Monday, June 28, 2010

சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா


கடந்த வருடம் வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தில் ஒரு நாயகியாக நடித்த அபிநயா, தன் பிறவியிலேயே காது கேட்காதவர், வாய் பேசமுடியாதவர். நாடோடிகள் பட வாய்ப்புக் கிட்டியதும் அந்தப் படத்தில் இவருக்கு இன்னொருவர் பின்னணிக் குரல் கொடுத்திருந்தாலும் அந்தச் சுவடே தெரியாமல் குறித்த பாத்திரமாக இயல்பாக நடித்துத் தன் நடிப்புத்திறனைச் சாதித்துக் காட்டியவர். ஒரு இயக்குனரின் குறித்த பாத்திரத்தின் தேவையை அறிந்து அதை உள்வாங்கி நடிப்பது என்பது எவ்வளவு சவாலானது. இந்த அபிநயாவிற்கு விஜய் தொலைக்காட்சியின் 2009 படங்களுக்கான விஜய் அவார்ட்ஸில் சிறந்த இணை நடிகைக்கான விருது கிட்டியது. அப்போது அவர் உணர்வுகளை எப்படிப் பகிர்ந்து கொள்கின்றார் என்று பாருங்களேன் (முதல் வீடியோவில் எட்டாவது நிமிடத்தில் வருகிறது). கூடவே அவரின் தந்தை பேசும் போது பார்த்துக் கொண்டிருக்கும் கண்களில் நீர் வராமல் இருப்பதைத் தவிர்க்க முடியாது. நிகழ்ச்சிக்கு வந்த ஜாம்பவான்களில் இருந்து பாமரர் வரை எழுந்து நின்று இந்தச் சாதனைப் பெண்ணுக்கு வாழ்த்தியது ஒரு மகுடம்



4 comments:

  1. அபிநயாவை உருவாக்கிய சிற்பி சமுத்திரக்கனிக்கும் பாராட்டுகள்.
    அவரின் தந்தையின் கண்கள் குளமாகி இருந்தன. நெகிழ்வான நிகழ்வு,.

    ReplyDelete
  2. படம் பார்த்ததற்குப் பின் தான் விமர்சனங்களில் அது தெரிந்தது.. அழகான நடிப்பு... அவருக்கான அங்கீகாரம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கண்டிப்பாக அபிநயா பாராட்டப்படவேண்டியவர்.

    ReplyDelete
  4. அபிநயா deserved it.. இவர் பாராட்டக்கூடியவர்.. ஆனால், எல்லா புகழும் சிற்பத்தை செதுக்கிய சிற்பி சமுத்திரக்கனிக்கே!! :-)

    ReplyDelete