அவரின் வெற்றிடத்தை நிரப்பியவர் எஸ்.எஸ்.சந்திரன். பின்னாளில் எஸ்.எஸ்.சந்திரனும் ஓரிரு படங்களில் விசு பாணி ஹீரோவாக நடித்தவர். பெண்கள் வீட்டின் கண்கள்" எஸ்.எஸ்.சந்திரன் ஹீரோவாக நடித்து வெற்றி கண்ட படம்.

எஸ்.எஸ்.சந்திரன் நடித்துப் பிரபலமான வெற்றிப்படங்களில் ஒன்றான சகாதேவன் மகாதேவன் படத்தில் அவர் அ.தி.மு.க.விற்குக் கொடுக்கும் உள்குத்து நகைச்சுவையோடு காணொளி

1 comment:

  1. S.s.chandran podhukootangalil nagareegamatra muraiyil pesumpodhu erichal varum..
    indru varuthamthaan aerpadugirathu

    ReplyDelete